மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் பார்வையில் இலங்கைவலைப்பதிவர் திரட்டி
கடந்த வியாழக்கிழமை 22 2008 அன்று இலங்கையிலிருந்து வெளிவரும் மெட்ரோநியூஸ் பத்திரிகையில் இலங்கைவலைப்பதிவர் திரட்டி பற்றிய ஆக்கம் ஒன்று வெளிவந்துள்ளது இச்செய்தியை இலங்கைவலைப்பதிவர்கள் , உலகெங்கும் பரந்திருக்கும் தாயக நெஞ்சங்கள் மற்றும் இந்தியவலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
இலங்கைப்பதிவர்களுக்கென தனிப்பட்ட திரட்டியொன்றை உருவாக்கும் எண்ணம் உருவாகி முதலில் இலவச சேவை வழங்குனர்களிடமிருந்து சேவையைப்பெற்று அதற்கான ஆரம்பகட்டவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலே பத்திரிகையின் கண்களில் இத்திரட்டி பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது
இதன்முலம் இலங்கைப்பதிவர்களாகிய எங்களுக்கு தனியானதும் சிறந்ததுமான இலங்கைவலைப்பதிவர்களுக்கான திரட்டியை உருவாக்கிமுடிக்கும் எண்ணம் இன்னும் வலுப்பெற ஆரம்பித்துள்ளது
அந்தவகையில் திரட்டி ஆரம்பித்த நாளில் இருந்து தொடங்கி இன்றுவரை பேருதவி புரிந்துவரும் அனைவரையும் நன்றியோடு நினைப்பில் வைத்திருக்கின்றேன். ஒருவரா இருவரா விரல் விட்டுச் சொல்ல..?
எல்லா நண்பர்களின் உற்சாகப்படுத்தலுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத்தேரிவிக்கிறேன்
இன்னும் கடக்கவேண்டியது நீண்ட தூரம் அல்லவா:-)
நன்றி
பத்திரிகையில் கண்டெடுத்துத்தந்த நிர்ஷனுக்கு நன்றிகள்
8 பின்னூட்டம்(கள்):
வாழ்த்துக்கள் மயூரன்.
இலங்கை வலைப்பதிவர்களை ஒன்றிணைக்கும் நோக்கம் ஆரம்பகாலத்திலிருந்தே உங்களுக்கு இருந்துவருகிறது.இது ஒரு வித்தியாசமான திருப்பம். இலங்கை வலைப்பதிவர்களும் ஒன்றிணைந்து நமது திறமைகளை வெளியுலகுக்கு வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மெட்ரோவுக்கு நன்றிகள்.
மாயா!
கலக்குங்க!
// இலங்கை வலைப்பதிவர்களை ஒன்றிணைக்கும் நோக்கம் ஆரம்பகாலத்திலிருந்தே உங்களுக்கு இருந்துவருகிறது.இது ஒரு வித்தியாசமான திருப்பம். இலங்கை வலைப்பதிவர்களும் ஒன்றிணைந்து நமது திறமைகளை வெளியுலகுக்கு வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் //
ஓருமுறை இலங்கையிலிருந்து பதியும் 5போர் சந்தித்ததுக்கே எவ்வளவு பிரச்சினைவந்தது தெரியும் தானே ?
யோகன் அண்ணா வரவுகளுக்கு நன்றி
மாயா
வாழ்த்து!!!
'ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருந்தபோதும்' என்று கட்டுரை சொல்கிறது. 'ஈழத்தவர்களில்' ஆயிரக்கணக்கானவர்கள் வலைப்பதிகிறார்களா?
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது மாயா.
மிகவும் நன்றிகள்.
// வசந்தன்(Vasanthan) said...
வாழ்த்து!!!
'ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருந்தபோதும்' என்று கட்டுரை சொல்கிறது. 'ஈழத்தவர்களில்' ஆயிரக்கணக்கானவர்கள் வலைப்பதிகிறார்களா?
// அப்படி இல்லை அண்ணா ஏதோ எழுதவந்து இதை எழுதிவிட்டார்களே
எம்.ரிஷான் ஷெரீப் வரவுகளுக்கு நன்றி
மாயா
//'ஆயிரக்கணக்கான பதிவர்கள் இருந்தபோதும்' என்று கட்டுரை சொல்கிறது. 'ஈழத்தவர்களில்' ஆயிரக்கணக்கானவர்கள் வலைப்பதிகிறார்களா?//
நல்ல கேள்வி... எல்லாத்தையும் கூட்டி கூட்டி சொல்வது நம்மவர்களுக்கு பழக்கமாகி போய் விட்டது...
தினக்குரலில் சமீப காலமாக வந்து கொண்டிருக்கும் வலைப்பதிவர்கள் பற்றிய பத்தியும் அப்படித் தான் செய்கிறது..
வாழ்த்துக்கள் மாயா!
Post a Comment