யாழ் குடாநாட்டின் வரட்சியும், உவர் நீரை உள்வாங்கும் யாழ். நிலக்கீழ் நீரமைப்பும்


சிறந்த மேட்டுப் பயிர் செய்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழுகின்றது யாழ் குடாநாடு. வளமான நிலங்களும் பயிர் செய்கையாளர்களின் கடும் உழைப்புமே இதற்கான காரணிகள். யாழ்ப்பாணப் பயிர்செய்கையை பார்த்து வியந்த சிலர் அதை தோட்ட வளர்ப்பியல் கலை என்று புகழ்ந்ததைக் கேட்டிருக்கின்றேன்.

ஆண்டில் சுமார் 50 அங்குல மழை வீழச்சி இங்குண்டு. அதில் 87 சதவீத மழை ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் தான் பெய்யும். இந்த நீரே ஆண்டு முழவதற்குமான குடிநீர் தேவைக்கும் பயிற் செய்கைக்கும் பயன் படுகிறது. பெய்யும் மழையின் பெரும் பகுதி இங்குள்ள நூற்றுக்கணக்கான குளங்களில் தேங்குவதாலும், விழும் நீரை கீழே இழுக்கும் மண்ணின் தன்மையாலும், கீழே செல்லும் நீரை அப்படியே சேமிக்கும் நிலத்தின் அடியிலுள்ள நிலக்கீழ்நீரமைப்பு அல்லது நிலத்தடி நீர்த தேக்கங்களாலுமே ஆண்டு முழவதும் நீரைப் பயன்படுத்துதல் சாத்தியப் படுகிறது.

சுமார் 400 சதுரமைல் கொண்ட இச் சமதரையான பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 35 அடி உயரம் கொண்ட தெல்லிப்பளைப் பகுதியே அதி உயர்ந்த பகுதி. இதனால் இங்குஆறுகளும் இல்லை. அருவிகளும் இல்லை.நிலத்தடி நீர்த் தேக்கங்களில் தேங்கி கிணறுகளில் ஊற்றாக வரும் நீரை துலாவினதும் பட்டையினதும் உதவியுடன் குடிநீருக்கும் பயிர்ச் செய்கைக்கும் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்தார்கள். கீழே செல்லும் மழைநீரை விஞ்சும் அளவிற்கு நீர் மேலே இழுபடாத ஒரு சமநிலை கடந்த நூற்றாண்டுவரை நிலவியது.

கடந்த நூற்றாண்டு, நீர் இறைக்கும் பம்பிகள் பயன்பாட்டுக்கு வந்தன. கூடுதல் நீர் மேலே இழுபடத் தொடங்கியது. நீரியல் நிபுணர்கள் நிலத்தடி நீர்த்தேக்கங்களுடன் உவர்நீர் கலக்கும் அபாயம் உண்டென்பதை அறிக்கைகள் மூலம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்கள். இருந்த குளங்களை ஆழமாக்கியும் தூர்ந்தவற்றை புதுப்பித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இடம்பெயர்வு போன்றவற்றால் நீர்ப் பம்பிகளின் பயன்பாடும் குன்றி இருந்தது. அப்படி இருந்தும் அண்மைய புள்ளி விபரம் ஒன்று குடாநாட்டின் 30 சதவீதமான கிணறுகள் அதாவது 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிணறுகள் உவர்நீர்க் கிணறுகளாக மாறிவிட்டதை வெளிக்கொணர்கிறது. இந்நிலையை நீடிக்கவிட்டால் விளைவு பாரதூரமானதாக மாறும். இதைத் தவிர்க்க உடன் நடவடிக்கை தேவை. இது யாழ்க் குடாநாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனை. இந்நிலையை தவிர்க்க எடுக்கக்கூடிய சாத்தியமான நடவடிக்கைகள் பற்றிப் பார்ப்பதற்கு முன் நாம்குடாநாட்டிற்கு தேவையான நீரை அளிக்கக்கூடிய வளங்களின் சாத்தியம் பற்றி அறிய வேண்டும்.

குடாநாட்டினுள் இரு ஏரிகள் உள்ளன. ஒன்றுவடமராட்சி ஏரி 30 சதுரமைல் பரப்புடையது. மற்றையது உப்பாற்று ஏரி 10 சதுரமைல் கொண்டது. இவை இரண்டும் கடலுடன் இணைகின்றன. வடமராட்சி ஏரி தொண்டமனாற்றிலும், உப்பாற்று ஏரி அரியாலையிலும் இணைகின்றன. கடலுடன் இணைவதால் இவை உவர் நீர் ஏரிகள் என்பது தெளிவு. கவனத்திற்கு எடுக்க வேண்டிய இன்னொருஏரியும் உள்ளது. அது குடாநாட்டை தெற்கிலுள்ள பெரு நிலப் பரப்பிலிருந்து பிரிக்கும் ஆனையிறவு ஏரி. இது 30 சதுரமைல் பரப்பளவு கொண்டது. கிழக்கில் சுண்டிக்குளம் என்னும் இடத்தில் கடலுடன் கலக்கிறது. மேற்கில் யாழ்பாணம் கடல் ஏரியுடன் சங்கமமாகிக் கொண்டிருந்தது.

யாழ் கண்டி வீதியையே அணைபோல் பாவித்து ஆனையிறவு ஏரியை முற்றாக யாழ்ப்பாணம் ஏரியிலிருந்து பிரித்துவிட்டார்கள். கிழக்கில் அதன் கடலுடனான தொடர்பை நீக்க அதாவது சுண்டிக்குளத்தில், 7,000 அடி நீளமான அணை தேவை. இதில் ஏரியில் உள்ள மேலதிக நீர் கடலுட் பாய ஏதுவாக 4,700 அடி வடிகால் அணையாகவும் படுகைப் பாலமாகவும் (spillway cum causeway) அமைய வேண்டும்.

சுண்டிக்குளம் அணையும் பூர்த்தி அடைந்தால் ஆனையிறவு ஏரிக்குள் கடல் நீர் உட்புகுதல் நிறுத்தப்படும். கிளிநொச்சிப் பெரு நிலப்பரப்பான 360 சதுரமைல்களிலிருந்து, கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பிரமேந்தி ஆறு, தேராவில் ஆறு ஆகியவற்றின் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் சென்றடையும் 90 ஆயிரம்ஏக்கர் அடி நன்நீர் (ஒரு ஏக்கர் அடி என்பது 1 ஏக்கர் நிலத்தில் ஒரு அடி உயரத்திற்கு நிற்கும் நீர்) ஆனையிறவு ஏரிக்குள்ளேயே தேங்கும். மேலதிக நீர் வடிகால் அணையால் வெளியேறும். முன்கூறப்பட்ட வடமராட்சி ஏரி உப்பாற்று ஏரி ஆகிய இரண்டுக்கும் முறையே தொண்டமனாற்றிலும் அரியாலையிலும் அணையிட்டால் அவையும் கடல் நீரை உள்விடாது தடுத்து மேலதிக நீர்தான் வெளியே அனுப்பப்படும்.

அடுத்து ஆனையிவு ஏரியையும் வடமராச்சி ஏரியையும் இணைக்க வேண்டும். இதற்கு இரண்டரை மைல் நீளத்தில் 40 அடி அகலத்தில் முள்ளியான் கால்வாய் என்ற பெயரில்கால்வாய் வெட்டும் பணி தொடங்கி பல காலம்ஆகியும் பூர்தியாகவில்லை. அது பூர்த்தி செய்யப்பட வேண்டும். அத்துடன் உப்பாற்று ஏரியின் அரியாலை அணையும் பூர்த்தியாகி அதுவும்வடமராச்சி ஏரியுடன் இணைக்கப் பட்டால் கடலுடன் தொடுபடாத மொத்தம் 70 சதுரமைல் ஏரி எம் கைக்கு வந்துவிடும். இந்த 70 சதுரமைல் ஏரிகளுள் ஆண்டுக்கு பெரு நிலப்பரப்பிலிருந்து உட்செல்லும் 90 ஆயிரம் ஏக்கர்அடி நன்நீர் பாய்வதன் விளைவாக மூன்று ஏரிகளுமே காலப்போக்கில் நன்நீர் ஏரிகளாகி விடும். அது எவ்வளவு காலத்தில் சாத்தியப்படும் என்பது சரியாகத் தெரியவில்லை.

பணிகள் முடிந்ததும் உவர்நீரை பாரிய நீர்ப்பம்பிகள் மூலம் வெளியேற்றி வெற்றிடமாகக் கிடக்கும் ஏரிகளின் தரையை உழுது வைத்தால் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வரும் அதிக நீர் வடிகால் அணைகளுக்கு மேலாகப் பாய்ந்து, படிந்திருக்கும் உப்பைக் கரைத்து வெளியே அனுப்பி நன்நீராக மாற்றும் பணியைத் துரிதப் படுத்தும். இதனுடன் ஏரிகள் வற்றிய நிலையில் இருக்கும்போது கடல் நீர் உட்புகும் இடங்களை அடையாளம் கண்டு தடுக்கக் கூடியவற்றைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கலாம். சில இடங்களை ஆழமாக்கி ஏரிகளின் கொள்திறனையும் கூட்டலாம். இது முறையான ஆய்வு மேற்கொண்டு பாதகமான விளைவுகள் ஏற்படாத இடங்களில் மட்டும் தான் சாத்தியப்படும். யாழ் குடாநாட்டுக்கு 70 சதுரமைல் பரப்பளவு கொண்ட நன்நீர் ஏரிகளா? அப்படி ஒரு இனிய செய்தி வரத்தான் போகிறது. எப்போ என்பதுதான் இன்றய அவா.

இது இன்றைய நேற்றைய அவா அல்ல. 350 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த கப்பித்தான் Hendrik van Rheede முன்மொழிந்திருந்தார். ஒல்லாந்தர் சென்ற பின் 1879 ல் வடமகாண அரசாங்க அதிபராக இருந்த Twyneham அதற்கு உயிர்கொடுத்து ஒரு நடைமுறைத் திட்டம் வகுத்தார். 1920 ல் வடமராச்சி ஏரியின் ஓருபகுதியை நன்நிராக்கும் முயற்சியில் வெற்றி கண்டு நான்கு ஆண்டுகள் அதன் பயனையும் அனுபவித்தார்கள். 1954 ல் நீர்பாசனப் பொறியிலாளர் ஒருவர் அவர் பெயரில் அழைக்கப்படும் புகழ்பெற்ற ஆறுமுகம் திட்டம் என்று ஒன்றை வகுத்தார். அச்சீரிய திட்டம் முற்றாக பூர்த்தி செய்யப்படா விட்டாலும் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படுவதும் பின் கை விடுவதுமாக 60 ஆண்டுகள் கழிந்து விட்டன. முக்கால் பங்குக்கு மேலாக வெட்டப் பட்டதும், ஆனையிறவு வடமராச்சி ஆகிய ஏரிகளை இணைக்கப் போவதுமான முள்ளியான் கால்வாய் இன்னும் முற்றுப்பெறாத காரணத்தால் பெரு நிலப்பரப்பிலிருந்து பாயும் பல ஆயிரம் ஏக்கரடி நீரில் ஒரு துளி என்றாலும் வடமராச்சி உப்பாறு ஆகிய ஏரிகளைச் சென்றடையவில்லை.

  • இந்தத் திட்டம் பூரண வெற்றி அடையும்போது பக்க விளைவுகள் சில ஏற்படத்தான் செய்யும். முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது மீனவர் பாதிப்பு.
  • உவர் நீரிலிருந்து நன்நீராக மாற்றமடையும் காலகட்டத்தில் சூழல் மாற்றம் காரணமாக சில மீனினங்கள் நண்டு, இறால் ஆகியவை அழியும். தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு அங்கு மீன்பிடித் கொழிலில் ஈடுபடும் 2000 வரையான தொழிலாளர் பாதிக்கப்படுவர்.
  • சுண்டிக்குளத்தில் பறவைகளுக்கான சரணாலயம் ஒன்றுள்ளது. அங்கு வெளிநாடுகளிலிருந்து இடம்பெயரும் பறவைகள் வந்து செல்வதுண்டு. சூழல் மாற்றம் நிச்சயம் அவற்றின் வதிவிடங்களைப் பாதிக்கும்.

இதைக் காரணமாக வைத்து வெளிநாடுகள் இந்த நன்நீர் ஏரிகள் திட்டத்திற்கு நிதி தர மறுக்கின்றன. இம் மறுப்பிற்கு, குடாநாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனையான உவர்நீர்ப் பிரச்சனையைபின் தள்ளிவிட்டு பவைகளுக்காக அக்கறை காட்டுவதுபோல் நம்மவர் சிலர் வெளியிடும் அறிக்கைகள் தான் காரணம்.

இத்திட்டம் முற்றுப் பெற்று நன்நீர் ஏரிகள் வந்தால்நாம் மேலே இழுக்கும் நீரை திருப்பி ஊட்டத் தேவையான நீர் சுண்ணாகம் (வலிகாமம்) வடமராச்சி, தென்மராச்சி, ஊர்காவற்துறை ஆகிய குடாநாட்டின் நான்கு பிரதான நிலக்கீழ்நீரமைப்புகளுக்கும் கிடைக்கும். வாழ்வாதாரத்தையே பாதிக்கக் கூடிய உவர்நீர் உட்புகதல் நின்றுவிடும். இதுதானே நம் கவலையாக இருநத்து. குடாநாடு பாதுகாக்கப் படுகிறது. வேறு பயன்களும் உள்ளன. கிணறுகளின் ஊற்று அதிகரிக்கும். மழையை நம்பி மானாவாரியாக இன்றுவரை செய்யப்படும் 20,000 ஏக்கர் நெல்வயல்களை கிணற்று நீரைப் பயன்படுத்தி நீர்பாசன வயல்களாக மாற்றி விளைச்சலை மும்மடங்காக்கலாம். ஏரிகளை அண்டிய பகுதிகளில் உவர் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள 10,000 ஏக்கர் வரையான நிலங்களை நெற் சாகுபடிக்குக் கீழ் கொண்டு வரலாம்.

இன்னொரு விடயம் நன்நீர் இறால் வளர்ப்புமிகவும் வருவாய் கூடிய துறை. இந்த நன்நீர்ஏரிகளில் முறையாகத் திட்டமிட்டு இடமொதிக்கி இத்திட்டத்தால் பாதிக்கப் பட்ட மீனவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்து கடன் வசதியும் ஏற்படுத்தினால் அவர்கள் வருவாய் ஏரிகள் உவர்நீராக இருந்த போது கிடைத்ததை விட சில மடங்குகளால் அதிகரிக்கும். நாட்டுக்கு அந்நியச் செலவாணியும் வந்தடையும்.

இத்திட்டத்தை பூர்த்தி செய்யத் தேவையான தொண்டமனாற்று அணை 10 கோடி ரூபா செலவில்கட்டப் பட்டு விட்டது. அரியாலை அணையும் முடியும் நிலையில் உள்ளது. வீதியும் அணையுமான கண்டி வீதி. அதுவும் முடிந்து விட்டது. முக்கால் பங்குக்கு மேல் முடிந்து தூர்ந்த நிலையில் உள்ள முள்ளியான் கால்வாயும் சுண்டிக்குளம் நீர்வடிகால் படுகைப் பாலப் அணையும்தான் தாமதப்படுகின்றன.

100 கோடி ரூபாவுக்குள் முடிக்கக் கூடிய இத்திட்டத்தை துரிதப்படுத்தாது பின் தள்ளி விட்டு யாழ்ப்பாணக் குடிநீருக்காக ஒரு திட்டம் வகுத்துள்ளார்கள். அத்திட்டத்தின் கீழ் பரந்தனிலிருந்து இரணைமடு நீர்த் தேக்கத்தின் நீரை யாழ் நோக்கி கொண்டு செல்ல 25 மைல்களுக்கு கூடிய நீளத்திற்கு குழாய்கள் போடப்பட உள்ளன. அந்தக்காசே நன்நீர் ஏரித் திட்டத்தை முடிக்கப் போதுமானது. இரணைமடுக் குளத்தின் நீரைப் பயன்படுத்துவதால் கிளிநொச்சி மக்களின் சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்படும் என்ற ஆட்சேபனை காரணமாக இத்திட்டம் தள்ளிப் போடப்பட்டு, இரணைமடுவின் அணையை இரண்டு அடியால் உயர்த்துவதற்கு ஒரு திட்டமும், மகாவலி கங்கையின் ஒரு பிரிவான மொறஹாகந்தைத் திட்டத்தை துரிதப்படுத்தி மகாவலி கங்கை நீரின்ஒரு பகுதியை 2020 ம் ஆண்டளவில் இரணைமடுவிற்கு கொடுக்கவும் திட்மிட்டுள்ளார்கள்.

இரணைமடு நீர்த் தேக்கத்திற்கு வடமத்திய மாகாணத்திலிருந்து நீர் கொண்டு வரும் செயலானது, ஒரு மகாணத்திலிருந்து மற்றைய மாகாணத்திற்கு நீர் போவது. ஓரு மகாணத்திலிருந்து மற்றைய மாகாணத்திற்கு நீர் அனுப்புவதானால் அந்நீரின் கட்டுப்பாடு நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நடைபெறும். இதனால் அந்த நீர்விநியோக நடவடிக்கை அனைத்தும் மாகாண சபையின் கையிலிருந்து மத்திய அரசின் கைக்கு மாறிவிடும்.
1200 கோடி ரூபா செலவில் நடக்கவிருக்கும் யாழ் குடிநீர் திட்டத்தை நாம் எளிதில் புறக்கணிக்கவும்முடியாது. அதன் கீழ் பாரிய நீர் கொள்கலன்கள் நீர் சுத்திகரிப்பு வேலைகள் என்று பல நல்ல அம்சங்கள் அடங்கி உள்ளன. 100 கோடி ரூபாவுக்குள் முடிக்கக்கூடிய யாழ்பாணத்திற்கு ஒர் ஆறு என்ற பெயரில் நடைபெறும் நன்நீர் ஏரித் திட்டத்தை துரிதப்படுத்த குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு உள்ளது.

(இக்கட்டுரை பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ஒருபேப்பர் பத்திரிகையில் கடந்த வாரம் வெளிவந்திருந்தது.  தேவை கருதி இங்கே மீள்பிரசுரம் செய்கிறேன்)

நன்றி - ஒருபேப்பர்

Read more...

iPhone, iPad க்கு உகந்த 'பொன்னியின் செல்வன்' நாவல் அறிமுகம்

வணக்கம் நண்பர்களே! நீண்ட நாள் கழித்துச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி....
அதே சமயம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி....

இதுவரை iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் வாசிக்கக்கூடிய வகையில் epub இல் உருவான தமிழ் மின் புத்தகங்கள் (Tamil iBooks) வெளிவந்ததில்லை. ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தாலும் தமிழை உள்ளிடும் முறைமையில் ஏற்பட்ட பல்வேறு பட்ட குறைபாடுகளால் / குழறுபடிகளால் இதுவரை (பிப்ரவரி 2011 வரை) தமிழ்மொழியில் எந்தவிதமான  புத்தகங்களும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன்.

அண்மையில் செய்த சிறு முயற்சியால் தமிழில் முதலாவது iBook (epub format) உருவாக்கப்பட்டு பாவனைக்காக விடப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் வலையுலக நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். (இது வரை எங்கும் தமிழில் காணக் கிடைக்கவில்லை அதனால் தான் இந்த 'முதலாவது' வேறெங்காவது கண்டால் சொல்லுங்கள்.)

அந்தவகையில் உருவான புத்தகம்  அமரர் கல்கி அவர்கள் எழுதிய ஒப்பற்ற சரித்திரப் புதினமான "பொன்னியின் செல்வன்" நாவலின் முதற் பாகமேயாகும் (புது வெள்ளம்).

மாதிரிப் படங்கள்

தரவிறக்கச் சுட்டிகள்

அவற்றை நீங்கள் தரவிறக்கக்கூடியவாறு இங்கே தொடுப்புக்களை இணைத்திருக்கிறேன் தரவிறக்கிப் பார்த்து உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்....

இந்தப் புத்தகத்தை உங்கள் iPod, iPad, iPhone இல் நிறுவும் முறை...
  • மேலே உள்ள குறிப்பிட்ட இணைப்பில் .rar கோப்பை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்த பின்னர் அதனை திறந்து அதற்குள் உள்ள கோப்பை வெளியே எடுத்து கணனியில் உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
  • iDeviceஐ கணனியோடு இணைத்துவிட்டு உங்கள் கணனியில் உள்ள ஐரியுனில் books என்ற பகுதிக்கு சென்று அங்கிருந்து file - add to library க்குள் குறித்த கோப்புக்களை தெரிவு செய்து.. அதனை iTuneஇல் சேர்த்துக் கொள்ளுங்கள். 
  • பின்னர்.. உங்கள் iDeviceஐ sync பண்ணினால் குறித்த புத்தகத்தை ஐபொட்டில் புத்தகங்கள் அப்ஸில் காணலாம். அங்கிருந்து இந்தப் புத்தகத்தின் 1600 க்கும் மேற்பட்ட பக்கங்களை படிக்க முடியும்.
இம் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம். அதற்கு உங்கள் பின்னூட்ட அறிவுரைகளே உந்துகோலாக அமையும் என்பதைத் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

பி.கு : இவ்வாறான புத்தகங்களை உருவாக்குவதற்கு HTMLமொழியில் உங்களுக்குச் சாதாரண அறிவிருந்தாலே போதுமானதாகும் 

நன்றி. 

24-05-2011 
 
தற்பொழுது நண்பர் தினேஷ் முழுப்பாகங்களையும் epub வடிவுக்கு மாற்றியிருக்கிறார்.  இங்கு சென்று தரவிக்கிப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Read more...

விவேகானந்தர்-25 [ஆனந்தவிகடன் தொகுப்பு]

மனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி!

  • நரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கு 'குட்டிப் பிசாசு'. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர் 'பயில்வான் சாமி'. அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு 'விவேகானந்தர்' என்ற பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது!
  • கோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத தத்தர், வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால் ஐ.சி.எஸ்., ஆக்குவதாக மாமனார் சொன்னார். 'என்னோடு இருந்துவிடேன்' என்று ராமகிருஷ்ணர்அழைத்தார். குருநாதர் ஆசைதான்கடைசியில் நிறைவேறியது!
  • 'புத்தகத்தில் இருக்கிறது, பிறர் சொன்னார்கள் என்பதற்காக எந்தத் தத்துவத்தையும் ஏற்காதீர்கள். நீங்களே பகுத்தறிந்து சோதனை செய்து பார்த்து எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொன்ன ஒரே சாமியார் இவர்தான்!
  • விவேகானந்தருக்கு ஞானத் தாயாக இருந்தவர் அம்மா புவனேஸ்வரி. 'எனக்கு ஞானம் ஏதாவது இருக்குமாயின் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன்' என்று சொல்லியிருக் கிறார்!
  • சிலம்பு, மல்யுத்தம், நீச்சல், படகு ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை இளம் வயதிலேயே எடுத்துக்கொண் டவர். 'உடலைப் பலமாகவைத்துக் கொண்டால்தான் உள்ளம் பலமாகும்' என்பது அவரது போதனை!
  • 'கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?' -யாரைப் பார்த்தாலும் நரேந்திரன் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். 'பார்த்திருக்கிறேன்... உனக்கும் காட்டுகிறேன்' என்றுசொன்னவர் ராமகிருஷ்ணர் மட்டுமே!
  • புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அடியில் தியானம் செய்ய ஆசைப்பட்டுத் தனது நண்பர்களுடன் சென்றார். புத்தகயாவில் தியானம் செய்துவிட்டுத் திரும்பினார்!
  • விவேகானந்தர் நிறைய பாடல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். நினைத்த மாத்திரத்தில் அதை அப்படியே சொல்லும் ஆற்றலும் அவ ருக்கு இருந்திருக்கிறது!
  • விவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு பெயர்கள் மூலமாகத் தான் அவர் இந்திய நகரங்களுக்கு அறிமுகமானார். அமெரிக்கா செல்ல ஏற்பாடானபோது, கேக்திரி மன்னர் தான் 'விவேகானந்தர்' என்ற பெய ரைச் சூட்டினார்!
  • ராமகிருஷ்ணர் மறைவுக்குப் பிறகு தட்சிணேஸ்வரத்துக்கும் கொல் கத்தாவுக்கும் இடையே வர நகரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினார். சில நாட்களில் அதைக் காலி செய்துவிட்டார். 'நிரந்தரமாகத் தங்கினால் அந்த இடத்தின் மீது பற்று வந்துவிடும்.மூன்று நாட்களுக்கு மேல் எங்கும் தங்கக் கூடாது' என்ற திட்டம்வைத்து இருந்தார்!
  • கொஞ்சம் அரிசி, சிறிது கீரை, ஒரு துளி உப்பு இவைதான் உணவு. மன்னர்களின் அரண்மனைகளில் தங்கினாலும் ஆடம்பர உணவைத் தவிர்த்தார்!
  • ஐந்து ஆண்டு காலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். கையில் காசு இல்லாமல் புறப்பட்டார். யார் பணம் கொடுத்தும் வாங்கவில்லை. மைசூர் மகாராஜா மொத்தச் செலவையும் ஏற்கிறேன் என்றபோது 'திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்' என்று மறுத்துவிட்டார்!
  • தாஜ்மஹால் அவரது மனம் கவர்ந்த இடம். அதை முழுமையாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு மாதங்கள் வேண்டும் என்று சொன்னார்!
  • 'எழுமின்... விழுமின்... குறிக் கோளை அடையக் குன்றாமல் உழைமின்' என்ற வார்த்தையை முதன்முதலாகச் சொன்ன இடம் கும்பகோணம்!
  • வெற்றிலை, புகையிலை போடுவார். 'ராமகிருஷ்ணருக்கு ஆட்படுமுன் உல்லாசமாக இருந்தவன். அதன்பின்னும் பழைய பழக்கங்களை என் னால் விட முடியவில்லை. பெரும் லௌகீக இச்சைகளை எல்லாம் துறந்த பின் இந்த சிறிய விஷயங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒன்றுதான் என்பதால், இவற்றைக் கைவிட முயற்சிக்கவில்லை' என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்!
  • புத்தகங்களை அவர் அளவுக்கு வேகமாக யாராலும் வாசிக்க முடியாது. 'வரிவரியாக நான் படிப்பது இல்லை, வாக்கியம் வாக்கியமாக, பாரா பாராவாகத்தான் படிப்பேன்' என்பார்!
  • அமெரிக்கா செல்லும் முன் கன்னியாகுமரி வந்தவர், கரையில் நின்று பார்த்தபோது தெரிந்த பாறைக்கு நீந்தியே போய் தியானம் செய்தார். அதுதான் விவேகானந்தர் பாறை. அமெரிக்காவில் இருந்து வரும்போது சென்னையில் தங்கிய இடம், கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம்!
  • தமிழ்நாட்டுக்கு மூன்று முறை வந்திருக்கிறார் விவேகானந்தர். முதலில் மூன்று மாதங்கள். அடுத்து 20 நாட்கள் தங்கினார். மூன்றாவது முறை வரும்போது அவரை கப்பலைவிட்டு இறங்கவிடவில்லை. கொல் கத்தாவில் பிளேக் நோய் பரவிய காலம் என்பதால், இவரைக் கப்பலை விட்டு இறங்க அனுமதிக்கவில்லை!
  • 'நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள். அப்படிப் பேசினால் யாராவது விஷம்வைத்துக் கொன்றுவிடுவார்கள்' என்று மைசூர் மகாராஜா சொன்னபோது, 'நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?' என்று திருப்பிக் கேட்டார்!
  • 'பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னால் சீனாவால் நம் நாட்டுக்குப் பேராபத்து நிகழும்' என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசனத்துடன் சொன்னது அவர்தான்!
  • அடிமைப்படுத்தி வந்த ஆங்கில அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். 'ஆங்கில அரசாங்கம் என்னைக் கைது செய்து சுட்டுக் கொல்லட்டும்' என்று வெளிப்படையாகக் கோரிக்கைவைத்தார்!
  • விவேகானந்தருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. 'சென்னை இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன், ஆன்மிக அலை சென்னையில் இருந்துதான் அடிக்க வேண்டும்' என்ற அவரது பேச்சில் சென்னைப் பாசம் அதிகமாக இருக்கும்!
  • கலிஃபோர்னியாவில் இவர் நடந்து போனபோது துப்பாக்கி பயிற்சி நடந்துகொண்டு இருந்தது. சுட்டவருக்கு குறி தவறியது. பார்த்துக்கொண்டு இருந்த இவர் வாங்கி... ஆறு முட்டைகளையும் சரியாகச் சுட்டார். 'துப்பாக்கியை இன்றுதான் முதல்தடவையாகப் பிடிக்கிறேன். இதற்குப் பயிற்சி தேவையில்லை. மன ஒருமைப்பாடுதான் வேண்டும்' என்று சொல்லிவிட்டு வந்தார்!
  • 'ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத் திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது' என்று இவர் சொன்ன வார்த்தைகள் சீர்திருத்தவாதிகளையும் திரும்பிப் பார்க்கவைத்தது!
  • விவேகானந்தரின் சாராம்சம் இதுதான்... 'முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்'!
31-03-2010 ஆனந்தவிகடன் இதழில் வெளியான விவேகானந்தர் தொடர்பாக ஆக்கம்.

நன்றி: ஆனந்தவிகடன்

இறுதியாக விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு!




Read more...

விடைபெறும் 2009, மலரும் 2010 - புத்தாண்டு வாழ்த்துக்கள்

வணக்கம்!
விடைபெறும் 2009ம் ஆண்டே !
ஒவ்வொருவரினது மனதிலும் ஏதோ கொஞ்ச சந்தோஷங்களையும் கணக்குகளற்ற வலிகளையும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறாய். வலிகளின் மூலம் எம் வலிமையை உணர்த்தி விட்டே சென்றிருக்கிறாய்....

மலரும் 2010ம் ஆண்டே !
நீ எங்களுக்கு எல்லாவகையிலும் இனிதாக அமைவாய் என்பதில் நம்பிக்கையில்லை.. எனினும் மலரப் போகும் 2010ம் ஆண்டு எங்களுக்கு எல்லா வகையிலும் இனிதாக அமையட்டும். அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் மலர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் பிறக்கும் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலரட்டும்.

வலையுலக நண்பர்கள், நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

நன்றிகளுடன்

மாயா

Read more...

தொலைந்துபோன என் வலைப்பதிவு - உதவி தேவை

வணக்கம் அன்பிற்க்குரிய நண்பர்களே!
நீண்ட காலத்தின் பின் ஓர் பதிவு அதுவும் வலைப்பதிவொன்றை இழந்த சோகத்தோடு!..

ஆமாம் நண்பர்களே எனது பிரதானமான வலைப்பதிவான "மாயாவின் பதிவுகள் " என்ற வலைப்பதிவு இன்று காலையிலிருந்து இல்லாமல் போய்விட்டது! ( உண்மைத்தமிழன் அவர்களது வலைப்பதிவும் காணமல் போன சம்பவம் இதே நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது) இது தொடர்பாக Google நிறுவனத்திற்க்கு தகவல் அனுப்பியபோது அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிலை கொடுத்திருந்தனர்
Blogger's spam-prevention robots have detected that your blog has characteristics of a spam blog. (What's a spam blog?) Since you're an actual person reading this, your blog is probably not a spam blog. Automated spam detection is inherently fuzzy, and we sincerely apologize for this false positive.

We received your unlock request on December 1, 2009. On behalf of the robots, we apologize for locking your non-spam blog. Please be patient while we take a look at your blog and verify that it is not spam.
எனது அந்தப்பதிவு 3 வருடங்களுக்கு மேலாக எந்தவித பாதிப்புக்களுமின்றி முந்நூறிற்க்கும் அதிக பதிவுகளுடன் இயங்கி வந்தது. நேற்றுப்பார்க்கும்போது malware தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக இருந்தது. இன்று முழுவதும் இல்லாமல் போய்விட்டது. காரணம் நான் போட்டிருந்த திரட்டிகளின் கருவிப்பட்டை நிரல்களாலும் இருக்கலாம் என நினைக்கிறேன்....

ஆனாலும்...

என் பதிவை நான் கடந்த ஒருவருடமாக Backup செய்திருக்கவில்லை.. அப்படியானால் போனது போனது தானா ? இல்லை ஏதாவது செய்யமுடியுமா ? ? ?
யாராவது சொல்லுங்களன்

மீண்டும் அவ் வலைப்பதிவில் வலைபதிய முடியுமா ? ??

நண்பர்களே! என் மற்றைய வலைப்பதிவுகளை Backup எடுக்க விரும்புகிறேன் யாராவது சிறந்த முறையைக் கூறினால் என் மற்றைய வலைப்பதிவுகளை காப்பாற்றுவேன்..

நன்றிகளுடன்
மாயா

Read more...

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு


வணக்கம் நண்பர்களே,
இலங்கையில் பதிவர்சந்திப்பை இரண்டாவது தடவையாகவும் நடாத்தவேண்டும் என்கின்ற எம் அனைவரதும் ஆசை நிறைவேறப்போகின்றது.

இடம் : கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571/15, காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06

காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்
  • அறிமுகவுரை
  • புதிய பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 : பயனுறப் பதிவெழுதல்
  • கலந்துரையாடல் 2 : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
  • சிற்றுண்டியும் சில பாடல்களும்
  • கலந்துரையாடல் 3 : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமம்
  • கலந்துரையாடல் 4 : பெண்களும் பதிவுலகமும்
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
  • உங்களுக்குள் உரையாடுங்கள்
பதிவர்கள் தங்கள் வருகையை இங்கே சென்று பதிலிடுவதன் மூலமோ, தெரிந்தால் அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். அதன் சுட்டி இதோ !

இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

மேலதிக தகவல்களை இங்குசென்று பெற்றுக்கொள்ளலாம்... =>




Read more...

வேண்டுகோள்- பதிவர் சிங்கை நாதனுக்காக...

உலகெங்கும் இருந்து உதவிக்கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களின் உதவியால் நமது தேவையில் பெரும்பான்மையை அடைந்துவிட்டு மிகக் குறைந்த அளவு தொகைக்காக காத்திருக்கிறோம். மீகுதித் தொகையையும் அடைய அன்புடன் உதவுங்கள்.

தற்போது செந்தில் அண்ணண் நன்கு தேறி வருகிறார். உலகெங்கிருந்தும் அவருக்காக பிரார்திக்கும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.

இதோ அது குறித்து நர்சிம் அண்ணா எழுதிய பதிவு.

200 அடிப் பள்ளத்தை எப்படித் தோண்டப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் ராஜாவும் ஜோசப்பால்ராஜும் தோண்டத்துவங்கியவுடன்,மொத்தப் பதிவுலகமும் கை கோர்த்தது.விளைவு...170 அடி தோண்டியாகிவிட்டது. தோண்டியபள்ளத்தின் மணல்மேட்டில் அமர்ந்து நகம் கடித்துக்கொண்டிருக்கிறோம்.மீதமிருக்கும் 30 அடிகள் மிக முக்கியம். நீர் ஊற்று போல் மகிழ்ச்சி பொங்க இந்த இறுதி 30 அடிகள் தோண்டத் திராணி இல்லாமல் அமர்ந்திருக்கிறோம்.

இதுவரை உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி சொல்லிக்கொள்ளும் இதே தருணத்தில்...

ச்சே,உதவியிருக்கலாம் பிஸியாக இருந்துவிட்டோம் அல்லது சம்பளம் வாங்கியதும் உதவலாம் என்றிருந்தவர்களே...உங்களின் இந்த ஸ்லாக் ஓவர் ரன்கள் மேட்ச் வின்னிங் ரன்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஓர் இதயத்தின் துடிப்பில் பாதிப்பு என்றவுடன் பல்லாயிரம் இதயங்களின் துடிப்புகளின் படபடத்த பச்சைக் காகிதங்கள் சிங்கைநாதனின் மூச்சை சீராக்கியிருக்கிறது.முதல் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாய் முடிந்து விட்டதும் ஜோசப்பின் பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்(அது முதல் கட்ட அறுவை சிகிச்சையே..)

ஆம்...

உதவ நினைத்து,உதவ மனம் இருந்தும் பிஸியாக இருந்தவர்கள்...இன்னமும் ஒரு வாரத்திற்குள் உதவினால் உதவியாய் இருக்கும்,இறுதி கட்ட அறுவைசிகிச்சைக்கு.

சிங்கை நாதன் குறித்த அடுத்த பதிவை சிங்கை நாதனே இனி எழுத வேண்டும் என்ற பிராத்தனைகளுடனும் வேண்டுகோளுடனும்...

அனைவருக்கும் நன்றி.

1] ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

2] Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261

சிங்கப்பூர்
கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775

அமெரிக்கா
இளா - +1 609.977.7767

இந்தியா
நர்சிம் - +91 9841888663

அமீரகம்
ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா
ராஜா - +966 508296293


மேலதிக தகவல்கள்....

நன்றிகளுடன்
மாயா


Read more...

புதிய அத்தியாயத்தைத் தொடக்கவிருக்கும் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.

குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும்.. (வழமையான கொழும்பு நேரம் என்று தப்பாக நினைத்து யாரும் தயவு செய்து 9.30க்கு பிறகு வரவேண்டாம் என்று முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறது)


நிகழ்ச்சி நிரல்
  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
  • திரட்டிகள்
  • சிறப்பு அதிதி உரை
  • இடைவேளை
  • வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
  • வலைப்பதிவும் சட்டமும்
  • பதிவுலக அனுபவங்கள்
  • எதிர்காலத் திட்டங்கள்
  • கலந்துரையாடல்
  • நன்றியுரை

Read more...

பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

அது தொடர்பான பதிவு கே.வி.ஆர் அண்ணனின் வலைப்பதிவிலிருந்து தொடர்கிறது...
இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

Western Union மூலமாக பணம் அனுப்புபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டு அனுப்பியவர் பெயரையும் Money Transfer Control Number (MTCN)யும் karunanithi.muthaiyan@credit-suisse.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மேலதிக செய்திகள் : கே.வீ.ஆர் பக்கங்களில்...

நன்றி : கேவீஆர் பக்கங்கள்

இலங்கைப்பதிவர்களுக்கான குறிப்பு :-
சக வலைப்பதிவர் சிங்கை நாதன்
இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அவரின் இவ் வைத்தியச் செலவுகளுக்கான உதவிகளை சக பதிவர்கள் உலகெங்குமிருந்து உதவி வருகின்றனர்.

23ம் திகதி இலங்கை பதிவர் ஒன்றுகூடல் நடைபெற இருக்கும் அந்நாளில் இலங்கைப்பதிவர்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு தொகையை அன்றே திரட்டி
சிங்கை நாதன் அவர்களுக்கு அனுப்பினால் நல்லது. இதை ஏற்பாட்டுக்குழுவிலுள்ள யாரேனும் செய்யலாம். இன்றுவரை அவருக்கு தேவையான பணத்தேவையில் அரைப்பங்கு தான் சேர்ந்துள்ளது. எனவெ நண்பர்களே வரும் 23ம் திகதி இது தொடர்பாகவும் கலந்துரையாடுங்கள் நிதியைச் சேருங்கள். நண்பர் விரைவாக நலம்பெறப் பிரார்த்தியுங்கள்.

அறுவை சிகிச்சைக்கு பெரும் பொருளுதவி தேவைப்படுகிறது, பதிவர் நண்பர்கள் இயன்றதை அளித்தும், நீங்கள் அறிந்த சேவை அமைப்புகளிடம் பேசி பொருளுதவி பெற்றுத் தந்து நம்மில் ஒருவரான நண்பர் சிங்கை நாதனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும்.

நீங்கள் தருவது எவ்வளவு குறைவாக இருந்தாலும் கொடுங்கள்.

சிறுதுளி பெருவெள்ளமென உணர்த்துவோம்

இலங்கை வலைப்பதிவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளுடன்
மாயா

Read more...

கிறிஸ்மஸ் கால நினைவுகள்

கிறிஸ்த்துமஸ் வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான். பின்ன எங்களைப்போல அவர்களுக்கு [கிறீஸ்த்தவர்களுக்கு] வருடம் முழுவதும் பண்டிகைகள் இல்லை தானே.

யாழ்ப்பாணத்து கடைத்தெருக்களெல்லாம் தள்ளுபடி விற்பனைகளும் கூட்டங்களும் குவியத் தொடங்கி வர்ணவிளக்குகளுடன் களைகட்டத் தொடங்கிவிடும் கிறிஸ்மஸ் தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கண்களைப் பறிக்கும் அலங்காரங்களுடன், யாழ்ப்பாணம் அமர்க்களப்பட ஆரம்பித்து விடும் தெருவிலுள்ள ஒவ்வொரு கடையும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு பிரமிப்பூட்டும் வகையில், அலங்கார வேலைகள் செய்திருப்பார்கள் அது கடைகளுக்கு புது பொலிவையும், அழகையும் கொடுக்கும் ஆங்காங்கே கிறிஸ்மஸ் தாத்தா அமர்ந்து கொண்டு குழந்தைகளுடன் வியைளாடிக்கொண்டுமிருப்பார்.

நான் கிறீஸ்த்தலப்பாடசாலையில் படித்ததாலோ என்னவோ நண்பர்களில் அனேகர் கிறீஸ்த்தவர்கள் எனவே கிறிஸ்த்துமஸ் என்றால் எனக்கும் ஒர் பெருநாள் தான் கிறிஸ்த்துமஸ் மரங்களை அலங்கரிப்பதுவும் , இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் எனக்கு மிகவும் பிடித்தவையாகும். கிறிஸ்த்துமஸ் காலமென்றால் நான் படிச்ச யாழ் பரி யோவான் கல்லூரியில் {கிறிஸ்த்தலப்பாடசாலை தானே }பெரிய அமளியாயிருக்கும் மரத்தைசோடிக்கிறது சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தி அலங்காரப்படுத்துவது என களைகட்டும் . இவற்றுள் நான் பொதுவாக தலை வைப்பதில்லை ஏனெனில் எனக்கு மட்டுமன்றி என்போன்ற பலருக்கு கிறிஸ்த்துமஸ் காலத்தில் அடைக்கலம் தருவது என் வீட்டின் அருகாமையிலிருக்கும் சிறுவயது முதல் ஒன்றாய்த்திரிந்த நண்பன் கனி வீடுதான் கிறிஸ்த்துமஸ் நாளுக்கு முதல்நாளும் அடுத்த நாளும் எமது பொழுது அங்கேயே கழியும் { என்ன பகீ ஞாபகமிருக்குதே ? }

கிறிஸ்துமஸ் நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அழங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கம். மரத்தின் அருகில் குடில் போல் அமைத்து இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் வழக்கம் அதற்காக தூங்கும் பொம்மைகள் இருக்கும் பெட்டிகளை எடுத்து பத்திரமாக கீழே இறக்குவது ஒரு சுவாரசியமான வேலை. அவ்வாறு அவற்றை இறக்கும் பொழுது தான் சென்ற வருடம் செய்தவையெல்லாம் மனதில் ஓடும் இறக்கியவற்றை கழுவி காயவைத்து விட்டு வேண்டிய சவுக்கு மரங்களை வெட்ட பத்துப்பதினைந்து பேர்வரையில் கிளம்புவோம் சில நேரங்களில் அருகிலிருக்கும் தெருக்களிலே வேலைமுடிந்துவிடும் சிலநேரங்களில் எங்கள் கஷ்ட காலமெனில் வல்லிபுரம் கோவில் வரை செல்வதும் உண்டு [பிற் காலங்களில் அவ்விடம் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்ததால் ஊர்காவற்துறைப்பக்கமாக செல்லநேர்ந்தது]

வெட்டிக்கொண்டுவரும் மரங்களைக்கத்தரித்து ஒருவழியாக கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்படும் பின்னர் கலர் பல்புகளை தொங்கவிட்டு , அன்ன பிற பொருட்களையும் தொங்கவிட்டு விளக்குகளை எரியப்பண்ணும்போது இரவு 9.30 ஐத் தாண்டி விடும் அப்படியே வீட்ட வந்து சாப்பிட்டு விட்டு மறுபடி . . . .

இரவு பாடசாலை நண்பர்களுடன் பாசையூர் (பாசையூர் குருநகர் , அரியாலை போன்ற இடங்களில்
மற்ற இடங்களை விட கிறிஸ்தவ மக்கள் கொஞ்சம் அதிகம்)அந்தோனியார் கோவில் நத்தார் நள்ளிரவுப் பூசைத்திருப்பலிக்குப் போனால் அங்கே கோவில் ஒரே தீப அலங்காரமாய் ஜொலிக்கும்வாறவங்களும் புது உடுப்புங்களோட வந்திருப்பார்கள் ( நாங்க அதைப்பார்க்கத்தானே போறது ) பதினோன்றரை மணியிலிருந்து கரோல் கீதங்கள் பாட ஆரம்பித்து பாட்டும், பிரசங்கமுமா மாறி மாறி நடந்து . சரியா 12 மணி அடிச்சவுடனே 'மெர்ரி கிறிஸ்மஸ்' வாழ்த்துக்களும், சிறப்புப் பிரசங்கம், கிறிஸ்மஸ் பாட்டுக்கள் என்று கோலாகலமாக நடந்து முடியும் முடியவிட்டு அப்படியே ஊரெல்லாம் திரிந்து விட்டு வெடிகளைக் கொழுத்தி அமர்க்களப்படுத்திக்கொண்டு அடுத்த நாள் தான் வீடு திரும்புபோம் [அதுவரை சைக்கிள்ள ஊர்மேயுறது தான்]. மார்காழி மாத நிலவு பனை இடுக்குகளினூடு தெரியும் . அன்று தான் என்னவோ புதிய நிலவை பொழிவது மாதிரி இருக்கும் . நடுநிசியும் ஆயிட்டுது..... ஊர் என்னும் உறங்கவில்லை உறங்கப்போவதுமில்லை ஆங்காங்கே தூரத்தில் கிறிஸ்மஸ் பாப்பா சகிதம். கூட்டம் கூட்டமாய் வேதக்கார வீடுகளுக்கு சென்று..பாடல்கள் மூலம். கிறிஸ்து பிறந்த செய்தியை அறிவித்து கொண்டு இருப்பார்கள் [2000 வருசமாய் அறிவித்து கொண்டிருக்கிறார்களாம்..]

மறுநாள் கிறிஸ்மஸ் தினமன்று எல்லா கிறீஸ்த்தவ நண்பர்கள் வீடுகளிலுமே தடல்புடலாகச் சமையல் நடப்பதுண்டு. ஆகவே அவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு , அவர்களது விஷேஷ கவனிப்புகள் வயிற்றை நன்றாகவே நிரப்பி விடும், இதனால் வீட்டுச் சமையல் கேட்பாரற்றுக் கிடப்பதுமுண்டு . வீடு திரும்பும்போது அம்மா சமைத்ததை உள்ளே தள்ள முடியாமல் திணற, அம்மாவின் திட்டுக்களை சம்பாதித்ததும் இந்த நத்தார் காலத்தில்தான். . . .
இங்க ஒன்றைச்சொல்ல வேணும் நாங்க A/L படிக்கத்தொடங்குற காலத்தில தான் வெடிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்தன அதனால் திருநாட்களில் வெடிகள் கொழுத்துவது பெரும் குஷியைக் கொடுக்கத் தவறுவதில்லை.அதனால் தான் என்னவோ ஒருவரிடமும் அடியோ பேச்சோ வாங்குவதில்லை.

பதிவர்களே
யேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால் அவர் வருடாவருடம் தேவபாலனாய் அவதரித்து எம்மைக் களிப்பூட்டியபடிதானே இருக்கின்றார்? அப்படியானால் மரணித்து விட்ட என் நண்பர்கள் எப்பொழுது மீண்டும் ஜனிக்கப் போகின்றார்கள்
எனக்கு விடை தெரியவில்லை.
பி.கு : கடந்த வருட பதிவுகளில் எடுக்கப்பட்ட மீள் பதிவு

Read more...

தமிழக தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் நன்றி

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிகள் உபகண்டத்தையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, மாண்பிமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே!

முதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மரியாதையும் தெரிவித்துக்கொள்ள அனுமதியுங்கள்.

பாசத்திற்குரியவர்களே!

நீறுபூத்த நெருப்பென உள்ளேயே கனன்றுகொண்டிருந்த நீங்கள், குமுறும் எரிமலையாக வெடித்துவிட்டீர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒன்றாகக் கூடி - ஒருமித்த குரலில் - பலம் வாய்ந்த அரசியல் வார்த்தைகளில் - தமிழீழத் தமிழர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், அவர்களது சுபீட்சமான அரசியல் எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.

முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் திரண்டு, வரலாற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமன்றி, காத்திரமான செயற்பாட்டு முடிவுகளினாலும் உப-கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

கட்சிகளின் வரம்புகளைத் துறந்து, அரசியலின் முரண்பாடுகளை மறந்து, மாநிலத்தின் சுவர்களைக் கடந்து, நாட்டின் எல்லைக்கும் அப்பால் "இனத்தின் உணர்வால் இறுகப் பிணைக்கப்பட்ட தமிழர்கள் நாம்" என்பதை இந்த உலகிற்கு முரசறைந்து சொல்லிவிட்டீர்கள். "தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட வெறும் அரசியல் விளையாட்டு இது" என்று எள்ளி நகையாடியவர்களின் முகங்களில் அவமானத்தைப் பூசி விட்டீர்கள்.

மாண்புமிகு முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள், ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் தலைவனாக - தமிழினத்தின் நிபந்தனையற்ற காவலனாக - அவரது உண்மையான அவதாரத்தை எடுத்து விட்டார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முதற்படியை எடுத்துள்ள நீங்கள், தமிழீழ மக்களின் தற்காலிகப் பிரச்சிக்கான தீர்வை நோக்கி அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டீர்கள். தமிழர்களுக்கு எதிரான போரை நிறுதவும், அவர்களுக்கு உணவும், மருந்தும் போய்ச் சேரவும், வாழும் இடங்களில் அவர்கள் நிம்மதியாய்க் குடியமரவும் - உருப்படியான காரியங்களைச் செய்யுமாறும், சிறிலங்கா அரசுக்கான அனைத்து இராணுவம்- சார் உதவிகளை நிறுத்துமாறும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் போட்டிருக்கும் நீங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்கால நிம்மதியைக் கொடுத்திருக்கின்றீர்கள்.

தமிழக மக்களின் குரலும், தமிழகத் தலைவர்களது செயலும், தமிழகத்தின் சக்தியும் -

- தமிழீழ மக்களுக்கு சுதந்திரத்தின் ஒளியைக் காட்டியிருக்கின்றது!

- "தமிழகம் எமக்காகப் பொங்கி எழாதா?.. தமிழகத் தலைவர்களும், கலைஞர் ஐயா அவர்களும் எமக்கு விடுதலையைப் பெற்றுத் தர மாட்டார்களா?.." என்று ஏங்கியிருந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தந்திருக்கின்றது.

- "தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஏனென்று கேட்க ஆளே இல்லை!" என்று இறுமாந்திருந்த சிங்களப் பேரினவாதத்திற்கு சினத்தையும் அச்சத்தையும் ஊட்டியிருக்கின்றது.

- எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத் தமிழர்களின் அழிவை - தமது சொந்த நலன்களுக்காக - கைகட்டிப் பார்த்து நிற்கும் அனைத்துலக சமூகத்திற்கு அதிர்ச்சியளித்திருக்கின்றது.

வரலாற்று மாற்றங்கள் அரங்கேறுகின்றன. நம்புதற்கரிய திருப்பங்கள் நிகழ்கின்றன. ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்ற இருக்கைகளையே பணயம் வைக்கின்றது தமிழகம். நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தவிக்கின்றது தமிழீழம். பெருமிதத்தோடும், திமிரோடும் நிமிர்கின்றான் தமிழன்.

எமது அன்பான தமிழகத்து உறவுகளே!

தமிழீழ மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் எல்லையற்ற பாசத்தையும், அக்கறையையும், அவர்களுக்காக நீங்கள் சந்தித்த இடர்களையும் நாம் அறிவோம். ஆட்சியை இழக்கும் சூழல் வந்த போது, சொந்தக் குழந்தைகளுக்காகத் துன்பங்களைத் தாங்கும் ஒரு தந்தையாக அதைப் பொறுத்துக்கொண்ட கலைஞர் ஐயாவையும், சிறையில் வாடும் துயரம் நிகழ்ந்த போது, சொந்தச் சகோதரர்களுக்காக அதையும் ஏற்றுக்கொண்ட தலைவர்களையும், இன்னும் எத்தனையோ வழிகளில் எமது சுமைகளைச் சுமந்த அனைவரையும் நாம் என்றும் மறவோம். எங்கள் நெஞ்சங்களின் மிகச்சிறந்த இடமொன்றில், நன்றியுணர்வுடன் உங்களை நாம் அமர்த்தியிருக்கின்றோம்.

தமிழினத்தினது வரலாற்றின் மிகவும் உச்சமான ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இன்று இருக்கின்றோம். சரியான திசையில் தன்னை நகர்த்திச் செல்வதற்காக - காலத்திற்குக் காலம் - ஒப்பற்ற மனிதர்களை வரலாறு பிறப்பிக்கின்றது. அவர்களைத் தான் நாம் வரலாற்று மனிதர்கள் என்கின்றோம். அத்தகைய ஒரு மகோன்னதப் பிறப்பை கலைஞர் ஐயா அவர்களுக்குக் கொடுத்த சரித்திரம், இப்போது அவரை மிகச்சரியான இடத்தில் அமர்த்தியிருக்கின்றது.

தென்னாசியாவையே அசைக்கும் வல்லமையை அவருக்குக் கொடுத்திருக்கின்றது. அவரது அறிவு ஞானமும், அரசியற் செல்வாக்கும் தமிழர்களுக்கென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்கி, தமிழீழத்தில் துன்பத்தில் உழலும் எம் உறவுகளுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தவை. தமிழீழ மக்களின் சுதந்தரத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, அவருக்குப் பலம் சேர்த்து,

அவரை உற்சாகப்படுத்தி, தமிழினத்தைத் தாங்கும் தூண்களக நீங்கள் எல்லோரும் விளங்க வேண்டும் என்று நாம் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலும், தமிழினத்தின் நிரந்தரக் காவலனாக கலைஞர் ஐயா என்றும் இருக்கின்றார் என்பதை, தமிழினத்தின் பகைவர்களுக்கும், இந்த உலகிற்கு அவர் உணர்த்த வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

அன்பானவர்களே!

இப்போது - தமிழீழ மக்களுக்கு ஓர் தற்காலிக நிம்மதியைக் கொடுக்க ஆணித்தரமான முயற்சிகளை எடுத்துள்ள நீங்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் நிரந்தர விடுதலை பெறவும் ஆவன செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, அந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறி, சுதந்திரமக வாழ ஆவன செய்ய வேண்டும்.

"சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாதெனின், தமிழர்கள் பிரிந்து போவதே சரி" என்பதே கலைஞர் ஐயா அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடும், தமிழகத் தலைவர்களாகிய உங்களில் பலரது வெளிப்படையான நிலைப்பாடுமாகும். உங்களது அந்த நிலைப்பாட்டுக்கு ஓர் அரசியல் அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்கவேண்டும் என்றும், தமிழீழத் தமிழர்களின் துன்பங்களுக்கு "தமிழீழத் தனியரசு" தான் சரியான ஒரே தீர்வு என்ற ஒரு தீர்மானத்தை தமிழக மக்களவையிலே நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்தியாவில் இருக்கும் தடையை நீக்கி, ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வழி பிறக்கச் செய்ய வேண்டுமென்றும் பணிவன்புடன் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

நீங்கள் எல்லோரும் இப்போது எடுத்துள்ள முயற்சிகள் ஒர் ஆரம்பம் தான் என்பதை நாம் அறிவோம்: தமிழீழ மக்களுக்கு நிரந்தரமான விடுதலையைப் பெற்றுத்தரும் வரை தமிழகம் ஓயாது என்பதையும் நான் அறிவோம்.

ஒரே இரவில் அதிசயங்களைப் படைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்: நம்பிக்கையோடு காத்திருக்கின்றது ஈழத் தமிழினம்.

நன்றி கலந்த மரியாதையுடன்,
இலங்கை தமிழ் சங்கம் - ஐக்கிய அமெரிக்கா
மின்னஞ்சல் : president@sangam.org

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : புதினம் இணையம்

Read more...

நல்லைக்கந்தன் இரதோற்சவம் [ புகைப்படங்கள் ]

இன்று காலை நடைபெற்ற நல்லைக்கந்தன் தேர்உற்சவப்படங்கள் இவை வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து இரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.







Read more...

யாழ் நல்லூர்க்கந்தனுக்கு திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06.08.2008) 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் நாள்வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை என்ன திருவிழா என்னமாதிரி நடக்குமனெ தெரியாதுள்ளது

எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 23ஆம் திகதி மாலை 5 மணிக்கு கார்த்திகைத் திருவிழாவும் 25ஆம் திகதி காலை 7 மணிக்கு சந்தான கோபாலர் திருவிழாவும் இடம்பெறும்.
25ஆம் திகதி மாலை 5 மணிக்கு கைலாச வாகனமும் 26ஆம் திகதி காலை 7 மணிக்கு கஜவல்லி மகா வல்லி உற்சவமும் மாலை 5 மணிக்கு வேல் விமானமும் இடம்பெறும்.
27ஆம் திகதி காலை 7மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும் அன்று மாலை 5 மணிக்கு ஒருமுகத் திருவிழா வும் இடம்பெறும். 28ஆம் திகதி 23ஆம் திருவிழா. மாலை 5 மணிக்கு சப்பரம் இடம்பெறும்.
29ஆம் திகதி 24ஆம் திருவிழா. அன்று காலை 7 மணிக்குத் தேர்த்திரு விழா இடம்பெறும். ஆறுமுகப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராகத் தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார். 30ஆம் திகதி சனிக்கிழமை 25ஆம் திருவிழா. காலை 7 மணிக்குத் தீர்த்தம் இடம்பெறும்.
31ஆம் திகதி பூங்காவனமும் முதலாம் திகதி வைரவர் சாந்தியும் இடம் பெறும்.
ஆலய வீதிகளில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயற்பாடுகளும் நிறைவ டைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

எண்பத்து முன்று ஜூலை 25 வருடங்கள் பூர்த்தி

இன்று ஜுலை 23 83 ம் ஆண்டு ஜுலை 23 தமிழ் நெஞ்சங்களை சிங்களக் கைகள் கிளித்துப்பந்தாடிய கொடூரமான நாள் தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட (400-3000 பேர்வரை, உறுதி செய்யப்படவில்லை) துன்பவியல் நிகழ்வாகும்.

பழையபதிவுவு ஒன்றின் மீள்பதிப்பு . . .

யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.இதனை
கானாபிரபா அண்ணா தனது பழைய பதிவு ஒன்றில் பதிந்திருந்தார் கானாபிரபா அண்ணா என் அன்பார்ந்த நன்றிகள்

நன்றி சோழியன்

மிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 25 ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும் அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும். ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.


அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள 'தில்லீஸ் குறூப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன். 'தில்லீஸ் குறூப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்டல்" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும். அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.


மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, 'தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.'தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.மாதக் கடைசி. கையில் பணமில்லை.வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த 'ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த 'ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.அந்த 'ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய 'சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த 'சூட்கேஸின்" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.எனினும் என்ன பயன்?எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த 'ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.அது திறக்கப்படவில்லை.மீண்டும் வீட்டை அடைந்தேன்.


எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து 'ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.கல்கிசையில் அமைந்திருந்த 'தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான 'ஹோட்டல்" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.அவர்களின் பின்னால் 'ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம்.


அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.இராணுவத்தினர் 'ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், 'ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.


வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள்.ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.ஓடினால் 'தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள்.நடையின் வேகத்தை அதிகரித்தேன்.எனினும் கல்கிசைக்கு இன்னும் து}ரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுடே தெரிந்தது.அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.இரவு எட்டு மணியிருக்கும்.முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லு}ரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடு கூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.ஒரு சம்பவம்...ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.
இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா? யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம். பசித்தது. துறைமுகத்தில் சாப்பாட்டுப் 'பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள். 'இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.
நன்றி சோழியன்
மிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 24ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும்அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும்.

அன்பர்களே! 83 யூலை மாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா? 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்ன?யூலை 83... என்று நினைத்துக் கலங்கிவிட்டுச் சும்மா இருக்கும் நேரமல்ல இது. உரிமையிழந்து பின்னர் உடமையிழந்து, இப்போது உயிர் கொடுத்துப் போராடுகின்ற எமது இனத்தின் உணர்வுகளுக்கு நம் தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. . நாளைப் பொழுது தமிழர் வாழ்வில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாமும் நமது கடமையைச் செய்திட வேண்டுமல்லவா


Read more...

மிருகவதை !

மிருகங்களை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி வாழவேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன்?


Read more...

மீண்டும் வந்தேன்

வணக்கம் அன்பு வலையுலக நண்பர்களே மீண்டும் உங்களை தாயகத்திலிருந்து பிரிந்து வேறொரு நாட்டிலிருந்து [ UK ] சந்திப்பதில் மகிழ்ச்சி .என்னதான் இலங்கையை விட்டுவந்தாலும் எப்போதும் எம்நாடு இலங்கை தான் . புதிய நாடு புதிய கலாச்சாரம் எல்லாவற்றிறிகும் ஈடுகொடுத்து மீண்டும் வலையுலகில் பிரவேசிக்க சிறிது காலம் எடுக்கும் . அதுவரை நன்றிகள் . குறிப்பாக தாயகநண்பர்களுக்கு நன்றிகள் .நேரமின்மையால் சிறியளவில் எழுதியுள்ளேன். விரைவில் தொடர்ந்து எழுதுவேன்.


நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா

Read more...

அன்னையர் தினம் !

அன்னையர்கள் அனைவரையும் தாழ் பணிந்து வணங்குகிறேன் இந்நாளில் உலகத்திள்ள அனைத்து அன்னையருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் .

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்..
அம்மாவை வாங்க முடியுமா..'
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா

உன்னையும் என்னையும் படைச்சது இங்க யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்குதுன்னா தாயடா

'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்..
அம்மாவை வாங்க முடியுமா..'
நீயும் லா லா லா லா .....

பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்தே பசி மறப்பா

இளவட்டம் ஆனபின்னும் எண்ணைய் தேச்சு குளிக்க வைப்பா
உச்சிமுதல் பாதம் வரை உச்சுக்கொட்டி மகிழ்ந்துடுவா

நெஞ்சுல நடக்கவைப்பா நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சு விரல் நகம் கடிப்பா பிள்ளை எச்சு சோறு திம்பா

பல்லு முளைக்க நெல்லு முனைய மெல்ல மெல்லாதான் கீறிடுவா

உன்னையும் என்னையும் படைச்சது இங்க யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்குதுன்னா தாயடா

'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்..
அம்மாவை வாங்க முடியுமா..'
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

மண்ணுல ஒரு செடி மொளைச்சா மண்ணுக்கது பிரசவம் தான்
புள்ளை தேற துடிதுடிச்சா அன்னைக்கது பூகம்பம் தான்..

சூரியன சுத்திகிட்டே தன்னைச்சுத்தும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்துக்கொள்ளும் தாய்மையம்மா

கற்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
கிளைபோல் அவள் இருப்பா விதையா உன்னை வளர்ப்பா

என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

உன்னையும் என்னையும் படைச்சது இங்க யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்குதுன்னா தாயடா

'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்..
அம்மாவை வாங்க முடியுமா..'
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா
உன்னையும் என்னையும் படைச்சது இங்க யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்குதுன்னா தாயடா

Read more...

பத்திரிகையாளர் சிவராம் மறைந்து இன்றுடன் வருடம் 3

ஊடகத்துறையில்
உண்மைக்காய்
போராடிய தராக்கி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம்
எம்மைவிட்டு மறைந்து இன்றுடன் வருடங்கள் மூன்று
அவர்களுக்கு எனது 3வது ஆண்டு கண்ணீர் அஞ்சலிகள்......

மேலும் தகவல்களுக்காக =>
அன்பான வாழ்க்கை - சிவராமுக்காக...........

Read more...

நீங்களும் ஒரு செய்தியாளராகலாம்!

நீங்கள் செய்தியாளராக விரும்புகிறீர்களா ? அப்படியானால் இதோ இலகுவான முறை உங்களுக்காக ! உங்களிடம் இருக்கும் வீடியோஒளிப்பதிவுகள்,ஒலிப்பதிவுகள் மற்றும் செய்திகளை இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி இணையத்தளத்தினூடாக நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்களின் கணினியின் முன் இருந்தவாறே UXPRESS க்கு சென்று உங்களின் செய்திகளை தரவேற்றம் செய்ய பயன்படுத்தலாம்.

Read more...

இலங்கையில் மீண்டெழுந்த சூரியன் FM

இலங்கை அரசினால் கடந்த 5மாதகாலமாக தடைசெய்யப்பட்டிருந்த ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்(Asia broadcasting cooperation) சூரியன்FM வானொலி சேவை மீண்டும் தனது சேவையை 15-04-2008 முதல் ஆரம்பித்துள்ளது ! பழைய குரல்கள் பல இல்லாவிடினும் மீண்டும் அதே தரத்துடன் நிகழ்ச்சிகள் நடைபெறுவது சூரியன் அபிமானிகளை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP