மதியம் வெள்ளி, 28 டிசம்பர் 2007
மதியம் வெள்ளி, 21 டிசம்பர் 2007
கிறிஸ்த்துமஸ் கால நினைவுகள்
கிறிஸ்த்துமஸ் வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான். பின்ன எங்களைப்போல அவர்களுக்கு [கிறீஸ்த்தவர்களுக்கு] வருடம் முழுவதும் பண்டிகைகள் இல்லை தானே :))
யாழ்ப்பாணத்து கடைத்தெருக்களெல்லாம் தள்ளுபடி விற்பனைகளும் கூட்டங்களும் குவியத் தொடங்கி வர்ணவிளக்குகளுடன் களைகட்டத் தொடங்கிவிடும் கிறிஸ்மஸ் தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கண்களைப் பறிக்கும் அலங்காரங்களுடன், யாழ்ப்பாணம் அமர்க்களப்பட ஆரம்பித்து விடும் தெருவிலுள்ள ஒவ்வொரு கடையும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு பிரமிப்பூட்டும் வகையில், அலங்கார வேலைகள் செய்திருப்பார்கள் அது கடைகளுக்கு புது பொலிவையும், அழகையும் கொடுக்கும் ஆங்காங்கே கிறிஸ்மஸ் தாத்தா அமர்ந்து கொண்டு குழந்தைகளுடன் வியைளாடிக்கொண்டுமிருப்பார்.
நான் கிறீஸ்த்தலப்பாடசாலையில் படித்ததாலோ என்னவோ நண்பர்களில் அனேகர் கிறீஸ்த்தவர்கள் எனவே கிறிஸ்த்துமஸ் என்றால் எனக்கும் ஒர் பெருநாள் தான் கிறிஸ்த்துமஸ் மரங்களை அலங்கரிப்பதுவும் , இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் எனக்கு மிகவும் பிடித்தவையாகும். கிறிஸ்த்துமஸ் காலமென்றால் நான் படிச்ச யாழ் பரி யோவான் கல்லூரியில் {கிறிஸ்த்தலப்பாடசாலை தானே }பெரிய அமளியாயிருக்கும் மரத்தைசோடிக்கிறது சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தி அலங்காரப்படுத்துவது என களைகட்டும் . இவற்றுள் நான் பொதுவாக தலை வைப்பதில்லை ஏனெனில் எனக்கு மட்டுமன்றி என்போன்ற பலருக்கு கிறிஸ்த்துமஸ் காலத்தில் அடைக்கலம் தருவது என் வீட்டின் அருகாமையிலிருக்கும் சிறுவயது முதல் ஒன்றாய்த்திரிந்த நண்பன் கனி வீடுதான் கிறிஸ்த்துமஸ் நாளுக்கு முதல்நாளும் அடுத்த நாளும் எமது பொழுது அங்கேயே கழியும் { என்ன பகீ ஞாபகமிருக்குதே ? }
கிறிஸ்துமஸ் நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அழங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கம். மரத்தின் அருகில் குடில் போல் அமைத்து இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் வழக்கம் அதற்காக தூங்கும் பொம்மைகள் இருக்கும் பெட்டிகளை எடுத்து பத்திரமாக கீழே இறக்குவது ஒரு சுவாரசியமான வேலை. அவ்வாறு அவற்றை இறக்கும் பொழுது தான் சென்ற வருடம் செய்தவையெல்லாம் மனதில் ஓடும் இறக்கியவற்றை கழுவி காயவைத்து விட்டு வேண்டிய சவுக்கு மரங்களை வெட்ட பத்துப்பதினைந்து பேர்வரையில் கிளம்புவோம் சில நேரங்களில் அருகிலிருக்கும் தெருக்களிலே வேலைமுடிந்துவிடும் சிலநேரங்களில் எங்கள் கஷ்ட காலமெனில் வல்லிபுரம் கோவில் வரை செல்வதும் உண்டு [பிற் காலங்களில் அவ்விடம் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்ததால் ஊர்காவற்துறைப்பக்கமாக செல்லநேர்ந்தது]
இரவு பாடசாலை நண்பர்களுடன் பாசையூர் (பாசையூர் குருநகர் , அரியாலை போன்ற இடங்களில் மற்ற இடங்களை விட கிறிஸ்தவ மக்கள் கொஞ்சம் அதிகம்)அந்தோனியார் கோவில் நத்தார் நள்ளிரவுப் பூசைத்திருப்பலிக்குப் போனால் அங்கே கோவில் ஒரே தீப அலங்காரமாய் ஜொலிக்கும்

மறுநாள் கிறிஸ்மஸ் தினமன்று எல்லா கிறீஸ்த்தவ நண்பர்கள் வீடுகளிலுமே தடல்புடலாகச் சமையல் நடப்பதுண்டு. ஆகவே அவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு , அவர்களது விஷேஷ கவனிப்புகள் வயிற்றை நன்றாகவே நிரப்பி விடும், இதனால் வீட்டுச் சமையல் கேட்பாரற்றுக் கிடப்பதுமுண்டு . வீடு திரும்பும்போது அம்மா சமைத்ததை உள்ளே தள்ள முடியாமல் திணற, அம்மாவின் திட்டுக்களை சம்பாதித்ததும் இந்த நத்தார் காலத்தில்தான். . . .
பதிவரிகளே
எனக்கு விடை தெரியவில்லை.
மதியம் வெள்ளி, 14 டிசம்பர் 2007
பில்லா
இன்று பில்லா வெளியானபடியால் முதலாவது காட்சியே பார்ப்பதென முடிவானது அதற்கமைய கொழும்பு தெஹிவளை கொன்கோட் திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவெடுத்தபின் விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக நின்றிருந்தார்கள் சரி உள்ள போவமென்டால் எங்க விட்டால் தானே ஒரு மாதிரி டிக்கற்றை எடுத்து உள்ளே போயாச்சு உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது படம் தொடங்கிற நேரத்தில இருந்து கொஞச நேரத்துக்கு ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். பிறகு பிறகு குறைந்து விட்டுது ஏன் என்றால் வீறுவிறுப்பு அப்படி இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
சரி கதைக்கு வருவம் பில்லா என்று உலகம் முழுவதும் தேடப்படும் கடத்தல்காரன். அவனைப்பிடிக்க பிரபு தலைமையிலான் படை ஒன்று மலேசியாலில் தந்தி தேடுதல் நடத்தி வருகிறது. ஒருகட்டத்தில பில்லா அவர்களிடையே சிக்கிய நிலையில் இறந்து போகிறான் . எனவே அந்த நேரத்தைப்பயன்படுத்தி பிரபு பில்லா மாதிரியே இரக்கும் வேலுவை பில்லாவின் கூட்டத்தினுள் அனுப்புகிறார் என்ன ரஜினி நடித்த பில்லா கதை தானெ பிறகென்னத்திற்கு கதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கு . . . . . .

* கதை செல்லுற அளவுக்கு ஒன்றுமில்லை ஏனென்றால் அதே பில்லா கதை தான் ஆனால் அதனை தெரியாமல் படத்தை இறுதிவரை இயக்குனா கொண்டுபோயுள்ளார் அந்தவகையில் இயக்குனர் பொரிய கில்லாடி தான் ஒரிஜினல் பில்லா கதையை அப்படியே எடுத்துக்கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். ஒரிஜினலில் இருந்த 'தேங்காய் சீனிவாசன்' கேரக்டர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது
* இசை யுவன் சங்கர் ராஜா அருமையிலும் அருமை
* ஆங்கிலப்படங்களுக்கு நிகரான சண்டைக்காட்சிகள் என அனைத்தும் அருமை திரையரங்கை விட்டு வெளியே வரும் போது ஆங்கிலப்படமொன்று பார்த்த உணர்வு வந்தது
* நிகழ்வு களத்தின் பின்புலமாக மலேசியா அருமையாகக்காட்டப்பட்டுள்ளது ஒளிப்பதிவில் கேமிரா கோணங்கள் அதிசயிக்க வைக்கிறது. அதிகபட்ச காட்சிகளில் பின்னணியில் பெட்ரோனாக்ஸ் டவர்ஸ் தெரிவது கொஞ்சம் எரிச்சல் தந்தாலும் அருமையாக இருக்கிறது ,மலேசியாவின் தரமான அழகான இடங்கள் வசதியான கட்டமைப்புகள் படத்திற்கான ரிச்னெஸை தானாகவேத் தருகிறது.
* அஜித் நடனத்தில் பலபடி முன்னேறி நன்றாகவேஆட்டம் போட்டிருக்கிறார்
* பாடல்களில் 2 ரீமிக்ஸ் பாடல்களும் [வெத்தலையப் போட்டேண்டி, மை நேம் ஈஸ் பில்லா ]அருமை மற்றும் செய் , சேவல்கொடி ஆகிய பாடல்கள் காட்சியமைப்பு அருமை
ஏற்கனவே பலர் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி வருவதால் நான் அந்தவேலையைத்தொடவில்லை

ஒரேயயொரு குறை
ஹீரோயின்கள் படம் முழுக்க கவர்ச்சி என்ற பெயரில் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் ஒரிரு காட்சிகளில் இப்படி வந்தால் 'கிக்' இருக்கும். படம் முழுவதும் காட்டியதால் அலுத்துப்போகிறது இந்த விடையத்தில " DON " பறவாயில்லை
" நாம நல்லாயிரக்கவேணுமெண்டால் எத்தின பேரை வேணுமெண்டாலும் கொல்லலாம் " இது பில்லா சொலுற பஞ்ச் டயலாக் ஒன்னு.
இன்னுமொன்றும் சொல்லுறார்
மதியம் செவ்வாய், 11 டிசம்பர் 2007
சுப்பிரமணியபாரதியாரின் பிறந்த தினம்
" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
--இனிதாவதெங்கும் காணோம்
--பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
--இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
--நாமமது தமிழரெனக்
--கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
--தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
--பரவும்வகை செய்தல் வேண்டும். "
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும்(டிசம்பர் 11 1882 - செப்டம்பர் 11 1921).
ஆனால் இந்த உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி ! பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனுக்காக அன்று முதல் இன்று வரை நாம் என்ன செய்துள்ளோமென சிந்தியுங்கள் ? அவன் உயிர் விட்ட தமிழுக்காய் நாம் என்ன செய்துதோமெனச்சிந்தியங்கள் . அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். இன்றய தலைமுறையினரே பாரதியைப்புரிந்து கொள்ளுங்கள் அறிந்து கொள்ளுங்கள்
பத்திரிகையுலகில் பாரதி சில தகவல்கள்பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் 1920 முதல் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராக பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906 செப்.1906,புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910), என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதிலும்
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதிலும்
" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " - பாரதி
மதியம் திங்கள், 10 டிசம்பர் 2007
என்ன கொடுமை சார் இது ?

மதியம் செவ்வாய், 4 டிசம்பர் 2007
இலங்கைத்தமிழ் வீரர் முரளிக்கு வாழ்த்துக்கள்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 709வது விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ண் இனது 708 என்ற இலக்கை எட்டியதன் மூலம் புதிய தோர் உலக சாதனையை இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் தனது சொந்த ஊரான கண்டியில் நேற்று முறியடித்தார்
இங்கிலாந்துக்கும், இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தச்சாதனையைப்படைத்தார்.
இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட்டை வீழ்த்தியதன் மூலம் 709 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இந்தச்சாதனையைப்படைத்தார். முரளியின் உலக சாதனையைத் தொடர்ந்து கண்டி மைதானத்தில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இலங்கை வீரர்கள், முரளியை கட்டிப் பிடித்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்த்தினர். ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இலங்கை முழுவதும் முரளியின் உலக சாதனையை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர். சாதனைக்கு பிறகு கருத்துவெளியிட்டுள்ள முரளீதரன் "சொந்த மண்ணில் தனது பெற்றோர்கள், மனைவி மற்றும் உறவினர்கள், கல்லூரி நண்பர்கள்
சூழ்ந்திருக்க இந்தச் சாதனையை படைத்ததிருப்பதால் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். "
முரளியின் சாதனைப் பட்டியல்
* டெஸ்ட் போட்டிகள் - 116 விக்கெட்டுகள் - 709
* 10 விக்கெட் வீழ்ச்சி - 20 முறை
* 5 விக்கெட் வீழ்ச்சி - 61 முறை.
முத்தையா முரளிதரனின் உலக்ச் சாதனையைப் பாராட்டி அரசு அவரது உருவம் பதித்த வட்டவடிவ தபால் தலை ஒன்றினை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இலங்கை அரசின் அதிபர், பிரதமர் ,எதிர்க்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களை முரளீதரனுக்கு தெரிவித்துள்ளனர்.
இது பற்றி கருத்துத்தெரிவித்த ஷேன் வார்ண் " தனது சாதனையை முறியடித்துள்ள முரளீதரன் ஆயிரம் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்" என்று ஷேன் வார்ண் தெரிவித்துள்ளார். "அவ்வாறு அவர் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தினால் அந்தச் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்."
முரளிதரன் சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் ராமமூர்த்தியின் மகள் மதி மலரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மதி மலர் முரளியின் சாதனையை நேரில் பார்த்து மகிழ்ந்தார்.
மதியம் வெள்ளி, 23 நவம்பர் 2007
கார்த்திகை விளக்கீடு ஞாபகங்கள்
வரும் சனிக்கிழமை வழமைபோல் கார்த்திகைத்தீபத்திருநாள் வருகிறது . எல்லார் வீட்டிலும் தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற மாதிரி எல்லார் மனதிலும் அந்த ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும். அது எல்லோர் மனதையும் நிறைக்கட்டும். சமாதானமே எமக்குத்தேவை அந்தப் பெரும் உண்மையைப் புரிந்து கொள்ளும் திறனை இந்தக் கார்த்திகைத்திருநாள் நம் எல்லாருக்கும் அளிக்கட்டும் . புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அனைவருக்கும் தத்தமது பழைய கால நினைவுகள் வந்துபோகும் அந்தவகையில் எனக்கும் கார்த்திகைத்தீபத்திருநாள் நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிப்பார்க்கிறேன் ( நாம் அனேகர் கழிந்த நிகழ்வுகளோடும் தான் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றதாக இருக்கிறது ) என் பதின்ம வயதுகளில் தோழர்களோடு விளக்கீடு நாட்களின் நினைவுகளை இன்றைய நிஜங்களோடு இரைமீட்கின்றேன்.
விளக்கீடு அன்று காலையே பருத்திவேட்டியைக்கிழித்து வெட்டிய கிழுவை மரத்தடிகளில் பந்தம் கட்டுவதும் , வழைக்குற்றியொன்றை வீட்டமுகப்பில் நடுவதற்காக வெட்டிவைப்பதுமாக வீட்டில் ஓர் இனம்புரியாத உஷார் கிளம்பிவிடும் படிப்படியாக விளக்கேற்றுவதற்காக சுட்டிகள் தேங்காய்ப்பாதிகள், திரிகள் என போர்க்களத்திற்கு போவது போல் தயாராகும் . மாலை வாழைக்குற்றியை வீட்டுப்படலைக்குமுன்னால் நட்டு அதற்குரிய அலங்காரமெல்லாம் செய்து இறுதியில் பாதிவெட்டிய தேங்காயில் திரியைப்போட்டு எரித்துவிட்டால் சும்மா ஜெகஜோதியாய் எரிவதைப்பார்க்க அழகாயிருக்கும் . வீடுகள் தோறும் தீபங்கள் அசைந்தாட அந்த காட்சியே அருமை தான்:) அனேகமாக அந்நேரத்தில் தான் கோவில்களில் சொக்கப்பனையும் எரிபடும்
அத்தோடு நாம் வாழைக்குற்றியின் பாதுகாப்பை வீட்டு மகளீரிடம் ஒப்படைத்துவிட்டு சைக்கிளையும் எடுத்துக்கொண்டு ஏரியாவைச்சுற்றிப்பார்க்கக்கிளம்பிவிடுவம் அவ்வப்போது போகிற பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படாத வழைக்குற்றிகளை நிலத்தில் சாய்ப்பதுவும் சிட்டிகளை பொறுக்கி வேறு இடத்தில் இடம்மாற்றி வைப்பதுவும் நடக்கும் .
இந்நசுவையான காலங்களெல்லாம் இனியெப்போதாவது நடக்குமா :(
"நம் மனமாகிய இருண்ட காட்டிற்கும் அது போல் ஒரு ஞான ஒளி தோன்ற வேண்டும். காட்டில் ஏற்படும் தீயானது எப்படிக் காட்டை அழித்துப் பொசுக்குகிறதோ, அது போல் நம் மனத்தில் தோன்றும் இந்த ஒளியானது நம் மனமாகிய காட்டில் உள்ள இருண்ட பாகங்க்ளில் ஒளியைத் தோற்றுவிப்பதோடு நில்லாமல், காட்டில் உள்ள வேண்டாத செடி, கொடி, மரங்களான ஆசை, பொறாமை, தீயவை நினைத்தல், தீயவை செய்தல், தீயவை பார்த்தல் போன்றவற்றையும் அழித்துப் பொசுக்க வேண்டும். கார்த்திகைத் திருநாளில் தீபவொளி பொலிந்து உலகம் உய்ய இறைவனை வணங்குகிறேன். "
என்றென்றும் அன்புடன்
மாயா
மதியம் திங்கள், 19 நவம்பர் 2007
சரஸ்வதி பூசை கொண்டாடினோம் ?
" அனைவருக்கும் வணக்கம் வணங்கத் தலையும் வழங்க மொழியும் தந்த சரஸ்லதிதேவியைப்போற்றி எனது உரையை ஆரம்பிக்கிறேன் " இது நான் பாடசாலை நவாராத்திரி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது , எனது பாட்டனார் எழுதித்தர பாடமாக்கிவிட்டு சபையை விளிக்கப் பயன்படுத்திய வரிகள் தாம். . . .






இனி எனது க.பொ.த உயர்தரவகுப்புக் காலம் அது அனேகர் வாழ்வில் பொற்காலம் எங்கட பாடசாலை கிறீஸ்தவப்பாடசாலை என்றாலும் வாணி விழாவுக்கு குறைச்சலில்லை நாங்களே எல்லாப்பாடசாலைகளுக்கும் போய் மாணவர்களை வரச்சொல்லிக்கொண்டாடுவதும் இறுதியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி அணியுடன் பட்டிமன்றம் வைப்பதும் சுவையான அனுபவங்கள் நாங்கள் இருக்கும் போது நடைபெற்ற பட்டிமன்றத்தில் என்

அதன்பின் நீண்ட காலத்தின்பின் அண்மையில் சந்தித்த நண்பர்களுடன் சேர்ந்து வாணிவிழா கொண்டாடினோம் ?ஆனாலும் முந்தையமாதிரி சுவையான அனுபவங்கள இருக்கவில்லை ஏதோஓர் வெறுமையே இருந்தது
Read more...
மதியம் ஞாயிறு, 18 நவம்பர் 2007
காந்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 80 வருடங்கள்
மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 80வருடங்கள் பூர்த்தியாகியது (29.11.1927 – 29.11.2007) அந்நேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் அவர் எமது யாழ் பரியோவான் கல்லூரிக்கும் [Jaffna St Johns College ] விஜயம் செய்திருந்தார் அதையொட்டிய நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியில் நடைபெற்றன
பட உதவி சின்னக்குட்டி
மதியம் சனி, 10 நவம்பர் 2007
தமிழ் சினிமாவின் தீவிர விசுவாசமுள்ள ரசிகர்களே போலிகளைக்கண்டு ஏமாறாத புத்திசாலிகளா நாம் ?

* எதற்காக உண்மையில் கஷ்டமாக அவஸ்த்தையாக உணரப்படும் சாராய சிகரட் பாவனை திரைப்படங்கள் சுவாரசியமானதாகக் காட்டப்படுகிறது?

இங்கே உங்கள் அபிமான நடிகர்களின் புதிய தமிழ் சினிமாக்களை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் தீவிர விசுவாசமுள்ள ரசிகர்களைக்குறைசொல்லவில்லை அதிலுள்ள சாராய சிகரட் முகங்களை விளங்கிக்கொள்ளுங்கள் என்பதே எனது எதிர்பார்ப்பு .
மதியம் வெள்ளி, 9 நவம்பர் 2007
அழகிய தமிழ் மகன் [ ஆடியன்ஸ்ஐ வைத்து காமடி ஒன்னும் பண்ணல தானே ]
தேர்வுகள் முடிந்தபடியால் பிறகு நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து நிம்மதியாகத் தீபாவளி கொண்டாடினோம் . இந்த வருடமும் வழமைபோல் தான் தீபாவளி நாள் தொடங்கியது . ஆனால் நாளின் முடிவு தான் சரியில்லை தீபாவளி வெளியீடான நம்ம டாக்டர் விஜயோட [ ஆளாளுக்கு டாக்டர் பட்டம் குடுத்து, அதுக்கு இருந்த மரியாதையே போச்சு. ] அழகிய தமிழ் மகன் பாக்கப்போனதால தான். [ வேல் Or பொல்லாதவன் போவோம் என்று நண்பர் கூட்டத்தில் ஒரு சாரார் விரம்பினாலும் " ஒருதரம் முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன் " என்று பழைய விஜயோட Dialogஐ விட்டுவிட்டு நேரா திரையரங்குக்கு போனபோது கூடத்தெரயவில்லை நமக்கு நாமே ஆப்பு வைக்கிறோமென்று ] . முன்னொரு காலத்தில யாழ்ப்பாணத்தில படத்துக்கு போறெண்டா ஒரு இருபது பேர் மட்டில போவம் இப்ப கொழும்பில தேறி நிக்கிறது 10 பேர்தான். என்ன செய்யிறது எல்லாரும் வெளிநாடு வெளிநாடென்டு பறக்கிறாங்க . இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்சவையை தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும்.
தியட்டரில கூட்டத்துக்கு குறைவில்லை. பெரிய கியூ. ஒரு 1500 பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. ரிக்கட் நேற்று 300/= . உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். படம் தொடங்கிற நேரத்தில இருந்நு கொஞச நேரத்துக்கு ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். பிறகு பிறகு குறைந்து விட்டுது ஏனென்டா அவனவன் எப்ப படம்முடியுமெண்டு நேரத்தைப்பார்க்க வெளிக்கிட்டுட்டான் பின்னுக்கு இரண்டாவுது விஜய் வந்தாப்பிறகு படம் நல்லாப்போகும் மாதிரி மாதிரியிருந்துது ஆனால் சுத்த . . . . .
எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது அனாலும் திரு கோவி கண்ணன் உதவியோட கொஞ்சம் கதைக்கிறன் வழக்கமான படங்களில் வருவது போல் கன வில்லன்கள் Comedyக்கு ஒருவர் என்ற கதைகளில் இருந்து விலகி இரட்டை வேடத்தில் படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். படத்தில் அவர் தவிர்த்து மற்றவர்களுக்கு திரையில் தோன்றும் வாய்பு குறைவு. கதைக்கு உரு கொடுப்பதற்காக விஜய்க்கு ESP என்று சொல்லக்கூடிய வித்தியாசமான மனவியல் சக்தி இருப்பதாகவும் [ மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள் படத்தில் கதாநாயகி நளினிக்குவரும் சக்தி தான் ] உறவினர்களுக்கு நடக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறிந்து கொள்வதாக காட்டுகிறார்கள்.
நான் பார்த்ததில் அனேகமான காட்சிகள் லாஜிக் எதுவுமில்லாமல் இருக்கிறது கொஞ்சம் சொல்லட்டா ? இந்த படத்தில் குருவாக மாறி வரும் பிரசாத்[விஜய்] தான் தான் குரு என்பதை நம்ப வைக்க செய்யும் முயற்சிகள் லாஜிக் எதுவுமில்லாமல் இருக்கிறது. கூட இருக்கும் குருவின் நண்பர்களும் ஒரிஜினல் குருவை நம்ப மறுக்கிறார்கள். காதலிக்கும் ஸ்ரேயாவுக்கும் யார் ஒரிஜினல் என்ற குழப்பம் இருக்கிறதாம். இரட்டை பிறவிகளாகவே இருந்தாலும் ஒருவருக்கு தெரிந்த எல்லாமும் மற்றவருக்கு தெரியாது. ஆனா இங்க ?
இரட்டையரில் கெட்டவனான விஜய்யைக்கூட கடைசியில் திருந்துவதாகக் காட்டியிருக்கிறார்கள், கெட்டவனாக இருப்பவன் வாழ்க்கையில் நல்லவனாக ஆவதை எதிர்ப்பவனல்ல நான் என்றாலும் எனக்கென்னமோ இந்தப்படத்தை அவன் கெட்டவனாகவே கடைசியில் இருப்பதாக நினைத்து கிளைமாக்ஸ் வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது விஜய் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்து ஒரு கதை(!) இருக்கும் படத்தில் நடித்திருக்கிறாரே! பாராட்டலாம்
* சண்டை காட்சிகள் வழக்கமான ஆக்ரோசமான விஜய் ஸ்டைல். சண்டை பயிற்சி பெப்சி விஜயன் சும்மாவா
* இயக்குனர் பரதன்
* படத்துக்கு இசை ஏஆர்ரகுமான் . ஏமாத்திப்போட்டார் போலதான் கிடக்கு
அதிலொரு காட்சி ரெம்பக்கொடுமையாயிருந்தது பெண் குழந்தை ஒன்று மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைவதும் அதை படுக்கையில் கிடத்தி பிண அலங்காரம் செய்து வைத்திருப்பதும் தான் குழந்தைகளின் மரணத்தை திரையில் பார்பது கூட சோகம் தான்.
Read more...மதியம் திங்கள், 5 நவம்பர் 2007
மதியம் திங்கள், 29 அக்டோபர் 2007
தமிழ் சினிமாவுக்கு வயது 76
தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியாகி வரும் 31ம் தேதியுடன் 76 வயதாகிறது. தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் என்ற பெருமை காளிதாஸுக்கு உண்டு. இப்படம் கடந்த 1931ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் வெளியாகி வருகிற 31ம் தேதியுடன் 76ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை பேசும் படம் என்று சொல்வதை விட பாடும் படம் என்றும் கூறலாம். காரணம் படம் முழுக்க பாடல்கள்தான் அதிகம் இருந்தன. புராணக் கதையான இப்படத்தில் டி.பி.ராஜலட்சுமி ஹீரோயினாக நடித்திருந்தார்.
தமிழ்ப் படம் என்று கூறினாலும் கூட பன் மொழிக் கலைஞர்கள், அவரவர் தாய் மொழியிலேயே பேசி நடித்திருந்ததால் இதை பன்மொழிப் படம் என்றும் கூறலாம். காளிதாஸ் படத்தைத் தயாரித்தவர் எச்.எம்.ரெட்டி. இவர்தான் தெலுங்கின் முதல் பேசும் படமான பிரகலாதாவையும் தயாரித்தார். காளிதாஸ் படத்தில் இடம் பெற்ற ராட்டினப் பாடலும், தியாகராஜரின் குறத்தி நடன¬ம் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவை. முதல் தமிழ்ப் படத்திற்கு மட்டுமல்லாது தமிழ் சினிமாவுக்கும் வயது 76
மதியம் வெள்ளி, 19 அக்டோபர் 2007
பதிவர்களே அனானி பின்னூட்டங்களை தவிர்க்கலாமே ?
17-10-2007 அன்று தோழர்களே! இலங்கை வலைப்பதிவர்களை தாக்கி பதிவிடுவதை நிறுத்துங்கள் ! என்ற தலைப்பில் பதிவு எழுதினவுடன் அதிகாலை " 4 " என தொடங்கிய வருகையாளர் ஒனலைனில் இருந்தோர் மடமட என உயர்ந்து மாலை 5 மணிக்கு 69 என்னும் இலக்கை தொட்டது பின் நாட்டு நிலமைகாரணமாக இணையத்தை நிறுத்திக்கொண்டு வீடுசென்றுவிட்டேன் அடுத்தநாள் பதிவை திறந்து பார்த்தபோது (அப்போது நான் பின்னூட்டங்கள் மட்டறுக்கும் வசதியைசெய்யவில்லை ) வலைபூ அனானிகளால் அசிங்கம் பண்ணப்பட்டிருந்தது கன பேர் அனானிமஸ் ஆக வந்திட்டாங்க அவற்றிலும் பயனுள்ள சில தகவல்கள் இருந்தன என்று தெரிவித்துக் கொள்கின்றேன். தூஷணங்களும் இருந்தன என்பதைச் சொல்லித்தானா தெரியவேண்டும் ? ரெம்பக்கேவலமாக போட்டுட்டாங்கையா போட்டிட்டாங்க ! அனானிமஸாக ( முந்தைய பதினவொன்றிலும் இவ்வாறு நடந்தது நண்பர்களின் அறிவுரையின் பேரில் நீக்கிவிட்டேன் ) காலை உடனடியாக அனைத்து அனாகரீகபின்னூட்டங்களைளும் நீக்கி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது
அன்னியன் படத்தில் கூறப்படும் Mutiple Personality Disorder என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் திரைப்படத்தில் மட்டுமல்ல, வலைப்பதிவுலகில் கூட உண்டு. அந்தவகை நோயால் பாதிக்கப்பட்ட அனானிகளே இங்கு ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ளவேனண்டும் நிச்சயமாக நீங்கள் ஒருபதிவர் என்பதில் ஐயமில்லை மற்றவருக்கும் அப்படி பின்னுட்டங்கள் போடத்தெரியும் ஆனால் அவர்கள் அதை போட விரும்புவதில்லை அது தான் இணைய கலாச்சாரம். அனானி பின்னூட்டங்களால் நல்லவிடையங்கள் பரிமாறமுடியும் ஆனால் சொல்லவிரும்பும் விடையத்தை உங்கள் பெயரில் வந்து சொன்னால் என்ன ?
முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.
கொஞ்சக்காலமாய்த்தான் எழுதுகிறேன். எத்தனையோ பேரை நண்பர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களே அனானிகளாக வந்து இழிவாக எழுதுகிறார்கள் ( இணையத்திற்கு நான் புதியவனில்லை IP Address முலம் போக்குகள் வரத்துகள் எல்லாம் கண்டுபிடிக்கத் தெரியும் ) . . . . .
உங்களுக்குள் இருக்கின்ற விரோதங்களை எனது வலைப்பூவில் பின்னூட்டம் வெளியிட்டு, எனக்குரிய வாசகர் வட்டத்தினை குறைக்க வேண்டாம் என தாழ்மையான வேண்டுகோளை மீண்டும் ஒருமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் விடுக்கின்றேன்.
இணையம் என்பது எனக்கு வார்த்தையில்லை, வாழ்க்கை
யாருக்காகவும் பயந்து ஓடமாட்டேன்
இங்கே தான் நிற்பேன்
இங்கேதான் வளர்வேன்
இந்கேதான் சாதிப்பேன்
மாயா
மதியம் புதன், 17 அக்டோபர் 2007
தோழர்களே! இலங்கை வலைப்பதிவர்களை தாக்கி பதிவிடுவதை நிறுத்துங்கள் !
தமிழ் வலையுலகில் மிகமுக்கியமான ஓர் நபராகக் கண்க்கப்படும் ஒருவர் அவருடைய வலைப்புவில் " உங்களுக்கு தான் படம் போட்டு எழுதும் அளவுக்கு உங்கள் நாட்டில் சுதந்திரம் இல்லை யார் யாருக்கோ பயந்துக் கொண்டு பொத்திக் கொண்டிருக்கிறீர்கள். " என்றும் ஈழத்தமிழர்கள் முகம் காட்ட மறுப்பவர்கள் முகம் காட்டும் அளவிற்கு தைரியமில்லாதவர்கள் என்ற சாரத்துட்ன் பதிவிட்டிருந்தார் எனது இந்தப்பதிவு அவர் பதிவிட்டிருந்த அன்றே வந்திருக்கவேண்டும் ஆனால் 2ம் ஆண்டு பரீட்சகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாலும் நேரம் கிடைக்காமையாலும் பிந்தி பதிகிறேன் மன்னிக்கவும்
பதிவரே !
உங்கள் பெயர் பிரபலமடைய எம்மை வம்புச் சண்டைக்கு இழுக்காதீர்கள். நீங்களோ சொகுசாக வாழ்ந்துகொண்டு எம்மைச் சீண்டிப்பார்க்கிறீர்கள். தயவு செய்து இப்படியான கீழ்த்தரமான வரிகளை எழுதாதீர்கள். பிரச்சனைகளை தீர ஆராயாமல் உங்கட பாட்டுக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதாதீர்கள் ஒரு விடயத்தை உறுதியாக அடித்துச் சொல்ல முன் அதுபற்றி ஆய்வு அல்லது கருத்துக்கணிப்புச் செய்து சொல்வதுதான் சிறந்தது. யாரோ ஒருவன் உங்களிடம் வம்பு செய்தால் உடனே முழு ஈழத்தவர்களையும் கேலி செய்யாதீர்கள்.
மதியம் செவ்வாய், 16 அக்டோபர் 2007
தமிழ்மணத்தின் நட்சத்திரமே எங்கிருந்தாலும் வருக !!
பொதுவாக நட்சத்திர வாரத்திற்குரிய பதிவரது பதிவுகளால் தமிழ்மணம் களைகட்டும் ஆனால் இந்த வாரம் தமிழ்மணத்தி நட்சத்திர பதிவுகளில் எதையமே காணவில்லை . . . இந்த வாரத்த்திற்கான நட்சத்திரம் திரு பாலா அவரது நட்சத்திர வாரத்திற்கான தொடக்கம் 15 / 10 / 2007 ஆனால் அவர் இன்னும் புதிதாக பதிவுகள் எதனையும் இட்ட மாதிரி தெரியவில்லை
மதியம் செவ்வாய், 2 அக்டோபர் 2007
காந்தி ஜெயந்தியும் இந்தியத்தொலைக்காட்சிகளும். . . . .
இந்தியாவின் சுதந்திரதந்தை மகாத்மா காந்தி அவர்களை நினைவு படுத்தும் காந்தி்ஜெயந்தி தினக்கொண்டாட்டங்கள் சின்னத்திரையில் வெகு அமர்களமாக களை கட்டி இருக்கிறது. சகல டீவிகளிலும் சகல நிகழ்ச்சிகளும் காந்தி்ஜெயந்தி Special சினிமா சினிமா. தான்
இதை பற்றி காலையில் இன்னோரு பதிவும் வந்துள்ளது பதிவில் முந்திய நண்பருக்கு பாராட்டுக்கள்
உதாரணத்திற்கு சன் டீவி இனது நிகழ்ச்சிகளைக்கவனிப்போம் (இலங்கை ரசிகர்களைப் பொறுத்தவரை சன் டீவிக்கென்று ஓர் மதிப்பும் மரியாதையும் உண்டு அதனால் நேற்றுப்பெய்த மழைக்கு திடீரென முளைத்த காளான்களைப்பற்றி எழுதவில்லை ) வழமைபோல் சன்னில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம். அடுத்து கந்தசாமி திரைப்படம் பற்றிய பார்வை ஒன்று , நடிகை ஜோதிர்மயியின் பேட்டி , பிறகு FIRE ONE வழங்கும் நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் விழா !, மதியம் அக்சன் கிங் இன் முதல்வன் படம் . காந்திக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம் ? (அதற்காக காந்தி சம்மந்தப்பட்ட ஹேராம் படமா போடமுடியும் ). ஆனால் இந்தப்படத்தில பல நல்லவிடையங்கள கையாளப்படுவதால் விட்டுவிடுவோம் காந்திஜெயந்தி என்பது இவர்களுக்கு இப்போ விளையாட்டாக போய்விட்டது. இப்படியான சுதந்திரம் தொடர்பான நன்னாளில் பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர தாகம் மிக்க படங்களைப்போடலாமே ?
அடுத்து பின்னேரப்படம் என்ன கொடுமையப்பா அது ! பின்ன போடுற படம் என்ன தெரியுமே ? 7 /Gரெயின்பொ காலனி . 7 /G ரெயின்பொ காலனி போன்ற திரைப்படக்குழுவினரால் A தரப்படம் என தணிக்கை பண்ணப்பட்ட படத்தை காந்தி்ஜெயந்தி நன்னாளில் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கமுடியுமா ? இங்கு நான் படத்தை குறை கூறவரவில்லை . . .அந்தப்படத்தை யாழ்ப்பாணத்தில ராஜா திரையரங்கில் முதல் நாள் காட்சிபார்த்தவனுள் நானுமொருவன் ( அப்போ ஜனவரி மாதம் பாடல் உட்பட அரைமணிநேர காட்சிகள் கத்தரிக்கப்பட்டது தெரியாமல் பார்த்தது வேறுகதை )
ஆனால் காந்தி பற்றி. ஆம் அவர் பற்றியும் இருந்தது . காலை 7 மணி முதல் 7.30 மணி வரை சிறிய ஆவணத் தொகுப்பில் மட்டும்.இந்தப்பதிவு எழுதும் நேரத்தில் போய்க் கொண்டிருக்கிறது அரையே அரை மணி. அதுவும் காலை நேரத்தில் ? தீபாவளி பொங்கல் புதுவருடம் போன்ற தினங்களில் சினிமா நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது சரியானதே ஆனால் காந்தி ஜெயந்தி , சுதந்திரதினம் போன்றவற்றிற்க்கு இவை தேவையா? இதை ஏன் டிவி காரர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை .
கலைஞர் தொலைகாட்சியில் மதியநேரதிரைப்படம் பரட்டை என்கிற அழகு சுந்தரம் . . . .
கொடுமை கொடுமை என்டு கோயிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை நின்னு கூத்தாடிக்கொண்டிருந்ததாம் என்ட மாதிரி இருந்துது . . . [கலைஞரும் ஏமாத்திப்போட்டார்]
இன்னோர் விடையத்தையும் எடுத்துக்கொள்ளலாம் TV வலையத்தினருக்கு நிகழ்ச்சியோ அதில் வருகிற விசயங்களோ அல்லது எடுத்து நடத்துற ஆட்களோ முக்கியமில்லையாம் . நிகழ்ச்சிகளோட ரேட்டிங் பற்றித்தான் கவலையாம்
அப்ப பாருங்களன் ?
இவ்வாறான விடையமொன்றை "நெஞ்சு பொறுக்குதில்லை " என்ற தலைப்பில் நண்பர் வாத்தியத்தேவன் முன்பும் எழுதியிருந்தார்
மதியம் திங்கள், 1 அக்டோபர் 2007
சர்வதேச சிறுவர் தினம்
பொதுவாக இராணுவ அடக்குமுறை நடைபெறம் நாடுகளில் இராணுவத்தின் செல்லடிகளிலும் ஆகாய தரை குண்டு வீச்சுத் தாக்குதலினாலும் தினம் தினம் செத்து மடியும் சிறுவர்களினதும் அனாதைகளாக்கப் படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அளவிட முடியாதது. அதே போல் தமது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கான போரியல் தளபாடங்களைக் கொள்வனவு செய்யும் பண வரவிற்கான ஒரு வழியாக உல்லாசப் பயணத் துறையை ஊக்குவிக்கும் சாக்கில் சிறுவர் பாலியல் சீரழிவுகளை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அரசாங்கமே ஊக்குவிக்கின்றது.
ஜனநாயகம் பற்றியும் சிறுவர் உரிமை பற்றியும் வாய்கிழியக் கத்தும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏனோ இதை கண்டும் காணது விட்டுள்ளன
சர்வதேச சிறுவர் தினமான இன்றும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் ஆனால் நிறைவேற்றப்படுமா ? ?
மதியம் ஞாயிறு, 23 செப்டம்பர் 2007
மறக்கமுடியாத பயணங்கள். [ நண்பனின் வலைப்பூ ]
மதியம் ஞாயிறு, 9 செப்டம்பர் 2007
வலையுலக ஜாம்பவான்களின் கரிசனைக்கு நன்றி
படிப்பு நேரம் போக சோர்வு ஏற்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு உற்சாகத்தை திருப்பித் தரும் மருந்தாக இருந்து வந்தது வலைப்பூக்களில் எழுதுவது.ம் வலைப்பதிவுகளை வாசிப்பதும்தான் தமிழ்மணத்தை ஒருமுறையாவது பார்க்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பது போன்ற நிலை... ஏற்பட்டதும் உண்டு ஆனால் இப்போ தமிழ்திரட்டிகளைத்திறக்கும் போது ஒருவித பயத்துடனே திறக்கவேண்டியதாயிருக்கிறது குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சாக்கடைக்குள் இறங்கியதாய் எனக்குள் ஓர் உணாவு. கூடாத வார்த்தைப்பிரயோகங்கள் திட்டுக்கள் என சாக்கடைக்கழிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தது. அருவருப்பாய் இருந்தாலும் முன்னர் போல் அழாமல் அமைதியாகவிருந்தேன் ( வீதியால் செல்லும்போது சாக்கடை நாறினால் மூக்கை மூடியவாறு கடப்பதில்லையா அதுபோல் கடந்தவாரத்தைக்கடந்தேன் )
ஆரம்பத்தில் நான் வலைப்பதிவாளர்களிடமிருந்து எதிர்பரர்த்தது :))
எழுதுபவாகள் தன் எழுத்து மேல் கொஞ்சமாவது நம்பிக்க வைத்து எழுதவேண்டும் ஒரே மாதிரியே எழுதாது பல விசயங்களையும் எழுத முயற்சிசெய்யவேண்டும் அதற்கு தன் எழுத்து மேல நம்பிக்கை இருந்தால் மட்டும்தான் முடியும்.
ஆனால் இதெல்லாம் தேவையி்ல்லை என சில வலைப்பதிவுலகில் மூத்தவர்களென்று கூறிக்கோள்வோர் அன்பாகத்தெரிவித்தார்கள் உதாரணத்திற்கு ஒன்று "முதலில் வலைப்பதிவென்பது ஏதோ உலகத்தைப் புரட்டிப்போட வந்த ஊடகமென்ற கனவுகளைக் கலைக்க வேண்டும். பலர் இப்படித்தான் புரளி கிழப்பிக்கொண்டு திரிகிறார்கள். " இப்படிசொல்பவர்களுக்கு வலைப்பதிவுகளின் நிலைபற்றி நான் எப்படிப்புரியவைப்பது அது ஒரு தனிமனித மீடியா என்பதை எப்படிப்புரிவைப்பது . . . உண்மையில் இந்த வலைபூக்களினால் அடித்தட்டு மக்களுக்கு ஒரு பயணும் இல்லை.ஆனால் அவர்களிடம் கொண்டுசென்றால் பெரிய வெற்றி தானே இதை ஏன் விளங்கிக்கோள்கிறார்களில்லை
கடைசியாக ஒரு சிறு கருத்து . இணைய சுதந்திரம் வேறு . . . இணைய அராஜகம் வேறு . . . என்று நான் அறிந்துள்ளேன் அதை நான் எழுதிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் மூலம் பார்த்து அறிந்துகொள்ள முடிந்தது. சில நட்புகள் கிடைத்தன. . சிலநட்புகளை இழந்தேன். மற்றபடி பெரிதாக எதையும் சாதிக்கவில்லை கடைசியாக ஒன்று அடிப்படையில் நான் சாதாரணன் உருவாக்குபவன் மட்டுமே ! அழித்தல் குணம் அல்ல... நாட்டில் தான் அமைதியில்லை வலையுலகிலாவது அமைதி நிலவட்டும்...என எண்ணுபவன்
ஓர் இலங்கைத்தமிழனாக " எமக்கான நிலம், எமக்காக நிரந்தரிக்கப்படும்வரை மின்வெளியில் ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் பெரும்பணியில் இந்த இணையம் பயன்படலாமே ? ? சகோதர ,சகோதரிகளே தமிழுக்காவாவது, நாம் நம் பயணத்தை தொடரலாமே...!!!
இந்த இணையப்பதிவுகளை பயனுள்ளதான ஒரு சுதந்திர வெளியாக பயன்படுத்தலாம் பேணுவார்கள் என்ற நம்பிக்கையேடு
மாயா
மதியம் சனி, 25 ஆகஸ்ட் 2007
கிருபானந்த வாரியார் பிறந்த நாள்
இவருக்கு இவரின் தந்தையாரே கல்வி இசை இலக்கி இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்.
“ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்”.
”இளமை வளமையாக ஒழுக்கமாக அமையவில்லையானால் இடைப்பகுதியும் கடைப்பகுதியும் ஒழுங்காக அமைய மாட்டா”.
”பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்"
வாரியார்
Read more...மதியம் வியாழன், 23 ஆகஸ்ட் 2007
விக்கிபீடியாவிற்கு நீங்களும் பங்களிப்புச்செய்யலாமே ????
வலைப்பதிவுகளை நான் புரிந்து கொண்ட மட்டில் அதன் தோற்றங்கள் கணினி உபயோகிப்பவர்களிடமிருந்தே பிறக்கிறது, பிறக்க முடியும். அதனாலேயே இன்னமும் பிற ஊடகங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலே இப்பதிவுகள் தொடர்கிறது. ஆனால விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியங்கள் அதைவிட மிக விரிந்தது.
நீங்கள் அனைவரும் விக்கிபீடியா பற்றி அறிந்தவர்களாகவே இருப்பீர்கள் ஆனால் நீங்கள் ஏன் அத்தளத்திற்கு பங்களிப்புச்செய்ய விரும்புவதில்லை ? (ஒரு சிலர் அங்கும் கொடி கட்டிப்பறக்கிறார்கள் என்பது வேறு கதை ) ஏனெனில் விக்கிபீடியா தமிழ் பகுதியில் அனேகமாக பகுதிகள் இன்னும் தொகுக்கப்படாமலே வெறுமனவே உள்ளன இதுபற்றி நீங்கள் அறிவீர்களா ? விக்கிபீடியா தளமோ திறமூலக்கொள்கையுடைய தளம் யாரும் சென்று எழுதலாம் வலைப்பதிவுகளில் ஏராளமான நல்ல விடையங்கள் பரிமாறப்படுகின்றன உதாரணமாக பதிவோன்றை எழுதுபவர் (சிறந்த பதிவென்று உங்களுக்குத்தோன்றினால் ) தமிழ்மணம் தளத்திற்கு சேர்க்கைக்கு அளித்தபின் அப்படியே விக்கிபீடியா தளத்திக்கு சென்று எங்கெங்கு உங்கள் ஆக்கங்களை இடலாமென நினைக்கிறீர்களோ அங்கே பங்களிப்புச்செய்துவிட்டுவரலாமே ? அங்கு எவ்வாறு பங்களிப்புச்செய்வதென்ற முறைகளை அவர்களே முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்
ஆனால் வலைப்பதிவு உலகில் பெரியவர்கள் மாதிரிக்காட்டிக்கொள்பவர்கள் , தேவையில்லாத விடையங்களுக்கெல்லாம் பதிவெழுதிவிட்டு பின்னூட்டங்களை வாங்கிக்குவிப்பவர்கள் (கடந்த கிழமை இவ்வாறான பதிவுகள் தான் அதிகம்) மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு தாமும் பங்களிப்புச்செய்கிறோம் என பெருமையாகக் கூறிக்கோள்பவர்கள் எந்தவகையில் பங்களிப்புச்செய்யவருவார்களே தெரியாது (கும்மிப்பதிவு மொக்கைப்பதிவு பற்றி போடுபவர்களை இங்கு நான் கணக்கிலேடுக்கவில்லை ) !!!
என்னுடைய கருத்துக்களை சிலர் ஆதரிக்கலாம், சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை. ஒரு நண்பனின் தோளில் கை போட்டு தோழமையுடன் பேசுவது போல் என் கருத்தை சொல்லியிருக்கின்றேன்.
நன்றியுடன்
மதியம் வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007
இலங்கைத் தமிழ் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கவிரும்புவது தப்பா ?

மதியம் புதன், 15 ஆகஸ்ட் 2007
ஈழத்துக் கலைஞர்கள் [ பாகம் 1 ]
வணக்கம் நண்பர்களே !
அண்மையில் ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பற்றிய தகவல்களை பதிந்திருந்தேன் அதனைத்தொடர்ந்து இலங்கை வாழ் கலைஞர்கள் மற்றும் மறைந்த கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களின் விபரங்களை என் சக்திக்கு ஏற்றவாறு திரட்டித் தரலாமென்றிருக்கிறேன்
முதலில் ஈழத்துக்கவிஞர்கள் பற்றிய தகவல்களைதருகிறேன் தருகிறேன் இனிவரும்காலங்களில் அவர்களைப்பற்றிய முழு விபரங்களை சேகரித்து தரலாமென்றிருக்கிறேன் நான் சிறியவன் பிழைகள் ஏதுமிருப்பின் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம் பின்னூட்டங்களே எனக்கு நீங்கள் தரும் உற்சாகம்
மற்றும் ஈழத்துக்கவிஞர்கள் பற்றி அறிந்துள்ள கானாபிரபா அண்ணா சின்னக்குட்டியார் யோகன் அண்ணா வெற்றி நீங்கள் இதிலுள்ள பிழைகளை நிச்சயம் திருத்துவீர்கள் என நினைக்கிறேன்
1] கல்லடி வேலுப்பிள்ளை
2] வீரமணி ஐயர் - இணுவில்
5] காசி ஆனந்தன் (காத்தமுத்து சிவானந்தன்) - மட்டக்களப்பு
6] தாமரைத்தீவான் - திருகோணமலை
11] போராட்டக் கவிஞர் சுபத்திரன் - மட்டக்களப்பு
12 ] சோலைக்கிளி( உதுமாலெவ்வை முகம்மது அதீக் ) - கல்முனை
13] பொன் கணேசமூர்த்தி - யாழ்ப்பாணம்
14] மன்னவன் கந்தப்பு
15] பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
16 ] சில்லையூர் செல்வராசன்
59] சந்திரபோபோஸ்
இயன்றவரை இந்தப்பயணம் தொடரும்
நன்றி
மதியம் செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007
இந்திய வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
மதியம் சனி, 11 ஆகஸ்ட் 2007
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
1 ) சமுதாயம் (1962)
2) தோட்டக்காரி (1963)
3) கடமையின் எல்லை (1966)
தயாரிப்பாளர் : எம். வேதநாயகம்
கதை : வில்லியம் ஷேக்ஸ்பியர்
திரைக்கதை : வித்துவான் ஆனந்தராயர்
நடிப்பு : தேவன் அழகக்கோன் , எம். உதயகுமார் , பொனி ரொபேர்ட்ஸ் , ஏ.,ரகுநாதன் , ஐராங்கனி , ஜி. நிர்மலா , ஆர். அமிர்தவாசகம் , எஸ். ரி. அரசு , கே. துரைசிங்கம் , ஆர். காசிநாதன் , எஸ். பஸ்தியாம்பிள்ளை
* யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்(Hamlet) என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.
4) பாச நிலா (1966)
5) டாக்சி டிறைவர் (1966)
6) நிர்மலா (1968 )
7) மஞ்சள் குங்குமம் (1970)
8) வெண் சங்கு (1970)
9) குத்துவிளக்கு (1972)
தயாரிப்பாளர் : எஸ். துரைராஜா
நடிப்பு : ஆனந்தன் , ஜெயகாந்த் , லீலா நாராயணன் , பேரம்பலம் , எம். எஸ். ரத்தினம் , எஸ். ராம்தாஸ் , நாகேந்திரா
பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் வடமராட்சியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்தார்
10) மீனவப் பெண் (1973)
11) புதிய காற்று (1975)
12) கோமாளிகள் (1976)
13) பொன்மணி(1977)
நடிப்பு : பாலச்சந்திரன் , சுபாஷினி , சித்திரலேகா மெளனகுரு , எம். எஸ். பத்மநாதன் , கலாநிதி செ. சிவஞானசுந்தரம்(நந்தி) , கைலாசப்தி
* சிங்களத் திரைப்பட இயக்குனரான தர்மசேன பத்திராஜாவினால் இயக்கப்பெற்றது.
14) காத்திருப்பேன் உனக்காக (1977)
தயாரிப்பாளர் : எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜ்
கதை : எம். செல்வராஜ்
திரைக்கதை : நவாலியூர் நா. செல்லத்துரை
நடிப்பு : என். சிவராம்,கீதாஞ்சலி , ரவி செல்வராஜ்,விஸ்வநாதராஜா ,நவாலியூர் நா. செல்லத்துரை ,ருக்மணி தேவி,எம். எம். ஏ. லத்தீப் , தர்மலிங்கம்
* சிறந்த நடிப்பு,இனிய பாடல்கள், நல்ல திரைக்கதை என்று இருந்தபோதிலும், நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
15) நான் உங்கள் தோழன் (1978)
இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : வி. பி. கணேசன்
கதை : கலைச்செல்வன்
நடிப்பு : வி. பி. கணேசன் , சுபாஷினி , எஸ். ராம்தாஸ் , எம். எம். ஏ. லத்தீப் , கே. ஏ. ஜவாஹர் , கலைச்செல்வன் , ஹரிதாஸ் , ருக்மணி தேவி , ஜெனிடா , சந்திரகலா , எஸ். என். தனரட்னம் , விமல் சொக்கநாதன் , ஜெயதேவி
1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மொத்தம் 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
* கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்ப்டிப்பு நடத்தினார்கள்.
* அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.
16) வாடைக்காற்று (1978)
தயாரிப்பாளர் : ஏ. சிவதாசன், ஆர். மகேந்திரன், எஸ். குணரட்னம்
கதை : செங்கை ஆழியான்
திரைக்கதை : செம்பியன் செல்வன், கே. எம். வாசகர்
நடிப்பு : ஏ. இ. மனோகரன் , கே. எஸ். பாலச்சந்திரன் , Dr.கே. இந்திரகுமார் , சந்திரகலா , ஆனந்தராணி , இராசரட்னம் , எஸ். ஜேசுரட்னம் , ஏ. பிரான்சிஸ் , கே. ஏ. ஜவாஹர் , எஸ். எஸ். கணேசபிள்ளை , ஜெயதேவி , லடிஸ் வீரமணி , டிங்கிரி கனகரட்னம் , சிவகுரு , சிவபாலன் , நேரு
கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.
* பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.
* 'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், போக்குவரத்துச்சிரமங்களின் காரணமாக அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.
* இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.
* வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மேலும் விபரங்களுக்கு கானாபிரபா அண்ணாவின் வாடைக்காற்று பற்றிய பதிவு
17) தென்றலும் புயலும் (1978)
தயாரிப்பாளர் : மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம்
திரைக்கதை : எஸ். ஆர். வேதநாயகம்
நடிப்பு : சிவபாதவிருதையர் , ஹெலன்குமாரி , சாம்பசிவம் , எஸ். ஆர். வேதநாயகம் , சித்தி அமரசிங்கம் , ஏ. ஜவாஹர் , டீன் குமார் , செல்வம் பெர்னாண்டோ , சந்திரகலா , தனரட்னம
யாழ்ப்பாணத்தில் ஒரேநேரம் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "வாடைக்காற்று" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது மிகவும் அரிதானதென அந்தக்கால இளைஞர்கள் கதைத்தனர்
18) தெய்வம் தந்த வீடு (1978)
19) ஏமாளிகள் (1978)
தயாரிப்பாளர் : ஏ. எல். எம். மவுஜூட்
கதை : கே ஏ எஸ். ராம்தாஸ்
நடிப்பு : என். சிவராம் , ஹெலன்குமாரி , ராஜலட்சுமி , ரி. ராஜகோபால் , எஸ். செல்வசேகரன் , கே. ஏ. ஜவாஹர் , இரா பத்மநாதன்
இசை : கண்ணன் - நேசம்
கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.
20) அனுராகம் (1978)
இயக்குனர : யசபாலித்த நாணயக்கார
தயாரிப்பாளர் : யசபாலித்த நாணயக்கார
திரைக்கதை : பி. எஸ். நாகலிங்கம்
நடிப்பு : என். சிவராம் , சந்திரகலா , அனோஜா , எஸ். என். தனரட்னம் , எஸ். விஸ்வநாதராஜா , டொன் பொஸ்கோ , செல்வம் பெர்னாண்டோ
* சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதை படமாக்கப்பட்டது .கீதிகா என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள்.பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும், மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.
* இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல இரண்டு மொழிகளிலும் படமாகிய நாடு போற்ற வாழ்க திரைப்படத்தையும் இயக்கியவர். இவர் இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
21) எங்களில் ஒருவன் (1979)
22) மாமியார் வீடு (1979)
23 ) நெஞ்சுக்கு நீதி (1980)
24) இரத்தத்தின் இரத்தமே (1980)
25) அவள் ஒரு ஜீவநதி (1980 )
இயக்குனர் :ஜே. பி. ரொபேர்ட், ஜோ மைக்கல்
கதை :மாத்தளை கார்த்திகேசு
நடிப்பு : கே. எஸ். பாலச்சந்திரன் , டீன் குமார் , விஜயராஜா , எம். ஏகாம்பரம் , கார்த்திகேசு , திருச்செந்தூரன் , அனுஷா , ஆர். சிதம்பரம் , சீதாராமன் , , கந்தையா , ஸ்ரீதர் , மோகன்குமார் , சந்திரகலாஈழத்து ரத்தினம், சி. மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, இசை அமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா இசை அமைக்க, வி. முத்தழகு, கலாவதி, எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, சுஜாதா அத்தனாயக்க, ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் பாடினார்கள்.
26) நாடு போற்ற வாழ்க (1981)
கதை : எஸ். என். தனரட்ணம்
நடிப்பு : வி. பி, கணேசன் , கே. எஸ். பாலச்சந்திரன் , கீதா குமாரதுங்க , ஸ்வர்ணா மல்லவராச்சி , எஸ். ராம்தாஸ் , ஏ. லத்தீப் , எம். ஏகாம்பரம் , உபாலி செல்வசேகரன் , டொன் பொஸ்கோ , மணிமேகலை , புஸ்பா , ரஞ்சனி
* இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.
* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் சிங்களப் படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான விஜய குமாரதுங்க ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.
27) பாதை மாறிய பருவங்கள் (1982)
28) ஷார்மிளாவின் இதய ராகம் (1993)
தயாரிப்பாளர் : பேராதனை ஜுனைதீன், ஜெக்கியா ஜுனைதீன்
கதை : ஜெக்கியா ஜுனைதீன்
திரைக்கதை : பேராதனை ஜுனைதீன்
நடிப்பு : சசி விஜேந்திரா , வீணா ஜெயக்கொடி , கே. ஏ. ஜவாஹர் , எஸ். ராம்தாஸ் , கே. எஸ். பாலச்சந்திரன் , எம். எம். ஏ. லத்தீப் , ஜோபு நசீர் , எஸ். விஸ்வநாதராஜா , எஸ். என். தனரட்ணம், கமலஸ்ரீ , ராஜம் , திவானி , ஜெயப்பிரியா , பாத்திமா , சுஸ்பிகா
* இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம்.
* 1989ல் த்யாரித்து முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 4 வருடங்கள் கழிந்தபின்னரே 1993ல் திரைக்கு வந்தது.
* இத்திரைப்படம் "ஒப மட்ட வாசனா" என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
இப்போது தமிழ்ப்படங்கள் முற்றிலுமாக வெளிவருவது இல்லை காரணம் அயல்மொழி திரைப்படங்களின் காரணமாயிருக்குமா ?