மறக்கமுடியாத பயணங்கள். [ நண்பனின் வலைப்பூ ]

நிலத்தில் தெறித்துத் திசைக்கொன்றாயச் சிதறியோடியிருக்கும் பிஞ்சில் முற்றிய வெம்பல் மாங்காய்களாய் இப்போது. . . . .
சொந்த மண்ணிலிருந்து திசைமாறிய பறவைகளாகத் திக்கொன்றாய்ப் போன நண்பர்களாய் நாம் நாம் இப்போது. . . . .
ஆனால் கடந்த ஆண்டுகளில் பிரிந்திருந்த நண்பர்களை இணைத்தது இணையம் நிச்சயமாக பிரிந்திருந்த பல நண்பர்களை இணையம் உறவுப்பாலம் தேடித்தந்துவிட்டது. ஒருவரா இருவரா விரல் விட்டுச் சொல்ல..?
அந்த வகையில் வலையுலகில் புதிதாக தடம்பதிக்க வந்திருக்கும் பள்ளி நண்பனொருவனை இனங்கண்டுள்ளேன் . . . .
நன்றியுடன்
மாயா

Read more...

வலையுலக ஜாம்பவான்களின் கரிசனைக்கு நன்றி


நண்பர்களே வணக்கம் இனிமேல் தமிழ் வலையுலகின் இன்றைய நிலைபற்றி கண்டு கொள்ளமாட்டேன் . . . .

இனிமேல் சிறியவனாகிய நான் " தமிழ் வலையுலகின் இன்றைய நிலைபற்றி இலங்கை வாசகன் ." என்றெல்லாம் எழுத மாட்டேன் கும்மிஅடிப்பவர்களைக்கண்டு புலம்பமாட்டேன் மொக்கைப்பதிவு போட்டால் கண்டு கொள்ளமாட்டேன் ஏனென்றால் நான் தமிழ் வலையுலகின் இன்றைய நிலைபற்றி இலங்கை வாசகன் .என்ற பதிவொன்றைப்போட்ட பின் வந்த பின்னூட்டங்கள் மின்னஞ்சல்கள் ? ? (சும்மாசொல்லப்படாது கனபேர் இதுக்கென பார்த்துக்கொண்டிருப்பினம் பதிவுகள் வந்தால் சரி அவ்வளவுதான் பதிவு போட்டவர் சரி ?) போன்றவற்றால் என்னை " தானே தக்கன தான் வாழும் " என்ற சார்ள்ஸ் டாவின் இன் கொள்கைக்கு அமைய திருத்திக்கொண்டேன் கடந்த சில வாரங்களாக தமிழ்வலையுலகம் அழுகியமணத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது அனைவ‌ருக்கும் தெரியும். நிறைய பேர் வேடிக்கை பார்த்தார்கள் நானும் ஒப்புக்கொள்கிறேன்., தமிழ் வலைப்பதிவு உலகம் இப்போது ரணகளமாக காட்சி தருகிறது. இதில் வந்து வாசிக்கும் போதே குற்ற உணர்ச்சி தோன்றுகிறது தமிழனுக்கே உரித்தான ஒற்றுமையின்மை, இங்கேயும் காட்சி தர ஆரம்பித்து விட்டது என எண்ணத்தோன்றுகிறது .பதிவைத்தாண்டி ஒரு வார்த்தைப் போர் ந‌ட‌ந்து கொண்டிருந்ததினால் நிறைய‌ பேர் அமைதி காத்திருக்க‌க் கூடும் . பல மூத்த பதிவர்கள் மொளனம் சாதிப்பது வருத்தத்தை அளிக்கிறது . நிறைய‌ பேர் என்னைப்போல் தனிப்பட்டரீதியில் காய‌ப்ப‌டாத‌தினாலும் அமைதியாய் இருந்திருக்க‌க் கூடும். நம் நாட்டில், எத்தனை கொடுமைகள் தினமும் நடைபெறுகின்றன அவற்றையெல்லாம் தட்டிக்கேட்கமுடியாமல் பழகிக் கொண்டுள்ளோம். அல்லவா அதுமாதிரி தான் இந்த வலையுலகில் சில கொடுமைகள் நடைபெறுகின்றன எங்கேயாவ‌து நடந்தால் நடந்துவிட்டுப்போகட்டுமே என்கென்ன என்னால் எதிர்த்துப்பேசவா முடியும் ( நாம் அன்றாடம் பார்க்காத,கேட்காத அசிங்கங்களா,கொடுமைகளா இந்த வலைப் உலகில் புதிதாக பார்க்கிறோம்..என்று மனதைத் தேற்றவேண்டியது தான் )

படிப்பு நேரம் போக சோர்வு ஏற்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு உற்சாகத்தை திருப்பித் தரும் மருந்தாக இருந்து வந்தது வலைப்பூக்களில் எழுதுவது.ம் வலைப்பதிவுகளை வாசிப்பதும்தான் தமிழ்மணத்தை ஒருமுறையாவது பார்க்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பது போன்ற நிலை... ஏற்பட்டதும் உண்டு ஆனால் இப்போ தமிழ்திரட்டிகளைத்திறக்கும் போது ஒருவித பயத்துடனே திறக்கவேண்டியதாயிருக்கிறது குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சாக்கடைக்குள் இறங்கியதாய் எனக்குள் ஓர் உணாவு. கூடாத வார்த்தைப்பிரயோகங்கள் திட்டுக்கள் என சாக்கடைக்கழிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தது. அருவருப்பாய் இருந்தாலும் முன்னர் போல் அழாமல் அமைதியாகவிருந்தேன் ( வீதியால் செல்லும்போது சாக்கடை நாறினால் மூக்கை மூடியவாறு கடப்பதில்லையா அதுபோல் கடந்தவாரத்தைக்கடந்தேன் )

ஆரம்பத்தில் நான் வலைப்பதிவாளர்களிடமிருந்து எதிர்பரர்த்தது :))

எழுதுபவாகள் தன் எழுத்து மேல் கொஞ்சமாவது நம்பிக்க வைத்து எழுதவேண்டும் ஒரே மாதிரியே எழுதாது பல விசயங்களையும் எழுத முயற்சிசெய்யவேண்டும் அதற்கு தன் எழுத்து மேல நம்பிக்கை இருந்தால் மட்டும்தான் முடியும்.

ஆனால் இதெல்லாம் தேவையி்ல்லை என சில வலைப்பதிவுலகில் மூத்தவர்களென்று கூறிக்கோள்வோர் அன்பாகத்தெரிவித்தார்கள் உதாரணத்திற்கு ஒன்று "முதலில் வலைப்பதிவென்பது ஏதோ உலகத்தைப் புரட்டிப்போட வந்த ஊடகமென்ற கனவுகளைக் கலைக்க வேண்டும். பலர் இப்படித்தான் புரளி கிழப்பிக்கொண்டு திரிகிறார்கள். " இப்படிசொல்பவர்களுக்கு வலைப்பதிவுகளின் நிலைபற்றி நான் எப்படிப்புரியவைப்பது அது ஒரு தனிமனித மீடியா என்பதை எப்படிப்புரிவைப்பது . . . உண்மையில் இந்த வ‌லைபூக்க‌ளினால் அடித்தட்டு மக்களுக்கு ஒரு பயணும் இல்லை.ஆனால் அவர்களிடம் கொண்டுசென்றால் பெரிய‌ வெற்றி தானே இதை ஏன் விளங்கிக்கோள்கிறார்களில்லை

கடைசியாக ஒரு சிறு கருத்து . இணைய சுதந்திரம் வேறு . . . இணைய அராஜகம் வேறு . . . என்று நான் அறிந்துள்ளேன் அதை நான் எழுதிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் மூலம் பார்த்து அறிந்துகொள்ள முடிந்தது. சில நட்புகள் கிடைத்தன. . சிலநட்புகளை இழந்தேன். மற்றபடி பெரிதாக எதையும் சாதிக்கவில்லை கடைசியாக ஒன்று அடிப்படையில் நான் சாதாரணன் உருவாக்குபவன் மட்டுமே ! அழித்தல் குணம் அல்ல... நாட்டில் தான் அமைதியில்லை வலையுலகிலாவது அமைதி நிலவட்டும்...என எண்ணுபவன்

ஓர் இலங்கைத்தமிழனாக " எமக்கான நிலம், எமக்காக நிரந்தரிக்கப்படும்வரை மின்வெளியில் ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் பெரும்பணியில் இந்த இணையம் பயன்படலாமே ? ? சகோதர ,சகோதரிகளே த‌மிழுக்காவாவது, நாம் நம் பயண‌த்தை தொடரலாமே...!!!
'வ‌லைப்பூக்க‌ள் வாழ‌ட்டும் இன்று இல்லையென்றாலும், என்றாவதோர்நாள் ஒரு தென்றல் வீசும் நந்தவனத்திற்குள் நுழைந்த உணர்வு மட்டுமே ஏற்படும் சூழ்நிலை உருவாக்கலாமே

இந்த இணையப்பதிவுகளை பயனுள்ளதான ஒரு சுதந்திர வெளியாக பயன்படுத்தலாம் பேணுவார்கள் என்ற நம்பிக்கையேடு

மாயா

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP