காந்தி ஜெயந்தியும் இந்தியத்தொலைக்காட்சிகளும். . . . .
இந்தியாவின் சுதந்திரதந்தை மகாத்மா காந்தி அவர்களை நினைவு படுத்தும் காந்தி்ஜெயந்தி தினக்கொண்டாட்டங்கள் சின்னத்திரையில் வெகு அமர்களமாக களை கட்டி இருக்கிறது. சகல டீவிகளிலும் சகல நிகழ்ச்சிகளும் காந்தி்ஜெயந்தி Special சினிமா சினிமா. தான்
இதை பற்றி காலையில் இன்னோரு பதிவும் வந்துள்ளது பதிவில் முந்திய நண்பருக்கு பாராட்டுக்கள்
உதாரணத்திற்கு சன் டீவி இனது நிகழ்ச்சிகளைக்கவனிப்போம் (இலங்கை ரசிகர்களைப் பொறுத்தவரை சன் டீவிக்கென்று ஓர் மதிப்பும் மரியாதையும் உண்டு அதனால் நேற்றுப்பெய்த மழைக்கு திடீரென முளைத்த காளான்களைப்பற்றி எழுதவில்லை ) வழமைபோல் சன்னில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம். அடுத்து கந்தசாமி திரைப்படம் பற்றிய பார்வை ஒன்று , நடிகை ஜோதிர்மயியின் பேட்டி , பிறகு FIRE ONE வழங்கும் நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் விழா !, மதியம் அக்சன் கிங் இன் முதல்வன் படம் . காந்திக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம் ? (அதற்காக காந்தி சம்மந்தப்பட்ட ஹேராம் படமா போடமுடியும் ). ஆனால் இந்தப்படத்தில பல நல்லவிடையங்கள கையாளப்படுவதால் விட்டுவிடுவோம் காந்திஜெயந்தி என்பது இவர்களுக்கு இப்போ விளையாட்டாக போய்விட்டது. இப்படியான சுதந்திரம் தொடர்பான நன்னாளில் பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர தாகம் மிக்க படங்களைப்போடலாமே ?
அடுத்து பின்னேரப்படம் என்ன கொடுமையப்பா அது ! பின்ன போடுற படம் என்ன தெரியுமே ? 7 /Gரெயின்பொ காலனி . 7 /G ரெயின்பொ காலனி போன்ற திரைப்படக்குழுவினரால் A தரப்படம் என தணிக்கை பண்ணப்பட்ட படத்தை காந்தி்ஜெயந்தி நன்னாளில் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கமுடியுமா ? இங்கு நான் படத்தை குறை கூறவரவில்லை . . .அந்தப்படத்தை யாழ்ப்பாணத்தில ராஜா திரையரங்கில் முதல் நாள் காட்சிபார்த்தவனுள் நானுமொருவன் ( அப்போ ஜனவரி மாதம் பாடல் உட்பட அரைமணிநேர காட்சிகள் கத்தரிக்கப்பட்டது தெரியாமல் பார்த்தது வேறுகதை )
ஆனால் காந்தி பற்றி. ஆம் அவர் பற்றியும் இருந்தது . காலை 7 மணி முதல் 7.30 மணி வரை சிறிய ஆவணத் தொகுப்பில் மட்டும்.இந்தப்பதிவு எழுதும் நேரத்தில் போய்க் கொண்டிருக்கிறது அரையே அரை மணி. அதுவும் காலை நேரத்தில் ? தீபாவளி பொங்கல் புதுவருடம் போன்ற தினங்களில் சினிமா நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது சரியானதே ஆனால் காந்தி ஜெயந்தி , சுதந்திரதினம் போன்றவற்றிற்க்கு இவை தேவையா? இதை ஏன் டிவி காரர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை .
கலைஞர் தொலைகாட்சியில் மதியநேரதிரைப்படம் பரட்டை என்கிற அழகு சுந்தரம் . . . .
கொடுமை கொடுமை என்டு கோயிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை நின்னு கூத்தாடிக்கொண்டிருந்ததாம் என்ட மாதிரி இருந்துது . . . [கலைஞரும் ஏமாத்திப்போட்டார்]
இன்னோர் விடையத்தையும் எடுத்துக்கொள்ளலாம் TV வலையத்தினருக்கு நிகழ்ச்சியோ அதில் வருகிற விசயங்களோ அல்லது எடுத்து நடத்துற ஆட்களோ முக்கியமில்லையாம் . நிகழ்ச்சிகளோட ரேட்டிங் பற்றித்தான் கவலையாம்
அப்ப பாருங்களன் ?
இவ்வாறான விடையமொன்றை "நெஞ்சு பொறுக்குதில்லை " என்ற தலைப்பில் நண்பர் வாத்தியத்தேவன் முன்பும் எழுதியிருந்தார்
8 பின்னூட்டம்(கள்):
இப்பதான் லீனா ராயின் பதிவையும் படித்தேன்... யாருக்காக இந்த நிகழ்சிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனா பாருங்க காலையிலேயே சன் டீவி அவங்க வீட்ல தெரியலைன்னு இரண்டு தமிழ் நண்பர்கள் பட்டிமண்டபம் பார்க்கனும்,
தேவாவின் நிகழ்ச்சி பார்க்கனும்னு வந்துட்டாங்க... தனுஷ் பேட்டி எபப்டி மிஸ் பண்றதுன்னு கவலை வேறு.. இதில் கிரிக்கெட் பார்க்க முடியவில்லையே என்று என் பெண்ணுக்கு கோவம்...
யாரை நொந்து கொள்ள...சொல்ல விஷ்யமா இல்லை... பொறுப்பில்லாத ஊடகங்கள், கடமை மறந்த இவர்களை யார் திருத்த?
அக்கா வரவுகளுக்கு நன்றி
" திருடராய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது "
என்பதைப்போல் அவர்களாகத்தான் திருந்த வேண்டும்
மாயா இது பற்றிய முதல் பதிவை எழுதிய நண்பரும் ஈழத்தவர் தான். நான் ஏற்கனவே சுதந்திரதினக் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் திரும்பமும் இதே கொடுமைகள் விநாயகர் சதுர்த்திக்கு எழுத இருந்தேன் ஆனால் ஒரே விடயத்தை திரும்பதிரும்ப எழுதுவது சலிப்பைத் தரும் என்பதால் விட்டுவிட்டேன். யார் எழுதி என்ன பயன் இவர்கள் திருந்த மாட்டார்கள்.
சன் பிலிம் ஃபேர் விருது வழங்குகின்றது என்றால் ஜெயா உடனே ஒரு பழைய நிகழ்ச்சியை தூசுதட்டிப்போட்டார்கள். சன்னில் தேவாவின் நிகழ்ச்சியும் பழையதுதான்.
பேசாமல் டிஸ்கவரிச் சானலுக்கு மாறிவிடுங்கள் அல்லது தொலைக்காட்சியைப் பார்க்காமல் இருங்கள். கேடீவியிலும் தனுஷ் நடித்த இரட்டை அர்த்த வசனங்கள் பல கொண்ட திருடா திருடி படம் . அதே நேரத்தில் கலைஞரில் பரட்டை.
மக்கள் தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
எனக்கு இன்னொரு சந்தேகம்
மாலன் போன்ற ஈழப்பிரச்சனையில் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கின்ற பிரபலங்கள் இவற்றைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை.
//மக்கள் தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.//
நிச்சயமாக மக்கள்தொலைக்காட்சி சிறப்பானதொரு தொலைக்காட்சி தான் அதன்சேவைகளை பாராட்டவேண்டும்
மற்றவையெல்லாம் சினிமா சினிமா தான் சினிமா இல்லாவிட்டால் எதுவுமே இல்லை பேசாமல் நிலையத்தை மூடிவிடவேண்டியது தான் :))
// எனக்கு இன்னொரு சந்தேகம்
மாலன் போன்ற ஈழப்பிரச்சனையில் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கின்ற பிரபலங்கள் இவற்றைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை.//
வாத்தியதேவன் !
மாலன் எல்லாம் பப்பிளிசிட்டிக்காக பேசுபவர்கள் அவர்களை
விடுங்கள் :-?
ஆயுதபூஜைக்கும் இதே கொடுமைதான். இவங்களைத் திருத்த ஆயிரம் தமிழச்சிகள் வந்தாலும் முடியாது.
Post a Comment