மதியம் புதன், 15 ஆகஸ்ட் 2007

ஈழத்துக் கலைஞர்கள் [ பாகம் 1 ]

ஈழத்துக்கவிஞர்கள்

வணக்கம் நண்பர்களே !
அண்மையில்
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பற்றிய தகவல்களை பதிந்திருந்தேன் அதனைத்தொடர்ந்து இலங்கை வாழ் கலைஞர்கள் மற்றும் மறைந்த கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களின் விபரங்களை என் சக்திக்கு ஏற்றவாறு திரட்டித் தரலாமென்றிருக்கிறேன்

முதலில் ஈழத்துக்கவிஞர்கள் பற்றிய தகவல்களைதருகிறேன் தருகிறேன் இனிவரும்காலங்களில் அவர்களைப்பற்றிய முழு விபரங்களை சேகரித்து தரலாமென்றிருக்கிறேன் நான் சிறியவன் பிழைகள் ஏதுமிருப்பின் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம் பின்னூட்டங்களே எனக்கு நீங்கள் தரும் உற்சாகம்

மற்றும் ஈழத்துக்கவிஞர்கள் பற்றி அறிந்துள்ள
கானாபிரபா அண்ணா சின்னக்குட்டியார் யோகன் அண்ணா வெற்றி நீங்கள் இதிலுள்ள பிழைகளை நிச்சயம் திருத்துவீர்கள் என நினைக்கிறேன்

1] கல்லடி வேலுப்பிள்ளை
2] வீரமணி ஐயர் - இணுவில்
3] கவிஞர் நீலாவணன் - பெரிய நீலாவணை
4] சு.வில்வரத்தினம் - புங்குடுதீவு
5] காசி ஆனந்தன் (காத்தமுத்து சிவானந்தன்) - மட்டக்களப்பு
6] தாமரைத்தீவான் - திருகோணமலை
7] நாவலியூர் சோமசுந்தர புலவர்
8] மகாகவி உருத்திரமூர்த்தி - அளவையூர்
9] இளவாலை விஜயேந்திரன் - இளவாலை
10] இராமலிங்கம் அம்பிகைபாகர்
11] போராட்டக் கவிஞர் சுபத்திரன் - மட்டக்களப்பு
12 ] சோலைக்கிளி( உதுமாலெவ்வை முகம்மது அதீக் ) - கல்முனை
13] பொன் கணேசமூர்த்தி - யாழ்ப்பாணம்
14] மன்னவன் கந்தப்பு
15] பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
16 ] சில்லையூர் செல்வராசன்
17] புதுவை இரத்தினதுரை
18] பொன். காந்தன்
19] தமிழ்க்கவி
20] கை.சரவணன்
22] நிலா தமிழின் தாசன்
23] காரை சுந்தரம்பிளை
24] கவிஞர் கந்தவனம்
25] வட்டுக்கோட்டை
26] நல்லதம்பிப் புலவர்
27] அணலை ஆறு
28] இராஜேந்திரம்(கனடா)
29] அம்புலி
30] மலைமகள்
31] அலைமகள்
32] சோழநிலா
33] நிலாந்தன்
34] அமரதாஸ்
35] கருணாகரன்
36] வளவைநாடன்
37] வேலணையூர் சுரேஷ்
38] செங்கதிர்
39] மாமனிதர் நாவண்ணன்
40] பண்டிதர் பரந்தாமன்
41] பண்டிதர் பஞ்சாட்சரம்
42] முல்லை கோணேஸ்
43] முல்லை கமல்
44] சேரன்
45] வ.ஜ.ச ஜெயபாலன்
46] சிவசேகரம்
47] நளாயினி
48] சாருமதி
47] அம்புலி
48] மலைமகள்
49] சஞ்சீவ் காந்த்(இளைஞன்)
50] மேமன்கவி
51] வ.ஐ.ச. ஜெயபாலன்
52]' மலையக பாரதி' சி.வி.வேலுப்பிள்ளை
53] குறிஞ்சித் தென்னவன்
54] அப்துல் அஸீஸ்[அல் அஸுமத்]
55] ஈழவாணன்
56] வி.கந்தவனம்[தற்போது கனடாவில்]
57] நவாலியூர் செல்லத்துரை
58] மாதகல் மயிவாகனப் புலவர்
59] சந்திரபோபோஸ்
யாராவது கவிஞர்களின் பெயர் விடுபட்டிருந்தால் மன்னித்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள்
இயன்றவரை இந்தப்பயணம் தொடரும்

நன்றி

21 பின்னூட்டம்(கள்):

கானா பிரபா புதன், ஆகஸ்ட் 15, 2007 இரவு 4:13:00 pm  

இன்னும் நிறையப் பேர் இருக்கின்றார்கள் மாயா.

ஆரம்பம் நன்று, இன்னும் விரிவாக இவர்கள் குறித்த பதிவுகளை எழுத ஆரம்பியுங்கள். குறிப்பாக மறைந்த கலைஞர்களின் நினைவு தினத்தில் ஒரு சிறப்புப் பதிவு என்ற ரீதியில் வெளியிடலாம்.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் பெரும்பாலும் வார இறுதியில் கலை இலக்கிய நிகழ்வுகள் இடம்பெறும். அவற்றையும் நீங்கள் புகைப்படத்தின் துணையுடன் பதிவாக்கலாம்.

வாழ்த்துக்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) புதன், ஆகஸ்ட் 15, 2007 இரவு 4:28:00 pm  

காரை சுந்தரம்பிளை, கவிஞர் கந்தவனம், வட்டுக்கோட்டை நல்லதம்பிப் புலவர், அணலை ஆறு.இராஜேந்திரம் (கனடா)...

பிரபா கூறுவது போல் பலர் இருந்துள்ளார்கள்,இருக்கிறார்கள்.
அவுஸ்ரேலியா கனக ஸ்ரீதரன் அண்ணாவுக்குத் தெரியலாம்.

சின்னக்குட்டி புதன், ஆகஸ்ட் 15, 2007 இரவு 5:09:00 pm  

வணக்கம் மாயா.. பல புது கவிஞர்கள், புலம் பெயர் கவிஞர்கள் தப்ப விட்டது போல இருக்கிறது இப்பொழுது உடனடியாக ஞாபகத்தில் உட்பட்டதை மட்டும் சொல்றன்.

சேரன்

வ.ஜ.ச ஜெயபாலன்

சிவசேகரம்

நளாயினி

சாருமதி

அம்புலி

மலைமகள்

சஞ்சீவ் காந்த்(இளைஞன்)

வசந்தன்(Vasanthan) புதன், ஆகஸ்ட் 15, 2007 இரவு 5:54:00 pm  

ஈழத்துக் கவிஞர்களைப் பட்டியலாகத் தொகுக்க முடியுமா தெரியவில்லை.
எப்படியும் சில நூறுகள் வரும். பட்டியல் வெளியிட்டால், இவரெல்லாம் கவிஞரா எண்டு இன்னொரு பக்கம் கேள்வி வரும்.

வன்னிக்குள் பார்த்தால்,

புதுவை இரத்தினதுரை,
பொன். காந்தன்,
தமிழ்க்கவி,
கை.சரவணன்,
நிலா தமிழின் தாசன் -நிலாவெளி
உதயச்செல்வி,
புரட்சிகா,
அம்புலி,
மலைமகள்,
அலைமகள்,
சோழநிலா,
நிலாந்தன்,
அமரதாஸ்,
கருணாகரன்,
வளவைநாடன்,
வேலணையூர் சுரேஷ்,
செங்கதிர்,
மாமனிதர் நாவண்ணன்,
பண்டிதர் பரந்தாமன்,
பண்டிதர் பஞ்சாட்சரம்,
முல்லை கோணேஸ்,
முல்லை கமல்,
குழல்,
ஈரத்தீ,
இளந்திரையன் (புலிகளின் இராணுவப் பேச்சாளர்)

மாவீரர்களான
லெப்.கேணல் பாவரசன்,
மேஜர் செங்கதிர்,
மேஜர் மாதவன்,
மேஜர் பாரதி
கப்டன் கஸ்தூரி,
கப்டன் வானதி,
கப்டன் மலரவன்,
கப்டன் வாமகாந்,
கரும்புலிகளான மேஜர் நிலவன், மேஜர் அறிவுக்குமரன், லெப்.கேணல் கலையரசன் /பூட்டோ என்று இன்னும் பலர்.

கானா பிரபா புதன், ஆகஸ்ட் 15, 2007 இரவு 6:56:00 pm  

//பண்டிதர் பஞ்சாட்சரம்//

இவர் இப்பொழுது வன்னியில் இருந்து கனடாவுக்கு.

நம்மூரவர் என்பதால் இவரின் திறமைகளை நேரில் காணும் பாக்கியம் எனக்கிருக்கின்றது.

மாயா வியாழன், ஆகஸ்ட் 16, 2007 இரவு 8:08:00 am  

கானா பிரபா,யோகன் பாரிஸ்,சின்னக்குட்டி, Chandravathanaa . . .
வருகைக்கு நன்றி உங்கள் வரவு எனக்கு உற்சாகத்தை தருகிறது உங்கள் தரவுகளையும் புகுத்துகிறேன் நன்றி
தொடர்ந்து நான் விரிவாக எழுதுவேன்

வெற்றி வியாழன், ஆகஸ்ட் 16, 2007 இரவு 9:50:00 am  

மாயா,
அப்பு ராசா,

/* மற்றும் ஈழத்துக்கவிஞர்கள் பற்றி அறிந்துள்ள கானாபிரபா அண்ணா சின்னக்குட்டியார் யோகன் அண்ணா வெற்றி */

இந்தப் பட்டியலில் என்ரை பெயரைப் பாத்துவிட்டு எனக்குச் சிரிப்பு அடக்கமுடியேல்லை. :-))நீங்கள் என்னைப் பற்றி பிழையா எடை போட்டு வைச்சிருக்கிறீங்கள் போல.:-)

எனக்கு ஈழத்து இலக்கியங்கள்,எழுத்தாளர்கள் கவிஞர்கள் பற்றித் தெரியாது.

கொஞ்ச நாதஸ்வர தவில் வித்துவான்களைத் தெரியும். அவ்வளவுதான். காசி ஆனந்தனும், புதுவையரும்தான் எனக்குத் தெரிந்த ஈழத்துக் கவிஞர்கள்.

இப்பதான் அங்கை இஞ்சை எண்டு சில ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். 2005 லை யாழ்ப்பாணத்திலையும்,கிளிநொச்சியிலையும், கொழும்பிலையும் வாங்கிய ஒரு சில கவிதைப் புத்தகங்களை எழுதியவர்களின் பெயர்கள் கீழே[மேற் சொன்ன இருவரையும் தவிர்த்து]:


1. வ.ஐ.ச. ஜெயபாலன்
2.'மலையக பாரதி' சி.வி.வேலுப்பிள்ளை
3.குறிஞ்சித் தென்னவன்

இவரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் யதார்த்தமான கவிதைகள். இவர் தான் வளர்ந்த ஏழ்மை நிலையை இப்படிச் சொல்கிறார்:

"பாலும் பழமுமா உண்டு வளர்ந்தேன்?
பஞ்ச ணையிலா உறங்கி எழுந்தேன்?
கூழும் இன்றி பசியில் துடித்தேன்!
கிழிந்த படங்கில் உறங்கி வளர்ந்தேன்!"

4.அப்துல் அஸீஸ்[அல் அஸுமத்]
5.ஈழவாணன்
6.வி.கந்தவனம்[தற்போது கனடாவில்]
7.நவாலியூர் செல்லத்துரை
8.மாதகல் மயிவாகனப் புலவர்

பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க.அருணாசலம் அவர்கள் மலையகத் தமிழ் இலக்கியம் பற்றியும் , கவிஞர்கள் பற்றியும் புத்தகம் எழுதியுள்ளார். அப் புத்தகத்தில் பல விபரங்கள் உள்ளது.

மாயா வியாழன், ஆகஸ்ட் 16, 2007 மதியம் 2:51:00 pm  

வணக்கம் வெற்றி அண்ணா . . .
உங்கள் தரவுகளையும் சேர்க்கிறேன் நன்றி
நான் இலங்கை கலைஞர்களுக்காக தனியே ஒரு வலைப்பூ அமைக்கலாமென்று எண்ணி இருக்கிறேன்
நடக்குமா என்று பார்ப்போம்

வசந்தன்(Vasanthan) வியாழன், ஆகஸ்ட் 16, 2007 இரவு 4:07:00 pm  

நானெழுதிய பின்னூட்டத்திலிருந்து பெயர்களை இணைத்துள்ளீர்கள்.
நான் தெளிவாக ஒரு வரியில் ஒருவரின் பெயரைத் தந்துள்ளேன். நீங்கள் பெயர்களை இணைத்தோ பிரித்தோ இணைத்துள்ளீர்கள்.
தமிழ்க்கவியும் கை.சரவணனும் வெவ்வேறு நபர்கள்.
நிலா தமிழின் தாசன் என்பவர் ஒரே நபர்.

நான் சொன்னவற்றிற்கூட சிலரைத் தவிர்த்து இணைத்ததேனோ?

சிலமாதங்களின் முன்பு வவுனியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரபோசையும் குறிப்பிட வேண்டும்.

Anonymous,  வியாழன், ஆகஸ்ட் 16, 2007 இரவு 5:33:00 pm  

Sorry for my English. You can list atleast 300 poets :-). In Colombo you may meet Ashwakash (Ramanesh) for a comprehensive list. Sri Pirasanthan have selected more than 100 poets in the book published by Poobalasingam Publishers last year. Recently "Peyal manakkum poluithu" compiled by mangai have 92 women. Refer Project Noolaham books # 05, 10, 16, 24, 83 and 100 for more details. Refer பகுப்பு:ஈழத்து இலக்கியம் in tamil wikipedia. Articles about 166 ஈழத்து எழுத்தாளர்கள், 21 ஈழத்துக் கவிஞர்கள் and 13 ஈழத்துப் புலவர்கள் are already written at Wikipedia. But many of them are very small. So if you can come up with more details that would be so useful. Best of luck.
-gopi (kopinath 'at' gmail 'dot' com)

Anonymous,  வியாழன், ஆகஸ்ட் 16, 2007 இரவு 5:39:00 pm  

Vasanthan, could you please contribute to expand the wikipedia article about ஈழப் போராட்ட இலக்கியம்?

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

மாயா வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007 இரவு 8:07:00 am  

அண்ணா வருகைக்கு மகிழ்ச்சி
பிழைக்கு மன்னிக்கவும்

நானும்
இனனோரு நண்பனுமாக சேர்ந்து தாயகக்கலைஞர்களுக்காக தனியானதொரு வலைப்பூவை தொடங்கியுள்ளோம் இன்னும் பூர்த்தியாகவில்லை அங்கே அனைத்து பிழைகளும் களையப்பட்டு ஓர் முழுமையான வலைப்பூவாக மாற்றம்பெறும்

சற்று நாள் பொறுத்திருங்கள் நண்பர்களே !

தாமதத்திற்கு மன்னிப்பீர்கள் தானே ?

HK Arun வெள்ளி, பிப்ரவரி 29, 2008 மதியம் 2:43:00 pm  

அன்புடன் மாயாவுக்கு

அப்படியே தமிழீழ எழுத்தாளர்களின் பெயர்களோடு அவர்களுக்கென பிரத்தியேச இணையத்தளங்கள், இணைத்தளங்களின் ஆக்கங்கள் இருப்பின் அதற்கு தொடுப்பு கொடுத்து விடுவீர்களானால். எழுத்தாளர்களின் ஆற்றல்களையும் காணக்கூடியதாக இருக்குமல்லவா?

நன்றி!

Anonymous,  வெள்ளி, அக்டோபர் 28, 2011 இரவு 1:07:00 am  

கா.சுஜந்தன்
அன்ரனி
செந்தோழன்
ராஜசெல்வி
க.இரத்தினசிங்கம்
மலரன்னை
கு.வீரா
நயினை இரா குலம்
நயினை சண்முகநாதபிள்ளை
ஆதிலக்சுமி
உதயலக்சுமி
சுதாமதி
கானகன்
தமிழவள்
கஸ்தூரி
வானதி
பாரதி
இசையமுதன்

thangan,  வெள்ளி, அக்டோபர் 28, 2011 இரவு 11:44:00 pm  

தீபச்செல்வன் , வீர மணி ஐயர்
தா.இராமலிங்கம்
அ. யேசுராசா
தாட்சாயினி
சுருதி
வளவை வளவன்

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP