சுஜாதாஞ்சலி
சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்த திரு சுஜாதா [S.ரங்கராஜன்] நேற்றுக்காலமானார்.அன்னாரக்கு எமது அஞ்சலிகள். ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்.
இத பற்றி கானாபிரபா அண்ணாவின் வலைப்பூவில் அவருக்கு சுஜாதா வழங்கியபேட்டியில் கேட்டேன் " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள் " என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.
அன்னாரைப்பற்றிய சிறுதுளிகள்
எழுதிய நாவல்கள்
பதவிக்காக
ஆதலினால் காதல் செய்வீர்
பிரிவோம் சந்திப்போம்
அனிதாவின் காதல்கள்
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நிலா நிழல்
ஆ
கரையெல்லாம் செண்பகப்பூ
யவனிகா
கொலையுதிர் காலம்
வசந்த் வசந்த்
ஆயிரத்தில் இருவர்
பிரியா
நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
மூன்று நிமிஷம் கணேஷ்
காயத்ரி
கணேஷ் x வஸந்த்
அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
அனிதா இளம் மனைவி
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு
வசந்தகாலக் குற்றங்கள்
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
கனவுத்தொழிற்சாலை
ரத்தம் ஒரே நிறம்
மேகத்தைத் துரத்தினவன்
நிர்வாண நகரம்
வைரம்
ஜன்னல் மலர்
மேற்கே ஒரு குற்றம்
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
நில்லுங்கள் ராஜாவே
எதையும் ஒருமுறை
செப்டம்பர் பலி
ஹாஸ்டல் தினங்கள்
ஒருத்தி நினைக்கையிலே
ஏறக்குறைய சொர்க்கம்
என்றாவது ஒரு நாள்
நில் கவனி தாக்கு
எழுதிய குறுநாவல்கள்
ஆயிரத்தில் இருவர்
தீண்டும் இன்பம்
குரு பிரசாத்தின் கடைசி தினம்
மெரினா
சிறுகதை
ஸ்ரீரங்கத்துக் கதைகள்
கட்டுரைகள்
கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும்
கடவுள் இருக்கிறாரா
தலைமை செயலகம்
எழுத்தும் வாழ்க்கையும்
ஏன் ? எதற்கு ? எப்படி ?
சுஜாதாட்ஸ்
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்
நாடகம்
Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு்
கடவுள் வந்திருந்தார்
திரையாசிரியராக பணியாற்றிய திரைப்படங்கள்
ரோஜா
இந்தியன்
ஆய்த எழுத்து
அந்நியன்
பாய்ஸ்
முதல்வன்
விசில்
கன்னத்தில் முத்தமிட்டால்
சிவாஜி the பாஸ்
சில சுவையான தகவல்கள்
* இறந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாமும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. சுஜாதா திரைக்கதை எழுதிய கடைசி திரைப்படம் சிவாஜி
சுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை.
இப்போதும் சிவாஜி படத்தில் எழுதிய வரி ஒன்று ஞாபகம் வருகிறது
"சாகும் நாள் தெரிந்து போய்விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும் "
மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப்பொறுத்தவரையில் அவர் ஓர் சகாப்தம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கமைய போய் வாருங்கள் சுஜாதா!
போய் வாருங்கள் சுஜாதா அறிந்திராத உலகிற்கு !
நன்றி :- WIKIPEDIA
9 பின்னூட்டம்(கள்):
நல்லதொரு பதிவு மாயா.
அமரர் சுஜாதாவின் மெரினா என்ற குறுநாவலையும், இவரது நாடகங்களின் தொகுப்புகளையும், சிறுகதைத்தொகுப்புகளையும் விட்டுவிட்டீர்கள். இவரது நாடகங்களில் டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு சின்னத்திரையிலும் வந்து கலக்கியது. தமிழ்ச் சங்கத்தில் இந்த நாடகத்தொகுப்பு இருக்கிறது. முடின்தால் படித்துப்பார்க்கவும். சிறுகதைத் தொகுதி ஒன்று இருக்கின்றது என நினைக்கின்றேன்
தகவல்களுக்கு நன்றி சேர்த்துவிடுகிறேன் வந்தியத்தேவன் அண்ணா !
nanri maya
/ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்./
அப்படியா?
தகவலுக்கு நன்றி
மாயா இன்னொரு முக்கியமான நாவலை நீங்களும் மறந்துபோனீர்கள் நானும் மறந்துபோனேன். அது "ஓடாதே"
இதன் முன்னுரையில் அமரர் சுஜாதா கீழ்வருமாறு எழுதியுள்ளார்.
" 'ஓடாதே' கனேஷ் வசந்த் தாமதமாகத் தோன்றிய நாவல்களில் ஒன்று. வாழ்வில் எதற்க்கு ஓடுகின்றோம் என்பது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கின்றோம். நின்று எதற்காக ஓடுகின்றோம் என்று யோசித்தால் காரணம் தெரியாது. துரத்தி யாரைக்கேட்டால் எனக்குத் தெரியாது நீ ஓடுகிறாய் நான் துரத்துகின்றேன் என்பார். இந்த வெட்டி ஓட்டத்தை ஒரு திரில்ல முறையில் சொல்ல முயன்றேன்.
இந்த நாவல் குங்குமம் வாரப் பத்திரிகையில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. சினிமாவாக எடுக்க சில டைரக்டர்கள் கேட்டபோது டைட்டில்தான் 'சென்டிமெண்ட் ' சரியில்லை என்றார்கள்.
படம் பார்ப்பதற்க்கு முந்தியே விமர்சகர்கள், கடைசிவார்த்தையை தீர்மானித்து தருவார்கள் "ஓடாது" அதனால் டைட்டிலை மாத்திட்டு டைட்டாக எடுத்தா ஜீபிலி படங்க என்றனர்.
எனக்கென்னவோ ஓடாதே என்ற தலைப்பின் உள்ளார்த்தத்தை இழக்க மனம் வரவில்லை. அதனால் சம்மதிக்கவில்லை. ஓடாதே சினிமாவாக இதுவரை வராமல் தப்பித்த மற்றொரு நாவல்."
சுஜாதா
சுதந்திர தினம் 2004
சென்னை
மிகவும் விறுவிறுப்பான நாவல் கிடைத்தால் வாசிக்கவும்.
எழுத்துப்பிழை இருந்த பின்னூட்டத்திற்கு மாற்றீடானது
// அனைவரினதும் வருகைகும் நன்றிகள்
இப்பதிவுக்கு பலர் கீழ்த்தரமான பின்னூட்டங்களை இட்டிருந்தனர் ஜசாதி அடிப்படையில்ஸ அவற்றை நான் மட்டறுத்துவிட்டேன் ஏன் தான் இப்படி சாதிவெறிபிடித்து எழுதுகிறார்களோ இல்லை
இன்னொருவர் சுஜாதாவின் மரணம் சாதாரணமானதே என்றும் பிறக்கும் ஒவ்வோரவரும் மரிப்பது சகஜமென்றும் அவரின் மரணத்திற்கு இப்படியான பதிவுகள் தேவையில்லை என்று பின்னூட்டமிட்டிருந்தார்
இதெல்லாம் தேவையில்லாத கதை கண்டிளளோ !//
மற்றும் வந்தியத்தேவன் தகவல்களுக்கு நன்றிகள்
சுஜாதா நினைவு நாள் இன்று [27/02/2012]
அவரது சிறுகதைத் தொகுதி ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் அல்லவா? - தாஹா இப்ராஹிம் புஹாரி
Post a Comment