இலங்கைத்தமிழ் வீரர் முரளிக்கு வாழ்த்துக்கள்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 709வது விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ண் இனது 708 என்ற இலக்கை எட்டியதன் மூலம் புதிய தோர் உலக சாதனையை இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் தனது சொந்த ஊரான கண்டியில் நேற்று முறியடித்தார் இங்கிலாந்துக்கும், இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தச்சாதனையைப்படைத்தார்.
இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட்டை வீழ்த்தியதன் மூலம் 709 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இந்தச்சாதனையைப்படைத்தார். முரளியின் உலக சாதனையைத் தொடர்ந்து கண்டி மைதானத்தில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இலங்கை வீரர்கள், முரளியை கட்டிப் பிடித்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்த்தினர். ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இலங்கை முழுவதும் முரளியின் உலக சாதனையை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர். சாதனைக்கு பிறகு கருத்துவெளியிட்டுள்ள முரளீதரன் "சொந்த மண்ணில் தனது பெற்றோர்கள், மனைவி மற்றும் உறவினர்கள், கல்லூரி நண்பர்கள்
சூழ்ந்திருக்க இந்தச் சாதனையை படைத்ததிருப்பதால் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். "

முரளியின் சாதனைப் பட்டியல்
* டெஸ்ட் போட்டிகள் - 116 விக்கெட்டுகள் - 709

* 10 விக்கெட் வீழ்ச்சி - 20 முறை
* 5 விக்கெட் வீழ்ச்சி - 61 முறை.

முத்தையா முரளிதரனின் உலக்ச் சாதனையைப் பாராட்டி அரசு அவரது உருவம் பதித்த வட்டவடிவ தபால் தலை ஒன்றினை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இலங்கை அரசின் அதிபர், பிரதமர் ,எதிர்க்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களை முரளீதரனுக்கு தெரிவித்துள்ளனர்.


இது பற்றி கருத்துத்தெரிவித்த ஷேன் வார்ண் " தனது சாதனையை முறியடித்துள்ள முரளீதரன் ஆயிரம் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்" என்று ஷேன் வார்ண் தெரிவித்துள்ளார். "அவ்வாறு அவர் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தினால் அந்தச் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்."

முரளிதரன் சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் ராமமூர்த்தியின் மகள் மதி மலரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மதி மலர் முரளியின் சாதனையை நேரில் பார்த்து மகிழ்ந்தார்.

5 பின்னூட்டம்(கள்):

யோகன் பாரிஸ்(Johan-Paris)  

மாயா!
எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லை,எனினும் இவர் சாதனையை
பி.பி.சி யில் படித்த போது மகிழ்ந்தேன். தமிழ்மகனல்லவா???

மாயா  

நிச்சயமாக அவர் அதிசிறந்த " தமிழ்மகன் " தான்

சீனு  

வார்னேயை விட முரளியின் சாதனை மகத்தானது. வார்னே எடுத்துக் கொண்டது 145 ஆட்டங்கள். ஆனால் இவரோ 116 ஆட்டங்கள் மட்டுமே. மேலும் ஆட்டத்திற்கு 5வி/10வி மிக மிக அதிகம்.

இதையெல்லாம் விட, வெள்ளைக்கார ஆட்டக்காரர்கள் ஆசிய / கருப்பின வீரர்கள் சாதனை செய்தால் அதில் ஏதேனும் கரும்புள்ளி ஏற்பட கண்டிப்பாக ஏதேனும் செய்வர். அதன் காரணமாக முரளிக்கு எதிராக என்னவெல்லாம் செய்தார்கள். ஏன்? சச்சின், அக்தர் போன்றவர்களுக்கு எதிராகவும் தான். (காரணம் 'சர்' போன்ற பட்டங்கள் தரப்பட்டுவிடக்கூடாது என்றா?)இதையெல்லாம் தாண்டி முரளி சாதனை செய்திருக்கிறார் என்றால் இவர் தான் நிச்சயமாக 'அழகிய தமிழ் மகன்'.

மாயா  

// வெள்ளைக்கார ஆட்டக்காரர்கள் ஆசிய / கருப்பின வீரர்கள் சாதனை செய்தால் அதில் ஏதேனும் கரும்புள்ளி ஏற்பட கண்டிப்பாக ஏதேனும் செய்வர் // ஓர் ஆசிய விளையாட்டு வீரராக அவரின் சாதனை பாராட்டத்தக்கதே

வெள்ளைக்காரர்கள் ஆயிரம் குறை சொன்னாலும் அவமானப் படுத்தினாலும் கருமமே கண்ணாகச் செயல்பட்டு அத்தனை சோதனைகளையும் தாங்கி வெற்றிகொண்ட 'அழகிய தமிழ் மகன்' முரளிக்கு வாழ்த்துக்கள்

Anonymous,   

I wonder why people consider him as Tamil... Isn't he a Srilankan?

That brings another question, how come srilankan tamil guys like muralidharan came up in life well, when other srilankan tamil people say they are getting equal rights?

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP