சுப்பிரமணியபாரதியாரின் பிறந்த தினம்
" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
--இனிதாவதெங்கும் காணோம்
--பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
--இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
--நாமமது தமிழரெனக்
--கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
--தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
--பரவும்வகை செய்தல் வேண்டும். "
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும்(டிசம்பர் 11 1882 - செப்டம்பர் 11 1921).
ஆனால் இந்த உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி ! பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனுக்காக அன்று முதல் இன்று வரை நாம் என்ன செய்துள்ளோமென சிந்தியுங்கள் ? அவன் உயிர் விட்ட தமிழுக்காய் நாம் என்ன செய்துதோமெனச்சிந்தியங்கள் . அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். இன்றய தலைமுறையினரே பாரதியைப்புரிந்து கொள்ளுங்கள் அறிந்து கொள்ளுங்கள்
பத்திரிகையுலகில் பாரதி சில தகவல்கள்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் 1920 முதல் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராக பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906 செப்.1906,புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910), என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதிலும்
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதிலும்
" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " - பாரதி
4 பின்னூட்டம்(கள்):
பொருத்தமான படங்களுடன் தகுந்த வேளையில் வந்த நல்ல பதிவு, நன்றிகள் மாயா
சாதிகள் இல்லையடி
இன்று சாதிகள்
கொஞ்சம் நஞ்சம்
இல்லையடி
வஞ்சகம் இல்லாமல்
பல்கிப் பெருகிய
கிளைகளடி...
அக்னிக் குஞ்சு
சேரிக் குடிசைகள்
வாரித் தின்னும்.
தீப்போல் பரவும்
தீவிரவாதம்..
அச்சம் அச்சம்
அது
எங்குதான் இல்லை
எதில்தான் இல்லை...
மீசைக் கவிஞனே!
உன் கனவுகள் பல
கனவாகவே இன்னும்..
ஒளிபடைத்த கண்ணும்
உறுதி கொண்ட நெஞ்சும்
மீட்டுக் கொஞ்சம் தந்திட
மீண்டும் நீ வருவாயா பாரதி?
உன் பிறந்த நாளில்
மீண்டும் நீ பிறந்து வருவாயா பாரதி?
கானா அண்ணா மற்றும் நந்தவனத்து ஆண்டி வரவுகளுக்கு நன்றி
அது சரி ஆண்டியாரே உந்த கவிதை வரிகள் எங்கால :)
அந்த மாதிரி இருக்கு
பாடலுடன் போட்டதற்கு நன்றி இன்னும் படங்கள் போடலாமே
Post a Comment