காந்தி ஜெயந்தியும் இந்தியத்தொலைக்காட்சிகளும். . . . .

இந்தியாவின் சுதந்திரதந்தை மகாத்மா காந்தி அவர்களை நினைவு படுத்தும் காந்தி்ஜெயந்தி தினக்கொண்டாட்டங்கள் சின்னத்திரையில் வெகு அமர்களமாக களை கட்டி இருக்கிறது. சகல டீவிகளிலும் சகல நிகழ்ச்சிகளும் காந்தி்ஜெயந்தி Special சினிமா சினிமா. தான்
இதை பற்றி காலையில் இன்னோரு பதிவும் வந்துள்ளது பதிவில் முந்திய நண்பருக்கு பாராட்டுக்கள்

உதாரணத்திற்கு சன் டீவி இனது நிகழ்ச்சிகளைக்கவனிப்போம் (இலங்கை ரசிகர்களைப் பொறுத்தவரை சன் டீவிக்கென்று ஓர் மதிப்பும் மரியாதையும் உண்டு அதனால் நேற்றுப்பெய்த மழைக்கு திடீரென முளைத்த காளான்களைப்பற்றி எழுதவில்லை ) வழமைபோல் சன்னில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம். அடுத்து கந்தசாமி திரைப்படம் பற்றிய பார்வை ஒன்று , நடிகை ஜோதிர்மயியின் பேட்டி , பிறகு FIRE ONE வழங்கும் நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் விழா !, மதியம் அக்சன் கிங் இன் முதல்வன் படம் . காந்திக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம் ? (அதற்காக காந்தி சம்மந்தப்பட்ட ஹேராம் படமா போடமுடியும் ). ஆனால் இந்தப்படத்தில பல நல்லவிடையங்கள கையாளப்படுவதால் விட்டுவிடுவோம் காந்திஜெயந்தி என்பது இவர்களுக்கு இப்போ விளையாட்டாக போய்விட்டது. இப்படியான சுதந்திரம் தொடர்பான நன்னாளில் பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர தாகம் மிக்க படங்களைப்போடலாமே ?

அடுத்து பின்னேரப்படம் என்ன கொடுமையப்பா அது ! பின்ன போடுற படம் என்ன தெரியுமே ? 7 /Gரெயின்பொ காலனி . 7 /G ரெயின்பொ காலனி போன்ற திரைப்படக்குழுவினரால் A தரப்படம் என தணிக்கை பண்ணப்பட்ட படத்தை காந்தி்ஜெயந்தி நன்னாளில் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கமுடியுமா ? இங்கு நான் படத்தை குறை கூறவரவில்லை . . .அந்தப்படத்தை யாழ்ப்பாணத்தில ராஜா திரையரங்கில் முதல் நாள் காட்சிபார்த்தவனுள் நானுமொருவன் ( அப்போ ஜனவரி மாதம் பாடல் உட்பட அரைமணிநேர காட்சிகள் கத்தரிக்கப்பட்டது தெரியாமல் பார்த்தது வேறுகதை )

ஆனால் காந்தி பற்றி. ஆம் அவர் பற்றியும் இருந்தது . காலை 7 மணி முதல் 7.30 மணி வரை சிறிய ஆவணத் தொகுப்பில் மட்டும்.இந்தப்பதிவு எழுதும் நேரத்தில் போய்க் கொண்டிருக்கிறது அரையே அரை மணி. அதுவும் காலை நேரத்தில் ? தீபாவளி பொங்கல் புதுவருடம் போன்ற தினங்களில் சினிமா நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது சரியானதே ஆனால் காந்தி ஜெயந்தி , சுதந்திரதினம் போன்றவற்றிற்க்கு இவை தேவையா? இதை ஏன் டிவி காரர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை .

கலைஞர் தொலைகாட்சியில் மதியநேரதிரைப்படம் பரட்டை என்கிற அழகு சுந்தரம் . . . .
கொடுமை கொடுமை என்டு கோயிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை நின்னு கூத்தாடிக்கொண்டிருந்ததாம் என்ட மாதிரி இருந்துது . . . [கலைஞரும் ஏமாத்திப்போட்டார்]


இன்னோர் விடையத்தையும் எடுத்துக்கொள்ளலாம் TV வலையத்தினருக்கு நிகழ்ச்சியோ அதில் வருகிற விசயங்களோ அல்லது எடுத்து நடத்துற ஆட்களோ முக்கியமில்லையாம் . நிகழ்ச்சிகளோட ரேட்டிங் பற்றித்தான் கவலையாம்
அப்ப பாருங்களன் ?

இவ்வாறான விடையமொன்றை "நெஞ்சு பொறுக்குதில்லை " என்ற தலைப்பில் நண்பர் வாத்தியத்தேவன் முன்பும் எழுதியிருந்தார்

Read more...

சர்வதேச சிறுவர் தினம்


இன்று சர்வதேச சிறுவர் தினம் போர்க்காலச்சூழ் நிலையில் அதிகளவில் பாதிக்கப் படுவது சிறுவர்கள் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. போர்க்காலம் இல்லாத சூழ் நிலைகளிலும் அதிகம் பாதிக்கப் படுவதும் அவர்களே என்பது யாராலும் மறுக்கமுடியா உண்மையாகும். தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வலிமையும் திறனும் அற்ற அவர்களை மற்றவர்கள் இலகுவில் ஆக்கிரமிக்கவும் சீரழிக்கவும் கூடிய வலிவற்றவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றார்கள்

பொதுவாக இராணுவ அடக்குமுறை நடைபெறம் நாடுகளில் இராணுவத்தின் செல்லடிகளிலும் ஆகாய தரை குண்டு வீச்சுத் தாக்குதலினாலும் தினம் தினம் செத்து மடியும் சிறுவர்களினதும் அனாதைகளாக்கப் படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அளவிட முடியாதது. அதே போல் தமது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கான போரியல் தளபாடங்களைக் கொள்வனவு செய்யும் பண வரவிற்கான ஒரு வழியாக உல்லாசப் பயணத் துறையை ஊக்குவிக்கும் சாக்கில் சிறுவர் பாலியல் சீரழிவுகளை வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அரசாங்கமே ஊக்குவிக்கின்றது.
இலங்கையைப்பொறுத்தவரை இலங்கையின் அழகு மிகு கடற்கரைப் பிரதேசங்கள் எங்கும் இத்தகைய அசிங்கங்களைக் காணலாம் உல்லாசப் பிரயாணிகள் என்ற போர்வையில் தெரிவு செய்யும் இடம் இலங்கையாகும். தனிப்பட்ட முதலாளிகளும் அரசாங்கமும் இணைந்து ஊக்குவிக்கும் ஒரு துறையாக இது இருக்கின்றது.
போர் வெறியினால் பலியிடப்படும் இளைஞ்ர்களாகவும் பாலியல் தேவைகளுக்காகப் பலியிடப்படும் சிறுவர்களாகவும் இருப்பவர்கள் சிங்கள , தமிழ் ஏழை மக்களின் குழந்தைகளே

ஜனநாயகம் பற்றியும் சிறுவர் உரிமை பற்றியும் வாய்கிழியக் கத்தும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏனோ இதை கண்டும் காணது விட்டுள்ளன

சர்வதேச சிறுவர் தினமான இன்றும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் ஆனால் நிறைவேற்றப்படுமா ? ?

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP