பதிவர்களே அனானி பின்னூட்டங்களை தவிர்க்கலாமே ?

வணக்கம்
17-10-2007 அன்று தோழர்களே! இலங்கை வலைப்பதிவர்களை தாக்கி பதிவிடுவதை நிறுத்துங்கள் ! என்ற தலைப்பில் பதிவு எழுதினவுடன் அதிகாலை " 4 " என தொடங்கிய வருகையாளர் ஒனலைனில் இருந்தோர் மடமட என உயர்ந்து மாலை 5 மணிக்கு 69 என்னும் இலக்கை தொட்டது பின் நாட்டு நிலமைகாரணமாக இணையத்தை நிறுத்திக்கொண்டு வீடுசென்றுவிட்டேன் அடுத்தநாள் பதிவை திறந்து பார்த்தபோது (அப்போது நான் பின்னூட்டங்கள் மட்டறுக்கும் வசதியைசெய்யவில்லை ) வலைபூ அனானிகளால் அசிங்கம் பண்ணப்பட்டிருந்தது கன பேர் அனானிமஸ் ஆக வந்திட்டாங்க அவற்றிலும் பயனுள்ள சில தகவல்கள் இருந்தன என்று தெரிவித்துக் கொள்கின்றேன். தூஷணங்களும் இருந்தன என்பதைச் சொல்லித்தானா தெரியவேண்டும் ? ரெம்பக்கேவலமாக போட்டுட்டாங்கையா போட்டிட்டாங்க ! அனானிமஸாக ( முந்தைய பதினவொன்றிலும் இவ்வாறு நடந்தது நண்பர்களின் அறிவுரையின் பேரில் நீக்கிவிட்டேன் ) காலை உடனடியாக அனைத்து அனாகரீகபின்னூட்டங்களைளும் நீக்கி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது

அன்னியன் படத்தில் கூறப்படும் Mutiple Personality Disorder என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் திரைப்படத்தில் மட்டுமல்ல, வலைப்பதிவுலகில் கூட உண்டு. அந்தவகை நோயால் பாதிக்கப்பட்ட அனானிகளே இங்கு ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ளவேனண்டும் நிச்சயமாக நீங்கள் ஒருபதிவர் என்பதில் ஐயமில்லை மற்றவருக்கும் அப்படி பின்னுட்டங்கள் போடத்தெரியும் ஆனால் அவர்கள் அதை போட விரும்புவதில்லை அது தான் இணைய கலாச்சாரம். அனானி பின்னூட்டங்களால் நல்லவிடையங்கள் பரிமாறமுடியும் ஆனால் சொல்லவிரும்பும் விடையத்தை உங்கள் பெயரில் வந்து சொன்னால் என்ன ?

முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.

கொஞ்சக்காலமாய்த்தான் எழுதுகிறேன். எத்தனையோ பேரை நண்பர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களே அனானிகளாக வந்து இழிவாக எழுதுகிறார்கள் ( இணையத்திற்கு நான் புதியவனில்லை IP Address முலம் போக்குகள் வரத்துகள் எல்லாம் கண்டுபிடிக்கத் தெரியும் ) . . . . .

உங்களுக்குள் இருக்கின்ற விரோதங்களை எனது வலைப்பூவில் பின்னூட்டம் வெளியிட்டு, எனக்குரிய வாசகர் வட்டத்தினை குறைக்க வேண்டாம் என தாழ்மையான வேண்டுகோளை மீண்டும் ஒருமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் விடுக்கின்றேன்.


இணையம் என்பது எனக்கு வார்த்தையில்லை, வாழ்க்கை
யாருக்காகவும் பயந்து ஓடமாட்டேன்
இங்கே தான் நிற்பேன்
இங்கேதான் வளர்வேன்
இந்கேதான் சாதிப்பேன்

மாயா
அன்றைய பதிவின் விளைவுகள்
வருகைதந்தோர்


பதிவின்முன் பதிவின்பின்

16 பின்னூட்டம்(கள்):

வடுவூர் குமார்  

இணையத்திற்கு நான் புதியவனில்லை IP Address முலம் போக்குகள் வரத்துகள் எல்லாம் கண்டுபிடிக்கத் தெரியும் )
இதைப் பற்றி கூட ஒரு பதிவு போடலாமே?
எனக்கும் தெரியாது.

Darren  

///முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.///


கிழித்துவிட்டப் பிறகும் சில மேலான பிறவிகள் இன்னும் உலாவிக் கொண்டும் ,நீதி வழங்கிக்கொண்டும்தான் இருக்கின்றன..

மண்னின் போர்க் குணம் குறையாமல் போரிடு தோழா..

"யாரிடமும் கேட்டுப் பெறுவதில்லை சுதந்திரம்.
நாமே எடுத்துக்கொள்வது"

கானா பிரபா  

உமக்கு நான் அப்பவே சொன்னனான் நல்ல சாத்திரியிட்டக் கொண்டு போய்ச் சாதகத்தைக் காட்டச் சொல்லி. கேட்டால் தானே?

dondu(#11168674346665545885)  

முதலில் நீங்கள் அனானி மற்றும் அதர் ஆப்ஷனை எடுத்து விட்டாலே பாதி பிரச்சினை குறையுமே. மட்டுறுத்தலும் இருக்கவே இருக்கிறது.

அதெல்லாம் செய்யாது, வீட்டை சரியாகப் பூட்டாது ஏன் மற்றவர்களை குறை கூறவேண்டும்?

அனானி அதர் ஆப்ஷன்களை வைத்து செயலாற்றுவது எல்லோராலும் ஆகாது. அதிலும் மட்டுறுத்தலும் இல்லை என்றால் சுத்தம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வந்தியத்தேவன்  

மாயா இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். உங்கள் பின்னூட்டங்களை மட்டுறுத்தவும்

கானா பிரபா  

தர்மத்துக்கு அழிவும் அதர்மத்துக்கு ஆக்கமும் வரும் போது அநானியாக வருவேன் என்று சாட்ஷாத் கிருஷ்ண பரமாத்மாவே சொல்லியிருக்கிறார். எனவே நல்ல கருத்தோடு வரும் அநானியை ஏற்கலாம்.

மாயா  

அனைவருக்கும் நன்றி

// முதலில் நீங்கள் அனானி மற்றும் அதர் ஆப்ஷனை எடுத்து விட்டாலே பாதி பிரச்சினை குறையுமே. மட்டுறுத்தலும் இருக்கவே இருக்கிறது.

அதெல்லாம் செய்யாது, வீட்டை சரியாகப் பூட்டாது ஏன் மற்றவர்களை குறை கூறவேண்டும்?

அனானி அதர் ஆப்ஷன்களை வைத்து செயலாற்றுவது எல்லோராலும் ஆகாது. அதிலும் மட்டுறுத்தலும் இல்லை என்றால் சுத்தம்.
//

//உங்கள் பின்னூட்டங்களை மட்டுறுத்தவும்//
"
பட்டால் தான் புரியும் "

என்பதற்கேற்ப இப்போ மறுமொழி மட்டறுத்தல் செய்து பின்னூட்டங்கள் வெளியிடச்செய்து விட்டேன்

மாயா  

// உமக்கு நான் அப்பவே சொன்னனான் நல்ல சாத்திரியிட்டக் கொண்டு போய்ச் சாதகத்தைக் காட்டச் சொல்லி. கேட்டால் தானே?//

கானா அண்ண வாங்க . . .

சாத்திரம் கேட்கவேணும்போல தான் கிடக்கு :(

கொழுவி  

//தர்மத்துக்கு அழிவும் அதர்மத்துக்கு ஆக்கமும் வரும் போது அநானியாக வருவேன் //

ஏதேது... இதை ஆட்டோக்கு பின்னாலயே எழுதலாமே

கானா பிரபா  

//கொழுவி said...
//தர்மத்துக்கு அழிவும் அதர்மத்துக்கு ஆக்கமும் வரும் போது அநானியாக வருவேன் //

ஏதேது... இதை ஆட்டோக்கு பின்னாலயே எழுதலாமே//

;-)

Anonymous,   

இணையத்திற்கு நான் புதியவனில்லை IP Address முலம் போக்குகள் வரத்துகள் எல்லாம் கண்டுபிடிக்கத் தெரியும்

Ipdy ellam sonnal naan varave maadan intha pakkam..
(Sirikira Smiley podanum inka.. )

nerathuku oru IP la varavum nambalala mudium paarungo...
naan ondum kulappi podala.. but ipdy ellam veruddira mathrii kathaika oru mathrii iruku..
(inka enna smiley poda)

மாயா  

அது தான் எப்படிக்கண்டுபிடிப்பன் என்டு சொல்லேல்ல தானே அதுக்குள்ள நீங்க வந்தா எப்படி ?
சரி நீங்க சொல்லுங்க பார்ப்பம் எப்படியெண்டு . . .

நந்தவனத்து ஆண்டி  

இணையத்திற்கு நான் புதியவனில்லை IP Address முலம் போக்குகள் வரத்துகள் எல்லாம் கண்டுபிடிக்கத் தெரியும் :)) :))

இப்பிடியெல்லாம் பகிடி விடக்கூடாது !

கொண்டோடி  

சரி கடைசியா என்னதான் சொல்ல வாறியள் எண்டதைச் சொல்லுங்கோ...
அனானியாகப் பின்னூட்டமிடுபவர்களைச் சாடுகிறீர்களா?
அனானிப் பின்னூட்டங்களைத் தங்கள் வலைப்பதிவில் வெளியிடுபவர்களைச் சாடுகிறீர்களா?

அனானியாகப் பின்னூட்டமிடுவதற்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. அதை வேண்டாதவர்கள் அந்தத் தெரிவை நிறுத்திவைப்பதுதான் சரி. அனானி வசதியையும் அளித்துவிட்டு பிறகு புலம்புவது, பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் விளையாட்டு.
அதைவிட மட்டுறுத்தல் வழிமுறையும் இருக்கிறது. விரும்பினால் அதையும் பயன்படுத்தலாம்.
"போக்கு வரத்துகள்' கணடுபிடிக்கத் தெரிந்த உங்களுக்கு இந்த டப்பா மேட்டர் தெரியாது எண்டு சொல்லவரேல. உதுகள் தெரிஞ்சிருந்தும் உப்பிடியொரு ஒப்பாரிப் பதிவு எழுதிறது எதுக்கு எண்டுதான் எனக்கு விளங்கேல?

நான்கூட கை அரிச்சா உப்பிடி பதிவோ பின்னூட்டங்களோ போட்டு விளையாடுறனான். அப்பிடித்தானோ நீங்களும்?

வந்தியத்தேவன்  

//நந்தவனத்து ஆண்டி said...
இப்பிடியெல்லாம் பகிடி விடக்கூடாது !//

நந்தவனத்து ஆண்டி உமக்கு கணனித் தொழில் நுட்பம் தெரியாவிட்டால் பொத்திக்கொண்டிருக்கவும். இணையத்தில் கண்காணிப்பு என்பது மிகவும் இலகுவான வேலை.

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP