சர்வதேச சிறுவர் தினம்
இன்று சர்வதேச சிறுவர் தினம் போர்க்காலச்சூழ் நிலையில் அதிகளவில் பாதிக்கப் படுவது சிறுவர்கள் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. போர்க்காலம் இல்லாத சூழ் நிலைகளிலும் அதிகம் பாதிக்கப் படுவதும் அவர்களே என்பது யாராலும் மறுக்கமுடியா உண்மையாகும். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வலிமையும் திறனும் அற்ற அவர்களை மற்றவர்கள் இலகுவில் ஆக்கிரமிக்கவும் சீரழிக்கவும் கூடிய வலிவற்றவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றார்கள்
பொதுவாக இராணுவ அடக்குமுறை நடைபெறம் நாடுகளில் இராணுவத்தின் செல்லடிகளிலும் ஆகாய தரை குண்டு வீச்சுத் தாக்குதலினாலும் தினம் தினம் செத்து மடியும் சிறுவர்களினதும் அனாதைகளாக்கப் படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அளவிட முடியாதது. அதே போல் தமது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கான போரியல் தளபாடங்களைக் கொள்வனவு செய்யும் பண வரவிற்கான ஒரு வழியாக உல்லாசப் பயணத் துறையை ஊக்குவிக்கும் சாக்கில் சிறுவர் பாலியல் சீரழிவுகளை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அரசாங்கமே ஊக்குவிக்கின்றது.
இலங்கையைப்பொறுத்தவரை இலங்கையின் அழகு மிகு கடற்கரைப் பிரதேசங்கள் எங்கும் இத்தகைய அசிங்கங்களைக் காணலாம் உல்லாசப் பிரயாணிகள் என்ற போர்வையில் தெரிவு செய்யும் இடம் இலங்கையாகும். தனிப்பட்ட முதலாளிகளும் அரசாங்கமும் இணைந்து ஊக்குவிக்கும் ஒரு துறையாக இது இருக்கின்றது.
போர் வெறியினால் பலியிடப்படும் இளைஞ்ர்களாகவும் பாலியல் தேவைகளுக்காகப் பலியிடப்படும் சிறுவர்களாகவும் இருப்பவர்கள் சிங்கள , தமிழ் ஏழை மக்களின் குழந்தைகளே
ஜனநாயகம் பற்றியும் சிறுவர் உரிமை பற்றியும் வாய்கிழியக் கத்தும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏனோ இதை கண்டும் காணது விட்டுள்ளன
சர்வதேச சிறுவர் தினமான இன்றும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் ஆனால் நிறைவேற்றப்படுமா ? ?
ஜனநாயகம் பற்றியும் சிறுவர் உரிமை பற்றியும் வாய்கிழியக் கத்தும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏனோ இதை கண்டும் காணது விட்டுள்ளன
சர்வதேச சிறுவர் தினமான இன்றும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் ஆனால் நிறைவேற்றப்படுமா ? ?
2 பின்னூட்டம்(கள்):
//சர்வதேச சிறுவர் தினமான இன்றும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் ஆனால் நிறைவேற்றப்படுமா ? ?//
இந்த வரி விளங்கவில்லை
ஆஹா #-o
அதாவது சட்டங்கள் பல இயற்றப்படும் ஆனால் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என சொல்ல வந்தேன் . . . .
Post a Comment