கிறிஸ்மஸ் கால நினைவுகள்

கிறிஸ்த்துமஸ் வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான். பின்ன எங்களைப்போல அவர்களுக்கு [கிறீஸ்த்தவர்களுக்கு] வருடம் முழுவதும் பண்டிகைகள் இல்லை தானே.

யாழ்ப்பாணத்து கடைத்தெருக்களெல்லாம் தள்ளுபடி விற்பனைகளும் கூட்டங்களும் குவியத் தொடங்கி வர்ணவிளக்குகளுடன் களைகட்டத் தொடங்கிவிடும் கிறிஸ்மஸ் தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கண்களைப் பறிக்கும் அலங்காரங்களுடன், யாழ்ப்பாணம் அமர்க்களப்பட ஆரம்பித்து விடும் தெருவிலுள்ள ஒவ்வொரு கடையும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு பிரமிப்பூட்டும் வகையில், அலங்கார வேலைகள் செய்திருப்பார்கள் அது கடைகளுக்கு புது பொலிவையும், அழகையும் கொடுக்கும் ஆங்காங்கே கிறிஸ்மஸ் தாத்தா அமர்ந்து கொண்டு குழந்தைகளுடன் வியைளாடிக்கொண்டுமிருப்பார்.

நான் கிறீஸ்த்தலப்பாடசாலையில் படித்ததாலோ என்னவோ நண்பர்களில் அனேகர் கிறீஸ்த்தவர்கள் எனவே கிறிஸ்த்துமஸ் என்றால் எனக்கும் ஒர் பெருநாள் தான் கிறிஸ்த்துமஸ் மரங்களை அலங்கரிப்பதுவும் , இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் எனக்கு மிகவும் பிடித்தவையாகும். கிறிஸ்த்துமஸ் காலமென்றால் நான் படிச்ச யாழ் பரி யோவான் கல்லூரியில் {கிறிஸ்த்தலப்பாடசாலை தானே }பெரிய அமளியாயிருக்கும் மரத்தைசோடிக்கிறது சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தி அலங்காரப்படுத்துவது என களைகட்டும் . இவற்றுள் நான் பொதுவாக தலை வைப்பதில்லை ஏனெனில் எனக்கு மட்டுமன்றி என்போன்ற பலருக்கு கிறிஸ்த்துமஸ் காலத்தில் அடைக்கலம் தருவது என் வீட்டின் அருகாமையிலிருக்கும் சிறுவயது முதல் ஒன்றாய்த்திரிந்த நண்பன் கனி வீடுதான் கிறிஸ்த்துமஸ் நாளுக்கு முதல்நாளும் அடுத்த நாளும் எமது பொழுது அங்கேயே கழியும் { என்ன பகீ ஞாபகமிருக்குதே ? }

கிறிஸ்துமஸ் நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அழங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கம். மரத்தின் அருகில் குடில் போல் அமைத்து இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் வழக்கம் அதற்காக தூங்கும் பொம்மைகள் இருக்கும் பெட்டிகளை எடுத்து பத்திரமாக கீழே இறக்குவது ஒரு சுவாரசியமான வேலை. அவ்வாறு அவற்றை இறக்கும் பொழுது தான் சென்ற வருடம் செய்தவையெல்லாம் மனதில் ஓடும் இறக்கியவற்றை கழுவி காயவைத்து விட்டு வேண்டிய சவுக்கு மரங்களை வெட்ட பத்துப்பதினைந்து பேர்வரையில் கிளம்புவோம் சில நேரங்களில் அருகிலிருக்கும் தெருக்களிலே வேலைமுடிந்துவிடும் சிலநேரங்களில் எங்கள் கஷ்ட காலமெனில் வல்லிபுரம் கோவில் வரை செல்வதும் உண்டு [பிற் காலங்களில் அவ்விடம் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்ததால் ஊர்காவற்துறைப்பக்கமாக செல்லநேர்ந்தது]

வெட்டிக்கொண்டுவரும் மரங்களைக்கத்தரித்து ஒருவழியாக கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்படும் பின்னர் கலர் பல்புகளை தொங்கவிட்டு , அன்ன பிற பொருட்களையும் தொங்கவிட்டு விளக்குகளை எரியப்பண்ணும்போது இரவு 9.30 ஐத் தாண்டி விடும் அப்படியே வீட்ட வந்து சாப்பிட்டு விட்டு மறுபடி . . . .

இரவு பாடசாலை நண்பர்களுடன் பாசையூர் (பாசையூர் குருநகர் , அரியாலை போன்ற இடங்களில்
மற்ற இடங்களை விட கிறிஸ்தவ மக்கள் கொஞ்சம் அதிகம்)அந்தோனியார் கோவில் நத்தார் நள்ளிரவுப் பூசைத்திருப்பலிக்குப் போனால் அங்கே கோவில் ஒரே தீப அலங்காரமாய் ஜொலிக்கும்வாறவங்களும் புது உடுப்புங்களோட வந்திருப்பார்கள் ( நாங்க அதைப்பார்க்கத்தானே போறது ) பதினோன்றரை மணியிலிருந்து கரோல் கீதங்கள் பாட ஆரம்பித்து பாட்டும், பிரசங்கமுமா மாறி மாறி நடந்து . சரியா 12 மணி அடிச்சவுடனே 'மெர்ரி கிறிஸ்மஸ்' வாழ்த்துக்களும், சிறப்புப் பிரசங்கம், கிறிஸ்மஸ் பாட்டுக்கள் என்று கோலாகலமாக நடந்து முடியும் முடியவிட்டு அப்படியே ஊரெல்லாம் திரிந்து விட்டு வெடிகளைக் கொழுத்தி அமர்க்களப்படுத்திக்கொண்டு அடுத்த நாள் தான் வீடு திரும்புபோம் [அதுவரை சைக்கிள்ள ஊர்மேயுறது தான்]. மார்காழி மாத நிலவு பனை இடுக்குகளினூடு தெரியும் . அன்று தான் என்னவோ புதிய நிலவை பொழிவது மாதிரி இருக்கும் . நடுநிசியும் ஆயிட்டுது..... ஊர் என்னும் உறங்கவில்லை உறங்கப்போவதுமில்லை ஆங்காங்கே தூரத்தில் கிறிஸ்மஸ் பாப்பா சகிதம். கூட்டம் கூட்டமாய் வேதக்கார வீடுகளுக்கு சென்று..பாடல்கள் மூலம். கிறிஸ்து பிறந்த செய்தியை அறிவித்து கொண்டு இருப்பார்கள் [2000 வருசமாய் அறிவித்து கொண்டிருக்கிறார்களாம்..]

மறுநாள் கிறிஸ்மஸ் தினமன்று எல்லா கிறீஸ்த்தவ நண்பர்கள் வீடுகளிலுமே தடல்புடலாகச் சமையல் நடப்பதுண்டு. ஆகவே அவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு , அவர்களது விஷேஷ கவனிப்புகள் வயிற்றை நன்றாகவே நிரப்பி விடும், இதனால் வீட்டுச் சமையல் கேட்பாரற்றுக் கிடப்பதுமுண்டு . வீடு திரும்பும்போது அம்மா சமைத்ததை உள்ளே தள்ள முடியாமல் திணற, அம்மாவின் திட்டுக்களை சம்பாதித்ததும் இந்த நத்தார் காலத்தில்தான். . . .
இங்க ஒன்றைச்சொல்ல வேணும் நாங்க A/L படிக்கத்தொடங்குற காலத்தில தான் வெடிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்தன அதனால் திருநாட்களில் வெடிகள் கொழுத்துவது பெரும் குஷியைக் கொடுக்கத் தவறுவதில்லை.அதனால் தான் என்னவோ ஒருவரிடமும் அடியோ பேச்சோ வாங்குவதில்லை.

பதிவர்களே
யேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால் அவர் வருடாவருடம் தேவபாலனாய் அவதரித்து எம்மைக் களிப்பூட்டியபடிதானே இருக்கின்றார்? அப்படியானால் மரணித்து விட்ட என் நண்பர்கள் எப்பொழுது மீண்டும் ஜனிக்கப் போகின்றார்கள்
எனக்கு விடை தெரியவில்லை.
பி.கு : கடந்த வருட பதிவுகளில் எடுக்கப்பட்ட மீள் பதிவு

Read more...

தமிழக தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் நன்றி

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிகள் உபகண்டத்தையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, மாண்பிமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே!

முதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மரியாதையும் தெரிவித்துக்கொள்ள அனுமதியுங்கள்.

பாசத்திற்குரியவர்களே!

நீறுபூத்த நெருப்பென உள்ளேயே கனன்றுகொண்டிருந்த நீங்கள், குமுறும் எரிமலையாக வெடித்துவிட்டீர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒன்றாகக் கூடி - ஒருமித்த குரலில் - பலம் வாய்ந்த அரசியல் வார்த்தைகளில் - தமிழீழத் தமிழர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், அவர்களது சுபீட்சமான அரசியல் எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.

முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் திரண்டு, வரலாற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமன்றி, காத்திரமான செயற்பாட்டு முடிவுகளினாலும் உப-கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

கட்சிகளின் வரம்புகளைத் துறந்து, அரசியலின் முரண்பாடுகளை மறந்து, மாநிலத்தின் சுவர்களைக் கடந்து, நாட்டின் எல்லைக்கும் அப்பால் "இனத்தின் உணர்வால் இறுகப் பிணைக்கப்பட்ட தமிழர்கள் நாம்" என்பதை இந்த உலகிற்கு முரசறைந்து சொல்லிவிட்டீர்கள். "தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட வெறும் அரசியல் விளையாட்டு இது" என்று எள்ளி நகையாடியவர்களின் முகங்களில் அவமானத்தைப் பூசி விட்டீர்கள்.

மாண்புமிகு முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள், ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் தலைவனாக - தமிழினத்தின் நிபந்தனையற்ற காவலனாக - அவரது உண்மையான அவதாரத்தை எடுத்து விட்டார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முதற்படியை எடுத்துள்ள நீங்கள், தமிழீழ மக்களின் தற்காலிகப் பிரச்சிக்கான தீர்வை நோக்கி அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டீர்கள். தமிழர்களுக்கு எதிரான போரை நிறுதவும், அவர்களுக்கு உணவும், மருந்தும் போய்ச் சேரவும், வாழும் இடங்களில் அவர்கள் நிம்மதியாய்க் குடியமரவும் - உருப்படியான காரியங்களைச் செய்யுமாறும், சிறிலங்கா அரசுக்கான அனைத்து இராணுவம்- சார் உதவிகளை நிறுத்துமாறும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் போட்டிருக்கும் நீங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்கால நிம்மதியைக் கொடுத்திருக்கின்றீர்கள்.

தமிழக மக்களின் குரலும், தமிழகத் தலைவர்களது செயலும், தமிழகத்தின் சக்தியும் -

- தமிழீழ மக்களுக்கு சுதந்திரத்தின் ஒளியைக் காட்டியிருக்கின்றது!

- "தமிழகம் எமக்காகப் பொங்கி எழாதா?.. தமிழகத் தலைவர்களும், கலைஞர் ஐயா அவர்களும் எமக்கு விடுதலையைப் பெற்றுத் தர மாட்டார்களா?.." என்று ஏங்கியிருந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தந்திருக்கின்றது.

- "தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஏனென்று கேட்க ஆளே இல்லை!" என்று இறுமாந்திருந்த சிங்களப் பேரினவாதத்திற்கு சினத்தையும் அச்சத்தையும் ஊட்டியிருக்கின்றது.

- எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத் தமிழர்களின் அழிவை - தமது சொந்த நலன்களுக்காக - கைகட்டிப் பார்த்து நிற்கும் அனைத்துலக சமூகத்திற்கு அதிர்ச்சியளித்திருக்கின்றது.

வரலாற்று மாற்றங்கள் அரங்கேறுகின்றன. நம்புதற்கரிய திருப்பங்கள் நிகழ்கின்றன. ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்ற இருக்கைகளையே பணயம் வைக்கின்றது தமிழகம். நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தவிக்கின்றது தமிழீழம். பெருமிதத்தோடும், திமிரோடும் நிமிர்கின்றான் தமிழன்.

எமது அன்பான தமிழகத்து உறவுகளே!

தமிழீழ மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் எல்லையற்ற பாசத்தையும், அக்கறையையும், அவர்களுக்காக நீங்கள் சந்தித்த இடர்களையும் நாம் அறிவோம். ஆட்சியை இழக்கும் சூழல் வந்த போது, சொந்தக் குழந்தைகளுக்காகத் துன்பங்களைத் தாங்கும் ஒரு தந்தையாக அதைப் பொறுத்துக்கொண்ட கலைஞர் ஐயாவையும், சிறையில் வாடும் துயரம் நிகழ்ந்த போது, சொந்தச் சகோதரர்களுக்காக அதையும் ஏற்றுக்கொண்ட தலைவர்களையும், இன்னும் எத்தனையோ வழிகளில் எமது சுமைகளைச் சுமந்த அனைவரையும் நாம் என்றும் மறவோம். எங்கள் நெஞ்சங்களின் மிகச்சிறந்த இடமொன்றில், நன்றியுணர்வுடன் உங்களை நாம் அமர்த்தியிருக்கின்றோம்.

தமிழினத்தினது வரலாற்றின் மிகவும் உச்சமான ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இன்று இருக்கின்றோம். சரியான திசையில் தன்னை நகர்த்திச் செல்வதற்காக - காலத்திற்குக் காலம் - ஒப்பற்ற மனிதர்களை வரலாறு பிறப்பிக்கின்றது. அவர்களைத் தான் நாம் வரலாற்று மனிதர்கள் என்கின்றோம். அத்தகைய ஒரு மகோன்னதப் பிறப்பை கலைஞர் ஐயா அவர்களுக்குக் கொடுத்த சரித்திரம், இப்போது அவரை மிகச்சரியான இடத்தில் அமர்த்தியிருக்கின்றது.

தென்னாசியாவையே அசைக்கும் வல்லமையை அவருக்குக் கொடுத்திருக்கின்றது. அவரது அறிவு ஞானமும், அரசியற் செல்வாக்கும் தமிழர்களுக்கென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்கி, தமிழீழத்தில் துன்பத்தில் உழலும் எம் உறவுகளுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தவை. தமிழீழ மக்களின் சுதந்தரத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, அவருக்குப் பலம் சேர்த்து,

அவரை உற்சாகப்படுத்தி, தமிழினத்தைத் தாங்கும் தூண்களக நீங்கள் எல்லோரும் விளங்க வேண்டும் என்று நாம் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலும், தமிழினத்தின் நிரந்தரக் காவலனாக கலைஞர் ஐயா என்றும் இருக்கின்றார் என்பதை, தமிழினத்தின் பகைவர்களுக்கும், இந்த உலகிற்கு அவர் உணர்த்த வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

அன்பானவர்களே!

இப்போது - தமிழீழ மக்களுக்கு ஓர் தற்காலிக நிம்மதியைக் கொடுக்க ஆணித்தரமான முயற்சிகளை எடுத்துள்ள நீங்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் நிரந்தர விடுதலை பெறவும் ஆவன செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, அந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறி, சுதந்திரமக வாழ ஆவன செய்ய வேண்டும்.

"சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாதெனின், தமிழர்கள் பிரிந்து போவதே சரி" என்பதே கலைஞர் ஐயா அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடும், தமிழகத் தலைவர்களாகிய உங்களில் பலரது வெளிப்படையான நிலைப்பாடுமாகும். உங்களது அந்த நிலைப்பாட்டுக்கு ஓர் அரசியல் அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்கவேண்டும் என்றும், தமிழீழத் தமிழர்களின் துன்பங்களுக்கு "தமிழீழத் தனியரசு" தான் சரியான ஒரே தீர்வு என்ற ஒரு தீர்மானத்தை தமிழக மக்களவையிலே நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்தியாவில் இருக்கும் தடையை நீக்கி, ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வழி பிறக்கச் செய்ய வேண்டுமென்றும் பணிவன்புடன் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

நீங்கள் எல்லோரும் இப்போது எடுத்துள்ள முயற்சிகள் ஒர் ஆரம்பம் தான் என்பதை நாம் அறிவோம்: தமிழீழ மக்களுக்கு நிரந்தரமான விடுதலையைப் பெற்றுத்தரும் வரை தமிழகம் ஓயாது என்பதையும் நான் அறிவோம்.

ஒரே இரவில் அதிசயங்களைப் படைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்: நம்பிக்கையோடு காத்திருக்கின்றது ஈழத் தமிழினம்.

நன்றி கலந்த மரியாதையுடன்,
இலங்கை தமிழ் சங்கம் - ஐக்கிய அமெரிக்கா
மின்னஞ்சல் : president@sangam.org

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : புதினம் இணையம்

Read more...

நல்லைக்கந்தன் இரதோற்சவம் [ புகைப்படங்கள் ]

இன்று காலை நடைபெற்ற நல்லைக்கந்தன் தேர்உற்சவப்படங்கள் இவை வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து இரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.







Read more...

யாழ் நல்லூர்க்கந்தனுக்கு திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06.08.2008) 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் நாள்வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை என்ன திருவிழா என்னமாதிரி நடக்குமனெ தெரியாதுள்ளது

எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 23ஆம் திகதி மாலை 5 மணிக்கு கார்த்திகைத் திருவிழாவும் 25ஆம் திகதி காலை 7 மணிக்கு சந்தான கோபாலர் திருவிழாவும் இடம்பெறும்.
25ஆம் திகதி மாலை 5 மணிக்கு கைலாச வாகனமும் 26ஆம் திகதி காலை 7 மணிக்கு கஜவல்லி மகா வல்லி உற்சவமும் மாலை 5 மணிக்கு வேல் விமானமும் இடம்பெறும்.
27ஆம் திகதி காலை 7மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும் அன்று மாலை 5 மணிக்கு ஒருமுகத் திருவிழா வும் இடம்பெறும். 28ஆம் திகதி 23ஆம் திருவிழா. மாலை 5 மணிக்கு சப்பரம் இடம்பெறும்.
29ஆம் திகதி 24ஆம் திருவிழா. அன்று காலை 7 மணிக்குத் தேர்த்திரு விழா இடம்பெறும். ஆறுமுகப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராகத் தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார். 30ஆம் திகதி சனிக்கிழமை 25ஆம் திருவிழா. காலை 7 மணிக்குத் தீர்த்தம் இடம்பெறும்.
31ஆம் திகதி பூங்காவனமும் முதலாம் திகதி வைரவர் சாந்தியும் இடம் பெறும்.
ஆலய வீதிகளில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயற்பாடுகளும் நிறைவ டைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

எண்பத்து முன்று ஜூலை 25 வருடங்கள் பூர்த்தி

இன்று ஜுலை 23 83 ம் ஆண்டு ஜுலை 23 தமிழ் நெஞ்சங்களை சிங்களக் கைகள் கிளித்துப்பந்தாடிய கொடூரமான நாள் தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட (400-3000 பேர்வரை, உறுதி செய்யப்படவில்லை) துன்பவியல் நிகழ்வாகும்.

பழையபதிவுவு ஒன்றின் மீள்பதிப்பு . . .

யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.இதனை
கானாபிரபா அண்ணா தனது பழைய பதிவு ஒன்றில் பதிந்திருந்தார் கானாபிரபா அண்ணா என் அன்பார்ந்த நன்றிகள்

நன்றி சோழியன்

மிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 25 ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும் அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும். ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.


அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன். 'தில்லீஸ் குறூப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.


மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.மாதக் கடைசி. கையில் பணமில்லை.வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.அந்த 'ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.எனினும் என்ன பயன்?எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.அது திறக்கப்படவில்லை.மீண்டும் வீட்டை அடைந்தேன்.


எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.அவர்களின் பின்னால் 'ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம்.


அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.இராணுவத்தினர் 'ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.


வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.ஓடினால் 'தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.நடையின் வேகத்தை அதிகரித்தேன்.எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுடே தெரிந்தது.அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.இரவு எட்டு மணியிருக்கும்.முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடு கூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.
இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா? யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம். பசித்தது. துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள். 'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.
நன்றி சோழியன்
மிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 24ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும்அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும்.

அன்பர்களே! 83 யூலை மாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா? 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்ன?யூலை 83... என்று நினைத்துக் கலங்கிவிட்டுச் சும்மா இருக்கும் நேரமல்ல இது. உரிமையிழந்து பின்னர் உடமையிழந்து, இப்போது உயிர் கொடுத்துப் போராடுகின்ற எமது இனத்தின் உணர்வுகளுக்கு நம் தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. . நாளைப் பொழுது தமிழர் வாழ்வில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாமும் நமது கடமையைச் செய்திட வேண்டுமல்லவா


Read more...

மிருகவதை !

மிருகங்களை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி வாழவேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன்?


Read more...

மீண்டும் வந்தேன்

வணக்கம் அன்பு வலையுலக நண்பர்களே மீண்டும் உங்களை தாயகத்திலிருந்து பிரிந்து வேறொரு நாட்டிலிருந்து [ UK ] சந்திப்பதில் மகிழ்ச்சி .என்னதான் இலங்கையை விட்டுவந்தாலும் எப்போதும் எம்நாடு இலங்கை தான் . புதிய நாடு புதிய கலாச்சாரம் எல்லாவற்றிறிகும் ஈடுகொடுத்து மீண்டும் வலையுலகில் பிரவேசிக்க சிறிது காலம் எடுக்கும் . அதுவரை நன்றிகள் . குறிப்பாக தாயகநண்பர்களுக்கு நன்றிகள் .நேரமின்மையால் சிறியளவில் எழுதியுள்ளேன். விரைவில் தொடர்ந்து எழுதுவேன்.


நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

Read more...

அன்னையர் தினம் !

அன்னையர்கள் அனைவரையும் தாழ் பணிந்து வணங்குகிறேன் இந்நாளில் உலகத்திள்ள அனைத்து அன்னையருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் .

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்..
அம்மாவை வாங்க முடியுமா..'
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா

உன்னையும் என்னையும் படைச்சது இங்க யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்குதுன்னா தாயடா

'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்..
அம்மாவை வாங்க முடியுமா..'
நீயும் லா லா லா லா .....

பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்தே பசி மறப்பா

இளவட்டம் ஆனபின்னும் எண்ணைய் தேச்சு குளிக்க வைப்பா
உச்சிமுதல் பாதம் வரை உச்சுக்கொட்டி மகிழ்ந்துடுவா

நெஞ்சுல நடக்கவைப்பா நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சு விரல் நகம் கடிப்பா பிள்ளை எச்சு சோறு திம்பா

பல்லு முளைக்க நெல்லு முனைய மெல்ல மெல்லாதான் கீறிடுவா

உன்னையும் என்னையும் படைச்சது இங்க யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்குதுன்னா தாயடா

'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்..
அம்மாவை வாங்க முடியுமா..'
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

மண்ணுல ஒரு செடி மொளைச்சா மண்ணுக்கது பிரசவம் தான்
புள்ளை தேற துடிதுடிச்சா அன்னைக்கது பூகம்பம் தான்..

சூரியன சுத்திகிட்டே தன்னைச்சுத்தும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்துக்கொள்ளும் தாய்மையம்மா

கற்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
கிளைபோல் அவள் இருப்பா விதையா உன்னை வளர்ப்பா

என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

உன்னையும் என்னையும் படைச்சது இங்க யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்குதுன்னா தாயடா

'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்..
அம்மாவை வாங்க முடியுமா..'
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா
உன்னையும் என்னையும் படைச்சது இங்க யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்குதுன்னா தாயடா

Read more...

பத்திரிகையாளர் சிவராம் மறைந்து இன்றுடன் வருடம் 3

ஊடகத்துறையில்
உண்மைக்காய்
போராடிய தராக்கி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம்
எம்மைவிட்டு மறைந்து இன்றுடன் வருடங்கள் மூன்று
அவர்களுக்கு எனது 3வது ஆண்டு கண்ணீர் அஞ்சலிகள்......

மேலும் தகவல்களுக்காக =>
அன்பான வாழ்க்கை - சிவராமுக்காக...........

Read more...

நீங்களும் ஒரு செய்தியாளராகலாம்!

நீங்கள் செய்தியாளராக விரும்புகிறீர்களா ? அப்படியானால் இதோ இலகுவான முறை உங்களுக்காக ! உங்களிடம் இருக்கும் வீடியோஒளிப்பதிவுகள்,ஒலிப்பதிவுகள் மற்றும் செய்திகளை இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி இணையத்தளத்தினூடாக நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்களின் கணினியின் முன் இருந்தவாறே UXPRESS க்கு சென்று உங்களின் செய்திகளை தரவேற்றம் செய்ய பயன்படுத்தலாம்.

Read more...

இலங்கையில் மீண்டெழுந்த சூரியன் FM

இலங்கை அரசினால் கடந்த 5மாதகாலமாக தடைசெய்யப்பட்டிருந்த ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்(Asia broadcasting cooperation) சூரியன்FM வானொலி சேவை மீண்டும் தனது சேவையை 15-04-2008 முதல் ஆரம்பித்துள்ளது ! பழைய குரல்கள் பல இல்லாவிடினும் மீண்டும் அதே தரத்துடன் நிகழ்ச்சிகள் நடைபெறுவது சூரியன் அபிமானிகளை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Read more...

சர்வதாரி வருடப்பிறப்பு

Happy New Year !சர்வதாரி வருடம் சித்திரை 1ம் திகதி [ 13-04-2008 ]ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாடி 27 விநாடி 05 ( மணி 4.55 ) புருவபக் ஷ நவமித்திதியில் பூசநட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் திருதி நாமயோகத்தில், பாலவக்கரணத்தில், கன்னி லக்கினத்தில், மீன நவாம்சத்தில் இப்புதிய சர்வதாரி வருடம் பிறக்கிறது
ஆதாரம் : வாக்கிய பஞ்சாங்கம்

மலரப்போகும் ஆண்டு உங்களுக்கு எல்லாவகையிலும் இனிதாக அமையட்டும். அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் மலர எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திப்போம்பிறக்கும் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலர வாழ்த்துகின்றேன்
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

Read more...

என் பாசத்திற்குரிய நண்பர்களுக்காக !






என் பாசத்திற்குரிய நண்பர்களுக்காக !
இணையத்தில் கிடைத்த கவிதை

அன்புடன் மாயா

Read more...

வடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்



வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 102 வது தடுப்பாட்டம் ஆரம்பமாகியது முந்தியெல்லாம் ஆட்டமும் பாட்டுமாய் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூணடிருக்கும் ஆனால் இந்தமுறை நடக்கிறதெ பெரிய சாதனைகோல தான் கிடக்கு !
இதே போல இலங்கையின் தலைநகர பாடசாலைகளான சென் தோமயனும் றோயல் கல்லூரி இடையிலான போட்டியும் தற்பொது நடைபெறுகிறது இப்போட்டியை 1879 ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் [ இம்முறை 129வது போட்டி ]
படங்களின் மேல் சொடுக்கினால் பெரிதாகும்

Read more...

சுஜாதாவின் மறைவும் தமிழ்மணத்தில் பதிவர்களின் கூத்தும்


சுஜாதா [S.ரங்கராஜன்] என்ற ஓர் மாபெரும் எழுத்தாளன் தன் 73ம் வயதில் அமைதியாக விண்ணுலகம் அடைந்தபின் , தமிழ்மணம் உட்பட பலதிரட்டிகளில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துமுகமாக அஞ்சலிகளும், அவரின் வாழ்க்கை தொடர்பான சுவையான பதிவுகளும் வெளிவந்தன அதைவிட அதிகமாகவந்ததென்னவோ அவருக்கு எதிராகத்தான். குறிப்பாக அஞ்சலி செலுத்தியவற்களுக்கெதிராக எதிர்த்துப் பதிந்த பதிவுகளும் சுஜாதாவின் மரணம் சரியானதே ! என்றும் , சாதிரிதியாக பல பதிவுகளும் வந்திருந்தன .

இதையிட்டு எனக்கு மனக்கவலை ஏற்பட்டிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறானவர்களை நினைத்து சிரிப்புத்தான் வந்தது குறிப்பாக சாதி ஒழியவேண்டும் என வாய்கிழியக்கத்துபவர்கள் கூட அவரது சாதிப்பெயரை சந்திக்கிழுத்து வாதம் பரிந்தனர் . அப்படி அவர் செய்த தவறென்ன ? என்னைப்பொறுத்தவரை சாதி ஒழியவேண்டும் என கூறுபவர்கள் மத்தியில் அவர் பிராமணராகப்பிறந்தது தான் அவர் செய்த தவறு ! நம் மனத்தில் தோன்றும் கருத்துக்களை எழுதுவதற்கே நாம் பதிவெழுதுகிறோம் அந்தவகையில் தான் அந்த மாபெரும் எழுத்தாளனுக்கு அஞ்சலி செலுத்தினோம். ஆனால் இங்கே பதிவுகளைப்பார்த்தபோது பலர் அதில் மகிழ்ச்சியடைந்தமாதிரித்தான் தெரிகிறது உங்களிடமே கேட்கிறேன் உங்கள் நெருங்கிய சொந்தம் ஒருவருடைய மரணவீட்டில் வந்து கும்மாளம் அடித்தாலோ அல்லது அவரைப்பற்றி குறைசொன்னாலோ தாங்கிக்கோள்ளமுடியமா ? அல்லது மரணம் எல்லோருக்கும் பொதுவானது தான் அதற்காக ஏன் அழுகிறீர்கள் சிரியுங்கள் என்று சொல்லமுடியுமா ? எந்த ரோஷமுள்ள மனிதனாலும் தாங்கிக்கொள்ளமுடியாது !

பதிவர்களே !
நீங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தாமலிருந்தால் பறவாயில்லை ஆனால் அவரைப்பற்றி அவதூறு பரப்பினீர்களே அங்கு தான் உங்கள் weakness தெரிகிறது ! உங்கள் நோக்கம் அதிக ஹிட்களை பெறுவது தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் குறிக்கோள் என்று செயல்படும் பதிவுகளை பதிவுகளின் தலைப்புகளிலேயே தெரிந்து கொள்ளமுடியும் அதற்க்காக இறந்த ஓர் எழுத்தாளரை இப்படியெல்லாம் பாடுபடுத்துவதா அதுவும் மூன்றாந்தர வார்த்தைகளை மிகச் சாதாரணமாக பயன்படுத்தி ?

நமக்குள் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதைவிடுத்து ஒருவரின் மரணத்தை வைத்து இல்லாதபலவற்றைக்கற்பனை செய்து அதை தலைமேல் தூக்கி ஆடி மற்றவர்களையும் வம்புக்கு இழுப்பதே இன்றய தமிழ் வலைப்பதிவுலகத்தில் பெரியவர்களெனக்கூறுபவர்களின் வேலை (அன்று சுஜாதா மறைவுக்கு சந்தேஷமாகப்பதிவெளுதியோர் பலர் தமிழ்மணத்திற்கு பழையவர்கள்) பதிவுபோட்டவர்களுக்கு போய்ப்பின்னூட்டமிட்டவர்களும் அனேகர் பழையவர்களே அவர்கள் ஒன்று தெரிந்து கொள்ளட்டும் முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.

கடந்தவாரம் தமிழ்வலையுலகம் சுஜாதாவின் மரணத்தின் பின் வந்த பதிவுகளால் நிலைகுலைந்து கொண்டிருப்பது அனைவ‌ருக்கும் தெரியும். நிறைய பேர் வேடிக்கை பார்த்தார்கள் நானும் ஒப்புக்கொள்கிறேன். இதில் வந்து வாசிக்கும் போதே குற்ற உணர்ச்சி தோன்றுகிறது தமிழனுக்கே உரித்தான ஒற்றுமையின்மை, இங்கேயும் காட்சி தர ஆரம்பித்து விட்டது என எண்ணத்தோன்றுகிறது . பல மூத்த பதிவர்கள் மொளனம் சாதிப்பது (திரட்டிகளின் நிர்வாகத்தினர் ) வருத்தத்தை அளிக்கிறது . நிறைய‌ பேர் என்னைப்போல் தனிப்பட்டரீதியில் (பின்னூட்ட , மின்னஞ்சல் ) காய‌ப்ப‌டாத‌தினாலும் அமைதியாய் இருந்திருக்க‌க் கூடும். நம் நாட்டில், எத்தனை கொடுமைகள் தினமும் நடைபெறுகின்றன அவற்றையெல்லாம் தட்டிக்கேட்கமுடியாமல் பழகிக் கொண்டுள்ளோம். அல்லவா அதுமாதிரி தான் இந்த வலையுலகில் சில கொடுமைகள் நடைபெறுகின்றன எங்கேயாவ‌து நடந்தால் நடந்துவிட்டுப்போகட்டுமே என்கென்ன என்னால் எதிர்த்துப்பேசவா முடியும் ( நாம் அன்றாடம் பார்க்காத,கேட்காத அசிங்கங்களா,கொடுமைகளா இந்த வலைப் உலகில் புதிதாக பார்க்கிறோம்..என்று மனதைத் தேற்றவேண்டியது தான்.

கொஞ்சக்காலமாய்த்தான் எழுதுகிறேன். எத்தனையோ பேரை நண்பர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களே அனானிகளாக வந்து இழிவாக எழுதுகிறார்கள் இதை எங்குபோய் சொல்லியழுவது ?

பதிவர்களே இத்தகைய வீணான பதிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நல்ல பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டமிட்டு ஆதரவு கொடுங்கள்

நன்றியுடன்

மாயா

Read more...

சுஜாதாஞ்சலி

சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்த திரு சுஜாதா [S.ரங்கராஜன்] நேற்றுக்காலமானார்.அன்னாரக்கு எமது அஞ்சலிகள். ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்.
இத பற்றி கானாபிரபா அண்ணாவின் வலைப்பூவில் அவருக்கு சுஜாதா வழங்கியபேட்டியில் கேட்டேன் " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள் " என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

அன்னாரைப்பற்றிய சிறுதுளிகள்

எழுதிய நாவல்கள்
பதவிக்காக
ஆதலினால் காதல் செய்வீர்
பிரிவோம் சந்திப்போம்
அனிதாவின் காதல்கள்
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நிலா நிழல்

கரையெல்லாம் செண்பகப்பூ
யவனிகா
கொலையுதிர் காலம்
வசந்த் வசந்த்
ஆயிரத்தில் இருவர்
பிரியா
நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
மூன்று நிமிஷம் கணேஷ்
காயத்ரி
கணேஷ் x வஸந்த்
அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
அனிதா இளம் மனைவி
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு
வசந்தகாலக் குற்றங்கள்
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
கனவுத்தொழிற்சாலை
ரத்தம் ஒரே நிறம்
மேகத்தைத் துரத்தினவன்
நிர்வாண நகரம்
வைரம்
ஜன்னல் மலர்
மேற்கே ஒரு குற்றம்
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
நில்லுங்கள் ராஜாவே
எதையும் ஒருமுறை
செப்டம்பர் பலி
ஹாஸ்டல் தினங்கள்
ஒருத்தி நினைக்கையிலே
ஏறக்குறைய சொர்க்கம்
என்றாவது ஒரு நாள்
நில் கவனி தாக்கு


எழுதிய குறுநாவல்கள்
ஆயிரத்தில் இருவர்
தீண்டும் இன்பம்
குரு பிரசாத்தின் கடைசி தினம்

மெரினா

சிறுகதை
ஸ்ரீரங்கத்துக் கதைகள்

கட்டுரைகள்
கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும்
கடவுள் இருக்கிறாரா
தலைமை செயலகம்
எழுத்தும் வாழ்க்கையும்
ஏன் ? எதற்கு ? எப்படி ?
சுஜாதாட்ஸ்


திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்


நாடகம்
Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு்
கடவுள் வந்திருந்தார்

திரையாசிரியராக பணியாற்றிய திரைப்படங்கள்
ரோஜா
இந்தியன்
ஆய்த எழுத்து
அந்நியன்
பாய்ஸ்
முதல்வன்
விசில்
கன்னத்தில் முத்தமிட்டால்
சிவாஜி the பாஸ்

சில சுவையான தகவல்கள்
* இறந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாமும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. சுஜாதா திரைக்கதை எழுதிய கடைசி திரைப்படம் சிவாஜி

சுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை.
இப்போதும் சிவாஜி படத்தில் எழுதிய வரி ஒன்று ஞாபகம் வருகிறது
"சாகும் நாள் தெரிந்து போய்விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும் "

மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப்பொறுத்தவரையில் அவர் ஓர் சகாப்தம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கமைய போய் வாருங்கள் சுஜாதா!
போய் வாருங்கள் சுஜாதா அறிந்திராத உலகிற்கு !

நன்றி :- WIKIPEDIA

Read more...

திரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தை நட்சத்திரமா ? குழந்தைத்தொழிலாளியா ?


<பொதுவாக உலகெங்கும் சிறுவர்கள் வேலைக்கமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்படுகிறது இத பல்வேறு நாடுகளில் எனோ தானோ என்று கடைப்பிடிக்கப்படுவதால் சிறுவர்களைவேலைக்கமர்த்துவது இன்னும் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது ஆனால் திரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எந்தவகையில் கருத்திற்கொள்வது ?

அனேக நடிகர்கள் தாங்கள் பணத்திற்காகவே தாங்கள் நடிப்பதாகக்குறிப்பிடுகின்றனர் அவ்வாறே தமக்குரிய ஊதியம் கிடைக்காவிடில் நீதிமன்றபடியேறவும் தயங்குவதில்லை அதாவது அவர்கள் தாங்கள் செய்த நடிப்பு எனும் வேலைக்கு சம்பளம் பெறுகின்றனர். அதேபோல் திரைப்படங்களில் சிறுவர்களும் குழந்தைகளும் நடிக்கின்றனர் ஆகவே அவர்களும் தொழிலாளர்கள் தானே ? இதைப்பற்றி யாராவது சிந்திருப்பார்கள் தானே அவர்கள் ஏன் மெளனமாக இருக்கின்றனர்.என் மனதுக்குப் பட்டது போல் அவர்களுக்கும் தோன்றியிருக்கலாம்!ஆனால் இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து! , என்னுடையகருத்துக்களை அவாகள் ஆதரிக்கலாம், சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை வேறு வேலைகளுக்கு சிறுவர்கள் கொண்டுசெல்லப்பட்டால் சிறுவர் துஷ்பிரயோகம் அது இது எனக்கத்தும் இவர்கள் ஏன் இதைக்கண்டுகொள்கிறார்களில்லை என்பது குழப்பமாகவே இருக்கிறது.

அனேகமாக திரைப்படங்களில் நடிகர்கள் நடிகைகள் சரியாக நடிக்காதவிடத்து அவர்களுக்கு பேச்சு விழுவதாகவும் சிலநேரங்களில் அடியும் ! விழுவாதகவும் அவர்கள் பத்திரிகைப்பேட்டிகளில் குறிப்பிடுகின்றனர் அதேபோல்தான் சிறுவர்கள் சரியாக நடிக்காதவிடத்தும் அவர்கள் மீதும் அதே கொடுமைகள் நடக்கலாம் தானே ? அப்படி நடக்காதென்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா ? இப்போ பாடசாலைகளிலோ வேறு இடங்களிலோ சிறுவர்களைத்துன்புறத்தினால் அது சிறுவர் துஷ்பிரையோகமாகக்கருதப்படுகிறது !அவ்வாறிருக்கையில் திரைப்படங்களில் நடிக்கும் சிறுவர்கள் நிலை ?

சரி திரைப்படங்களில் சாதாரணமாக நடிக்கவைத்தால் பரவாயில்லை சில திரைப்படங்களில் குழந்தைகள் இறப்பதுபோலவும் அங்கவீனமாக்கப்படுவது போலவும் (சிலநேரங்டகளில் நெருக்கமான காட்சிகளிலும் )காட்டப்படும்போது அக்குழந்தையைப்பெற்ற தாய் அல்லது தந்தை அதை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் ? உதாரணத்திற்கு அழகியதமிழ்மகன் திரைப்படத்தில் குழந்தை இறந்து இறுதிக்கிரியைகள் நடப்பது போல் காண்பிக்கப்படும் இவ்வாறான் காட்சிகளைப்பார்க்கும் எங்களாலேயோ தாங்கிக்கொள்ளமுடியவில்லை அக்குழந்தையின் மீது அதிகபாசம் வைத்திருகும் வேறு யாராவது பார்த்தால் அவர்கள் நெஞ்சம் படும பாடு யார் அறிவார் ?

சரி குழந்தைகள் தொழிலாளர்கள் இல்லை என்ற பார்வையில் இருந்து விலகி வேறுகோணத்தில் அதாவது கலை என்ற கோணத்தில் பார்த்தால் அவர்களை மரணம் தொடர்பான காட்சிகளைத்தவிர்த்து நடிக்கவைக்கலாம் தானே ?
திரைப்படத்துறையினரே மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிராக வாய்கிழியக்கத்துபவர்களே ஓர்நிமிடம் ! திரைப்படத்துறையில் குழந்தைத்தொழிலாழர்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறதே என்னது தான் என் எண்ணம் . இவன் யார் நம்மைச் சொல்வதற்கு என நினைக்க வேண்டாம். நினைத்தாலும் மகிழ்ச்சி. நினைக்காமல் இருந்தால் சந்தோசம்.

நன்றிகளுடன்
மாயா

Read more...

தமிழ்ப்புத்தாண்டு தைமாதமல்ல சித்திரை மாதமே !

"தைப்பொங்கல் தினமே தமிழர்களின் புத்தாண்டு தினம் " என்ற தமிழகமுதல்வரின் அறிப்பு தொடர்பாக தமிழகத்தைச்சோந்த பலராலும் ஆமோதித்தும் எதிர்ததும் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஒன்று. சித்திரைபபபுதுவருடமென்றால் சிறுவர் முதல் பெரியோர் வரை மனதைக்குதூகலப்படுததும் ஆனால் 2008 தைமாதம் பிறந்தவுடன் தைப்பொங்கல் தினமே தமிழர்களின் புத்தாண்டுதினம் என்ற தமிழகமுதல்வரின் அறிவிப்பு பலரது மனதைச்சஞ்சலப்படுத்துவதாயிருந்தது. பண்டைக்காலம் முதல் தைப்பொங்கல்தினத்தை உழவர்திருநாளாக கொண்டாடிவந்த தமிழ்மக்கள் சித்திரை மாதப்பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாகக்கொண்டாடி குதூகலித்துவந்தனர். இதை மாற்றியமைக்கும் வகையில் தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல்தினமே என்ற அறிவித்தல் பல சர்ச்சைகளை உருவாக்குகிறது
நான் அறிந்தவகையில் தைப்பொங்கலை புத்தாண்டாக கொண்டாடினால் அதன் நோக்கம் மாற்றப்பட்டுவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை மற்றும் உழவரைப்பொறுத்தவரை அறுவடைக்காலமே குதூகலமான காலமாகும் உழவர்கள் இருவகையாகப்பயிர்செய்வர் சிலர் ஆடி மாதத்தில் விதைவிதைத்து தைமாதத்தில் அறுவடைசெய்வர் இன்னோர் சாரார் ஐப்பசியில் விதை விதைத்து பங்குனியில் அறுவடை செய்வர் ஆகையால் இரண்டாவத வகையினருக்கு தைமாதம் சாதாரணமாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே முடியும். ஆனால் இரசாராரதும் அறுவடை முடிந்து வீடு வாசலில் நெற்குவியல்களை அழகுபார்த்து மனம் பூரித்து நிற்கும் தருணம் கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் அப்போது தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து மகிழ்வர் இதன்படிசித்திரைமாதத்தில் வரும் புதவருடமே இவர்களுக்கு மனநிறைக்கொடுத்து நிற்கிறது தைமாதத்தில் வரும் பொங்கல்தினம் உழவர்தினமாக இருந்தாலும் அறுவடை ஆரம்பித்து அது தொடர்பான வேலைகள் நடைபெறும் நாள் அதனால் அவர்களால் சிலவேளைகளில் தைமாதத்தில் வரும் பொங்கல் தினத்தைக்கூட கொண்டாட முடியாமல் போகலாம் இந்நிலையில் தைப்பொங்கல் திருநாளை எவ்வாறு அவர்கள் புத்தாண்டு தினமாக மனநிறைவோடு கொண்டாடுவர் ?


இலங்கையைப்பொறுத்தவரை இது ஒரு பொதும் சாத்தியப்படாது ஏனெனில் இலங்கையில் தமிழ்மக்கள் சிங்களமக்கள் என இருசாராரும் சேர்ந்து கொண்டாடுகின்றனர் .அது தமிழ்சிங்களப்புத்தாண்ட என்றே சொல்லப்படுகின்றது சித்திரைப்புத்தாண்டின் அம்சங்கள் தமிழ்மக்கள் மற்றும் சிங்களமக்களுக்கு ஒன்றாகவே அமைகிறது வருடப்பிறப்பு கருமங்கள் யாவும் இருமொழியினருக்கும் ஒருமைப்பாட்டைக்கொண்டது, இருமொழியினரின் பஞ்சாங்கக்கணிப்புக்களும் சித்திரைப்புத்தாண்டை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன அந்தவகையில் சித்திரைமாதமே இரு சமூகத்தவர்களுக்கும் உகந்த சித்திழைப்புத்தாண்டாக மலர்கிறது.

சோதிடக்கணிப்பின்படி மேடலக்கினமே தமிழர்களின் இலக்கினமாகும் அந்த லக்கினத்தில் சூரியன் உச்சம் பெறுவது சிறப்பானது அத்துடன் சூரியன் மேட இராசிமாதமான சித்திரை மாதத்தில் காலடி எடுத்து வைக்கும் போது அந்த சூரியனை போற்றி வழிபட்டு வருடப்பிறப்பை கொண்டாடுவது மிகவும் உயர்வைத்தரக்கூடியது
தைப்பொங்கல் நாளை உழவர்திருநாளாகக்கொண்டாடலாமே அன்றி தமிழர்களின் புத்தாண்டுதினம் என்கொண்டாடுவத அவ்வளவு நல்லதல்ல.

ஆனாலும் ஒன்று , சித்திரைப் புத்தாண்டானது, ஆரியர்களினுடைய கலாச்சாரப்பின்ணனியின் பின்பற்றலான இந்து மதத்தின் ஒரு அங்கம். சித்திரைப்புத்தாண்டு எமது கலாச்சாரத்தில் இடையில் வந்து ஒட்டிக்கொண்டதா...??? இல்லை, தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றதா...? எதாவது ஆதாரங்கள் உண்டா...??

இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்

Read more...

மனிதன் எவ்வாறு உருவானான் ?இது விஞ்ஞானத்தின் கேள்வி (ஒருவேளை கடவுள் தான் ஆரம்பகர்த்தாவா ?)

சுமார் பல மில்லியன் ஆண்டுகளின் [ 35 கோடி வருடங்களின் முன்தோன்றியதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர் ] முன் தோன்றிய ஒருகல அங்கியிலிருந்து [Unicellular ]வந்த கூர்ப்பின் பரிணாம வளர்ச்சியினால் அவையேபடிப்படியாக பலகலங்களாக மாறி பல்வேறு மிருகங்களாகி பின் மனிதர்களாக மாறின. இது விஞ்ஞான ரீதியான முடிவு அது பற்றிய சிறியதொரு கற்பனைச்சித்திரம் கண்ணொளியாக உங்களுக்காக. [இந்தக்கண்ணொளியில் காட்டப்படுபவை யாவும் உண்மையானவை இல்லை கற்பனை]

சரி இப்போ விடையத்திற்கு வருவோம் கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே உங்களிடம் விஞ்ஞான ரீதியாக ஓர் கேள்வி
* மனிதன் எவ்வாறு தோன்றினான் ?
குரங்கிலிருந்து
* குரங்கு எவ்வாறு தோன்றியது ?
கடலிலிருந்து வந்த ஈருடகஅங்கிகளின் கூர்ப்பின் மூலம்
* சரி ஈரூடக அங்கிகள் ?
நீர் வாழ் அங்கிகளின் கூர்ப்பிலிருந்து
* நீர் வாழ்அங்கிகள் ?
பலகோடி ஆண்டுகளின் முன்தோன்றிய ஒருகல அங்கிகளின் மூலம் . . .

* சரி அந்த ஒருகல அங்கிகள் எங்கிருந்து வந்தன ?

யாருக்காவது பதில் தெரியுமா (விஞ்ஞான ரீதியாக ) தெரிந்தால் தர்க்கம் புரியாமல் சொல்லுங்கள் பார்க்கலாம்

Read more...

மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் பார்வையில் இலங்கைவலைப்பதிவர் திரட்டி

கடந்த வியாழக்கிழமை 22 2008 அன்று இலங்கையிலிருந்து வெளிவரும் மெட்ரோநியூஸ் பத்திரிகையில் இலங்கைவலைப்பதிவர் திரட்டி பற்றிய ஆக்கம் ஒன்று வெளிவந்துள்ளது இச்செய்தியை இலங்கைவலைப்பதிவர்கள் , உலகெங்கும் பரந்திருக்கும் தாயக நெஞ்சங்கள் மற்றும் இந்தியவலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
இலங்கைப்பதிவர்களுக்கென தனிப்பட்ட திரட்டியொன்றை உருவாக்கும் எண்ணம் உருவாகி முதலில் இலவச சேவை வழங்குனர்களிடமிருந்து சேவையைப்பெற்று அதற்கான ஆரம்பகட்டவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலே பத்திரிகையின் கண்களில் இத்திரட்டி பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது
இதன்முலம் இலங்கைப்பதிவர்களாகிய எங்களுக்கு தனியானதும் சிறந்ததுமான இலங்கைவலைப்பதிவர்களுக்கான திரட்டியை உருவாக்கிமுடிக்கும் எண்ணம் இன்னும் வலுப்பெற ஆரம்பித்துள்ளது
அந்தவகையில் திரட்டி ஆரம்பித்த நாளில் இருந்து தொடங்கி இன்றுவரை பேருதவி புரிந்துவரும் அனைவரையும் நன்றியோடு நினைப்பில் வைத்திருக்கின்றேன். ஒருவரா இருவரா விரல் விட்டுச் சொல்ல..?

எல்லா நண்பர்களின் உற்சாகப்படுத்தலுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத்தேரிவிக்கிறேன்

இன்னும் கடக்கவேண்டியது நீண்ட தூரம் அல்லவா:-)
நன்றி

பத்திரிகையில் கண்டெடுத்துத்தந்த நிர்ஷனுக்கு நன்றிகள்

Read more...

இந்தியக் குடியரசு தின சிறப்புநிகழ்ச்சிகள் :(

காலை எட்டு மணிக்கு அந்த நடிகருக்கு வாழ்த்துக்கள்-பின்
நடிகர் " "உடன் குடியரசு தினத்தைக்கொண்டாடுங்கள்
அதன்பின் தான் நடித்த கதாபாத்திரங்கள் பற்றி
இன்னோர் நடிகர் பரபரப்புப்பேட்டி

காலை 9.30க்கு கமல் நடித்த பஞ்சதந்திரம்
மதியம் இளைய தளபதியின் யூத் திரைப்படம்
மாலை விஷாலின் தாமிரபரணி
காணத்தவறாதீர்கள் . . . .

குடியரசு தினத்தை குதூகலமாய் கொண்டாடுங்கள்
அழைப்பு விடுக்கின்றன இந்தியத்தொலைக்காட்சிகள்
கண்களுக்கு விளக்கெண்ணை விட்டுப்பார்த்தாயிற்று
இந்தியக்குடியரசு தினம் தொடர்பாக எந்தவோர் வரலாற்று நிகழ்ச்சியையும் காணோம்

பின் எதற்கிந்த விழாக்கள்
விழாவின் நாயகன் (இந்தியக்குடியரசு தினம் தொடர்பாக )
இல்லாத விழாக்கள் யாருக்காக ?

உற்சவமூர்த்திகள் இல்லாத உற்சவங்கள்
யாருக்காக ?

விஷாலும் விஜயும்
இன்னபிறரும் குடியரசு தினத்திற்குரியவர்கள் தானா ?

எந்தத்தொலைக்காட்சியாவது
இந்தியக்குடியரசு தினம் தொடர்பாக ஏதாவது நிகழ்ச்சி செய்ததாக சரித்திரமுண்டா ?
ஆனால் இந்தியக்குடியரசு தினம் தொடர்பாக
வியாபாரங்கள்
பட்டிமன்றங்கள்
இன்னும் பல . . .

இவை தேவை தானா ?
யோசியுங்கள்
ஏனெனில் நிஜத்தை விட்டு நாம் வெகுதூரம் வந்து விட்டோம்

ஆனாலும் நாம் கடக்கவேண்டிய தூரம் இன்னுமிருக்கல்லவா :)

Read more...

இலங்கைப்பத்திரிகையில் மலர்ந்தது "பலிபீடம்" வலைப்பூ

இலங்கை வலைப்பதிவர் வரலாற்றில் வலைப்பதிவுகள் பத்திரிகைகளில் வெளிவருவது முக்கியமானதொரு மைல்கல்லாகும் இவ்வாறான ஆக்கங்களை எழுதுவதன் மூலம் தாயகத்திலிருந்து மென்மேலும் வலைப்பூக்கள் , மேலும் பல பதிவர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் இன்று எனது வலைப்பூ தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்துள்ளது இந்த சந்தோஷத்தை அனைத்து இணைய நண்பர்கள் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்।

தினக்குரலுக்கும் தாசன் அண்ணாவுக்கும் நன்றிகள்

Read more...

ராமேஸ்வரம் [இலங்கையிலிருந்து பிந்திய விமர்சனம்]

PALIPEDAMராமேஸ்வரம் இலங்கை அகதிகளைப்பற்றி அவர்களது யதார்த்தத்தைச்சொல்லும் அருமையான கதைக்கருவுள்ள படம் ஆக்கபூர்வமான, இனிய படைப்பபாக வெளிவந்திருக்கின்றது . அத்துடன் ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெயரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். மற்றவர்களுக்கெல்லாம் (அக்கறை உள்ளவர்கள போல் காட்டிக்கொள்பவர்களுக்கெல்லாம் ) ஏதொ இலங்கையரைப்பற்றிய திரைப்படம் போல் தான் தெரியும் . தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அண்மையில் தான் இலங்கையில் வெளியானது அதுவும் வசதிகள் குறைந்த திரையரங்கு ஒன்றில் தான் வெளியானது . குப்பைப் படங்களை எல்லாம் ஓடியோடி வாங்கும் இலங்கை மற்றும் புலம் பெயர் சினிமா வர்த்தகர்கள் இதை ஏன் வாங்க மறுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
சரி சரி படத்துக்கு வருவோம் . . .

* இயக்கம் : செல்வம் , ஓர் அழகான கதையைச் சொல்லியிருக்கிறார் ஆரம்பத்தில் யாழ்பாணத்திற்கும் ஈழத்தமிழர்கள் பரவிக்கிடக்கும் கனடா பிரான்ஸ் அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கும் இடையே உள்ள தூரங்களை அளக்கும் அவர் , கடைசியில 'ராமேஸ்வரம் யாழ்பாணத்திலிருந்து 36 மைல்' என்று முடிக்கிறாரே ! அங்கேயே இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது
* இசை : தமிழ் ஈழத்தில் அளவெட்டியில் ( நான் பிறந்த ஊர் என்றால் சும்மாவா ) பிறந்து, ஈழத்திலிருந்து பிரான்சுக்கு அகதியாய் சென்று வாழ்ந்த இசையமைப்பாளர் நிரு தமிழக தமிழர்களின் இதயங்களில் மிக விரைவில் இடம்பிடிப்பார்.
* ஒளிப்பதிவு : குருதேவ் - வெற்றிக்கு சபாஷ் அழகாக படம் பிடிக்கப்பட்ட ராமேஸ்வரமும், கடல் மற்றும் கடல் சார்ந்த இடமும் அருமையாக கண்முன்னே விரிகிறது குறிப்பாக அதிலும் குறிப்பாக 'எல்லோரையும் கூட்டிப்போக கப்பல் வருமா' என்கிற பாடல் வரிகளுக்கு காட்சிகள் அழகோ அழகு
* நடிகர்களாக தமிழகத்தின் பிரபல நடிகர் ஜீவா மற்றும் பாவனா இருவரும் நடித்துள்ளனர். ஜீவா ஜீவன் என்ற பாத்திரத்திலும் பாவனா வசந்தி என்ற பாத்திரத்திலும் நடித்திருக்கிறார் பாவனாவின் அப்பாவாக நடித்திருப்பவர் (மலையாள நடிகர் லால்) மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போஸ்வெங்கட் படத்தில் பாவனாவின் முறைமாமன், ஒருதலையாக பாவனாவை காதலிப்பவர், பொலீஸ் அதிகாரியாக வருகிறார். அது மட்டுமல்லாமல் பல ஈழத் தமிழர்கள் அப்படத்தில் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் மணிவண்ணன் , இவர் 30 நிமிட காட்சிகளில் இருந்தாலும், ஈழ ஆசிரியர் ஒருவரை கண்ணுக் கொண்டு வந்து மறைந்து போகிறார். இவர் இழப்புக்களைப்பற்றி பேசும் வசனங்கள் முகத்தில் அறைந்தாற்போல் இருக்கின்றன

கதை பெரிதாக ஒன்றுமில்லை கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராமேஸ்வரத்தில் நடக்கிறது கதை இலங்கையிலிருந்து அகதியாக ராமேஸ்வரம் வரும் ஜீவன் மற்றும் ஏனையொர் மீது பரிவு காட்டுகிறார் ஊர் பெரிய மனிதர் . பெரிய மனிதரின் மகள் வசந்தி ஜீவன் மீது பரிவு காட்டுகிறார். அவளைத் தவிர்க்கும் ஜீவன், ஒருகட்டத்தில் மனம் மாறி நேசிக்கிறார் .இருவருக்குமான காதல் இறுகுகிறது. எதிர்பார்த்தது போன்றே அவர்கள் காதலுக்கு வசந்தி வீட்டில் வசந்தியின் முறைமாப்பிள்ளையும் காதலுக்கு எதிராக எதிர்ப்பு. காதலியைக் கைப்பிடிக்க வருவேன் என்று சொல்லிவிட்டு ஜீவன் தன் ஊர் மக்களுடன் தாயகம் செல்கிறார்.திரும்பி வந்து காதலியைக் கைப்பிடித்தாரா என்பதுதான் கதை.

இத்திரைப்படத்தில் கவனிக்கப்படவேண்டியவை
* இங்கே கதையைவிட இலங்கைத்தமிழர் விடையத்தைக்கையாண்ட விதம் தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்று ஈழத்தமிழரைக் கொச்சைப்படுத்தாத படமாக இருப்பது மிகவும் கவர்ந்துள்ளது புலம் பெயர் தமிழர்கள் சிறுவயதில் அகதிவாழ்க்கை வாழ்ந்ததை அப்படியே மனதில் திரும்பவும் புரட்டிப்போட்டிருக்கும்
* வழமையாக திரைப்படங்களில் கதாபத்திரம் ஈழத்தவராக இருந்தாPALIPEDAMல் அவர் பேசும் மொழி என்று ஈழத்து பெருமாலும் யாழ்ப்பாண மொழியைப் பேசுவதாக நினைத்து கொலை செய்வார்கள். தென்னாலி படத்தில் கமலாகாசன் கொலை செய்கிறார். (தெனாலியை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது) ஆனால் இப்படத்தில் நாயகன் 90 வீதமாகவேனும் ஒழுங்கான இலங்கைத்தமிழில் நடிக்கிறார்கள் . இதற்கு பாராட்டவேண்டும். பேசிக் கொலை செய்வதை விட பேசாமல் இருக்கலாம். நடிகர் மணிவண்ணன் ஒரளவு ஈழத்து மொழியில் பேச முயற்சித்து இருக்கிறார். கமலை விட நன்றாகப் பேசியிருக்கிறார். படத்தில் சில பாத்திரங்கள் யாழ்ப்பாண மொழியில் நன்றாகப் பேசி இருக்கிறார்கள்.


நெஞ்சைத் தொடும் வசனங்கள் ! அதே சமயம் எளிமையாகவும்...! உதாரணத்திற்கு சில

* ஊர் பெரியவர் சொல்லும் "உங்க ஊரையும் எங்க ஊரையும் கடல் பிரிச்சிருக்கலாம். ஆனா கீழே பூமி ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு" என்ற வசனம்
* அகதிகள் முகாம், என்பதை ஜீவா 'புலம்பெயர்ந்தோர் முகாம்' என்று மாற்றுவதும், அதைத் தொடர்ந்து 'பெயரை மாற்றினால் எலலாம் மாறிவிடுமா ?' என்று ஈழப்பெண் கேட்கும் போது, 'எல்லாமும் மாறனும், முதலில் இதை மாற்றுகிறேன், எனது பங்களிப்பு என்று இதுவாக இருக்கட்டும்' என்ற வசனம்
* ஊர் பெரியவர் நிவாரணப்பொருட்களைக்கொண்டு வரும்போது "முகம் தெரியாத ஆட்கள் கொடுப்பதை வாங்கும்போது பிச்சைனு எடுக்கும் உணர்வு வந்துவிடும் " என்று ஜீவா கூறுவதும்
* இவ்வளவு பெரிய தழும்பா? என்று கேட்கும் அதிகாரியிடம், இதுதான் எங்க ஊர்ல சின்ன தழும்பு என்று அலட்சியம் காட்டி மணிவண்ணன் கூறுவதும்
* அகதித் தமிழன் ஒருவர் செயற்கைக் காலுடன் இருப்பார் . அது தெரியாத போலீஸ்காரன் அவரை உதைப்பார். செயற்கைக் கால் பறந்து போகும் உடனே அருகிலிருக்கும் பெரியவர் கீழே விழுந்தவரிடம் மன்னிப்புக்கேட்கு முன் அவர்(அகதித் தமிழன்) பேசும் வசனத்தையும் உணர்ச்சியையும் இதுவரை எந்த ஈழத்துப் படமும் இவ்வளவு தத்ரூபமாகப் பேசிவிடல்லை.
இப்படியான இடங்களில் இயக்குனருக்கும் வசனகர்த்தாவிற்கும் வாழ்த்துச்சொல்லலாம் !

சரி இனி பாடல்களுக்கு வருவோம் ஈழத்தமிழ் உறவுகளின் உணர்வுகளை, வலிகளை நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி அனைவரும் எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள். அவர்களை என்றுமே பாராட்டலாம்.

1]
நேற்றிருந்தோம் எங்கள் வீட்டினிலே

நிலவெறியும் எங்கள் காட்டினிலே
யார் தந்த சாபம் இது?
யார் செய்த பாவம் இது?

கண்ணீர்த் துளியும் வலியும் சேர்ந்த கூடாய்க் கிடக்கின்றோம்.
உயிரை அங்கே வைத்தோம்
அதனால் உயிரைச் சுமக்கின்றோம்
எத்தனை உறவுகள் தொலைத்தோம்
எதற்கு நாங்கள் பிழைத்தோம்!
என்று தொடர்கிறது

2] எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா..?
கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா..?
அட தூரம் கண்ணில் வருமா ஈரம் கண்ணில் வருமா?
யாரும் இல்லா ஊருக்குள்ள தெய்வம் தேரில் வருமா?

எங்கள் பூமி தீயின் வசமே
எம்மைச் சுற்றி அலைகள் எழுமே
உண்மைத் தோளில் மாலை விழுமே
நம்பிக்கை நாளை உரமாகும்!

நல்லூர்க் கோயிலில் நாதஸ்வரம்
ஊதிடும் நாள் வருமா?
கும்பிடு சந்தையில் புகையிலை
வாங்கிட நாள் வருமா?
கல கலனென்னு பாடசாலைக்குள்ள
படிக்கிற நாள் வருமா?

என்று முதலில் சிறுமியின் குரல் ஒலிக்க கண்களில் நீர் வழிகிறது. இந்தப்பாடலைக்கேட்கும்போது பழைய அகதி வாழ்க்கைகள் நினைவுக்கு வரகின்றன . 1995 இல் இதே போன்று நான் கூட அகதியாய் சாவகச்சேரியில் வாழ்ந்தவன். அங்கே வானமே கூரையாக சிறுவயதில் பட்ட கஸ்டங்கள், வேதனைகள் இப்பவும் நெஞ்சில் பதிந்து இருக்கின்றது ( பாடியோர் மாணிக்கவிநாயகம், கரிச்சரன், சிரேயா, ரேஷ்மி)

3] அலைகளின் ஓசைகள் தானடடி
அகதியின் தாய்மொழ ஆனதே
எனக்கென யாரோ..?
என்னை நான் தினம் கேட்கிறேன்

அலைகளின் ஓசைகள் தானடா
அகதியாய் ஏங்குவனேடா..
உனக்கென நானே ஒற்றைப்
பெண் என வாழ்கிறேன்

தன்னைத் தொலைத்தவன் நானே
மண்ணைப் பெறும்வரை காத்திருப்பேன்
உன்னைத் தொலைத்து விட்டாலே
இங்கோர் அகதியாய் நானிருப்பேன்! என்று தொடர்கிறது

(பாடியோர் கரிச்சரனும் கல்யாணியும் )

போர் நடந்தாலும் உங்கள் ஊரில் யாரும் காதலிக்கவில்லையா ? , குழந்தை பிறக்கவில்லையா?, வாழ்க்கை தொடரவில்லையா? என்னும் கேள்விகளின் பின் மலரும் காதல் பாடலாக இது வருகிறது

மொத்தத்தில் :(
* அகதிகளின் வாழ்க்கை பின்னணியில் சொல்லப்பட்டதாலோ என்னவோ, காதல் கதை என்றாலும் படம் முழுக்க ஒரு சோகம் இழையோடுவதாக உணர்வதை தவிர்க்க முடியவில்லை.இருப்பினும் காதல் கதைக்கு இலங்கை அகதிகளின் வாழக்கை சோகங்களை வெளிப்படுத்த முயற்சித்த இயக்குனரை பாராட்டலாம் !
* இந்திய சென்சார் போட் அனுமதித்திருக்கும் அளவு மேலும் சிறப்பாக ஈழத்து கதைகளை சொல்ல முடியும் என்பதை இந்தப்படம் உணர்த்துகிறது. இந்தப்படத்தால் இந்திய சென்சாருக்குள் ஈழத்து கதைகளை சொல்ல முடியாது என்று பொய்க்கருத்துக்களை பரப்பிவந்த பெரிய இயக்குனர்களின் கருத்து உடைபட்டுப் போயிருக்கிறது
* ஈழத்தமிழர்களின் 'நலன்' என்று வாய்கிழிய பேசும் நடிகர்கள், அரசியல்வாதிகள், போல் இன்றி ஜீவா மற்றும் பாவானா மணிவண்ணன் ஆகியோர் இந்தப்படத்தில் நடித்தது உண்மையிலேயே சிறப்பான விடயம் .

புலம் பெயர் தமிழர் அப்படத்திற்கு பொருளாதார ரீதியாக எந்தவொரு வெற்றியையும் வழங்கவில்லை என்ற வருத்தம் தயாரிப்பாளர் தரப்பில் இருக்கிறது. எனவே புலம்பெயர் நண்பர்களே படத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைப்பார்ப்பதற்காகவேனும் உங்கள் குடும்பத்தினருடன் திரையரங்குக்கு சென்று பாருங்கள்


நண்பர்களே !
ஈழத்தவர் குறித்து பேசும் திரைப்படத்துக்கு ஆதரவழிப்பதால் இது போன்ற பல படங்கள் உருவாகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால். இது போன்ற முயற்சிகள் தொடரும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

PALIPEDAM

மொத்தத்தில் இராமோஸ்வரம் படமல்ல ... உணர்வால் கலந்து ஒன்றிணைந்த தமிழர்களின் பல உணர்வுகளை மீட்டும் ஒரு காவியம் அத்துடன் இராமேஸ்வரம் இலங்கை அகதிகள் குறித்து இதுவரை வெளிவந்த எல்லாப் படங்களையும் விட சிறந்தவொரு படைப்பு என்பதில் ஐயமில்லை

இணையங்களினூடு பெற்ற தகவல்களுடன் ஆக்கத்தை எழுதி உங்களிடமிருந்த விடைபெறுகிறேன்
என்றென்றும் நட்புடன்
மாயா

இது ராமேஸ்வரம் பற்றி கதைக்கும் ஓர் வீடியோ காட்சி



Read more...

காரைநகரீந்த மைந்தன் தி.மகேஸ்வரனுக்கு அஞ்சலிகள்

காரை நகரீந்த கலங்கரை விளக்கே
நல்லார் மனதில் கைத்தல நித்திலமே
ஆரைமேற் பூசாய் ஆரோகணித்த அரசியல் வாதியே
எல்லாப்புகழுக்கும் ஏற்றவா எங்குற்றாய்

இந்தாண்டு பாராளமன்றத்தில் நீசெய் இடியுரை
எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுப்பாய் செய்தமை
மின்னல் கீற்றாய் மாற்றாரை முட்டியடித்ததோ காண்
சொல்லாமல் கொள்ளாமல் டக்கெனச் சென்றாயோ

உள்ளமது திறந்து பேசி ஊரோடுறவாடி
கள்ளமில்லா அன்பால் கனிவாக சுகம் கேட்பீரையா
எள்ளவும் எண்ணவில்லை உன்சரண நாளிதனை
மெள்ளவுனை அழைத்தானோ பொன்னம்பலவாணேசன்

இந்து மதத்தின் இணையில்லாக்காவலனே
நந்தம் தமிழினத்தின் துயர் களைந்த நேயனே
சந்ததம் சிவத்தமிழை சிந்திக்கும் சாகரனே
உந்தனைப்போலினியெவர்ரெமக்கு உதவுவார்

அறநெறி வாழவைத்தாய் அன்பு நெறி ஓங்க வைத்தாய்
திறநெறி சூழவைத்தாய் தெர் புதிதாய் ஓடவிட்டாய்
மறநெறி மாள வைத்தாய் மன் நெறியை ஏந்த வைத்தாய்
குறள் நெறியைக்கைக்கோண்டாய் குற்றமென்ன செய்தாய் சூடுற

ஈழத்து சிதம்பரனை இறுதிநாள்வரை நினைத்து

மாழாக்க மில்லா மண்ணக வாழ்வு வாழ்ந்த மகேஸ்வரா
வையத்துள் உன்வாழ்வு வரலாறாய் ஆனதால்
தெய்வத்துள் நீயிருப்பாய் தினம் தினமுன் பேரிருக்கும்


ஆக்கம்
சிவயோகச்செல்வர்
சாம்பசிவம் சிவாச்சாரியார்

Read more...

அப்துல் கலாம் அவர்களுடைய பேட்டி கண்ணொளியாக வலைப்பூக்களில் தரவேற்றியுள்ளீர்களா ?

அஜித்தின் மனம் திறந்தபேட்டி விஜயின் மனம் திறந்த பேட்டி என வலைப்பூக்களில் தரவேற்றி வைத்திருக்கும் யாராவது புத்தாண்டு அன்று காலை SUN TV யில் ஒளிபரப்பான அப்துல் கலாம் அவர்களுடைய பேட்டியை கண்ணொளியாக வலைப்பூக்களில் தரவேற்றியுள்ளீர்களா ?[அல்லது எங்கேயாவது கண்டுள்ளீர்களா]
அவ்வாறு எங்கேனும் கண்டால் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP