iPhone, iPad க்கு உகந்த 'பொன்னியின் செல்வன்' நாவல் அறிமுகம்
அதே சமயம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி....
இதுவரை iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் வாசிக்கக்கூடிய வகையில் epub இல் உருவான தமிழ் மின் புத்தகங்கள் (Tamil iBooks) வெளிவந்ததில்லை. ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தாலும் தமிழை உள்ளிடும் முறைமையில் ஏற்பட்ட பல்வேறு பட்ட குறைபாடுகளால் / குழறுபடிகளால் இதுவரை (பிப்ரவரி 2011 வரை) தமிழ்மொழியில் எந்தவிதமான புத்தகங்களும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன்.
அண்மையில் செய்த சிறு முயற்சியால் தமிழில் முதலாவது iBook (epub format) உருவாக்கப்பட்டு பாவனைக்காக விடப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் வலையுலக நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். (இது வரை எங்கும் தமிழில் காணக் கிடைக்கவில்லை அதனால் தான் இந்த 'முதலாவது' வேறெங்காவது கண்டால் சொல்லுங்கள்.)
அந்தவகையில் உருவான புத்தகம் அமரர் கல்கி அவர்கள் எழுதிய ஒப்பற்ற சரித்திரப் புதினமான "பொன்னியின் செல்வன்" நாவலின் முதற் பாகமேயாகும் (புது வெள்ளம்).
மாதிரிப் படங்கள்
தரவிறக்கச் சுட்டிகள்
அவற்றை நீங்கள் தரவிறக்கக்கூடியவாறு இங்கே தொடுப்புக்களை இணைத்திருக்கிறேன் தரவிறக்கிப் பார்த்து உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்....
இந்தப் புத்தகத்தை உங்கள் iPod, iPad, iPhone இல் நிறுவும் முறை...
- மேலே உள்ள குறிப்பிட்ட இணைப்பில் .rar கோப்பை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்த பின்னர் அதனை திறந்து அதற்குள் உள்ள கோப்பை வெளியே எடுத்து கணனியில் உங்களுக்கு வசதியான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
- iDeviceஐ கணனியோடு இணைத்துவிட்டு உங்கள் கணனியில் உள்ள ஐரியுனில் books என்ற பகுதிக்கு சென்று அங்கிருந்து file - add to library க்குள் குறித்த கோப்புக்களை தெரிவு செய்து.. அதனை iTuneஇல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- பின்னர்.. உங்கள் iDeviceஐ sync பண்ணினால் குறித்த புத்தகத்தை ஐபொட்டில் புத்தகங்கள் அப்ஸில் காணலாம். அங்கிருந்து இந்தப் புத்தகத்தின் 1600 க்கும் மேற்பட்ட பக்கங்களை படிக்க முடியும்.
இம் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம். அதற்கு உங்கள் பின்னூட்ட அறிவுரைகளே உந்துகோலாக அமையும் என்பதைத் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
பி.கு : இவ்வாறான புத்தகங்களை உருவாக்குவதற்கு HTMLமொழியில் உங்களுக்குச் சாதாரண அறிவிருந்தாலே போதுமானதாகும்
நன்றி.
24-05-2011
தற்பொழுது நண்பர் தினேஷ் முழுப்பாகங்களையும் epub வடிவுக்கு மாற்றியிருக்கிறார். இங்கு சென்று தரவிக்கிப் பெற்றுக்கொள்ளுங்கள்.
24-05-2011
தற்பொழுது நண்பர் தினேஷ் முழுப்பாகங்களையும் epub வடிவுக்கு மாற்றியிருக்கிறார். இங்கு சென்று தரவிக்கிப் பெற்றுக்கொள்ளுங்கள்.
13 பின்னூட்டம்(கள்):
very nice.keep it up.
Thanks m8 :)
did u try ?
Thanks and plz proceed.. i will upload the file and let you know tomorrow
Nanri. Good job. Keep it up.
மாயா இது அன்ரோய்ட் வகைப் போன்களுக்கும் பாவிக்களாமா? நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பா
வந்தியண்ணா ! இதை அன்ரோய்ட் வகை செயலிகளில் பாவிக்க முடியாது :( ஏனெனில் தமிழ் யுனிக் கோட் இன்னும் அன்ரோய்ட் உடன் ஒத்திசையவில்லை !(ஆங்கில epub format புத்தகங்கள் வாசிக்கலாம்).
எனினும் சாதாரண "பாமினி" எழுத்துருக் கொண்டு உருவாக்க முடியுமென நினைக்கிறேன்... முயற்சி செய்து பார்க்கிறேன்....
வரவுகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்...
மிக்க நன்றி. என்னுடைய ஐடியூனில் புக்ஸ் தெரியவில்லை. இந்த சுட்டியில் சொன்னபடி செய்ததில் தெரிந்தது.
http://www.macworld.com/article/152681/2010/07/ebooks_itunes.htmlஇப்போது என்னுடைய புத்தக அலமாரியில் வந்தியத்தேவனும், குந்தவையும் வீற்றிருக்கிறார்கள்.
அந்தப் பொன்னி உங்களுக்கு அனைத்து நலங்களும் அருளட்டும் :-)
மிக்க நன்றி...
இல்லை மாயா அன்ட்ரோயிட்டில் ஒபேரா மினியில் யூனிகோட்டை வாசிக்கமுடியும். முயற்சி செய்யுங்கள்
மிக்க நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தம்பி
பொன்னியின் செல்வன்" நாவலின் இரண்டாம் பாகம் – சுழற்காற்று பதிவு இறக்கம் செய்ய பதிவு இறக்கம் http://kmdfaizal.blogspot.com/2011/03/blog-post.html
வருகை தந்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி
அனைத்து பாகங்களும் இங்கு தரவிறக்கலாம்
http://suriyand.blogspot.com/2011/05/iphone-ipad.html
Post a Comment