உண்மையில் யாழ்ப்பாண அரச குடும்பத்தினர் தானா ?
"1621ம் ஆண்டுக்குள் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட போதிலும், என் மூலமும் எனது குடும்பம், மற்றும் உறவினர்கள் மூலமும் யாழ்ப்பாண இராச்சியம் இன்றும் இருக்கிறது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலமான இராச்சியம் இருந்தது என்பதை இன்றைய இளம் தலைமுறையினருக்கு நிரூபிக்கவே நான் யாரென்பதைச் சொல்ல முன்வந்தேன்"
இவ்வாறு சொல்வது யாருமில்லை யாழ்ப்பாண மன்னர்களின் வாரிசு என சொல்லிக்கொள்ளும் திரு. கனகராஜா
"ஆரியச்சக்கரவர்தி" வம்சத்தின் வாரிசுகள் தாங்கள்தான் என ஒரு இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் உரிமை கொண்டாடுகிறார்கள் சிலர். யாழ்ப்பாண அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என அதன் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. " Remigius Kanagarajah " என்பவர்தானாம் இப்போது இளவரசர் எனவும் அத்தளத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிடப்பட்டுளது இவர்கள் இப்போது நெதர்லாந்தில் வசிக்கிறார்களாம்
இவ் இணையத்தளம் யாழ்ப்பாண அரச குடும்பத்தின் இணையத்தளம் பற்றி வெற்றியின் பக்கம் இல் முன்பு பெரியவிவாதமே நடந்து முடிந்திருக்கிறது எனினும் எனினும் அரச குடும்பத்தின் இத்தளத்தை அண்மையில்தான் கண்ணுற்றேன் சரியான எரிச்சலாக இருந்நது அதன்பின் GOOGLE இல் தேடும் போது தான் வெற்றியின் பக்கம் அகப்பட்டது
நன்றி வெற்றி
நல்லூரினைத்தளமாகக்கொண்டு ஆட்சிபுரிந்த சங்கிலியனுக்கு தாய்மொழி தமிழ்தானே ? ஆனால் அரச வம்சாவழியினரின் இணையத்தளதிதில் மருந்துக்கக்கூட தமிழைக்காணோம் என்ன கொடுமையப்பா இது ? போதாதற்கு அவர் தமிழ்வருப்பிறப்பிற்கு வாழ்த்துக்களையும் ஆங்கிலத்தில் வாழ்த்துத்தெரிவிக்கிறார் ???? இவையெல்லாம் இவ்வளவு காலமும் எங்க இருந்தவை என்றே தெரியாது. ஆளாளுக்கு ஒரு இணையத்தளம் உருவாக்கத் தொடங்கினாப் பிறகுதான் இப்படி பலதும் புதிசு புதிசா வெளில வருகுது. இதை யார் என்ன தேவைக்காக செய்யினம் என்றதுதான் முக்கியமாக நோக்கப்பட வேணும்..! மற்றும் யாழ்ப்பாண இராச்சியம் பலமான இராச்சியம் என இவர் கூறித்தான் புரிய வேணும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்த்தனம் !
யாழ்ப்பாணத்தின் மண்வாசனையை இனிதே நுகர்ந்த ஒருவனும் இத்தளம் யாழ்ப்பாண மன்னர்களின் வாரிசுக்களின் இணையதளமென நம்பமாட்டான் ஏனெனில் தமிழைக்காணோம் ? ஒரு வேளை அனைத்து நாட்டு மக்களும் வாசிக்கக்கூடியதாயிருக்கட்டுமென ஆங்கிலத்தில் வடிவமைத்தனரோ ? ஆனாலும் யாழ் அரச குடும்பத்தின் இணையத்தளம் தமிழில் இல்லாமல் நடாத்துவதேன் ?
இன்னுமொருவிடையம்
இப்படி இணையத்தில் யாழ்பாண அர குடும்பம் என போடும் அளவிற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது... (அந்த சந்ததியில் பிறந்தால் மட்டும் போதுமா) இதை நான் குத்தி காட்ட கேட்கவில்லை.. தகவலை அறிந்து கொள்ளவே கேட்கின்றேன் எம் முன்னோர்களை வைத்தா நாங்கள் வாழ வேண்டும்... உண்மையில் வரலாறுகள் அறிந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் என் ஐயத்தைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப் பதிவு அப்படியாயின் இவர்கள்இப்போது உரிமை கொண்டாடுபவர்கள் யார்? இவர்கள் கடைசி மன்னன் சங்கிலியனுக்கு என்ன முறை? இதை நிரூபிக்க இவர்களிடம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?
ஆனால் நான் வாசித்த புத்தகமொன்றில் இவ்வாறுள்ளது
" நல்லூரின் கடைசி அரசன் சங்கிலிகுமாரனின் வாரிசுகள் இரண்டு ஆண்குழந்தைகளும் போத்துக்கேயரால், கோவாவுக்கு எடுத்துச் செல்லப் பட்டு, கத்தோலிக்க மத குருமாராக்கப் பட்டார்கள். யாழ்ப்பாண இராசதானியின் எந்த வாரிசையும் போத்துக்கேயர் உயிருடன் விட்டு வைக்க விரும்பவில்லை. சங்கிலிகுமாரன் மிகுந்த சைவநம்பிக்கையுள்ளவன், அதனால் தான் மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு. புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள். மனைவி மங்களத்தம்மாளுடனும், இரண்டு ஆண்குழந்தைகளுடனும், நல்லூரின் ஏராளமான நகைகளுடனும், மதுரை நாயக்கர்களிடம் உதவி கேட்கத் தப்பியோடிய சங்கிலிகுமாரனைக் காங்கேசன் துறைக் கடலில் கைப்பற்றிய போத்துக்கேயர், அரசனை கோவாவில் தூக்கிலிட்டார்கள், யாழ்ப்பாண இராசதானிக்கு வாரிசு இல்லாமல் செய்வதற்காகவும், கிறிஸ்தவர்களைக் கொன்ற, சங்கிலியனைப் பழிவாங்குவதற்காக நல்லூரின் இரண்டு இளவரசர்களையும், கிறிஸ்தவ பாதிரிமாராக்கினார்கள் போத்துக்கேயர்கள். அதிலும், இருவரையும் பிரித்து, ஒருவரை லிஸ்பனிலும், மற்றவரையும் கோவாவில் வைத்துமிருந்தார்கள், அவர்களும் பிரிந்தே இறந்தார்கள். "
அதனால் யாழ்ப்பாண இராசதானியின் வாரிசுகள் யாருமில்லை. அதிலும் போத்துக்கேய பெயர்களையுடைய வாரிசுகள் இருக்க முடியாதென நினைக்கிறேன். இதில் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது நான் சின்னப்பொடியன் தான் ஆனாலும் தமிழ்ப்பற்றும் தமிழும் உடம்பில் ஊறியவை அல்லவா ? அதனால்தான் இவ்வளவும் . . . . .
இன்னுமொரு பகிடியையும் சொல்ல வேணும் லண்டனில் இருக்கும் நண்பர் மூலமாக இவருக்கு போன் பண்னினேன் தமிழ் அவருக்கு தெரியாதாம் டொச்சும் அவருக்கு தெரியாதாம் ஆங்கிலம் மட்டும்தான் தெரியுமாம் (+31(0)703934544 ) ????
பதிவர்களே உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்
நன்றி
9 பின்னூட்டம்(கள்):
athukal oru loosu koodam...
உங்கள் முயற்சிக்கு நன்றி........தொடரட்டும் உங்கள்....பன
உங்கள் முயற்சிக்கு நன்றி........தொடரட்டும் உங்கள்....பனி
யாழ்பாணஅரச பரம்பரைபற்றி ஒரு மின்னூல் ஒன்று இருந்தது.உங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாமேன்று கணினியின் வன்பெட்டிகளை துளாவிக்கோண்டிருந்தேன்.இன்னும் கிடைக்கவில்லை.அனுப்பமுயல்கிறேன்.
வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள் . . .
உங்கள் முயற்சி தொடரட்டும்!
அன்புடன்.
நல்லன் மற்றும் ராவணன்
நல்லன் மற்றும் ராவணன் உங்கள் வருகைக்கு நன்றிகள் . . .
என்னால் இது சம்பந்தமாக எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.
ஆனால் ஒரு சந்தேகம்... ஆரிய சக்கரவர்த்தியின் பரம்பரையாயின் எப்படி கனகராஜா என்ற பெயர் இருக்கமுடியும். சாதாரண மக்களெனின் பெயர் திரிபுகள் இலகுவாக ஏற்பட இடமுண்டு. ஆனால் அரச வம்சத்தினர் மத்தியில் அது அவ்வளவு இலகுவாக இடம்பெறுவதில்லை. ஆகவே ஒரு தமிழ் மன்னனின் வாரிசு எப்படி ஆரிய வம்சமாக இருக்கமுடியும். அவர்கள் ஆரிய வம்சமாயின், யாழ்ப்பாணத்தை ஆண்டது ஒரு ஆரிய வம்சமா?
சிலவேளை ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட கலப்பின் நிமித்தமாக அவர்கள் தங்களை ஆரியசக்கரவர்த்தி பரம்பரையென அடையாளப் படுத்த முயலாம். ஆனால் அது அவ்வாறெனின், அது தவறு.
இது மிகவும் பொதுப்படையான கருத்து. நான் எந்தவித உசாத்துணைகளையும் அணுகவி்ல்லை.
'பதிவுகள்' தளத்தில் கிரிதரன் இவர் பற்றிய அறிமுகமொன்றைக் கட்டுரையாக்கியிருந்தார். தேடிப்பாருங்கள். அதில் எவ்வழியில் இவர்கள் சங்கிலியனின் வாரிசு என்பதை அவர்கள் சொன்ன முறைப்படி சொல்லியிருந்தார்.
Post a Comment