தோழர்களே! இலங்கை வலைப்பதிவர்களை தாக்கி பதிவிடுவதை நிறுத்துங்கள் !

தமிழ் வலையுலகில் மிகமுக்கியமான ஓர் நபராகக் கண்க்கப்படும் ஒருவர் அவருடைய வலைப்புவில் " உங்களுக்கு தான் படம் போட்டு எழுதும் அளவுக்கு உங்கள் நாட்டில் சுதந்திரம் இல்லை யார் யாருக்கோ பயந்துக் கொண்டு பொத்திக் கொண்டிருக்கிறீர்கள். " என்றும் ஈழத்தமிழர்கள் முகம் காட்ட மறுப்பவர்கள் முகம் காட்டும் அளவிற்கு தைரியமில்லாதவர்கள் என்ற சாரத்துட்ன் பதிவிட்டிருந்தார் எனது இந்தப்பதிவு அவர் பதிவிட்டிருந்த அன்றே வந்திருக்கவேண்டும் ஆனால் 2ம் ஆண்டு பரீட்சகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாலும் நேரம் கிடைக்காமையாலும் பிந்தி பதிகிறேன் மன்னிக்கவும்

மூலப்பதிவு வாத்தியத்தேவன்
பதிவரே !
உங்களுக்கு உண்மையாகவே இலங்கைவாழ்தமிழர்களின் நிலை தெரியமா ? இல்லை நீங்களும் ஹிந்து போன்ற பதிதிரிகைகளை படித்துவிட்டு சும்மா போலியாக இலங்கை வாழ் தமிழர்களை ஆதரிக்கின்றீர்களா ? நாம் யுத்தம் என்ற அரக்கனால் உயிர்கள் உடைமைகள் இழந்து வாழ்பவர்கள் எங்களுக்கு உளளோன்று வைத்து வெளியிலோன்று கதைக்கத்தெரியாது வெளிப்படையாகச் சொல்கிறேன் எங்களுக்கு எங்கள் புகைப்படங்களை பதிவில்போட்டு எழுதுவதற்கு பயம் தான் ! அதற்கு இப்ப என்ன ?
நாங்கள் தினமும் எவ்வாறெல்லாம் கவனிக்கப்படுகிறோம் தெரியுமா . .
உதாரணத்திற்கு என்னை எடுத்துக்கோள்வேம் நான் படிக்கும் இடத்தில் இருந்து தான பதிவிடுகிறவன் நான் படிக்கும் இடத்தில் என்னுடன் சேர்த்து மொத்தம் 20 தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர் அனைவரினதும் இணையப்போக்குவரத்துக்கள் (தமிழர்களென்பதால் )தினமும் கண்காணிக்கப்படுகறது இது அனைவருக்கும் தெரியும் ஆனால் என்ன செய்வது ஏன் கண்காணிக்கிறீர்களென்று கேட்கவா முடியும் பேசாமல் தான் இருக்கவேண்டும்,
காரணம் . . . . . ஏனைய இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் அனைத்து தோழர்களுக்கும் தெரியும். அந்தமாதிரியான சூழலில் புகைப்படங்களை போட்டு எவ்வாறு விலாவாரியாக எழுத முடியும் சொல்லுங்கள் ? உங்களுக்கு நாம் அனுபவிக்கும் வேதனைகள் ஏதும் தெரியாது சிலவற்றை வார்த்தையினால் சொல்வதைவிட அனுபவித்தால் தான் தெரியும்.

உங்கள் பெயர் பிரபலமடைய எம்மை வம்புச் சண்டைக்கு இழுக்காதீர்கள். நீங்களோ சொகுசாக வாழ்ந்துகொண்டு எம்மைச் சீண்டிப்பார்க்கிறீர்கள். தயவு செய்து இப்படியான கீழ்த்தரமான வரிகளை எழுதாதீர்கள். பிரச்சனைகளை தீர ஆராயாமல் உங்கட பாட்டுக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதாதீர்கள் ஒரு விடயத்தை உறுதியாக அடித்துச் சொல்ல முன் அதுபற்றி ஆய்வு அல்லது கருத்துக்கணிப்புச் செய்து சொல்வதுதான் சிறந்தது. யாரோ ஒருவன் உங்களிடம் வம்பு செய்தால் உடனே முழு ஈழத்தவர்களையும் கேலி செய்யாதீர்கள்.

பதிவரே உங்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுது நீங்கள் வித்தியாசமானவர் என நினைத்தேன் ஆனால் ஒரு வரியின் மூலம் நீங்களும் சராசரியானவர் தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

தோழரே வலைப்பக்கங்களின் நீண்டநாள் வாசகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள்! இவன் யார் சின்னப்பையன் நம்மைச் சொல்வதற்கு என நினைக்க வேண்டாம்.
நினைத்தாலும் மகிழ்ச்சி.
நினைக்காமல் இருந்தால் சந்தோசம்.
இது சுதந்திரமான உலகம் அதற்காக ஒருவருடைய எண்ணமோ, எழுத்தோ, செயலோ அடுத்தவர் மனம் புண்படும்படியாக இருக்கக்கூடாது. ஆகவே இத்தகைய வீணான பதிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நல்ல பதிவுகளைத்தொடருங்கள்
என் மனதுக்குப் பட்டது போல் பலருக்கும் தோன்றியிருக்கலாம்!
ஆனால் இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து!
என்னுடைய கருத்துக்களை சிலர் ஆதரிக்கலாம்,
சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை. நான் உங்களை கண்டிக்கும் மனப்பாங்கில் சொல்லவில்லை. ஒரு நண்பனின் தோளில் கை போட்டு தோழமையுடன் பேசுவது போல் என் கருத்தை சொல்லியிருக்கின்றேன்
நன்றியுடன்

மாயா

74 பின்னூட்டம்(கள்):

Anonymous,   

You are true, I've seen some people like Rayakaran. They think they are the intelligent in the world but everyone know why thye doing like that. They don't have any sense, just for money they write everthing. Each publish he gets money. We've to ignore the beggars and fox. If you ready to give more money than srilanka govt he would write about you.

SELFISH, BEGGAR PEOPLE WONT CHANGE NEVER EVER. IGNORE THEM WHEN THEY SAY SOMETHING. HE WANTS TO TAMIL PEOPLE TO WASH SRILANKAN'S FEET. HE WILL DO THAT BUT NOT EVERYONE.

VAZHA TAMILEELAM .........

மாயா  

வருகைக்கு நன்றி

இவர்களைப்பற்றி இன்னும் எழுதுவேன் . . . .

Anonymous,   

Thanks for your welcome, Please write more about these fox people. we got to bell these fat cats, otherwise it will eat everyone. I'm from india but i can feel how people struggle in srilanka by srilankan's govt. They don't give any respect to Tamil. Tamils are not living just surviving for their life.

Some people think freedom just surviving in the world with fear of someone. That's not.

FREEDOM WON'T BE GIVEN. IS THERE ANY COUNTRY RULED BY BRITISH/ROMANS GET THEIR FREEDOM WITHOUT ANY FIGHT. DEPENDS THE RULER THERE ARE DIFFERENT WAY OF HANDLING THE RULER. INDIA STRUGGLE TO GET FREEDOM FOR MORE THAN A CENTURY. THAT'S THE REASON NOW WE NEXT GENERATION IS HAPPIER.

If we'd foxes like Big fat Cat(maya$karan) we would have been still ruled by british.

மாயா  

நீங்கள் சொல்லியவாறு விரைவில் நடைபெறும்

//Some people think freedom just surviving in the world with fear of someone. That's not.// உண்மைதான் . . .

kiddy ppl  

///பதிவரே உங்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுது நீங்கள் வித்தியாசமானவர் என நினைத்தேன் ஆனால் ஒரு வரியின் மூலம் நீங்களும் சராசரியானவர் தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். ///

அபிப்பிராயங்கள் மாறிக் கொண்டே இருப்பது! நீங்களாக ஒன்று நினைத்துக் கொண்டு தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவீர்கள். ஓர் சந்தர்ப்பத்தில் தூக்கி போட்டு மிதிப்பீர்கள். நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்! உங்களுடைய எல்லைக் கோட்டுக்குள் நான் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை தோழர்.

யோகன் பாரிஸ்(Johan-Paris)  

மாயா!
நானும் ஓர் ஈழத் தமிழன் என்பதால் தங்கள் நடைமுறைச் சிக்கலைப் புரிகிறேன்; அந்த நண்பர் உங்கள் பக்க நாயத்தை ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன்;
அடுத்து படத்தில் என்ன?? கிடக்கிறது...எழுதுவது வாசிக்கும் படி அடுத்தவர் மனம் நோகாவண்ணமும்;முகம் சுழிக்காவண்ணமும் இருக்க வேண்டியது முக்கியம் எனக் கருதுகிறேன்.

மாயா  

// படத்தில் என்ன?? கிடக்கிறது...எழுதுவது வாசிக்கும் படி அடுத்தவர் மனம் நோகாவண்ணமும்;முகம் சுழிக்காவண்ணமும் இருக்க வேண்டியது //

அப்படித்தான் நாங்கள் நினைக்கிறோம் . . .
ஆனால் அவர்கள் பார்வையில் நாங்கள் கோழைகள் . . .

அதற்கு நாம் என்ன செய்யமுடியும் :(

maruthamooran  

நண்பர் மாயா,
ஈழத்திலுள்ள நிலைமைகளும், அதன் விளைவுகளும் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே எமது காயங்களையும், வடுக்களையும் புரிந்துகொள்ள முடியும். மாறாக அவற்றின் அடிப்படை தெரியாமல் கருத்து வெளியிடுபவர்கள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எமக்கான இடத்தினை நாங்களே தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சில விஷமிகள் தங்களுக்கு தெரிந்த சில அரைகுறை விடயங்களை வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பார்கள், இவர்களை பற்றியெல்லாம் கவலை கொள்ள தேவையில்லை.

kiddy ppl  

///ஆனால் அவர்கள் பார்வையில் நாங்கள் கோழைகள் . . .

அதற்கு நாம் என்ன செய்யமுடியும் :(///

என்னை குறிப்பிட்டு பதிவு போட்டவருக்கு நான் கொடுத்த பதில் ஈழத்தில் இருக்கும் அனைவரையும் சேர்த்து சொன்னதாக நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

மாயா  

ஈழத்திலுள்ள நிலைமைகளும், அதன் விளைவுகளும் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே எமது காயங்களையும்,வடுக்களையும் புரிந்துகொள்ள முடியும். மாறாக அவற்றின் அடிப்படை தெரியாமல் கருத்து வெளியிடுபவர்கள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எமக்கான இடத்தினை நாங்களே தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சில விஷமிகள் தங்களுக்கு தெரிந்த சில அரைகுறை விடயங்களை வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பார்கள், இவர்களை பற்றியெல்லாம் கவலை கொள்ள தேவையில்லை.

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் நண்பா

Anonymous,   

//தமிழச்சி said...

என்னை குறிப்பிட்டு பதிவு போட்டவருக்கு நான் கொடுத்த பதில் ஈழத்தில் இருக்கும் அனைவரையும் சேர்த்து சொன்னதாக நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?//

இதை ஊகமாகக் கேள்வி எழுப்பாமல் நீங்களே உறுதிப்படுத்துங்களேன் தமிழச்சி?

உங்களுக்கு நிறைந்த உலக ஞானம் கைவர எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.

பெரியாரின் சிந்தனைகளையெல்லாம் நீங்கள் பதிவிட வேண்டிய கொடுமையை எங்கே சொல்லி வேண்டுவது?

maruthamooran  

நண்பர் மாயா,

/////பதிவரே உங்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுது நீங்கள் வித்தியாசமானவர் என நினைத்தேன் ஆனால் ஒரு வரியின் மூலம் நீங்களும் சராசரியானவர் தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.////

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் தான் நானும் நம்பியிருந்தேன். அதற்கு பின்னர் வெளியாகிய சில பதிவுகளும், அதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களும் பதில்களுமே என்னையும் கவலை கொள்ள வைத்தது. பெயரை பெற்றுக்கொள்வதற்கு என்னத்தை வேண்டுமானாலும் பதிவிடலாம் என்ற நிலையில் சிலர் அலைகின்றார்கள். விட்டுவிடுங்கள் பிழைத்து போகட்டும்.

kiddy ppl  

///பெரியாரின் சிந்தனைகளையெல்லாம் நீங்கள் பதிவிட வேண்டிய கொடுமையை எங்கே சொல்லி வேண்டுவது?///

முட்டாள்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கும். பழமைவாதிகளுக்கென்று ஒரு அறிவின்மை இருக்கும். அங்கே சென்று ஒப்பாரி வைத்துக் கொள்ளுங்கள்.

மாயா  

// வெளியாகிய சில பதிவுகளும், அதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களும் பதில்களுமே என்னையும் கவலை கொள்ள வைத்தது.//

வார்த்தைபிரயோகங்கள் பற்றி சொல்லத்தேவையில்லை @-)

மாயா  

Anonymous தமிழச்சி சொன்னது விழங்கியதா ? :-/

Anonymous,   

தலையிடியும், காச்சலும்
தனக்குத்தான் தெரியும்.

அவர்களுக்கும் வரும் போது,
அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்
வேதனையின் துன்பத்தை, துயரத்தை,
பிரிவுகளின் வேதனையை,
தொலைந்து போன அமைதி வாழ்வை.

Anonymous,   

//தமிழச்சி said...


முட்டாள்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கும். பழமைவாதிகளுக்கென்று ஒரு அறிவின்மை இருக்கும். அங்கே சென்று ஒப்பாரி வைத்துக் கொள்ளுங்கள்.//

அப்படியென்றால் தமிழச்சியின் பதிவு தான் மிகப் பொருத்தமானது.

maruthamooran  

நண்பர் மாயா,

////வார்த்தைபிரயோகங்கள் பற்றி சொல்லத்தேவையில்லை////

நான் மிகவும் எதிர்ப்பார்க்காத ஒன்று, அதுதான் பெரியவர்கள் சொன்னார்கள் அற அமர யோசித்து ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று.

kiddy ppl  

Anonymous said...

//தமிழச்சி said...

என்னை குறிப்பிட்டு பதிவு போட்டவருக்கு நான் கொடுத்த பதில் ஈழத்தில் இருக்கும் அனைவரையும் சேர்த்து சொன்னதாக நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?//

இதை ஊகமாகக் கேள்வி எழுப்பாமல் நீங்களே உறுதிப்படுத்துங்களேன் தமிழச்சி?///

நீங்களே சொல்லுங்கள் அனானி எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று!

மாயா  

நானும் அவரிடமிருந்து கடுமையான சொற்பிரயோகங்களை அனேகர் கூடும் பொதுவாக இடத்தில் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை :-O

மாயா  

// தலையிடியும், காச்சலும்
தனக்குத்தான் தெரியும்.

அவர்களுக்கும் வரும் போது,
அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்
வேதனையின் துன்பத்தை, துயரத்தை,
பிரிவுகளின் வேதனையை,
தொலைந்து போன அமைதி வாழ்வை.//

நிச்சயமாக :-w

Anonymous,   

//Anonymous தமிழச்சி சொன்னது விழங்கியதா ?///
விழங்கியது ., தமிழச்சி என்னை அவர் பதிவுகளைப் படிக்க / ஒப்பாரி வைக்க அழைக்கிறார்

Another Anonymous

kiddy ppl  

Anonymous said...

///தலையிடியும், காச்சலும்
தனக்குத்தான் தெரியும்.

அவர்களுக்கும் வரும் போது,
அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்
வேதனையின் துன்பத்தை, துயரத்தை,
பிரிவுகளின் வேதனையை,
தொலைந்து போன அமைதி வாழ்வை.///

புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து
தமிழர்களுக்கு கூட இப்போதிருக்கும் ஈழத்து சூழ்நிலைப் பற்றி பேச உரிமையில்லை. ஈழத்தை பற்றி பேச வேண்டுமானால் ஈழத்தில் இருப்பவன் தான் பேச வேண்டும். ஆனால் பேச முடியுமா? பேச விட்டுவிடுவார்களா?

பிரான்சிலேயே நடந்த நிகழ்ச்சிகளை புரட்டியும் மிரட்டியும் அடக்கு முறைகளை கையாண்டும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும் போது ஈழத்து நிலைமைப்பற்றி சொல்லத் தேவையில்லை. புகழுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. உண்மையை எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு வந்த எனக்கு நடந்த சங்கடங்கள் எவ்வளவோ? மொத்தத்தில் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை? இப்படிபட்ட புகழை யாராவது விரும்புவார்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வி.சபேசன் அவர்களுடன் கூட்டு சேர்ந்திருந்தால் இன்று டென்மார்க்கிலும், லண்டனிலும்,
ஜெர்மனியிலும் பெரியார் விழிப்புண ர்வு இயக்கத்தின் கிளைகள் திறக்கப்பட்டிருக்கும். புகழுக்காக என் லட்சியங்கள் குப்பை தொட்டிக்கு போயிருக்கும்!

தலைவி என்ற பதவியே இருக்கக் கூடாது என்று எண்ணுபவள் நான். தலைவன் என்று ஒருவன் இருந்தால் அவனுக்கு கீழே 10 முட்டாள்கள் இருக்க வேண்டும். தலைவனும்
அவர்களை முட்டாளாகவே வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு பகுத்தறிவும் தெளிவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் தனக்கு கீழே முட்டாள்கள் இருக்க அனுமதிப்பதில்லை.

மாயா  

சரி சரி . .
நீங்க ஏன் அனானியா வாரீங்க அதுக்கும் ஒரு நொட்டை
சொல்லுவார் ~X(

kiddy ppl  

Anonymous said...

//தமிழச்சி said...


///முட்டாள்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கும். பழமைவாதிகளுக்கென்று ஒரு அறிவின்மை இருக்கும். அங்கே சென்று ஒப்பாரி வைத்துக் கொள்ளுங்கள்.//

அப்படியென்றால் தமிழச்சியின் பதிவு தான் மிகப் பொருத்தமானது.///

முட்டாள் ஒப்பாரி வைக்கலாம். உன் வாழ்க்கையை ஒப்பாரி வைத்துக் கொண்டு தானே ஓட்டிக் கொண்டிருக்கிறாய்? அது உனக்கு பழகிப்போன ஒன்று தானே? என் பதிவுக்கு வந்து படித்துப்பார். ஒப்பாரி வைக்கிறாயா? மூளையை யோசிக்க வைக்கிறாயா என்று தெரியும்!!!!!!!!!

மாயா  

புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து
தமிழர்களுக்கு கூட இப்போதிருக்கும் ஈழத்து சூழ்நிலைப் பற்றி பேச உரிமையில்லை. ஈழத்தை பற்றி பேச வேண்டுமானால் ஈழத்தில் இருப்பவன் தான் பேச வேண்டும். ஆனால் பேச முடியுமா? பேச விட்டுவிடுவார்களா?


இந்த அளவிற்கு தெரிந்திருந்து எழுதும் நீங்கள் அன்று ஏன் அப்படியொரு பதிவை இட்டிருந்தீர்கள் :(

Anonymous,   

நானும் ஒரு ஈழத்தவன்

முதலில் படம் போட்டதை பற்றி பேசியது அல்லவா தவறு? விடைத்யதுக்கு வெளியில் விவாதத்தை நகாத்தியது ஏன்? என்ன நோக்கம்.? படம் போடுவதுக்குரிய சூழல், இலங்கையில் ஆயுதம் எந்திய எதத்தரப்பாலும் அச்சுறுத்தலுக்குரியதே. அதையா தமிழ்ச்சி சொல்லுகின்றா? அல்லது இதற்கு வெளியிலா?

kiddy ppl  

////மாயா said...

புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து
தமிழர்களுக்கு கூட இப்போதிருக்கும் ஈழத்து சூழ்நிலைப் பற்றி பேச உரிமையில்லை. ஈழத்தை பற்றி பேச வேண்டுமானால் ஈழத்தில் இருப்பவன் தான் பேச வேண்டும். ஆனால் பேச முடியுமா? பேச விட்டுவிடுவார்களா?

இந்த அளவிற்கு தெரிந்திருந்து எழுதும் நீங்கள் அன்று ஏன் அப்படியொரு பதிவை இட்டிருந்தீர்கள் ////

மாயா நீங்கள் என் பதிவை மட்டும் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள். அதன் தொடர்புடைய மற்ற பதிவுகளையும் குறிப்பாக என்னை தாக்கி எழுதியிருந்த பின்னூட்டங்களையும் படித்து பார்த்திருக்க வேண்டும். நான் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தேடி தேடி அவதூறாக பேசியிருக்கும் பின்னூட்டங்களை பார்த்து விட்டு எழுதிய பதிவு தான் அது!!! நீங்கள் என் பதிவை மட்டும் படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்வது நல்லதல்ல.

kiddy ppl  

/////நானும் ஒரு ஈழத்தவன்

முதலில் படம் போட்டதை பற்றி பேசியது அல்லவா தவறு? விடைத்யதுக்கு வெளியில் விவாதத்தை நகாத்தியது ஏன்? என்ன நோக்கம்.? படம் போடுவதுக்குரிய சூழல், இலங்கையில் ஆயுதம் எந்திய எதத்தரப்பாலும் அச்சுறுத்தலுக்குரியதே. அதையா தமிழ்ச்சி சொல்லுகின்றா? அல்லது இதற்கு வெளியிலா?////

அப்பதிவை எழுத காரணமாக இருந்த பதிவர். ஈழத்து தமிழர். ஆனால் ஈழத்தில் வசிக்கவில்லை. அவர் படம் போட்டு எழுதலாமே! ஈழத்து தற்போதைய சூழலில் படம் போட்டு எழுத முடியாது என்கிறீர்கள் சரி! புலம் பெயர்ந்து வாழும் இடத்தில் கூட தன்னை அடையாளப்படுத்த முடியவில்லை என்றால் என்ன காரணம்?

மாயா  

தாக்கி எழுதியிருந்த பின்னூட்டங்களையும் படித்தpருக்கிறேன்.
. . .
உங்களுக்கு அவதூறான பின்னூட்டங்கள் வந்திருந்தால் அவற்றை அகற்றியிருக்கலாம்தானே ? அதைவிடுத்து ஏன் ஈழத்தவரைப்பற்றி அவ்வாறு உங்கள் பதிவில் இட்டிருந்தீர்கள் :((



நேரமாகிறது வருகிறேன் தோழரே . . .

மாயா  

அனானியாரே பதில் சொல்லுங்கள் :(

kiddy ppl  

///மாயா said...

தாக்கி எழுதியிருந்த பின்னூட்டங்களையும் படித்தpருக்கிறேன்.
. . .
உங்களுக்கு அவதூறான பின்னூட்டங்கள் வந்திருந்தால் அவற்றை அகற்றியிருக்கலாம்தானே ? அதைவிடுத்து ஏன் ஈழத்தவரைப்பற்றி அவ்வாறு உங்கள் பதிவில் இட்டிருந்தீர்கள் ////

மாயா பின்னூட்டம் வந்தது எனக்கல்ல. நேரமிருந்தால் ......... ஆதரவான பதிவர்களின் பின்னூட்டங்களை போய் படித்துப்பாருங்கள்!

-/பெயரிலி.  

மாயா
இவ்விடுகையின் உள்ளடக்கத்துக்கான பின்னூட்டமல்ல இது.

இப்படியான பதிவுகளுக்கு அநாமதேயங்கள் உங்களுக்கு யார் யாரெனத் தெரியாதவிடத்து, அநாமதேயப்பின்னூட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இலங்கை வலைப்பதிவர்களைத் தாக்குவேதே தொழிலாகக் கொள்கின்ற அன்பர்கள் குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்க அநாமதேய நண்பர்களாகப் பதில்களையிடலாம். இதுதான் மேலே சில பின்னூட்டங்களைப் பார்க்கும்போது தெரிகிறது.

நன்றி.

குட்டிபிசாசு  

தோழர்களே என்று போடுவதற்கு பதில், தமிழச்சி என்று போட்டு இருக்கலாம். தெளிவாக இருந்து இருக்கும்.

தங்கள் தரப்பு நியாயத்தைப் புரிந்தவனாக!!

தேனுகா  

உதெல்லாத்தையும் தூக்கி பிடிக்காம கண்டுக்காமலே இருக்கிறதை விட்டிட்டு எதுக்குப்பா புதுசு புதுசா ஒவ்வொருத்தரா பதிவு போட்டுக்கொண்டு... ஆரம்பத்திலே இருந்து கண்டுக்காம இருந்திருக்கலாம்..
தனி மனிதத் தாக்குதலில் தான் எல்லாப் பெரிய பிரச்சினைகளும் ஆரம்பிக்கிறது... சீ..

ஒரு வகையில பார்க்கப்போனால் நீங்களும் இந்தப் பிரச்சினையில் உங்களைப் பற்றிய ஓர் விளம்பரத்தை கொடுக்க விழைகிறீர்களோ என்றே தோன்றுது..
தப்பா இருந்தா சொறி.. அதாங்க சாரி...

தமிழ்பித்தன்  

நான் 2005 வலைப்பூ ஆரம்பித்த போது நான் எனது முகத்தை காட்டிக் கொண்டேன் அப்போது ஒரு நப்பாசை பலர் நம் முகத்தை பார்கிறார்களே என்று (இது பார்க்கிற முகமா?) அப்போது பலர் தடுத்தார்கள் (வசந்தன், விஜே போன்றோர்)ஆனால் ஒரு நல்ல கருத்தை சொல்வதற்க்கு முகம் எதற்க்கு முகம் வெளி வருகிறதே என்றால் ஆங்கே புகழ் என்கின்ற ஒரு விடயமும் ஒட்டியே வருகிறது

வந்தியத்தேவன்  

//அபிப்பிராயங்கள் மாறிக் கொண்டே இருப்பது! நீங்களாக ஒன்று நினைத்துக் கொண்டு தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவீர்கள். ஓர் சந்தர்ப்பத்தில் தூக்கி போட்டு மிதிப்பீர்கள். நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்! உங்களுடைய எல்லைக் கோட்டுக்குள் நான் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை தோழர்//

இதோ மேலே உள்ள பின்னோட்டத்தில் தமிழச்சியின் திமிர் தெரிகின்றது அல்லவா?

மாயா சில ஜடங்களை என்ன செய்தாலும் திருத்தமுடியாது, விட்டுவிடுங்கள்.

நாம் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான் இனிமேல் திமிர் பிடித்தவர்களின் பதிவுகளை வாசிக்கவேண்டாம் அந்தப் பக்கமே போகவேண்டாம். அவர்களைப் புறக்கணிப்போம். இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லவிரும்பவில்லை.

வந்தியத்தேவன்  

மறந்துபோன சில வரிகள்:
இவர்களுக்கு எதிராக நாம் எழுதித்தான் சும்மா இருந்தவர்களை பெரிதாக்குகின்றோம். நடைமுறை உதாரணம் முன்னைய ரஜனிகாந்த் ஜெயலலிதா பிரச்சனை.
வேலியில் போகும் ஓணான்களைவிட்டுவிடுங்கள். அந்த ஓணான்கள் எம் பயிரை மேய்ந்தால் மட்டும் நாம் கைவைப்போம் அதுவரை அமைதி அமைதி அமைதி.

Anonymous,   

/***புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து
தமிழர்களுக்கு கூட இப்போதிருக்கும் ஈழத்து சூழ்நிலைப் பற்றி பேச உரிமையில்லை. ஈழத்தை பற்றி பேச வேண்டுமானால் ஈழத்தில் இருப்பவன் தான் பேச வேண்டும். ஆனால் பேச முடியுமா? பேச விட்டுவிடுவார்களா? **/

Yes...Thamizhchi you are 100% correct. If you have to talk about Tamilnadu....you should live in Tamilnadu.....

But you are not then why are jumping like a monkey....

You know Periyar in Books...we know him in person.

Since Kolathoor mani and Veeramani contacts you jumping like hell.

Onething understand Periyar lived as his policies. You donot have policies ...you mimick the periyar policies in paper & Internet and trying to act as mini periyar follower.

Did you ever been to Jail for against Jathi. Just for small pinch of someone you are jumping like a DOG.

As a long as you will get publicity (biscut) you can Jump

ILA (a) இளா  

மாயா, இலங்கைத்தமிழர்கள் பற்றி விலாவாரியாக தெரியாவிட்டாலும், உங்களின் எனக்கும் தெரியும் அன்பரே. உங்களின் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறேன். இலங்கைப் பதிவர்களின் நிலைப்பற்றியும் அறிவேன். ஆதலால் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.

Anonymous,   
This comment has been removed by a blog administrator.
மாறன்(maran)  

தமிழிச்சிக்கு சுய விளம்பரம் தேவைப்படுகின்றது என்பது புரியக்கூடியதாக உள்ளது தமிழிச்சி அவர்களே ஈழப்போராட்டம் ஒண்டும் தண்ணீர் சண்டையோ தெருச்சண்டையோ இல்லை வாழ்வு போராட்டம் இலட்சகணக்கான உயிர்களை கொடுத்த போராட்டம் சில தமிழின துரோகிகளின் அரசியல் சித்துவிளையாட்டுக்காக தலித் அமைப்பு என உருவாக்கி இந்திய தலித் சகோதர்களை எமக்கு எதிராக திருப்பும் முயற்சியே அந்த பிரான்ஸ் மாநாடு

தமிழிச்சியே பிரான்ஸில கூட்டங்களுக்கு போய் நீங்கள் ஒன்றும் செய்திடப்போவதுமில்லை உங்களது பதிவினை ஈழத்தமிழன் என்ற ரீதியில் கடுமையாக கண்டிகின்றேன்

ஈழத்தில் சாதிய பிரச்சினை இல்லை என நான் சொல்லவில்லை உண்டு ஆனால் பெரிதளவில் இல்லை .தமிழீழ விடுதலைபுலிகளும் சாதிய அமைப்பு அல்ல அவர்கள் ஈழத்தில் சாதிய எதிர்புகாக தமது வேலையை செய்தே வருகின்றார்கள் குட்டையை குழப்பும் முயற்சியில் ஈடுபட்ட சிலரின் வலையில் விழுந்து விட்டீர்கள் அல்லது பிரபலத்துகாக இப்படி செய்துள்ளீர்கள் என மட்டும் புரியகூடியதாக இருகின்றது இன்று எமது முக்கிய தேவை எமது உரிமை அதன் பின் எம் பிரச்சினைகளை நாம் தீர்ப்போம் நிச்சயம் தமிழீழம் சாதிகளற்ற ஒரு கனவுதேச்மாகவே அமையும் இதுவே தமிழீழ தேசியத்தலைவரின் இலக்கு அதுவே எமது விருப்பும் கூட

Anonymous,   
This comment has been removed by a blog administrator.
மாறன்(maran)  

அப்பதிவை எழுத காரணமாக இருந்த பதிவர். ஈழத்து தமிழர். ஆனால் ஈழத்தில் வசிக்கவில்லை. அவர் படம் போட்டு எழுதலாமே! ஈழத்து தற்போதைய சூழலில் படம் போட்டு எழுத முடியாது என்கிறீர்கள் சரி! புலம் பெயர்ந்து வாழும் இடத்தில் கூட தன்னை அடையாளப்படுத்த முடியவில்லை என்றால் என்ன காரணம்?



அதன் காரணம் விளங்கி இருந்தால் நீங்கள் இப்படிபட்ட பதிவுகளை எழுதி இருக்க மாட்டீர்கள்

kiddy ppl  

///அதன் காரணம் விளங்கி இருந்தால் நீங்கள் இப்படிபட்ட பதிவுகளை எழுதி இருக்க மாட்டீர்கள்///

விளங்குவதால் தான் காரணம் கேட்கிறேன்!

kiddy ppl  

////Anonymous a dit...
தமிழிச்சி அம்மணி பிரபலம் வேண்டுமாயின் தற்போது போடும் படங்கலை விட அம்மணமாக உங்களின் படங்களை போடுங்க ரசிகர்வட்டம் இன்னும் பெருகும்////

நல்ல அய்டியா! நன்றி

Anonymous,   

முதலாவது காரணம் தற்பெருமை தேவை இல்லாமல் இருந்திருகலாம் மற்றாயது ஈழத்தில் உறவுகளுக்கு எம்மை நாம் இனம்காட்டி பிரச்சினைகளை உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை

kiddy ppl  

///தமிழிச்சியே பிரான்ஸில கூட்டங்களுக்கு போய் நீங்கள் ஒன்றும் செய்திடப்போவதுமில்லை உங்களது பதிவினை ஈழத்தமிழன் என்ற ரீதியில் கடுமையாக கண்டிகின்றேன்////

எதை வைத்து கண்டிப்பதற்கு உமக்கு உரிமை இருக்கிறது? தனி மனித உரிமையும், உயிரின் மதிப்பும் தெரியுமா உமக்கு? லட்சக்கணக்கான உயிர் மாண்டது பெருமை கொள்ளத்தக்க விஷயமா?
காட்டுக்குள் உட்கார்ந்து கொண்டும் ஒன்றும் சாதிக்க முடியாது என்று ஈழத்தின் ஒரு பகுதியினர் சொல்கிறார்கள். அதற்காக முயற்சியை விட்டுவிட்டார்களா?

kiddy ppl  

///Anonymous a dit...
முதலாவது காரணம் தற்பெருமை தேவை இல்லாமல் இருந்திருகலாம் மற்றாயது ஈழத்தில் உறவுகளுக்கு எம்மை நாம் இனம்காட்டி பிரச்சினைகளை உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை///

தற்பெருமை என்று எதை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள்? ஈழத்தில் இதுவரை பிளவு இருந்ததே இல்லை. நாங்கள் உள்ளே நுழைந்து தான் கலகம் செய்து கொண்டிருக்கிறோமா? ஒரு தலைபட்சமாக பேசுவதை தவீர்த்து நிதானமாக யோசித்து பாருங்கள்?

kiddy ppl  

////தமிழ்பித்தன் a dit...
நான் 2005 வலைப்பூ ஆரம்பித்த போது நான் எனது முகத்தை காட்டிக் கொண்டேன் அப்போது ஒரு நப்பாசை பலர் நம் முகத்தை பார்கிறார்களே என்று (இது பார்க்கிற முகமா?) அப்போது பலர் தடுத்தார்கள் (வசந்தன், விஜே போன்றோர்)ஆனால் ஒரு நல்ல கருத்தை சொல்வதற்க்கு முகம் எதற்க்கு முகம் வெளி வருகிறதே என்றால் ஆங்கே புகழ் என்கின்ற ஒரு விடயமும் ஒட்டியே வருகிறது////

உம் புத்தியை காட்டுகிறீரா? ஒரு பின்னூட்டத்தில் என்னைப் பற்றி பூனைக்குட்டி என்று குறிப்பிட்டு இருந்தீர்களே? பூனையாகி விட்டது யாரென்று தமிழ்மணத்தில் கேட்டால் தெரியும்

Anonymous,   
This comment has been removed by a blog administrator.
kiddy ppl  

////தமிழச்சிக்கு சோபா சக்தி கொடுத்த மூளைச் சலவை நன்கு வேலை செய்கின்றது.////

சோபா சக்தி எனக்கு செய்த மூளைச் சலவை தேசத் துரோகம் என்பதும் ஈழத்தில் செய்யப்படும் மூளைச் சலவைக்கு தேசியப்பற்று என்றும் உங்கள் வார்த்தையில் சொன்னாலும் மூளைச் சலவை செய்வதே எல்லா நாட்டிலும் தடை செய்யப்பட்டவை என்பது தெரியுமா? மனநோயாளிகளுக்கு கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கரண்ட் ஷாக் கொடுக்கக் கூடாது என்பதாவது தெரியுமா?

ILA (a) இளா  

//ILA(a)இளா ஆதரிக்க ஒரே காரணம் அவுங்க தமிழச்சி பெரியார் ஆதரவாளரா இருக்குறதுதான். தோழர் மாயா இவனுங்க டேஞ்சரான ஆசாமிங்க. தமிழச்சியோட எடத்துல ஒரு மாமி இருந்தா ஒங்கள குத்தியே கொன்னிருப்பாங்க. தமிழச்சி விளம்பரபிரியரு. ஆனா இவனுங்க திமிங்கலம் முழுங்கிங்க//

உங்களை ஆதரித்தால் இப்படிப்பட்ட முலாம் எனக்கு பூசப்படும் என்று நினைக்கவில்லை. நீங்களும் உங்க பிரச்சினையும். என்னை மாதிரி மூன்றாவது மனிதர்கள் ஆதரவு அளித்தால் உங்களுக்கு பிடிக்காதே. நீங்களே சண்டை போட்டுக்கொள்ளுங்கள். உங்களை ஆதரித்ததற்காக எனக்கு கிடைத்து இருக்கும் பட்டத்துக்கு நன்றிங்க மாயா.

ILA (a) இளா  

//அந்தமாதிரியான சூழலில் புகைப்படங்களை போட்டு எவ்வாறு விலாவாரியாக எழுத முடியும் சொல்லுங்கள் ?//
அன்புள்ள அனானிக்கு, இந்த வரிகளுக்காக நான் மாயாவின் கருத்துக்கு உடன் பட்டு இருக்கிறேன், இதிலே எந்த மாமியும் இல்லை. மாமாவும் இல்லை. இவர்களை எதிர்த்தோ, ஆதரித்தோ நான் இதுவரை எழுதியது இல்லை. இது என் பதிவுலக நண்பர்களுக்கு தெரியும். என்னை வைத்து திசை திருப்ப வேண்டாம்,. இந்தப் பதிவுக்கு என் கடைசி பின்னூட்டம் இதுவே.

கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் முகம் காட்ட மறுக்கும் உங்களைப் போன்ற தைரியமிகுந்தவர்களுக்காகவே இந்தப் பின்னூட்டம்.

Anonymous,   
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி.  

மாயா,
மேலேயிருக்கும் பின்னூட்டத்தினையெல்லாம் எதற்கு அனுமதிக்கின்றீர்கள்? இதெல்லாம் உங்களுக்கு ஆதரவைச் சேர்க்காதென்று உங்களுக்கே தெரியும்

இதற்குத்தான் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது பயனென்று தோன்றுவது. திறந்த வீட்டுக்குள் எதுவும் பூரலாம். இப்பின்னூட்டப்பெட்டியிலே இரண்டு பின்னூட்டங்களாவது கேவலத்திலும் கேவலமாகத் தெரிகிறது. தமிழச்சி் தன் அண்மையக்கருத்துகளைத் தெரிவிக்கும்போது தன் சுதந்திரம் என்ற அணியின்கீழே சில இடங்களிலே இலங்கைத்தமிழர்களிலே காட்டும் இளக்காரம், நக்கல், தான்மட்டுமே போராடுகிறவர் என்ற அதிகாரத்தோரணைகளிலே எனக்கும் ஒப்புதல் இல்லை. ஆனால், அதே சமயம் இப்படியான பின்னூட்டங்களை அனுமதிக்கும் நீங்கள் அதற்காக வெட்கப்படவேண்டும். வேண்டுமென்றே இடுகின்றவர்கள் வெட்கப்படுவார்களென்று நம்பவில்லை.

இப்படியான பின்னூட்டங்களை நீங்கள் உங்களை அறியாமலே அனுமதிக்க வசதி செய்யுமிடத்து, மாசிலா, தமிழச்சியின் கருத்துகளுக்காக நாங்கள் அவர்களைக் கடிந்து கொள்வதிலே அர்த்தமில்லை. அவர்கள் முறையே அகதி & ஈழத்தமிழர்கள் என்ற வகையிலே
எள்ளல் தெறிக்கும் கருத்துகளை அவ்வப்போது போடுகின்றார்கள். நீங்கள் தமிழச்சியினைப் பெண் என்ற அளவிலே தாக்க உங்களையறியாமலே வசதி செய்து கொடுக்கிறீர்கள். >:-(

தமிழச்சி வந்து தமிழ்மணம் நீக்கவேண்டிய இடுகை முப்பத்தியெட்டு என்று வசனம் பேசமுன்னால், நீங்களே நீக்கினால் அழகாக இருக்குமல்லவா?

மாயா  

பெயரிலி வருகைக்கு நன்றிகள்

உங்கள் ஆலோசனைப்படியே அனானிகள் பின்னூட்டமிடாதவாறு செய்து விடுக்றேன்

-/பெயரிலி.  

மாயா, நன்றி.

சம்பந்தமில்லாமல் ஓன்று
நீங்கள் பரி யோவான் கல்லூரி பழைய மாணவரா?

மாயா  

ஆமாம் ஏன் கேட்கிறீர்கள் ; ; ;
2003 A/L எடுத்தேன் . . .

இன்னோன்று பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுவிட்டன பார்த்தீர்களா :)

மாயா  

தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பக்கத்தில் என் பதிவுகள் காலையிலிருந்து தெரிவதில்லை என்ன காரணமென்று யாராவது கூறமுடியுமா ????

-/பெயரிலி.  

தமிழ்மணம் பின்னூட்ட இற்றைப்படுத்துகையிலே உங்கள் இடுகைகள் தெரிகின்றன.

1-40
யூனிகோடு தமிழ் எழுதி அறிமுகம் (24) :

40+
தோழர்களே! இலங்கை வலைப்பதிவர்களை தாக்கி பதிவிடுவதை நிறுத்துங்கள் ! (61)
=============

பரி யோவான் கல்லூரியிலே ஈராண்டுகள் படித்தேன் (73/74 :-)). அங்கே என் அப்பா ஆசிரியராக 1960+ இருந்து 1984 வரை middle school இல் இருந்தார். அதுதான் கேட்டேன்.

மாயா  

நன்றி ஐயா தகவல்களுக்கு . . .

அப்ப நீங்களும் பரி யோவான் கல்லூரி பழைழழய :)
மாணவர் தான் . . .

மற்றும் வரவுகளுக்கும் தகவல்களுக்கும் நன்றி

இறக்குவானை நிர்ஷன்  

இலங்கையில் பிறந்து வளர்ந்து தற்போதைய சமுதாய சூழலையும் யதார்த்தத்தையும் சகிக்கமுடியாமல் அனுபவித்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்குத் தானே ஐயா அவர்களின் நிலைமை புரியும்.இதெல்லாம் புரியாதவர்கள் பேசும் பேச்சு மயூரன். கண்ணைக்கட்டி வாயை மூடி பத்துப்பேர் ஒருவனை அசையவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் போது என்ன செய்யமுடியும்? தைரியத்தால் அங்கு எதை சாதிக்க முடியும். அப்படி தமிழர்களை கட்டிப்போட முயற்சித்துக்கொண்டிருப்பவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்ற முடியுமானளவு பிரயத்தனங்களை செய்துகொண்டுதான் இருக்கிறோம். அதனால் அவர் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஐயா நீங்கள் அப்படி சொல்லி இதுவரை அநியாயத்தை எதிர்த்துப் போராடியவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இதனை மயூரனே நன்றாக விளக்கிவிட்டார்.

தமிழன்  

நண்பர்களே வணக்கம் !

வாதப்பிரதிவாதங்கள் அவசியம் தேவையான ஒன்றே. ஆனால் , அதற்காக குதற்கமான வாதப்பிரதிவாதங்கள் அவசியமா?

ஈழத்மிழ்ர் - இந்தியத் தமிழர் என்று ஒன்றில்லை. தமிழர் என்றால் அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர்கள் தான். தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. அதற்காகத்தான் ஈழத்தமிழன் போராடுகிறான். அடிமை விலங்கை உடைக்க முயற்சிக்கிறான்.

ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்தாலும் அவர்கள் கைப்பொம்மைகளே. மத்திய அரசை மீறி தமிழகத்தால் முடிவு எடுக்க முடியுமா ? இல்லை.

எனவே , ஈழத்தமிழர் போராட்டத்தையும் ஈழத்தமிழ் இளைஞர்களின் உணர்வுகளையும் மதியுங்கள். மிதிக்காதீர்கள்.

உங்களால் எமது போராட்டத்திற்கு துமணையாக நிற்க முடியாவிட்டாலும் பறவாயில்லை...துரோகிகளாகி கருத்துக்களை கொட்டாதீர்கள்.

மாயாவின் பல கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. அவருடைய சில கருத்துக்கள் எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட ஒருவரது கருத்துக்களாக அதை நோக்கும் போது அதில் நியாயமும் இருக்கிறதுதான்.

அதற்காக குதர்க்கமான விவாதம் தேவையா ?

மாயா  

தமிழன் , இறக்குவானை நிர்ஷன் வரவுகளுக்கு நன்றி

Anonymous,   

//திமிர் பிடித்தவர்களின் பதிவுகளை வாசிக்கவேண்டாம் அந்தப் பக்கமே போகவேண்டாம். அவர்களைப் புறக்கணிப்போம். //

உண்மையிலேயே, என் அமைதி காக்க நான் பிரயோகிக்கும் அஸ்திரம் இதுவே.

நந்தவனத்து ஆண்டி  

game// நான் படிக்கும் இடத்தில் இருந்து தான பதிவிடுகிறவன் நான் படிக்கும் இடத்தில் என்னுடன் சேர்த்து மொத்தம் 20 தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர் அனைவரினதும் இணையப்போக்குவரத்துக்கள் (தமிழர்களென்பதால் )தினமும் கண்காணிக்கப்படுகறது இது அனைவருக்கும் தெரியும் ஆனால் என்ன செய்வது ஏன் கண்காணிக்கிறீர்களென்று கேட்கவா முடியும் பேசாமல் தான் இருக்கவேண்டும்,//

இதெப்படி சாத்தியம் என்ன பகிடி விடுறீறா :))

ஜெயபாலன்  

தமிழ் கூறும் நல்லுலகம் ஒன்றுகூடும் இந்த மன்றுக்குள் என்னையும் அனுமதியுங்கள். ஈழத்தமிழர்மீது இன்னும் ருவாண்டா பாணி இனக்கொலை நிகழ்த்தப் படாமல் இருப்பதற்க்கு ட்தமிழ் கூறும் நல்லுலகின் அனுதாபமும் ஆதரவும் முக்கிய காரணம். போராட்டத்துக்கு உங்கள் முழுமையான ஆதரவில்லாமல் வெற்றியும் நமக்கு விடுதலையும் இல்லை.
தமிழ் கூறும் நல்லுலகின் பேராதவின் ஊற்றுக் கண்ணாக பெரியார் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். தமிழிச்சி கோபப் ப்பட்டு எழுதுவது நமது வீடுதலையைப் பாட்திக்காது. தமிழிச்சிக்கு பதில் சொல்வதாக நினைத்து நாம் எழுதுபவை ஒரு பெரியார் ஆதரவாளரை புண்படுத்தினாலும் அது நமது விடுதலையைப் பாதிக்கும்.
தமிழிச்சியோடு ஈழத்தின்பேரில் மோதுவதைவிட அவரோடு தோழமையுடன் விவாதிப்பதே சரியானது. இருதரப்பும் தமது விவாதங்களில் ஈழத்தையும் பெரியாரையும் வலிந்து இழுகப்பது ஏன்? ஈழத்துப் பெண்கள் உரிமை தலித்துகளின் உரிமை முஸ்லிம்களது உரிமை தொடர்பானாவிவாதங்கள் ஈழ வீடுதலைப்போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும். அத்தகைய விவாதங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் சுதந்தரமாகநடத்தும் உரிமையை மறுதலிக்கிற போக்கை ஒருசில ஈழத் தமிழர்கள் கைவிட வேண்டும். தம்மிழிச்சி போன்றவர்கள் கோபத்துக்குப் பட்திலாக மனம் திறந்த விவாதங்களூடாக உயரிய புரிந்துணர்வுக்கு வழி வகுக்கவேண்டும்.
ஏட்டிக்குப் போட்டியாக வசைபாடுகிறவர்கள் எதனைச் சாதிக்கப் போகிறார்கள்? தாங்கள் ஆதரிக்கும் ஈழப் போஒராட்டத்தையும் பெரியாரையும் கொச்சைப் படுத்துவது மட்டும்தான் அவர்களால் சாத்தியமாகும்.

வந்தியத்தேவன்  

//நந்தவனத்து ஆண்டி said...
//நந்தவனத்து ஆண்டி said...
இதெப்படி சாத்தியம் என்ன பகிடி விடுறீறா :))//

நந்தவனத்து ஆண்டி உமக்கு கணனித் தொழில் நுட்பம் தெரியாவிட்டால் பொத்திக்கொண்டிருக்கவும். இணையத்தில் கண்காணிப்பு என்பது மிகவும் இலகுவான வேலை.

நந்தவனத்து ஆண்டி உமக்கு கணனித் தொழில் நுட்பம் தெரியாவிட்டால் பொத்திக்கொண்டிருக்கவும். இணையத்தில் கண்காணிப்பு என்பது மிகவும் இலகுவான வேலை.

Unknown  

தமிழீழம் கிடைக்கும். நமது வெற்றி இவர்களுக்கு விடையாகும்.
________
CAPitalZ
http://1paarvai.adadaa.com/

நந்தவனத்து ஆண்டி  

//நான் படிக்கும் இடத்தில் என்னுடன் சேர்த்து மொத்தம் 20 தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர் அனைவரினதும் இணையப்போக்குவரத்துக்கள் (தமிழர்களென்பதால் )தினமும் கண்காணிக்கப்படுகறது இது அனைவருக்கும் தெரியும் ஆனால் என்ன செய்வது ஏன் கண்காணிக்கிறீர்களென்று கேட்கவா முடியும் பேசாமல் தான் இருக்கவேண்டும் //

லூசு மாதிரி எழுத வேண்டாம் உதெல்லாம் சும்மா பயப்படுத்தத்தான்

மாயா  

ஆண்டியாரே காணும் இத்தோட நிறுத்தும் . . . .

புதிய பதிவு வாசித்ததா ?

Anonymous,   

படத்தில் என்ன?? கிடக்கிறது...எழுதுவது வாசிக்கும் படி அடுத்தவர் மனம் நோகாவண்ணமும்;முகம் சுழிக்காவண்ணமும் இருக்க வேண்டியது முக்கியம் எனக் கருதுகிறேன்.

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP