சிவாஜி


நீண்ட நாட்களாக மற்றவர்கள் காத்திருந்தது போலவே, பலத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு சிவாஜி படம் நன்றாக தானிருக்கிறது; நன்றாக ஓடுகிறது; ஓட வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட - ஏ.வி.எம். நிறுவனத்திற்காகவாவது. எனது வருத்தமெல்லாம்,

வழமையான ரஜனி படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் காட்சிகள் வரும் இம்முறை அவை இல்லை.(தமிழ்ப் பெண் வேண்டுமென்றால் யாழ்ப்பாணம்தான் செல்ல வேண்டும் என்று சுஜாதா ஒரு வரியில் மிகப் பெரிய அங்கீகாரம் அளித்திருப்பதை பலர் க‌வதானித்தார்களோ தெரியவில்லை.)

சங்கரின் சிவாஜி எல்லோருக்கும் தெரிந்த கறுப்புப் பணம் பற்றிய ஒரு வரிக் கதைதான் சங்கர் வழமைபோல் தன் பாணியில் அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் கொடுத்துள்ளார். இதனைப் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை.

சிவாஜி படத்தினை பற்றி:1.
விவேக் மிக நன்றாக செய்திருக்கிறார்; அந்நியன் போலவே. வசனங்கள் அவர் எழுதியதா அல்லது சுஜாதா எழுதியா என்று தெரியவில்லை.நன்று.

.'தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கருப்பை பத்தி மட்டும் பேச கூடாது''பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலையே.... டிக்காஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு...'2. ரஜினியின் நகைச்சுவை காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது.'என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!''Mr. தொண்டை சொன்னா தான் வருவேன்'சிவாஜி மாதிரி, வசந்த மாளிகை பாடலில் முயற்சித்திருப்பது.'இப்ப எப்படி கமலஹாசன் மாதிரி வர்றேன் பாரு'...இது போன்ற மெல்லிய நகைச்சுவைகள்...இப்படத்தில் ரஜினி பேசும், 'பன்னிங்க தாண்டா கூட்டமா வரும்... சிங்கம் எப்பவும் தனியாக தான் வரும்', என்ற வசனம் ஏற்கனவே 'கிரி' படத்தில் அர்ஜூன் பேசியது.'நான் காசு தர்றேன் படிக்கிறியா', என்ற வசனமும், காட்சியும் அப்படியே

3. பட்டிமன்ற நகைச்சுவையாளர் ராஜாவிற்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை.

4. தொண்டைமானாக வரும் பாப்பையா, ராஜாவிற்கு எவ்வளவோ பரவாயில்லை... 'அது தான்யா பண்பாடு...', அழகு!

5. ஸ்ரியா.... இவர் படத்தில் பேசுவதே சில வசனங்கள் தான். அதையும் ஒழுங்காக சொல்லித்தரவில்லையா? வாயசைப்பது ஒரு மாதிரியும் வசனம வேறொரு மாதிரியும் இருக்கிறது. பாடல்களில் இன்னும் மோசம். நடனம் நன்றாக ஆடுகிறார்.

6. கடைசி காட்சியில் கத்தை கத்தையாக பறந்து வரும் பணத்தை பிடிக்க வரும் மாணவன், 'இன்னும் ஆயிரம், இரண்டாயிரம் தான்', என்று ஏன் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான்? கீழே கோடி கோடியாக இறைந்து கிடக்கிறது; எதற்காக பறக்கும் பணத்தை பிடிக்க முயற்சி செய்கிறான்? வில்லனின் கழுத்தை மிதிக்க வைப்பதற்காகவா? என்ன சங்கர்?7. ஏ.ஆர்.ரகுமான் அடக்கி வாசித்திருக்கிறார். அல்லது வாசிக்க மறந்து விட்டாரா?

8. சண்டை காட்சிகள் மிகவும் சுமாராக இருக்கிறது. கிளைமேக்ஸை தவிர்த்துப் பார்த்தால். பின்னி மில்லில் ரஜினி ரவுடிகளை அடிப்பதும், பின்பு அவர்கள் ரஜினியுடன் இணைவது ஒட்டவே இல்லை.

Read more...

திரு. 'ஹாய்' மதன்

கேள்வி. '
வந்தார்கள்... வென்றார்கள்' என்ற தலைப்பில், மயிலாசனப் பேரரசர்கள் பற்றிச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தாங்கள், சோழப் பேரரசு பற்றியும் அதுபோன்ற ஆதாரபூர்வ நூல் ஒன்றை எழுதினால், பெரும் பங்களிப்பாக இருக்குமே?!

பதில்
கி.மு.44ல் கொல்லப்பட்ட ஜூலியஸ் சீசர், தன் படையெடுப்புகளை நுணுக்கமாக விவரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் (ஏழு வால்யூம்கள்).

ரோம், கிரேக்க வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அற்புதமான புத்தகம் (3 வால்யூம்கள்) எழுதியிருக்கிறார் ப்ளூடார்க். பாபர், 'பாபர்நாமா' என்னும் தன் வாழ்க்கை வரலாற்றில், இந்திய வெயில், மாம்பழங்கள் பற்றி யெல்லாம்கூட விவரித்திருக்கிறார்.
ஜஹாங்கீர் தினமும் என்னென்ன டிபன் சாப்பிட்டார் என்பது பற்றிய குறிப்புகள்கூட உண்டு!

ஆனால்... தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும், கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை. புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும், பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு... உணர்ச்சிவசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள். 'வெற்றி பெற நாடுகள் இல்லாமல், தோள்கள் தினவெடுக்க, வாளை உருவியவாறு கரிகாலன் இமயமலை வரை ஆட்கொள்ளக் கிளம்ப... இமயம், கடவுள்கள் வசிக்கும் மலை என்பதால், அதைக் கரிகாலனால் தாண்ட முடியவில்லை. எனவே, இமயமலை மீது மிகப் பெரிய புலிச் சின்னத்தைச் செதுக்கிவிட்டுத் திரும்பினார் அந்த மாவீரன்!' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல் மிகையாகப் புகழ்கிறது! உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை! தெருவில் நின்ற கரிகாலனுக்குப் பட்டத்து யானை மாலை அணிவித்து முடி சூட்டியதும், சிறையிலிருந்து தப்பித்தபோது கரிகாலனின் கால்கள் தீயால் பொசுங்கிக் 'கரிகாலன்' என்று பெயர் வந்ததும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாத வெறும் கற்பனையே! இதற்கெல்லாம் காரணம்... தமிழ்நாட்டில் முதலில் கவிதைகள்தான் தோன்றின! உரைநடை (Prose) எழுதப்பட்டது பிற்பாடுதான்! நிலைமை இப்படியிருக்க,

எந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு நாம் நம் வரலாற்றை எழுத முடியும்? கற்பனை கலந்த நாவல் (பொன்னியின் செல்வன் மாதிரி) வேண்டுமானால் எழுதலாம்!

Read more...

ஜீவா


தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, தனிக்கவனம் பெற்று வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அவர்கள், தனது 'தாம்தூம்' படப் பிடிப்பின் முடிவில் ருஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வந்துள்ளது.


12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, ரன் (ஹிந்தி வடிவம்), என்று இன்றைய இளைஞரின் நாடித்துடிப்பைத் தன் படங்களில் கொண்டுவந்தவர்.தவறவிடப்பட்ட பஸ் போன்று வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களை இரு கோணங்களில் 12B படத்தில் காட்டியிருப்பார்.

ஒரு பணக்காரத்தனமான கல்லூரி வாழ்க்கையையும், நண்பர் குழாமைச் சுற்றிய நிகழ்வுகளையும் "உள்ளம் கேட்குமே" படத்தில் காட்டியிருந்தாலும், அந்த இளைஞர்களின் ஏக்கங்கள், குணாதிசியங்கள் எல்லாத்தரப்பு இளைஞருக்கும் பொருந்தக்கூடியவை.காதல் என்பது ஒரு முறை தான் பூக்க வேண்டுமா? காதலித்த குற்றத்திற்காக சதா ஊடலே வாழ்க்கையா? ஊடல் என்பது ஊறுகாய் போல இருக்கவேண்டும், அதுவே சாப்பாடாகிவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக வந்தது இவரின் சமீபத்தியதும் இறுதியானதுமான "உன்னாலே உன்னாலே" திரைப்படம்.கவிஞரும், இசையமைப்பாளரும் கஷ்டப்பட்டுக் கோர்க்கும் பாடலைக் கண் முன் கவியழகாகத் தரும் ஒளிஓவியர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் இனிய பாடல்களோடு, அப்பாடல் காட்சிகளாகப் போட்டி போடும் ஜீவாவின் ஒளிப்பதிவு நல்ல உதாரணம்.

தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞனை இன்று இழந்திருக்கின்றது.

ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Read more...

சில அபத்தங்கள்.

பத்துவருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அது திடீரென்று ஆன்மீகவாதியாக அரசியல் தீர்மானிப்பாளராக என்று பலவிதத் தோற்றங்களுக்கு மாறிவிட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள்தான் ரஜினி படம் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி எல்லோருமே ரஜினி படத்தைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஒரு 'நிர்ப்பந்தம்' எப்படியோ உருவாகிவிட்டது. ஒருவேளை ரஜினியின் படம் 'எப்போதோ ஒருமுறை' வெளியாகாமல் மூன்றுமாதத்திற்கு ஒருமுறை வெளியானால் அதை யாரும் சீந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகளும் எனக்கும் பிடித்தமான ஒன்று. சமயங்களில் கமலின் படங்களில் உறுத்தும் நடுத்தரவர்க்கத்து புத்திசாலித்தனப் பாவனையும் போலி முற்போக்கும் எரிச்சலூட்டுபவை.

இதனாலேயே ரஜினியை ரசிக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.ஆனால் ரஜினி தத்துவஞானி ரேஞ்சிற்குப் பெண்களைப் பற்றி உதிர்க்கும் கருத்துக்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இதோடு ஷங்கர் என்கிற விஷக்கிருமியும் சேர்ந்துவிட்டதால் எப்படியும் படம் மோசமாகத்தானிருக்கும் என்ற அரசியல் ரீதியான முன் தீர்மானத்தோடு சிவாஜி படத்திற்குச் சென்றால்..? ஏதோ தெலுங்குப் படத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. 'சிவாஜி - த லூஸூ' குழந்தைகள் பார்க்கவேண்டிய அனிமேஷன் படம்.

இனிச் சில அபத்தங்கள்.
* அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை அமெரிக்கவாழ்நண்பர்கள்தான் சொல்லவேண்டும். அப்படியே 200 கோடி சம்பாதித்தாலும் அத்தனையயும் இலவசச் சேவைக்கு ஒருவன் வழங்கமுடியுமா என்ன? திட்டமிட்டு ஆதி(சுமன்) சிவாஜியை நடுத்தெருவிற்குக் கொண்டுவருகிறார் என்கிறது கதை. ஆனால் சுமன் அப்படியே விட்டுவிட்டால் கூட சிவாஜி இருக்கிற பணத்தையெல்லாம் இலவசச்சேவை செய்துவிட்டு நடுத்தெருவிற்குத்தான் வந்திருப்பார்.

* இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் ஊடுருவியிருக்கிறது. ஆனால் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மட்டும் நேர்மையான அதிகாரிகளே வேலைசெய்கின்றனர். ரஜினி தகவல்; கொடுத்தவுடனே கருப்புப்பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்துச்சென்று விடுகின்றனர். புல்லரிக்கிறது. அதேபோல அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய பணத்தை தன் அறக்கட்டளைக்கு அனுப்பச்சொன்னதும் அனைவரும் ஒரு பைசா கூட 'ஆட்டை' போடாமல் அனுப்பி வைக்கின்றனர். ஏ.வி.எம் செலவழித்த நூற்றுக்கணக்க்கான கோடிகளில் கால்வாசி சாக்கு வாங்குவதற்கே செலவாகியிருக்கும்.

*தமிழ்ப்பண்பாடுப்படி பெண் வேண்டும் என்கிறார் ரஜினி. உடனே தமிழ்ப்பண்பாட்டின்படி நயன் தாரா மாராப்பைக் கழற்றியெறிந்துவிட்டு 'பல்லேலக்கா'என்று ஆட்டம்போடுகிறார். ஸ்ரேயாவும் பாடல்காட்சிகளிலும் ரயிலை நிறுத்தும் காட்சிகளிலும் (இந்த ரயில்நிறுத்தும் காட்சி அனேகமாக 327வது தமிழ்ப்படத்தில் இடம்பெறுகிறது)'மேற்படிப் பாணியில் ' தமிழ்ப்பண்பாட்டைக்' காப்பாற்றுகிறார்.

*சாலமன்பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்லவேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். கடைசியில்தான் தெரிகிறது, தமிழ் இலக்கியம், கலாச்சாரம் எல்லாம்பேசித் தன் இரண்டு பெண்களையும் கூட்டிகொடுக்க அலைகிறார். பாப்பையா மட்டுமில்லை, ரஜினியும் தன் புரொஜொக்ட் நிறைவேற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட்டிக்கொடுக்கிறார். இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.

* அந்த ஜோசியக்காரன் போன்ற கொடூரமான வில்லனை எந்தப் படத்திலும் பார்த்ததேயில்லை. ரஜினி ஸ்ரேயா ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'திருமணம் நடந்தால் ரஜினி உயிருக்கு ஆபத்து' என்கிறார். அத்தோடுவிட்டாரா? திருமணத்திற்கும் வந்து 'சீக்கிரம் தாலியறுப்பாய்" என்று ஸ்ரேயாவை 'வாழ்த்துகிறார்'. பொருத்தம் பார்க்கும் ஜோசியக்காரனைத் திருமணத்திற்கு அழைக்கும் முதல் வீட்டுக்காரர்கள் இவர்களாகத்தானிருக்கும்.
* ரஜினி ஒரு 15 அடியாள்களை வைத்து தமிழ்நாட்டிலிருக்கும் தொழிலதிபர்களிலிருந்து அதிகாரிகள், அமைச்சர் வரை மிரட்டுகிறார். பாவம் அவர்கள் அனைவரும் அடியாட்கள் வைத்துக்கொள்ளாத, வன்முறையில் நம்பிக்கையில்லாத காந்தியவாதிகள்.*ரகுவரன் என்னும் திறமையான கலைஞரை இந்தப் படம்போல எந்தப் படத்திலும் வீணடித்ததில்லை.

* ரஜினியின் சண்டைக்காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.* படத்தில் விவேக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஏற்படுத்துகிறார் என்றாலும் மேலே சொன்னபடி பெரும்பான்மையான காட்சிகள் காமெடியாகத்தானிருக்கின்றன. அதில் உட்சபட்சம் கருப்புப்பணமெல்லாம் ஒழிந்து ரேஷன்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா, அடப்பாவிகளா, ராணிகாமிக்ஸ், முத்துகாமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை!* ஆனாலும் படத்தில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமாக ஷங்கர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டவிரோதமாக 'சமூகச்சேவை' செய்யும் கதாநாயகன் 'மாட்டிக்' கொண்டவுடன் மக்கள் அவனை விடுதலை செய்யச் சொல்லி போராடோ போராடென்று போராடுவார்கள். அதேபோல ரஜினி படங்களின் கிளைமாக்சில் ரஜினியின் தங்கை, அம்மா, மனைவி என்று யாரையாவதோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வில்லன் கடத்திக்கொண்டுபோய்க் கயிற்றில் கட்டித்தொங்கவிட்டிருப்பான். ஆனால் இந்த இரண்டு கருமாந்திரங்களும் இந்தப் படத்தில் இல்லை.

*அதேபோல சென்ற படத்தில் மலைகள், லாரி என்றெல்லாம் ஷங்கர் 'வித்தியாசமாக' பெயிண்ட் அடித்திருந்தார். ஆனால் இதில் மாறுதலாக தொப்பையுள்ள 50 பேரை அழைத்துவந்து அவர்களின் தொந்தியில் ரஜியின் முகத்தை பெயிண்ட் அடித்துக் குலுங்க விட்டிருக்கிறார். ஒரேகதையை வைத்து பலபடங்களை எடுத்து இம்சைப்படுத்துவதைவிட பேசாமல் ஷங்கர் பெயிண்ட் அடிக்கப்போகலாம்.இந்த அபத்தங்களையும் தாண்டி நிழலாடும் சில

அரசியல் உறுத்தல்கள்:

* பராசக்தி படத்தின் தொடக்கக் காட்சியில் சிவாஜி ரங்கூனிலிருந்து சென்னையில் காலடி வைக்கும்போது ஒரு பிச்சைக்காரர் 'அய்யா தர்மம் போடுங்க' என்பார். 'தமிழ்நாட்டின் முதல்குரலே இப்படி இருக்கே' என்பார் சிவாஜி. அதில் ஒரு கூர்மையான அரசியல் விமர்சனமும் சமூகநிலை குறித்த எள்ளலும் இருக்கும். ஆனால் அதே காட்சியை சிவாஜியில் பார்க்கும்போது காறித்துப்பலாமென்றுதான் தோன்றுகிறது.

*ரஜினி மருத்துவமனை கட்டும்போது 'ஷாக்' அடித்து ஒரு சிறுவன் துடிக்கும் காட்சியில் 'சிவாஜி பார்ட்டி'யில் இறந்துபோன அந்த தொழில்நுட்பக்கலைஞன் ஞாபகத்திற்கு வந்துபோவது தவிர்க்கமுடியவில்லை.*கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது

'சும்மா எரியுதில்ல'

Read more...

தமிழர்கள் வடக்கு கிழக்குக்கு விரட்டி அடிக்கப்பட்டனர்

1983 ம் ஆண்டு இனக்கலவரத்தை காரணம்காட்டி பல தமிழர்கள் அக்காலத்தில் வடக்கு கிழக்குக்கு விரட்டி அடிக்கப்பட்டனர் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த ஐ.தே.க அதை சிறப்பாக செய்து முடித்தது. அதன் தாக்கம் விடுதலைப் போடாட்டத்தின் ஓர் தீடீர் திருப்பமாக மாறியதை எவராலும் மறக்க முடியாது. அலைஅலையாக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களிலே தம்மை இணைத்துக்கொண்டனர்.பின் 1996 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை கைப்பற்ற நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அஞ்சிய மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். அது விடுதலைப்புலிகளின் ஆளனி வளர்சிக்கு ஒர் தூண்டு கோலாக விளங்கியது. அதன் காரணமாக முல்லைத்தீவு ஆனையிறவு போன்ற அசைக்கவே முடியாது. என கற்பனை செய்யப்பட்ட தளங்கள் கைப்பற்றப்ட்டன .உலக நடப்பை ஒப்பு நோக்குவோமாக இருந்தால் ஜேர்மன் சர்வதிகாரியான கிட்லரால் பல யூதமக்கள் அடித்து வெளியேற்றப்பட்டனர் .((அப்போது வெளியேற்றப்படடவர்களில் ஒருவர்தான் அணு ஆயுதத்தின் தந்தை எனக் கொள்ளப்படுபவர் அவர்பின் மெரிக்காவுக்காக அதை உருவாக்கினார்)) இதன் தாக்கம் கிட்லரின் சர்வதிகாரத்தின் முடிவில் யூதமக்களுக்கு இஸ்ரேல் என்கின்ற தனிநாட்டுக்கு வழிகோலியது பின் வந்த இஸ்ரேலியரால் காசா பிரதேசத்திலிருந்து முஸ்லீம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் அதன் வெளிப்பாடு பாலஸ்தீனத்துக்கு வழிவகுத்தது .தற்போது தமிழ்மக்கள் இதை எவ்வாறு எடுத்து நோக்கப்போகிறார்களோ? சர்வதேசம் அல்லது இந்தியா இதை எவ்வாறு நோக்க போகிறது என்பதில் தான் அதன் மூலம் கிடைக்கப் போகின்ற பலன்கள் அல்லது மறுதளிப்புகள் அடங்கியிருக்கும்கொசுறு;- நாடாளமன்ற கூட்டத்தொடரில் இதை தொடக்கியப் பேசிய மகேஸ்வரனை தொடர்ந்து பேசிய ஜேவிபி உறுப்பினர் ஜே.வி.பி.யின் அனுரா குமார திசநாயக்க இச்செயலுக்காக சிங்கள மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என்றார் ஆமாம் ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம் அதுபோல கிடக்கு

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP