தமிழ் சினிமாவுக்கு வயது 76

தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியாகி வரும் 31ம் தேதியுடன் 76 வயதாகிறது. தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் என்ற பெருமை காளிதாஸுக்கு உண்டு. இப்படம் கடந்த 1931ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் வெளியாகி வருகிற 31ம் தேதியுடன் 76ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை பேசும் படம் என்று சொல்வதை விட பாடும் படம் என்றும் கூறலாம். காரணம் படம் முழுக்க பாடல்கள்தான் அதிகம் இருந்தன. புராணக் கதையான இப்படத்தில் டி.பி.ராஜலட்சுமி ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழ்ப் படம் என்று கூறினாலும் கூட பன் மொழிக் கலைஞர்கள், அவரவர் தாய் மொழியிலேயே பேசி நடித்திருந்ததால் இதை பன்மொழிப் படம் என்றும் கூறலாம். காளிதாஸ் படத்தைத் தயாரித்தவர் எச்.எம்.ரெட்டி. இவர்தான் தெலுங்கின் முதல் பேசும் படமான பிரகலாதாவையும் தயாரித்தார். காளிதாஸ் படத்தில் இடம் பெற்ற ராட்டினப் பாடலும், தியாகராஜரின் குறத்தி நடன¬ம் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவை. முதல் தமிழ்ப் படத்திற்கு மட்டுமல்லாது தமிழ் சினிமாவுக்கும் வயது 76

Read more...

பதிவர்களே அனானி பின்னூட்டங்களை தவிர்க்கலாமே ?

வணக்கம்
17-10-2007 அன்று தோழர்களே! இலங்கை வலைப்பதிவர்களை தாக்கி பதிவிடுவதை நிறுத்துங்கள் ! என்ற தலைப்பில் பதிவு எழுதினவுடன் அதிகாலை " 4 " என தொடங்கிய வருகையாளர் ஒனலைனில் இருந்தோர் மடமட என உயர்ந்து மாலை 5 மணிக்கு 69 என்னும் இலக்கை தொட்டது பின் நாட்டு நிலமைகாரணமாக இணையத்தை நிறுத்திக்கொண்டு வீடுசென்றுவிட்டேன் அடுத்தநாள் பதிவை திறந்து பார்த்தபோது (அப்போது நான் பின்னூட்டங்கள் மட்டறுக்கும் வசதியைசெய்யவில்லை ) வலைபூ அனானிகளால் அசிங்கம் பண்ணப்பட்டிருந்தது கன பேர் அனானிமஸ் ஆக வந்திட்டாங்க அவற்றிலும் பயனுள்ள சில தகவல்கள் இருந்தன என்று தெரிவித்துக் கொள்கின்றேன். தூஷணங்களும் இருந்தன என்பதைச் சொல்லித்தானா தெரியவேண்டும் ? ரெம்பக்கேவலமாக போட்டுட்டாங்கையா போட்டிட்டாங்க ! அனானிமஸாக ( முந்தைய பதினவொன்றிலும் இவ்வாறு நடந்தது நண்பர்களின் அறிவுரையின் பேரில் நீக்கிவிட்டேன் ) காலை உடனடியாக அனைத்து அனாகரீகபின்னூட்டங்களைளும் நீக்கி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது

அன்னியன் படத்தில் கூறப்படும் Mutiple Personality Disorder என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் திரைப்படத்தில் மட்டுமல்ல, வலைப்பதிவுலகில் கூட உண்டு. அந்தவகை நோயால் பாதிக்கப்பட்ட அனானிகளே இங்கு ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ளவேனண்டும் நிச்சயமாக நீங்கள் ஒருபதிவர் என்பதில் ஐயமில்லை மற்றவருக்கும் அப்படி பின்னுட்டங்கள் போடத்தெரியும் ஆனால் அவர்கள் அதை போட விரும்புவதில்லை அது தான் இணைய கலாச்சாரம். அனானி பின்னூட்டங்களால் நல்லவிடையங்கள் பரிமாறமுடியும் ஆனால் சொல்லவிரும்பும் விடையத்தை உங்கள் பெயரில் வந்து சொன்னால் என்ன ?

முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.

கொஞ்சக்காலமாய்த்தான் எழுதுகிறேன். எத்தனையோ பேரை நண்பர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களே அனானிகளாக வந்து இழிவாக எழுதுகிறார்கள் ( இணையத்திற்கு நான் புதியவனில்லை IP Address முலம் போக்குகள் வரத்துகள் எல்லாம் கண்டுபிடிக்கத் தெரியும் ) . . . . .

உங்களுக்குள் இருக்கின்ற விரோதங்களை எனது வலைப்பூவில் பின்னூட்டம் வெளியிட்டு, எனக்குரிய வாசகர் வட்டத்தினை குறைக்க வேண்டாம் என தாழ்மையான வேண்டுகோளை மீண்டும் ஒருமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் விடுக்கின்றேன்.


இணையம் என்பது எனக்கு வார்த்தையில்லை, வாழ்க்கை
யாருக்காகவும் பயந்து ஓடமாட்டேன்
இங்கே தான் நிற்பேன்
இங்கேதான் வளர்வேன்
இந்கேதான் சாதிப்பேன்

மாயா
அன்றைய பதிவின் விளைவுகள்
வருகைதந்தோர்


பதிவின்முன் பதிவின்பின்

Read more...

தோழர்களே! இலங்கை வலைப்பதிவர்களை தாக்கி பதிவிடுவதை நிறுத்துங்கள் !

தமிழ் வலையுலகில் மிகமுக்கியமான ஓர் நபராகக் கண்க்கப்படும் ஒருவர் அவருடைய வலைப்புவில் " உங்களுக்கு தான் படம் போட்டு எழுதும் அளவுக்கு உங்கள் நாட்டில் சுதந்திரம் இல்லை யார் யாருக்கோ பயந்துக் கொண்டு பொத்திக் கொண்டிருக்கிறீர்கள். " என்றும் ஈழத்தமிழர்கள் முகம் காட்ட மறுப்பவர்கள் முகம் காட்டும் அளவிற்கு தைரியமில்லாதவர்கள் என்ற சாரத்துட்ன் பதிவிட்டிருந்தார் எனது இந்தப்பதிவு அவர் பதிவிட்டிருந்த அன்றே வந்திருக்கவேண்டும் ஆனால் 2ம் ஆண்டு பரீட்சகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாலும் நேரம் கிடைக்காமையாலும் பிந்தி பதிகிறேன் மன்னிக்கவும்

மூலப்பதிவு வாத்தியத்தேவன்
பதிவரே !
உங்களுக்கு உண்மையாகவே இலங்கைவாழ்தமிழர்களின் நிலை தெரியமா ? இல்லை நீங்களும் ஹிந்து போன்ற பதிதிரிகைகளை படித்துவிட்டு சும்மா போலியாக இலங்கை வாழ் தமிழர்களை ஆதரிக்கின்றீர்களா ? நாம் யுத்தம் என்ற அரக்கனால் உயிர்கள் உடைமைகள் இழந்து வாழ்பவர்கள் எங்களுக்கு உளளோன்று வைத்து வெளியிலோன்று கதைக்கத்தெரியாது வெளிப்படையாகச் சொல்கிறேன் எங்களுக்கு எங்கள் புகைப்படங்களை பதிவில்போட்டு எழுதுவதற்கு பயம் தான் ! அதற்கு இப்ப என்ன ?
நாங்கள் தினமும் எவ்வாறெல்லாம் கவனிக்கப்படுகிறோம் தெரியுமா . .
உதாரணத்திற்கு என்னை எடுத்துக்கோள்வேம் நான் படிக்கும் இடத்தில் இருந்து தான பதிவிடுகிறவன் நான் படிக்கும் இடத்தில் என்னுடன் சேர்த்து மொத்தம் 20 தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர் அனைவரினதும் இணையப்போக்குவரத்துக்கள் (தமிழர்களென்பதால் )தினமும் கண்காணிக்கப்படுகறது இது அனைவருக்கும் தெரியும் ஆனால் என்ன செய்வது ஏன் கண்காணிக்கிறீர்களென்று கேட்கவா முடியும் பேசாமல் தான் இருக்கவேண்டும்,
காரணம் . . . . . ஏனைய இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் அனைத்து தோழர்களுக்கும் தெரியும். அந்தமாதிரியான சூழலில் புகைப்படங்களை போட்டு எவ்வாறு விலாவாரியாக எழுத முடியும் சொல்லுங்கள் ? உங்களுக்கு நாம் அனுபவிக்கும் வேதனைகள் ஏதும் தெரியாது சிலவற்றை வார்த்தையினால் சொல்வதைவிட அனுபவித்தால் தான் தெரியும்.

உங்கள் பெயர் பிரபலமடைய எம்மை வம்புச் சண்டைக்கு இழுக்காதீர்கள். நீங்களோ சொகுசாக வாழ்ந்துகொண்டு எம்மைச் சீண்டிப்பார்க்கிறீர்கள். தயவு செய்து இப்படியான கீழ்த்தரமான வரிகளை எழுதாதீர்கள். பிரச்சனைகளை தீர ஆராயாமல் உங்கட பாட்டுக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதாதீர்கள் ஒரு விடயத்தை உறுதியாக அடித்துச் சொல்ல முன் அதுபற்றி ஆய்வு அல்லது கருத்துக்கணிப்புச் செய்து சொல்வதுதான் சிறந்தது. யாரோ ஒருவன் உங்களிடம் வம்பு செய்தால் உடனே முழு ஈழத்தவர்களையும் கேலி செய்யாதீர்கள்.

பதிவரே உங்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுது நீங்கள் வித்தியாசமானவர் என நினைத்தேன் ஆனால் ஒரு வரியின் மூலம் நீங்களும் சராசரியானவர் தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

தோழரே வலைப்பக்கங்களின் நீண்டநாள் வாசகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள்! இவன் யார் சின்னப்பையன் நம்மைச் சொல்வதற்கு என நினைக்க வேண்டாம்.
நினைத்தாலும் மகிழ்ச்சி.
நினைக்காமல் இருந்தால் சந்தோசம்.
இது சுதந்திரமான உலகம் அதற்காக ஒருவருடைய எண்ணமோ, எழுத்தோ, செயலோ அடுத்தவர் மனம் புண்படும்படியாக இருக்கக்கூடாது. ஆகவே இத்தகைய வீணான பதிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நல்ல பதிவுகளைத்தொடருங்கள்
என் மனதுக்குப் பட்டது போல் பலருக்கும் தோன்றியிருக்கலாம்!
ஆனால் இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து!
என்னுடைய கருத்துக்களை சிலர் ஆதரிக்கலாம்,
சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை. நான் உங்களை கண்டிக்கும் மனப்பாங்கில் சொல்லவில்லை. ஒரு நண்பனின் தோளில் கை போட்டு தோழமையுடன் பேசுவது போல் என் கருத்தை சொல்லியிருக்கின்றேன்
நன்றியுடன்

மாயா

Read more...

தமிழ்மணத்தின் நட்சத்திரமே எங்கிருந்தாலும் வருக !!

பொதுவாக நட்சத்திர வாரத்திற்குரிய பதிவரது பதிவுகளால் தமிழ்மணம் களைகட்டும் ஆனால் இந்த வாரம் தமிழ்மணத்தி நட்சத்திர பதிவுகளில் எதையமே காணவில்லை . . . இந்த வாரத்த்திற்கான நட்சத்திரம் திரு பாலா அவரது நட்சத்திர வாரத்திற்கான தொடக்கம் 15 / 10 / 2007 ஆனால் அவர் இன்னும் புதிதாக பதிவுகள் எதனையும் இட்ட மாதிரி தெரியவில்லை

என்ன காரணமோ தெரியவில்லை

அவருக்கு வெறு வேலைகள் இருக்குமோ ?
ஒருவெளை அவர் இதை அறிந்திருக்கவில்லையோ ??

திரு பாலா அவர்களே இந்த சிறியவனின் அழைப்பு காதில் கேட்கிறதா ?

Read more...

காந்தி ஜெயந்தியும் இந்தியத்தொலைக்காட்சிகளும். . . . .

இந்தியாவின் சுதந்திரதந்தை மகாத்மா காந்தி அவர்களை நினைவு படுத்தும் காந்தி்ஜெயந்தி தினக்கொண்டாட்டங்கள் சின்னத்திரையில் வெகு அமர்களமாக களை கட்டி இருக்கிறது. சகல டீவிகளிலும் சகல நிகழ்ச்சிகளும் காந்தி்ஜெயந்தி Special சினிமா சினிமா. தான்
இதை பற்றி காலையில் இன்னோரு பதிவும் வந்துள்ளது பதிவில் முந்திய நண்பருக்கு பாராட்டுக்கள்

உதாரணத்திற்கு சன் டீவி இனது நிகழ்ச்சிகளைக்கவனிப்போம் (இலங்கை ரசிகர்களைப் பொறுத்தவரை சன் டீவிக்கென்று ஓர் மதிப்பும் மரியாதையும் உண்டு அதனால் நேற்றுப்பெய்த மழைக்கு திடீரென முளைத்த காளான்களைப்பற்றி எழுதவில்லை ) வழமைபோல் சன்னில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம். அடுத்து கந்தசாமி திரைப்படம் பற்றிய பார்வை ஒன்று , நடிகை ஜோதிர்மயியின் பேட்டி , பிறகு FIRE ONE வழங்கும் நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் விழா !, மதியம் அக்சன் கிங் இன் முதல்வன் படம் . காந்திக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம் ? (அதற்காக காந்தி சம்மந்தப்பட்ட ஹேராம் படமா போடமுடியும் ). ஆனால் இந்தப்படத்தில பல நல்லவிடையங்கள கையாளப்படுவதால் விட்டுவிடுவோம் காந்திஜெயந்தி என்பது இவர்களுக்கு இப்போ விளையாட்டாக போய்விட்டது. இப்படியான சுதந்திரம் தொடர்பான நன்னாளில் பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர தாகம் மிக்க படங்களைப்போடலாமே ?

அடுத்து பின்னேரப்படம் என்ன கொடுமையப்பா அது ! பின்ன போடுற படம் என்ன தெரியுமே ? 7 /Gரெயின்பொ காலனி . 7 /G ரெயின்பொ காலனி போன்ற திரைப்படக்குழுவினரால் A தரப்படம் என தணிக்கை பண்ணப்பட்ட படத்தை காந்தி்ஜெயந்தி நன்னாளில் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கமுடியுமா ? இங்கு நான் படத்தை குறை கூறவரவில்லை . . .அந்தப்படத்தை யாழ்ப்பாணத்தில ராஜா திரையரங்கில் முதல் நாள் காட்சிபார்த்தவனுள் நானுமொருவன் ( அப்போ ஜனவரி மாதம் பாடல் உட்பட அரைமணிநேர காட்சிகள் கத்தரிக்கப்பட்டது தெரியாமல் பார்த்தது வேறுகதை )

ஆனால் காந்தி பற்றி. ஆம் அவர் பற்றியும் இருந்தது . காலை 7 மணி முதல் 7.30 மணி வரை சிறிய ஆவணத் தொகுப்பில் மட்டும்.இந்தப்பதிவு எழுதும் நேரத்தில் போய்க் கொண்டிருக்கிறது அரையே அரை மணி. அதுவும் காலை நேரத்தில் ? தீபாவளி பொங்கல் புதுவருடம் போன்ற தினங்களில் சினிமா நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது சரியானதே ஆனால் காந்தி ஜெயந்தி , சுதந்திரதினம் போன்றவற்றிற்க்கு இவை தேவையா? இதை ஏன் டிவி காரர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை .

கலைஞர் தொலைகாட்சியில் மதியநேரதிரைப்படம் பரட்டை என்கிற அழகு சுந்தரம் . . . .
கொடுமை கொடுமை என்டு கோயிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை நின்னு கூத்தாடிக்கொண்டிருந்ததாம் என்ட மாதிரி இருந்துது . . . [கலைஞரும் ஏமாத்திப்போட்டார்]


இன்னோர் விடையத்தையும் எடுத்துக்கொள்ளலாம் TV வலையத்தினருக்கு நிகழ்ச்சியோ அதில் வருகிற விசயங்களோ அல்லது எடுத்து நடத்துற ஆட்களோ முக்கியமில்லையாம் . நிகழ்ச்சிகளோட ரேட்டிங் பற்றித்தான் கவலையாம்
அப்ப பாருங்களன் ?

இவ்வாறான விடையமொன்றை "நெஞ்சு பொறுக்குதில்லை " என்ற தலைப்பில் நண்பர் வாத்தியத்தேவன் முன்பும் எழுதியிருந்தார்

Read more...

சர்வதேச சிறுவர் தினம்


இன்று சர்வதேச சிறுவர் தினம் போர்க்காலச்சூழ் நிலையில் அதிகளவில் பாதிக்கப் படுவது சிறுவர்கள் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. போர்க்காலம் இல்லாத சூழ் நிலைகளிலும் அதிகம் பாதிக்கப் படுவதும் அவர்களே என்பது யாராலும் மறுக்கமுடியா உண்மையாகும். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வலிமையும் திறனும் அற்ற அவர்களை மற்றவர்கள் இலகுவில் ஆக்கிரமிக்கவும் சீரழிக்கவும் கூடிய வலிவற்றவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றார்கள்

பொதுவாக இராணுவ அடக்குமுறை நடைபெறம் நாடுகளில் இராணுவத்தின் செல்லடிகளிலும் ஆகாய தரை குண்டு வீச்சுத் தாக்குதலினாலும் தினம் தினம் செத்து மடியும் சிறுவர்களினதும் அனாதைகளாக்கப் படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அளவிட முடியாதது. அதே போல் தமது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கான போரியல் தளபாடங்களைக் கொள்வனவு செய்யும் பண வரவிற்கான ஒரு வழியாக உல்லாசப் பயணத் துறையை ஊக்குவிக்கும் சாக்கில் சிறுவர் பாலியல் சீரழிவுகளை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அரசாங்கமே ஊக்குவிக்கின்றது.
இலங்கையைப்பொறுத்தவரை இலங்கையின் அழகு மிகு கடற்கரைப் பிரதேசங்கள் எங்கும் இத்தகைய அசிங்கங்களைக் காணலாம் உல்லாசப் பிரயாணிகள் என்ற போர்வையில் தெரிவு செய்யும் இடம் இலங்கையாகும். தனிப்பட்ட முதலாளிகளும் அரசாங்கமும் இணைந்து ஊக்குவிக்கும் ஒரு துறையாக இது இருக்கின்றது.
போர் வெறியினால் பலியிடப்படும் இளைஞ்ர்களாகவும் பாலியல் தேவைகளுக்காகப் பலியிடப்படும் சிறுவர்களாகவும் இருப்பவர்கள் சிங்கள , தமிழ் ஏழை மக்களின் குழந்தைகளே

ஜனநாயகம் பற்றியும் சிறுவர் உரிமை பற்றியும் வாய்கிழியக் கத்தும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏனோ இதை கண்டும் காணது விட்டுள்ளன

சர்வதேச சிறுவர் தினமான இன்றும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் ஆனால் நிறைவேற்றப்படுமா ? ?

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP