மனிதன் எவ்வாறு உருவானான் ?இது விஞ்ஞானத்தின் கேள்வி (ஒருவேளை கடவுள் தான் ஆரம்பகர்த்தாவா ?)

சுமார் பல மில்லியன் ஆண்டுகளின் [ 35 கோடி வருடங்களின் முன்தோன்றியதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர் ] முன் தோன்றிய ஒருகல அங்கியிலிருந்து [Unicellular ]வந்த கூர்ப்பின் பரிணாம வளர்ச்சியினால் அவையேபடிப்படியாக பலகலங்களாக மாறி பல்வேறு மிருகங்களாகி பின் மனிதர்களாக மாறின. இது விஞ்ஞான ரீதியான முடிவு அது பற்றிய சிறியதொரு கற்பனைச்சித்திரம் கண்ணொளியாக உங்களுக்காக. [இந்தக்கண்ணொளியில் காட்டப்படுபவை யாவும் உண்மையானவை இல்லை கற்பனை]

சரி இப்போ விடையத்திற்கு வருவோம் கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே உங்களிடம் விஞ்ஞான ரீதியாக ஓர் கேள்வி
* மனிதன் எவ்வாறு தோன்றினான் ?
குரங்கிலிருந்து
* குரங்கு எவ்வாறு தோன்றியது ?
கடலிலிருந்து வந்த ஈருடகஅங்கிகளின் கூர்ப்பின் மூலம்
* சரி ஈரூடக அங்கிகள் ?
நீர் வாழ் அங்கிகளின் கூர்ப்பிலிருந்து
* நீர் வாழ்அங்கிகள் ?
பலகோடி ஆண்டுகளின் முன்தோன்றிய ஒருகல அங்கிகளின் மூலம் . . .

* சரி அந்த ஒருகல அங்கிகள் எங்கிருந்து வந்தன ?

யாருக்காவது பதில் தெரியுமா (விஞ்ஞான ரீதியாக ) தெரிந்தால் தர்க்கம் புரியாமல் சொல்லுங்கள் பார்க்கலாம்

15 பின்னூட்டம்(கள்):

Anonymous,   

ஓரளவுக்கு தெரிந்ததை விளக்க முயற்ச்சிக்கிறேன்.

பூமியிலுள்ள கருப்பொருட்களின் தோற்றம் பற்றி அணுக்கரு வினைகள் மூலம் புரிந்து கொள்ளலாம். துவக்கத்தில் பூமியின் வளி நாம் இப்போது காண்பதிலிருந்து மிகவும் வேறுபட்டது. அதீத அழுத்தமும் வெப்பமும் கொண்டது. அப்படிப்பட்ட அதீத அழுத்தமும் வெப்பநிலையுமுள்ள சூழலில், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் போன்ற அணுக்களின் வேதிவினையில் தோன்றிய மூலக்கூறுகளே உயிரின் அடிப்படைத் தோற்றத்திற்கான மூலம். மேற்சொன்ன அணுக்களின் மூலம் தோன்றும் மூலக்கூறுகள் ஆய்வுக்கூடங்களிலேயே அவ்வகை சூழலை உருவாக்கி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.

மேலும், 4100 மீட்டர் ஆழத்தில், பூமியின் மையக்கருவாக இருக்கும் குழம்பு நிலை மாக்மா, கடல் நீருடன் தொடர்பு கொள்ளும் பகுதிகளில் உயிர் தோற்றத்திற்கான மேற்குறிப்பிட்ட சூழல் இருப்பதாகவும் சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. அதற்கான சுட்டி இதோ.
http://www.sciencemag.org/cgi/content/summary/316/5827/961d

மாயா  

// கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் போன்ற அணுக்களின் வேதிவினையில் தோன்றிய மூலக்கூறுகளே உயிரின் அடிப்படைத் தோற்றத்திற்கான மூலம். மேற்சொன்ன அணுக்களின் மூலம் தோன்றும் மூலக்கூறுகள் ஆய்வுக்கூடங்களிலேயே அவ்வகை சூழலை உருவாக்கி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று.
// இதுவும் ஒருவகையில் சரியானதே அதேவேளை இங்கு தாக்கங்கள் நடைபெறும் போது முக்கிய தாக்கத்துணையாக மின்னல் தொழிற்றட்டிருக்கறது !

மு. மயூரன்  

இப்படி கேள்வி எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது. அது கடவுளுக்கு பிடிக்காது. உங்களை நரகத்துக்குத்தான் அனுப்புவார்.
பேசாமல் போய் குர் ஆன், பைபிள், மனுதர்மசாத்திரம் ஏதாவது வாங்கி வந்து, கண்ணில் ஒற்றிக்கொண்டு படியுங்கள். அதில் மட்டும்தான் இந்தக்கேள்விக்கெல்லாம் சரியான பதில்கள் இருக்கும்.

இவளவெல்லாம் எழுதிறீங்களே, கடவுள்தான் இந்த உலகத்தைப்படைத்தார் என்பதுகூட தெரியாமல் இப்படி குழந்தைப்பிள்ளைத்தனமாக பினாத்துகிறீர்களே, ஏன்?

;-)

மாயா  

// இவளவெல்லாம் எழுதிறீங்களே, கடவுள்தான் இந்த உலகத்தைப்படைத்தார் என்பதுகூட தெரியாமல் இப்படி குழந்தைப்பிள்ளைத்தனமாக பினாத்துகிறீர்களே, ஏன்?
;-)
//

அப்ப கடவுளே இல்லை என்று சொல்பவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள் ?

Anonymous,   

மயூரன் வீடியோ படம் சூப்பராயிருக்கு. சிரிப்புத் தாங்கல...

Anonymous,   

பரிமானம் என்பது
விலங்குகள், பின் பறவைகள், பின்பு ஊர்வன, அதன் பின் மனிதன். இப்படித் தான் இருக்க முடியும். பல ஞானிகளும் இதனைக் கூறியிருக்கிறார்கள். உதாரணமாக மாணிக்க வாசகர் -
“பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி, --- மனிதராய் பேயாய் கனங்களாய்..” இப்படிப் போகிறது திருவாசகம்.

மு. மயூரன்  

//அப்ப கடவுளே இல்லை என்று சொல்பவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள் ?//

என்னுடைய பின்னூட்டத்தின் அர்த்தம் வேறு மாயா.

சரி, நேரடியான வார்த்தைகளிலேயே சொல்கிறேனே.

கடவுள்தான் உலகத்தைப்படைத்தார் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்களை நக்கலடிக்கவே இப்படி எழுதினேன்.

பலர் கடவுள்தான் உலகத்தைப்படைத்தார், கடவுள் இருக்கிறார்/இருந்தார், கடவுள் முன்பு மனிதனோடு பேசினார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதுதான் வேடிக்கையானது.

மாயா  

// பரிமானம் என்பது
விலங்குகள், பின் பறவைகள், பின்பு ஊர்வன, அதன் பின் மனிதன். இப்படித் தான் இருக்க முடியும். பல ஞானிகளும் இதனைக் கூறியிருக்கிறார்கள். //

இதில் சற்று மாற்றம் வரும் அனானியாரே ! முதலில் கடல் வாழ்அங்கிகள் பின் ஊர்வன அதன் பின் நடந்த கூர்ப்பினதல் தான் மற்றயவை எல்லாம் வந்திருக்கும்

மாயா  

Oh ! Sorry Mayuran
நான் தான் பிழையாய் எடுத்துக்கொண்டுவிட்டேன் :(

ஆனாலும் அந்த ஒருகல அங்கிகள் எங்கிருந்து வந்தன என்பதை சற்று விரிவாக கூறமுடியுமா ?[முதலாவது அனானியின் பின்னூட்டத்தில் போதிய விளக்கம்இல்லை]

கொழுவி  

சரி.. அந்த ஒரு கல அங்கிகள் கடவுள் படைத்து வந்தன.

எனது அடுத்த கேள்வி இதுதான்

கடவுள் எங்கிருந்து வந்தார்.. ????

மாயா என்ன சொல்கிறீர்கள் ?

மாயா  

பாத்தீங்களே
வீம்புக்கு கதைக்கிறியள் இததான் முதலே பதிவில வடிவாப்போட்டுவிட்டன் " யாருக்காவது பதில் (விஞ்ஞான ரீதியாக ) தெரிந்தால் தர்க்கம் புரியாமல் சொல்லுங்கள் " என்று அதைவிட்டுவிட்டு மாதிரி குளறுபடி பண்ணாமல் விடைதெரிந்தால் சொல்லுங்கோவன்

கையேடு  

வணக்கம் திரு. மாயா..

http://kaiyedu.blogspot.com/2008/02/ii.html

இங்கே கொஞ்சம் விளக்கியிருக்கிறேன்.. மேலதிகமாக உரையடலாம்..
முதல் அனானி நான் தான். அலுவலகத்திலிருந்த அவசரப்பணியினால் உடனடியாக அனானியைப் பயன்படுத்திக்கொண்டேன். அடையாளப்படுத்திக்கொள்வதில் வேறு பிரச்சனைகள் இல்லை.

மாயா  

கையேடு
அருமையன தொடர் நன்றி

Unknown  

//சரி.. அந்த ஒரு கல அங்கிகள் கடவுள் படைத்து வந்தன.

எனது அடுத்த கேள்வி இதுதான்

கடவுள் எங்கிருந்து வந்தார்.. ????//
எனக்கிருக்கும் சந்தேகமும் இது தான்...

(இந்துக்கள் பிரம்மா படைத்தார் என்பார்கள். பிரம்மா சிவபெருமானிடமிருந்து வந்தார்.. சிவபெருமான் எங்கிருந்த வந்தார்???)

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP