இலங்கைத் தமிழ் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கவிரும்புவது தப்பா ?

இலங்கையிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் மாணவர்கள் தமது இறுதி ஆண்டுக் கல்வியை வெளிநாடுகளில் தொடரும் வாய்ப்பு ஒன்று உள்ளது. இதில் இணையவிரும்புவோருக்கான ஒன்றுகூடல் அண்மையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஏராளமான தமிழ் மாணவர்கள் (நான் உட்பட ) இதில் கலந்து கொண்டிருந்தனர். இதில் அவுஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் விபரங்கள் கூறப்பட்டபோது ஒருவிடயம் ஆணித்தரமாக கூறப்பட்டது
"People who was born in jaffna or Batticalo, We are very sorry."
ஆஸ்திரேலியா கனவுகளுடன் இருந்த என்போன்ற நண்பர்களுக்கு ஏதோ இடிவது போன்றிருந்தது . . . . . ? ? ?
இதைப்பற்றி இன்னோர் இலங்கை நண்பர் தனது வலைப்பூவில் விரிவாக கூறி (ஆதங்கத்தை கொட்டி ) உள்ளார் தயவுசெய்து நீங்களும் சென்று பாருங்கள் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு நியாயங்களை பின்னூட்டமாகத்தெரிவித்து விடுங்கள்
இதோ முகவரி
விண்ணப்பித்த ஒருவருக்கு அவுஸ்ரேலியா சொன்ன காரணத்தை ஆதாரமாக பாக்க பற்றி சயந்தன் அண்ணா அனுப்பிய பிரதியொன்று

நன்றி

20 பின்னூட்டம்(கள்):

யோகன் பாரிஸ்(Johan-Paris)  

மிக வேதனையான செய்தி. இலங்கைத் தமிழ் மாணவர்கள்...என்பதே பொருத்தமான தலைப்பு.

Anonymous,   

அண்ணா நீங்களும் அனுபவப்பட்டீர்களோ

Anonymous,   

ஏன் அண்ணே !
இவ்வளவு தமிழ் பற்றுள்ள நீங்களே சொந்த மண்ணை விட்டு போவதில் ஏன் இவ்வளவு ஆர்வம் கொள்கிறீர்கள்

Hariharan # 03985177737685368452  

மயூரன்,

உங்கள் மன உணர்வுகளை என்னால் உணரமுடிகிறது.

உயர் கல்வி வாய்ப்புகள் + கல்லூரி வளாகத்திலேயே வேலை வாய்ப்பு என்பவைகளில் ஒரு பிராந்திய/ கல்லூரி முன்னாள் மாணவர்களின் Alumni என்பது பெரிய விஷயம்.

உயர்கல்வி / வளாக வேலை வாய்ப்புக்களை சென்னையின் லயோலா கல்லூரி, திருச்சி ஜோசப் கல்லூரி மதுரைக்கல்லூரி அளவுக்கு சென்னையில் தென்சென்னையில் நந்தனம் ஆர்ட்ஸ் மற்றும் வட சென்னையின் தியாகராயர் கல்லூரிகள் பெறாததற்குக் காரணம் விரும்பத்தகாத முன்னுதாரணம் தந்த மாணவர்கள் Alumni.

அடுத்த தேசங்கள் உயர் கல்வியை மறுக்கும் அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கக் காரணம் விரும்பத்தகாத முன்னுதாரணம் தந்த மாணவர்கள் Alumni.

இரானியர்கள், வடகொரியர்கள் அணுசக்தி குறித்த உயர்கல்வியை அமெரிக்க மேற்கத்திய நாடுகளில் படிக்க முடியாது.

மற்றபடி தாங்கள் விரும்பிய விதத்திலேயே உயர்கல்வியை கற்க முருகப்பெருமானை வேண்டுகிறேன்.

மாயா  

huriar//ஏன் அண்ணே !
இவ்வளவு தமிழ் பற்றுள்ள நீங்களே சொந்த மண்ணை விட்டு போவதில் ஏன் இவ்வளவு ஆர்வம் கொள்கிறீர்கள் //

நியாயமான கேள்விதான்

சொந்த மண்ணில் கல்வி கற்ற விட்டால் கல்வி கற்போம் தானே ?

கடந்தமாதத்தில் மட்டும் 500 இளஞர்கள் வரை காணமல் போனது தெரியுமா

மற்றும்படி ஒன்றும் நாங்கள் சொந்த மண்ணை விட்டுப்போவதில் ஆர்வமொன்றுமில்லை . . .

கானா பிரபா  

வணக்கம் மாயா

இதனைச் சொன்னவரின் பொறுப்பற்ற தன்மை தவிர அவுஸ்திரேலிய அரசு இப்படிப் பிரதேச வாதம் கற்பிக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். காரணம் எனக்குத் தெரியவே கடந்த 3 மாதத்தில் எங்களூரவர்கள் ஆறேழு பேர் மாணவர்களாகவே இங்கே வந்துள்ளார்கள்.

அவுஸ்திரேலியாவுக்குப் படிக்க விரும்பினால் வரப் பல வழிகள் உண்டு. இரு வழிகளை மாத்திரம் சொல்கின்றேன்.

1.கீழ்க்காணும் நிலையத்துக்கு ஒருமுறை செல்லுங்கள், இலவசமான ஆலோசனையும் பல்கலைக் கழகப் படிப்புக்கள் உட்படச் சகல விபரமும் இலவச ஆலோசனை அடிப்படையில் கிடைக்கும்


IDP Education Australia - Sri Lanka
1st Floor, 443 Galle Road
Colombo 3
Sri Lanka
Phone: +94 11 259 1803 / 259 5005 / 259 5006
Fax: +94 11 259 1801
E-mail: info@colombo.idp.com
Web: www.idp.com/srilanka/

2. கற்க விரும்பும் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தை மேய்ந்து வெளிநாட்டு மாணவர் கற்கைக்கான படிவங்களை நிரப்பி அனுப்ப வேண்டும். கல்வித் தகுதி, மற்றும் படிப்புக்காகச் செலவழிக்கக்கூடிய நிதியைக் காட்டிய பின் பரிசீலிக்கப்பட்டு குறிப்பிட்ட பல்கலைக் கழகம் அனுமதிக் கடிதம் தந்த பின் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்

கானா பிரபா  

//இதனைச் சொன்னவரின் பொறுப்பற்ற தன்மை //

அதாவது அங்கே பிரதிநிதியாக இருந்தவரக் குறிப்பிட்டேன்

சயந்தன்  

அண்ணை கானா பிரபா அண்ணை
IDP யும் வடக்கு கிழக்கு மாணவருக்கு இல்லையெண்டு சொல்லிப் போட்டுது. நேரடியா விண்ணப்பித்த ஒருவருக்கு அவுஸ்ரேலியா சொன்ன காரணத்தை ஆதாரமா பாக்க இந்த இணைப்பிற்கு போங்கோ

http://img.photobucket.com/albums/v739/sajee/Image-46.jpg

கானா பிரபா  

பிந்திக் கிடைத்த செய்திகள் மாயாவின் கள நிலமைகளை உறுதி செய்வதால் தற்போதைக்கு நான் முன் போட்ட பின்னூட்டங்களைக் கண்டும் காணாமல் விடுமாறு தொடர்ந்து வர இருக்கும் கொலைவெறிப் படையை வேண்டுகின்றேன்.

(சனி மாற்றம் நல்லாத் தான் எனக்கு வேலை செய்யுது)

மாயா  

நன்றி சயந்தன் அண்ணா . . . .

கானா அண்ணா பின்னுட்டம் பிந்தியதற்கு மன்னியுங்கள் .இந்த நிகழ்ச்சி நடந்தது ஓர் கலந்துரையாடலில் தான் . . .

அவர்கள் குறிப்பிட்டது என்னவெனில் பிறந்த இடம் யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பு எனில் தயவுசெய்து முயற்சிக்கவேண்டாம் . . . .

அவுஸ்திரேலியா தவிர மற்ற நாடுகள் மற்றய நாடுகள் என்றால் OK

ஏன் என்ற காரணத்தைக்கூறாமல் அவர்கள் சாதுர்யமாகப்பின்வாங்கி விட்டனர்

மற்றும்படி தகவல்களுக்கு நன்றி

கானா பிரபா  

கவலையளிக்கும் செய்தி தான்

மாயா  

அண்ணா அதென்ன கொலைவெறிப் படை ?

Chayini  

//அண்ணா அதென்ன கொலைவெறிப் படை ?//

தெரியாதா? கானா பிரபாவின் பின்னுர்ட்டத்தை பார்த்து விட்டு எந்த உலகத்தில் இருக்கிறார் என்று எரிச்சலுடன் பதில் சொல்ல வேணும் என்று புறப்பட்ட என்னைப் போன்றவர்களாக இருக்கலாம். :)

BSc க்கு என்றாலும் பரவாயில்லை.Msc க்கு விண்ணப்பம் செய்தவருக்க மறுத்த கடிதமே சயந்தன் இணைத்ததாக இருக்க வேண்டும்...

Msc படிப்பவர்கள் இருந்தால் தான் என்ன? படித்தவர்கள் தேவை தானே...

அரசாங்கத்துக்கு 1008 சிக்கல்கள் இருக்கலாம்.. அளவுக்கு மிஞ்சி நீடித்து நிற்பதில்.. என்றாலும்.... நாங்கள் எங்கள் உணர்வுகளை மையப்படுத்தி தானே சிந்திப்போம்..

Anonymous,   

/அடுத்த தேசங்கள் உயர் கல்வியை மறுக்கும் அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கக் காரணம் விரும்பத்தகாத முன்னுதாரணம் தந்த மாணவர்கள் Alumni./

ஹரிஹரன்
என்ன சொல்ல வருகின்றீர்கள்?

மாயா எழுதியதைச் சரியாக வாசித்தீர்களோ? அவர் தேசங்களைப் பற்றிச் சொல்லவில்லை. தேசத்துள்ளே குறிப்பிட்ட இனத்தவர்களைப் பேசுகிறார்.

மேலும் இதற்கும் ஈரான், வட கொரியா மாணவர்கள் அமெரிக்காவிலே அணுசக்தி படிக்க முடியாததற்கும் என்ன சம்பந்தம்?

தமிழ்மாணவர்கள் அவுஸ்ரேலியாவிலே என்ன குண்டு செய்வது எப்படி என்றா படிக்கக்கேட்கிறார்கள்? :-(

அதுசரி. தமிழ்நாட்டிலே இத்தனை உதாரணம் காட்டிய நீங்கள் ஐஐடியின் அலுமினியங்களைப் பற்றிச் சொல்லாமல் விட்டது எதேச்சைதானோ? :-)

மாயா வலைப்பதிவுக்குப் புதியவர். உங்களின் அரசியல் தெரியாதவர். பாவம். அவரேனும் விட்டுவிடுங்கள். பசுவாய் வந்து புலிவால் கட்டாமல் நேராகப் போய், வழக்கம்போல தீரா'விட'க்கட்சிகளோடான உங்கள் வாள்வீச்சுகளைக் காட்டுங்கள்.

மாயா  

பாவை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

நீங்கள் எம்முடன் தாயகத்திலிருப்பதால் பிரச்சினை தெரியுது ஆனால் வெளிநாட்டு ஆட்களுக்குத்தெரியாது தானே :(

வந்தியத்தேவன்  

எனக்கும் என் நண்பணுக்கு இதே காரணம் இருவரின் பிறந்த இடங்களும் முறையே புலோலி கரவெட்டி உடனடியாக எமக்கு அனுமது மறுத்தார்கள். இத்தனைக்கும் நாம் இருவரும் கொழும்பில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக வாழ்கின்றோம். சில சிங்களவர்கள் அவுஸ்திரேலியா பிரஜைகளுக்கு யாழ்ப்பாணவாசிகளுக்கு விசா கொடுக்கவேன்டாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

Anonymous,   

they should be staying back and fighting for their beloved eelam. They shouldn't abondon eelam. All should sacrifice themselves. No fooling around saying i will study in australia and come back to serve

Anonymous,   

ஐயா அநானி

இப்ப ஏன் மாயாவை ஈழப்போராட்டத்துக்குள்ளை இழுக்கிறீர், அவர் இலங்கையில் இருந்து வலைபதியும் ஒரு இளைஞர் அவ்வளவே. அவருடைய தற்போதைய முனைப்பு கல்வி என்பதாகவே இருக்குது. இலங்கை ஆள் எண்டவுடன் புலி எண்டு எல்லாருக்கும் தொப்பி போடாதையும்.

மாயா  

கோதாரி விழுவான் . . .

சரியாகச்சென்னீங்க :)

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP