அழகிய தமிழ் மகன் [ ஆடியன்ஸ்ஐ வைத்து காமடி ஒன்னும் பண்ணல தானே ]
தேர்வுகள் முடிந்தபடியால் பிறகு நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து நிம்மதியாகத் தீபாவளி கொண்டாடினோம் . இந்த வருடமும் வழமைபோல் தான் தீபாவளி நாள் தொடங்கியது . ஆனால் நாளின் முடிவு தான் சரியில்லை தீபாவளி வெளியீடான நம்ம டாக்டர் விஜயோட [ ஆளாளுக்கு டாக்டர் பட்டம் குடுத்து, அதுக்கு இருந்த மரியாதையே போச்சு. ] அழகிய தமிழ் மகன் பாக்கப்போனதால தான். [ வேல் Or பொல்லாதவன் போவோம் என்று நண்பர் கூட்டத்தில் ஒரு சாரார் விரம்பினாலும் " ஒருதரம் முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன் " என்று பழைய விஜயோட Dialogஐ விட்டுவிட்டு நேரா திரையரங்குக்கு போனபோது கூடத்தெரயவில்லை நமக்கு நாமே ஆப்பு வைக்கிறோமென்று ] . முன்னொரு காலத்தில யாழ்ப்பாணத்தில படத்துக்கு போறெண்டா ஒரு இருபது பேர் மட்டில போவம் இப்ப கொழும்பில தேறி நிக்கிறது 10 பேர்தான். என்ன செய்யிறது எல்லாரும் வெளிநாடு வெளிநாடென்டு பறக்கிறாங்க . இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்சவையை தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது அனாலும் திரு கோவி கண்ணன் உதவியோட கொஞ்சம் கதைக்கிறன் வழக்கமான படங்களில் வருவது போல் கன வில்லன்கள் Comedyக்கு ஒருவர் என்ற கதைகளில் இருந்து விலகி இரட்டை வேடத்தில் படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். படத்தில் அவர் தவிர்த்து மற்றவர்களுக்கு திரையில் தோன்றும் வாய்பு குறைவு. கதைக்கு உரு கொடுப்பதற்காக விஜய்க்கு ESP என்று சொல்லக்கூடிய வித்தியாசமான மனவியல் சக்தி இருப்பதாகவும் [ மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள் படத்தில் கதாநாயகி நளினிக்குவரும் சக்தி தான் ] உறவினர்களுக்கு நடக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறிந்து கொள்வதாக காட்டுகிறார்கள். நான் பார்த்ததில் அனேகமான காட்சிகள் லாஜிக் எதுவுமில்லாமல் இருக்கிறது கொஞ்சம் சொல்லட்டா ? இந்த படத்தில் குருவாக மாறி வரும் பிரசாத்[விஜய்] தான் தான் குரு என்பதை நம்ப வைக்க செய்யும் முயற்சிகள் லாஜிக் எதுவுமில்லாமல் இருக்கிறது. கூட இருக்கும் குருவின் நண்பர்களும் ஒரிஜினல் குருவை நம்ப மறுக்கிறார்கள். காதலிக்கும் ஸ்ரேயாவுக்கும் யார் ஒரிஜினல் என்ற குழப்பம் இருக்கிறதாம். இரட்டை பிறவிகளாகவே இருந்தாலும் ஒருவருக்கு தெரிந்த எல்லாமும் மற்றவருக்கு தெரியாது. ஆனா இங்க ? இரட்டையரில் கெட்டவனான விஜய்யைக்கூட கடைசியில் திருந்துவதாகக் காட்டியிருக்கிறார்கள், கெட்டவனாக இருப்பவன் வாழ்க்கையில் நல்லவனாக ஆவதை எதிர்ப்பவனல்ல நான் என்றாலும் எனக்கென்னமோ இந்தப்படத்தை அவன் கெட்டவனாகவே கடைசியில் இருப்பதாக நினைத்து கிளைமாக்ஸ் வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது விஜய் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்து ஒரு கதை(!) இருக்கும் படத்தில் நடித்திருக்கிறாரே! பாராட்டலாம் * சண்டை காட்சிகள் வழக்கமான ஆக்ரோசமான விஜய் ஸ்டைல். சண்டை பயிற்சி பெப்சி விஜயன் சும்மாவா அதிலொரு காட்சி ரெம்பக்கொடுமையாயிருந்தது பெண் குழந்தை ஒன்று மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைவதும் அதை படுக்கையில் கிடத்தி பிண அலங்காரம் செய்து வைத்திருப்பதும் தான் குழந்தைகளின் மரணத்தை திரையில் பார்பது கூட சோகம் தான்.
தியட்டரில கூட்டத்துக்கு குறைவில்லை. பெரிய கியூ. ஒரு 1500 பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. ரிக்கட் நேற்று 300/= . உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். படம் தொடங்கிற நேரத்தில இருந்நு கொஞச நேரத்துக்கு ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். பிறகு பிறகு குறைந்து விட்டுது ஏனென்டா அவனவன் எப்ப படம்முடியுமெண்டு நேரத்தைப்பார்க்க வெளிக்கிட்டுட்டான் பின்னுக்கு இரண்டாவுது விஜய் வந்தாப்பிறகு படம் நல்லாப்போகும் மாதிரி மாதிரியிருந்துது ஆனால் சுத்த . . . . .
* இயக்குனர் பரதன்
* படத்துக்கு இசை ஏஆர்ரகுமான் . ஏமாத்திப்போட்டார் போலதான் கிடக்கு
7 பின்னூட்டம்(கள்):
//ஆடியன்ஸ்
டாக்டர்
காமடி//
இவையும் கோவியாரிடம் கடன் வாங்கிய சொற்களா?
;-)
இல்லையே :(
தீபாவளி நாளிலை கதிரேசன் கோயில் மண்டபப் பக்கம் நிண்டு வாற போற தாவணி போட்ட தீபாவளிகளைப் பார்க்கிறதை விட்டுட்டு நீரேன் காணும் தியேட்டர் பக்கம் ஒதுங்கினீர்?
உது மன்மதன் கொடுத்த தண்டணை விளங்கிச்சோ ;)
அண்ணை யார் இல்லையெண்டது கதிரேசன் கோயில் , மாணிக்கப்பிளிளையார் கோயில் , மயூராபதி அம்மன் கோயில் எல்லாம் போய் தாவணி போட்ட தீபாவளிகளை வீடுவரைக்கும் போய் வழியனுப்பிவிட்டு இரவுதான் தியேட்டர் பக்கம் ஒதுங்கினம் :)
நாங்க என்னா சும்மாவா ?
அதுதானே பார்த்தேன். கடைசியில் கதிரேசன் கோவில் ஐயர் தம்பிகளா கோயிலைப் பூட்டப்போகின்றம் தயவு செய்து வீட்டுக்கு போங்கள் என்றபின்னர்தான் போனதாக ஒரு தகவல்.
அப்புறம் இம்முறை தாவணி போட்ட தீபாவளிகளைவிட சுடிதார் அணிந்து வந்த சொர்க்கங்கள் அதிகமுங்கோ.
எண்டாலும் நம்மட கானா அண்ணைக்கு சுடிதார் அணிந்து வந்த சொர்க்கங்களை விட
தாவணி போட்ட தீபாவளிகளை தானே பிடிக்கும் அதான் அவர் அப்பிடி எழுதியிருக்கிறார் :))
நல்லா அடி வாங்கியிருக்கிறியள் போல
Post a Comment