மதியம் வியாழன், 23 ஆகஸ்ட் 2007

விக்கிபீடியாவிற்கு நீங்களும் பங்களிப்புச்செய்யலாமே ????

பதிவுலக ஜாம்பவான்களே வணக்கம்

வலைப்பதிவுகளை நான் புரிந்து கொண்ட மட்டில் அதன் தோற்றங்கள் கணினி உபயோகிப்பவர்களிடமிருந்தே பிறக்கிறது, பிறக்க முடியும். அதனாலேயே இன்னமும் பிற ஊடகங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலே இப்பதிவுகள் தொடர்கிறது. ஆனால விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியங்கள் அதைவிட மிக விரிந்தது.

நீங்கள் அனைவரும் விக்கிபீடியா பற்றி அறிந்தவர்களாகவே இருப்பீர்கள் ஆனால் நீங்கள் ஏன் அத்தளத்திற்கு பங்களிப்புச்செய்ய விரும்புவதில்லை ? (ஒரு சிலர் அங்கும் கொடி கட்டிப்பறக்கிறார்கள் என்பது வேறு கதை ) ஏனெனில் விக்கிபீடியா தமிழ் பகுதியில் அனேகமாக பகுதிகள் இன்னும் தொகுக்கப்படாமலே வெறுமனவே உள்ளன இதுபற்றி நீங்கள் அறிவீர்களா ? விக்கிபீடியா தளமோ திறமூலக்கொள்கையுடைய தளம் யாரும் சென்று எழுதலாம் வலைப்பதிவுகளில் ஏராளமான நல்ல விடையங்கள் பரிமாறப்படுகின்றன உதாரணமாக பதிவோன்றை எழுதுபவர் (சிறந்த பதிவென்று உங்களுக்குத்தோன்றினால் ) தமிழ்மணம் தளத்திற்கு சேர்க்கைக்கு அளித்தபின் அப்படியே விக்கிபீடியா தளத்திக்கு சென்று எங்கெங்கு உங்கள் ஆக்கங்களை இடலாமென நினைக்கிறீர்களோ அங்கே பங்களிப்புச்செய்துவிட்டுவரலாமே ? அங்கு எவ்வாறு பங்களிப்புச்செய்வதென்ற முறைகளை அவர்களே முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்

ஆனால் வலைப்பதிவு உலகில் பெரியவர்கள் மாதிரிக்காட்டிக்கொள்பவர்கள் , தேவையில்லாத விடையங்களுக்கெல்லாம் பதிவெழுதிவிட்டு பின்னூட்டங்களை வாங்கிக்குவிப்பவர்கள் (கடந்த கிழமை இவ்வாறான பதிவுகள் தான் அதிகம்) மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு தாமும் பங்களிப்புச்செய்கிறோம் என பெருமையாகக் கூறிக்கோள்பவர்கள் எந்தவகையில் பங்களிப்புச்செய்யவருவார்களே தெரியாது (கும்மிப்பதிவு மொக்கைப்பதிவு பற்றி போடுபவர்களை இங்கு நான் கணக்கிலேடுக்கவில்லை ) !!!

என்னுடைய கருத்துக்களை சிலர் ஆதரிக்கலாம், சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை. ஒரு நண்பனின் தோளில் கை போட்டு தோழமையுடன் பேசுவது போல் என் கருத்தை சொல்லியிருக்கின்றேன்.

நன்றியுடன்
மாயா

10 பின்னூட்டம்(கள்):

Anonymous,   

நல்ல விடையம் மாயா

நான் பதிவு எழுதுபவன் அல்ல எனினும்

என்னுடைய துறை சார்ந்த விஷயங்களில் நான் என் பங்களிப்பை செய்வேண்

வவ்வால் வியாழன், ஆகஸ்ட் 23, 2007 இரவு 1:26:00 pm  

//ஆனால் வலைப்பதிவு உலகில் பெரியவர்கள் மாதிரிக்காட்டிக்கொள்பவர்கள் , தேவையில்லாத விடையங்களுக்கெல்லாம் பதிவெழுதிவிட்டு பின்னூட்டங்களை வாங்கிக்குவிப்பவர்கள் (கடந்த கிழமை இவ்வாறான பதிவுகள் தான் அதிகம்) மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு தாமும் பங்களிப்புச்செய்கிறோம் என பெருமையாகக் கூறிக்கோள்பவர்கள் எந்தவகையில் பங்களிப்புச்செய்யவருவார்களே தெரியாது//

:-))

மற்றும் ஒருவர்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) வியாழன், ஆகஸ்ட் 23, 2007 மதியம் 2:22:00 pm  

மாயா!
சில நாட்களுக்கு முன் பஞ்சகவ்வியம் பற்றி விக்கிமீடியாவில் தேடினேன். காணவில்லை.பின்பு அறிந்தேன்.
ஆனால் அதை எப்படி அவர்களுக்குச் சேர்ப்பிப்பது என்பது; கணணிக் கத்துக்குட்டியான எனக்குப் புரியவில்லை. பதிவு போடுவதே அப்பு ராசா என எத்தனையோ தம்பிகள் கையைப் பிடித்து; இது வேறையா???

கோபி வியாழன், ஆகஸ்ட் 23, 2007 மதியம் 2:48:00 pm  

மிக இலகுவாகவே சேர்க்கலாம். தேடும் போது கட்டுரை இல்லாவிட்டால் "வினவலுக்காக"பஞ்சகவ்வியம்" "என வருமே. அதில் பஞ்சகவ்வியம் என்பது சிவப்பு இணைப்பாகத் தெரியும். அதனை அழுத்தும் போது திறக்கும் பெட்டியினுள் தகவல்களை உள்ளிட்டு கீழே பக்கத்தைச் சேமிக்கவும் என்பதை அழுத்தினால் கட்டுரை உருவாகி விடும். பின்னர் தேவையான மாற்றத்தை மேலேயுள்ள "தொகு" என்பதை அழுத்திச் செய்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் முதலில் பயனர் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்வது பயனுள்ளது. மாயாவின் பயனர் பெயர் என்ன?

மாயா வியாழன், ஆகஸ்ட் 23, 2007 இரவு 3:05:00 pm  

வணக்கம்
இராஜராஜன்
வவ்வால்
யோகன்
கோபி
வரவுகளுக்கு நன்றி

நண்பர் கோபி சொன்னமாதிரிச்செய்தால் சரி

கோபி இதைப்பற்றி நீங்கள் ஒரு முழுமையான பதிவோன்றை எழுதலாமே அனேக நண்பர்களுக்கு உதவியாயிருக்கும் , , , ,

எனது பயனர்கணக்கு Mayunathan நானும் இப்போதான் ஆரம்பித்துள்ளேன்

கோபி வியாழன், ஆகஸ்ட் 23, 2007 இரவு 4:10:00 pm  

There are already pages with details. Mauran & Ravi have written some introduction blogs as well.

http://ta.wikipedia.org/wiki/Wikipedia:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

this page explains how to create a new page... thank you.

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP