தமிழ் வலையுலகில் மிகமுக்கியமான ஓர் நபராகக் கண்க்கப்படும் ஒருவர் அவருடைய வலைப்புவில் " உங்களுக்கு தான் படம் போட்டு எழுதும் அளவுக்கு உங்கள் நாட்டில் சுதந்திரம் இல்லை யார் யாருக்கோ பயந்துக் கொண்டு பொத்திக் கொண்டிருக்கிறீர்கள். " என்றும் ஈழத்தமிழர்கள் முகம் காட்ட மறுப்பவர்கள் முகம் காட்டும் அளவிற்கு தைரியமில்லாதவர்கள் என்ற சாரத்துட்ன் பதிவிட்டிருந்தார் எனது இந்தப்பதிவு அவர் பதிவிட்டிருந்த அன்றே வந்திருக்கவேண்டும் ஆனால் 2ம் ஆண்டு பரீட்சகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாலும் நேரம் கிடைக்காமையாலும் பிந்தி பதிகிறேன் மன்னிக்கவும்
மூலப்பதிவு வாத்தியத்தேவன்
பதிவரே !
உங்களுக்கு உண்மையாகவே இலங்கைவாழ்தமிழர்களின் நிலை தெரியமா ? இல்லை நீங்களும் ஹிந்து போன்ற பதிதிரிகைகளை படித்துவிட்டு சும்மா போலியாக இலங்கை வாழ் தமிழர்களை ஆதரிக்கின்றீர்களா ? நாம் யுத்தம் என்ற அரக்கனால் உயிர்கள் உடைமைகள் இழந்து வாழ்பவர்கள் எங்களுக்கு உளளோன்று வைத்து வெளியிலோன்று கதைக்கத்தெரியாது வெளிப்படையாகச் சொல்கிறேன் எங்களுக்கு எங்கள் புகைப்படங்களை பதிவில்போட்டு எழுதுவதற்கு பயம் தான் ! அதற்கு இப்ப என்ன ?
நாங்கள் தினமும் எவ்வாறெல்லாம் கவனிக்கப்படுகிறோம் தெரியுமா . .
உதாரணத்திற்கு என்னை எடுத்துக்கோள்வேம் நான் படிக்கும் இடத்தில் இருந்து தான பதிவிடுகிறவன் நான் படிக்கும் இடத்தில் என்னுடன் சேர்த்து மொத்தம் 20 தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர் அனைவரினதும் இணையப்போக்குவரத்துக்கள் (தமிழர்களென்பதால் )தினமும் கண்காணிக்கப்படுகறது இது அனைவருக்கும் தெரியும் ஆனால் என்ன செய்வது ஏன் கண்காணிக்கிறீர்களென்று கேட்கவா முடியும் பேசாமல் தான் இருக்கவேண்டும்,
காரணம் . . . . . ஏனைய இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் அனைத்து தோழர்களுக்கும் தெரியும். அந்தமாதிரியான சூழலில் புகைப்படங்களை போட்டு எவ்வாறு விலாவாரியாக எழுத முடியும் சொல்லுங்கள் ? உங்களுக்கு நாம் அனுபவிக்கும் வேதனைகள் ஏதும் தெரியாது சிலவற்றை வார்த்தையினால் சொல்வதைவிட அனுபவித்தால் தான் தெரியும்.
உங்கள் பெயர் பிரபலமடைய எம்மை வம்புச் சண்டைக்கு இழுக்காதீர்கள். நீங்களோ சொகுசாக வாழ்ந்துகொண்டு எம்மைச் சீண்டிப்பார்க்கிறீர்கள். தயவு செய்து இப்படியான கீழ்த்தரமான வரிகளை எழுதாதீர்கள். பிரச்சனைகளை தீர ஆராயாமல் உங்கட பாட்டுக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுதாதீர்கள் ஒரு விடயத்தை உறுதியாக அடித்துச் சொல்ல முன் அதுபற்றி ஆய்வு அல்லது கருத்துக்கணிப்புச் செய்து சொல்வதுதான் சிறந்தது. யாரோ ஒருவன் உங்களிடம் வம்பு செய்தால் உடனே முழு ஈழத்தவர்களையும் கேலி செய்யாதீர்கள்.
பதிவரே உங்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுது நீங்கள் வித்தியாசமானவர் என நினைத்தேன் ஆனால் ஒரு வரியின் மூலம் நீங்களும் சராசரியானவர் தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.
தோழரே வலைப்பக்கங்களின் நீண்டநாள் வாசகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள்! இவன் யார் சின்னப்பையன் நம்மைச் சொல்வதற்கு என நினைக்க வேண்டாம்.
நினைத்தாலும் மகிழ்ச்சி.
நினைக்காமல் இருந்தால் சந்தோசம்.
இது சுதந்திரமான உலகம் அதற்காக ஒருவருடைய எண்ணமோ, எழுத்தோ, செயலோ அடுத்தவர் மனம் புண்படும்படியாக இருக்கக்கூடாது. ஆகவே இத்தகைய வீணான பதிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நல்ல பதிவுகளைத்தொடருங்கள்
என் மனதுக்குப் பட்டது போல் பலருக்கும் தோன்றியிருக்கலாம்!
ஆனால் இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து!
என்னுடைய கருத்துக்களை சிலர் ஆதரிக்கலாம்,
சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை. நான் உங்களை கண்டிக்கும் மனப்பாங்கில் சொல்லவில்லை. ஒரு நண்பனின் தோளில் கை போட்டு தோழமையுடன் பேசுவது போல் என் கருத்தை சொல்லியிருக்கின்றேன்
நன்றியுடன்
மாயா
Read more...