கார்த்திகை விளக்கீடு ஞாபகங்கள்
வரும் சனிக்கிழமை வழமைபோல் கார்த்திகைத்தீபத்திருநாள் வருகிறது . எல்லார் வீட்டிலும் தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற மாதிரி எல்லார் மனதிலும் அந்த ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும். அது எல்லோர் மனதையும் நிறைக்கட்டும். சமாதானமே எமக்குத்தேவை அந்தப் பெரும் உண்மையைப் புரிந்து கொள்ளும் திறனை இந்தக் கார்த்திகைத்திருநாள் நம் எல்லாருக்கும் அளிக்கட்டும் . புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அனைவருக்கும் தத்தமது பழைய கால நினைவுகள் வந்துபோகும் அந்தவகையில் எனக்கும் கார்த்திகைத்தீபத்திருநாள் நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிப்பார்க்கிறேன் ( நாம் அனேகர் கழிந்த நிகழ்வுகளோடும் தான் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றதாக இருக்கிறது ) என் பதின்ம வயதுகளில் தோழர்களோடு விளக்கீடு நாட்களின் நினைவுகளை இன்றைய நிஜங்களோடு இரைமீட்கின்றேன்.
விளக்கீடு அன்று காலையே பருத்திவேட்டியைக்கிழித்து வெட்டிய கிழுவை மரத்தடிகளில் பந்தம் கட்டுவதும் , வழைக்குற்றியொன்றை வீட்டமுகப்பில் நடுவதற்காக வெட்டிவைப்பதுமாக வீட்டில் ஓர் இனம்புரியாத உஷார் கிளம்பிவிடும் படிப்படியாக விளக்கேற்றுவதற்காக சுட்டிகள் தேங்காய்ப்பாதிகள், திரிகள் என போர்க்களத்திற்கு போவது போல் தயாராகும் . மாலை வாழைக்குற்றியை வீட்டுப்படலைக்குமுன்னால் நட்டு அதற்குரிய அலங்காரமெல்லாம் செய்து இறுதியில் பாதிவெட்டிய தேங்காயில் திரியைப்போட்டு எரித்துவிட்டால் சும்மா ஜெகஜோதியாய் எரிவதைப்பார்க்க அழகாயிருக்கும் . வீடுகள் தோறும் தீபங்கள் அசைந்தாட அந்த காட்சியே அருமை தான்:) அனேகமாக அந்நேரத்தில் தான் கோவில்களில் சொக்கப்பனையும் எரிபடும்
அத்தோடு நாம் வாழைக்குற்றியின் பாதுகாப்பை வீட்டு மகளீரிடம் ஒப்படைத்துவிட்டு சைக்கிளையும் எடுத்துக்கொண்டு ஏரியாவைச்சுற்றிப்பார்க்கக்கிளம்பிவிடுவம் அவ்வப்போது போகிற பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படாத வழைக்குற்றிகளை நிலத்தில் சாய்ப்பதுவும் சிட்டிகளை பொறுக்கி வேறு இடத்தில் இடம்மாற்றி வைப்பதுவும் நடக்கும் .
இந்நசுவையான காலங்களெல்லாம் இனியெப்போதாவது நடக்குமா :(
"நம் மனமாகிய இருண்ட காட்டிற்கும் அது போல் ஒரு ஞான ஒளி தோன்ற வேண்டும். காட்டில் ஏற்படும் தீயானது எப்படிக் காட்டை அழித்துப் பொசுக்குகிறதோ, அது போல் நம் மனத்தில் தோன்றும் இந்த ஒளியானது நம் மனமாகிய காட்டில் உள்ள இருண்ட பாகங்க்ளில் ஒளியைத் தோற்றுவிப்பதோடு நில்லாமல், காட்டில் உள்ள வேண்டாத செடி, கொடி, மரங்களான ஆசை, பொறாமை, தீயவை நினைத்தல், தீயவை செய்தல், தீயவை பார்த்தல் போன்றவற்றையும் அழித்துப் பொசுக்க வேண்டும். கார்த்திகைத் திருநாளில் தீபவொளி பொலிந்து உலகம் உய்ய இறைவனை வணங்குகிறேன். "
என்றென்றும் அன்புடன்
மாயா
3 பின்னூட்டம்(கள்):
மாயா!!
நல்ல நினைவு மீட்டல்; இந்த விளக்கீட்டுப் பந்தம் மாட்டுக் கொட்டிலுக்கு ஒன்று; பனம்கிழங்குப் பாத்திக் ஒன்று, எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய புளியமரம் அதன் அடியில் கூட ஒன்று
நடுவோம். இன்று வரை இதற்கு விளக்கம் தெரியாது....
அழகான இரவு
அது சரி, வீட்டுக்கு முன்னால நின்று ஆக்கள் எரித்துக்கொண்டிருக்கும்போது உப்பு போட்டுவிட்டு ஓடியிருக்கின்றீர்களா? :)
யோகன் அண்ணா அருமையாகச்சொன்னீர்கள் :)
நிச்சயமாக aaru இதற்கு [ உப்பு போட்டுவிட்டு வெடிப்பதற்கு ]போடடி வேற நடக்கும் :))
Post a Comment