காரைநகரீந்த மைந்தன் தி.மகேஸ்வரனுக்கு அஞ்சலிகள்
நல்லார் மனதில் கைத்தல நித்திலமே
ஆரைமேற் பூசாய் ஆரோகணித்த அரசியல் வாதியே
எல்லாப்புகழுக்கும் ஏற்றவா எங்குற்றாய்
இந்தாண்டு பாராளமன்றத்தில் நீசெய் இடியுரை
எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுப்பாய் செய்தமை
மின்னல் கீற்றாய் மாற்றாரை முட்டியடித்ததோ காண்
சொல்லாமல் கொள்ளாமல் டக்கெனச் சென்றாயோ
உள்ளமது திறந்து பேசி ஊரோடுறவாடி
கள்ளமில்லா அன்பால் கனிவாக சுகம் கேட்பீரையா
எள்ளவும் எண்ணவில்லை உன்சரண நாளிதனை
மெள்ளவுனை அழைத்தானோ பொன்னம்பலவாணேசன்
இந்து மதத்தின் இணையில்லாக்காவலனே
நந்தம் தமிழினத்தின் துயர் களைந்த நேயனே
சந்ததம் சிவத்தமிழை சிந்திக்கும் சாகரனே
உந்தனைப்போலினியெவர்ரெமக்கு உதவுவார்
அறநெறி வாழவைத்தாய் அன்பு நெறி ஓங்க வைத்தாய்
திறநெறி சூழவைத்தாய் தெர் புதிதாய் ஓடவிட்டாய்
மறநெறி மாள வைத்தாய் மன் நெறியை ஏந்த வைத்தாய்
குறள் நெறியைக்கைக்கோண்டாய் குற்றமென்ன செய்தாய் சூடுற
ஈழத்து சிதம்பரனை இறுதிநாள்வரை நினைத்து
மாழாக்க மில்லா மண்ணக வாழ்வு வாழ்ந்த மகேஸ்வரா
வையத்துள் உன்வாழ்வு வரலாறாய் ஆனதால்
தெய்வத்துள் நீயிருப்பாய் தினம் தினமுன் பேரிருக்கும்
ஆக்கம்
சிவயோகச்செல்வர்
சாம்பசிவம் சிவாச்சாரியார்
2 பின்னூட்டம்(கள்):
// இந்தாண்டு பாராளமன்றத்தில் நீசெய் இடியுரை
எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுப்பாய் செய்தமை
மின்னல் கீற்றாய் மாற்றாரை முட்டியடித்ததோ காண்
சொல்லாமல் கொள்ளாமல் டக்கெனச் சென்றாயோ
கோடி கோடியாய் சம்பாதிச்சவர் தானே....
இந்தின கப்பல் ஓடுது....
நல்ல காசு....
இதல்லாம் எங்கட தமிழ் மக்களின் வார்த்தைகள் தான். இன்னமும் எங்கள் மக்களுக்கு தமிழன் என்ற உணர்வு வரவில்லை. அன்பார்ந்த தமிழ பேசும் மக்களே, உங்களின் பரந்த மனப்பான்மை குணத்தை கொஞ்சம் குறைத்து விட்டு அழியப்போகும் தமிழினத்தை காப்பாற்றுங்கள். அவரிடம் எத்தனை கப்பல் எத்தனை கோடிஇருந்தாலும் உங்கள் பிள்ளை கைதானால் அவர் கைகட்டி நிற்கவில்லை. அவர் நினைத்திரந்தால் தமிழருக்காக பேசியிருக்கத் தேவையில்லை. மகிந்த வின் கூட்டனியில் சேர்நததிருக்கலாம். சம்பாதித்திருக்கலாம். நானும் அவர் சாவீட்டிற்கு சென்றேன். பறை மேளம் முழங்க எங்கள் கலாசாரப்டபடி நடந்தது. அநியாயமான இழப்பு. தமிழ் கட்சியில் இருந்து கொண்டு காசுக்காக எதையும் செய்யும் கேவலமான மலையகத் தலைவர்கள் போன்றோ, இந்தியாவின் இலங்கையின் காலடியில் நக்கித்திரியும் டக் சங் போன்று அவர் அவசரகாலத்திற்க ஆதரவு தெரிவிக்க வில்லை. இனவாதகட்சியில் இருந்துகொண்டு தமிழனாக வாழ்நதார். வீரத் தமிழனாக சாவடைந்தார்.
முக்கிய விடயம்: எனக்கு தெரிந்த ஒருவரிடம் கேட்டேன் அவர் ஓரு முன்னனி தமிழ் வியாபாரி ஒருவரின் சகோதரம். சொந்த ஊர் ஒரு தீவு. மகேஸ்வரின் செத்த வீட்டுக்கு போகவில்லையோ. இல்ல என்டு சொன்னார். எனக்கு விளங்க வில்லை. இன்னொருவரிடம் சொன்னன் அவர் சொன்னார். அவையள் வேலனணயோ என்டு? ஓம். எப்படி தெரியும் என்டு கேக்க. அவையளுக்க எப்பவும் வியாபாரப் போட்டி என்டு. நான் யோசிச்சன் என்ன திறத்தில நாங்கள் கரூ-நா வை பிரதேசவாதி என்டு திட்ட முடியும். கேவலம் 10 மைல் க்குள்ள இவ்வளவு பிரச்சனை. யாழ்பாணத்தான் தான் மிகக் கேவலமானவன்.
Post a Comment