தமிழ்ப்புத்தாண்டு தைமாதமல்ல சித்திரை மாதமே !
"தைப்பொங்கல் தினமே தமிழர்களின் புத்தாண்டு தினம் " என்ற தமிழகமுதல்வரின் அறிப்பு தொடர்பாக தமிழகத்தைச்சோந்த பலராலும் ஆமோதித்தும் எதிர்ததும் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஒன்று. சித்திரைபபபுதுவருடமென்றால் சிறுவர் முதல் பெரியோர் வரை மனதைக்குதூகலப்படுததும் ஆனால் 2008 தைமாதம் பிறந்தவுடன் தைப்பொங்கல் தினமே தமிழர்களின் புத்தாண்டுதினம் என்ற தமிழகமுதல்வரின் அறிவிப்பு பலரது மனதைச்சஞ்சலப்படுத்துவதாயிருந்தது. பண்டைக்காலம் முதல் தைப்பொங்கல்தினத்தை உழவர்திருநாளாக கொண்டாடிவந்த தமிழ்மக்கள் சித்திரை மாதப்பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாகக்கொண்டாடி குதூகலித்துவந்தனர். இதை மாற்றியமைக்கும் வகையில் தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல்தினமே என்ற அறிவித்தல் பல சர்ச்சைகளை உருவாக்குகிறது
நான் அறிந்தவகையில் தைப்பொங்கலை புத்தாண்டாக கொண்டாடினால் அதன் நோக்கம் மாற்றப்பட்டுவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை மற்றும் உழவரைப்பொறுத்தவரை அறுவடைக்காலமே குதூகலமான காலமாகும் உழவர்கள் இருவகையாகப்பயிர்செய்வர் சிலர் ஆடி மாதத்தில் விதைவிதைத்து தைமாதத்தில் அறுவடைசெய்வர் இன்னோர் சாரார் ஐப்பசியில் விதை விதைத்து பங்குனியில் அறுவடை செய்வர் ஆகையால் இரண்டாவத வகையினருக்கு தைமாதம் சாதாரணமாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே முடியும். ஆனால் இரசாராரதும் அறுவடை முடிந்து வீடு வாசலில் நெற்குவியல்களை அழகுபார்த்து மனம் பூரித்து நிற்கும் தருணம் கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் அப்போது தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து மகிழ்வர் இதன்படிசித்திரைமாதத்தில் வரும் புதவருடமே இவர்களுக்கு மனநிறைக்கொடுத்து நிற்கிறது தைமாதத்தில் வரும் பொங்கல்தினம் உழவர்தினமாக இருந்தாலும் அறுவடை ஆரம்பித்து அது தொடர்பான வேலைகள் நடைபெறும் நாள் அதனால் அவர்களால் சிலவேளைகளில் தைமாதத்தில் வரும் பொங்கல் தினத்தைக்கூட கொண்டாட முடியாமல் போகலாம் இந்நிலையில் தைப்பொங்கல் திருநாளை எவ்வாறு அவர்கள் புத்தாண்டு தினமாக மனநிறைவோடு கொண்டாடுவர் ?
இலங்கையைப்பொறுத்தவரை இது ஒரு பொதும் சாத்தியப்படாது ஏனெனில் இலங்கையில் தமிழ்மக்கள் சிங்களமக்கள் என இருசாராரும் சேர்ந்து கொண்டாடுகின்றனர் .அது தமிழ்சிங்களப்புத்தாண்ட என்றே சொல்லப்படுகின்றது சித்திரைப்புத்தாண்டின் அம்சங்கள் தமிழ்மக்கள் மற்றும் சிங்களமக்களுக்கு ஒன்றாகவே அமைகிறது வருடப்பிறப்பு கருமங்கள் யாவும் இருமொழியினருக்கும் ஒருமைப்பாட்டைக்கொண்டது, இருமொழியினரின் பஞ்சாங்கக்கணிப்புக்களும் சித்திரைப்புத்தாண்டை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன அந்தவகையில் சித்திரைமாதமே இரு சமூகத்தவர்களுக்கும் உகந்த சித்திழைப்புத்தாண்டாக மலர்கிறது.
சோதிடக்கணிப்பின்படி மேடலக்கினமே தமிழர்களின் இலக்கினமாகும் அந்த லக்கினத்தில் சூரியன் உச்சம் பெறுவது சிறப்பானது அத்துடன் சூரியன் மேட இராசிமாதமான சித்திரை மாதத்தில் காலடி எடுத்து வைக்கும் போது அந்த சூரியனை போற்றி வழிபட்டு வருடப்பிறப்பை கொண்டாடுவது மிகவும் உயர்வைத்தரக்கூடியது
தைப்பொங்கல் நாளை உழவர்திருநாளாகக்கொண்டாடலாமே அன்றி தமிழர்களின் புத்தாண்டுதினம் என்கொண்டாடுவத அவ்வளவு நல்லதல்ல.
ஆனாலும் ஒன்று , சித்திரைப் புத்தாண்டானது, ஆரியர்களினுடைய கலாச்சாரப்பின்ணனியின் பின்பற்றலான இந்து மதத்தின் ஒரு அங்கம். சித்திரைப்புத்தாண்டு எமது கலாச்சாரத்தில் இடையில் வந்து ஒட்டிக்கொண்டதா...??? இல்லை, தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றதா...? எதாவது ஆதாரங்கள் உண்டா...??
இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்
4 பின்னூட்டம்(கள்):
மாயா தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாக்கியதற்க்கு கலைஞருக்கு நன்றி செலுத்திய விழாவில் நம்ம கம்பவாரிதி ஜெயராஜ் கலந்துகொண்டார். இதுவரை இலங்கையிலிருந்து யாரும் இதற்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதே நேரம் இல்ங்கைத் தமிழர், மலேசியத் தமிழர் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் ஒருவருடைய அனுமதியும் பெறாமல் கலைஞர் இதனை நிறைவேற்றியுள்ளது சரியா எனக் கேள்வி எழுகின்றது?
சர்ச்சைக்குரிய விடயம் தொடங்கிவிட்டீர்கள் சூடான இடுகையில் நிச்ச்யம் வரும்.
முதலில் ஒரு கேள்வி.
தமிழர்கள் = இந்துக்கள் என்று எடுக்கலாமா?
தமிழர்களுள் இந்துவல்லாதவர்களில் எவர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்?
ஈழத்தவர்களையும் கலந்தாலோசிக்காமல் கலைஞர் அவ்வறிவிப்பை வெளியிட்டது தவறென்று ஒரு சாராரின் கருத்துண்டு. மிகச்சரியான கருத்தும்கூட.
ஈழத்தவர்கள் சார்பாக யாரிடம் கருத்துக் கேட்பது?
அவர்களின் அரசியற்றலைமையாகக் கருதப்படும் விடுதலைப்புலிகளிடமா?
கருணாநிதி அறிவிப்பதற்கு பலவாண்டுகள் முன்பேயே 'சித்திரை தமிழர் புத்தாண்டன்று; தைத்திருநாளே தமிழர் புத்தாண்டு' என்ற கருத்தை நிலைநிறுத்தியவர்கள் புலிகள்.
புலிகளல்லாத வேறு யாரிடமாவது கருத்துக் கேட்டால்தான் சிலவேளை மாற்றுக்கருத்தேதும் வரக்கூடும்.
மயூரன்,
இந்த, பஞ்சாங்கம், நாள் கோள் நற்பலன்களையெல்லாம் விட்டுத்தள்ளிவிட்டு பகுத்தறிவாக சிந்திக்கவேண்டிய காலமிது. தமிழர்களுக்கென்று ஒரு நாட்காட்டி முறையிருக்கின்றது, அதில் தமிழ் வருடம் தை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கின்றது. அவ்வாறிருக்கையில் தை மாதம் முதலாம் திகதியை புத்தாண்டு தினமாக கொண்டாடுவது தானே பொருத்தமானது.
விடுதலைப்புலிகள் கூட, இவ்வாண்டு தைத்திருநாள் தினத்தன்று இச்செய்தியை அறிவித்ததை மறந்துவிட்டீர்களா?
அது சம்பந்தமாக ஒரு இணைப்பை இங்கே இடுகின்றேன்.
http://www.puthinam.com/full.php?2b35PRf4b3cG5G134deWRrn0b02u5ADd4d2JRmG2e0dT5TrCce04f2h62ccblh2T3e
இது சம்பந்தமாக மிக விரிவாக, வரலாற்று ஆதாரங்களுடன் ஒரு அருமையான கட்டுரையொன்றையும் பிரசுரித்திருந்தார்கள். தேடல்பொறி கொண்டு தேடிப்பார்த்தேன், அகப்படவில்லை. கிடைத்தால் மீண்டும் பின்னூட்டமிடுகின்றேன் பின்பு.
ஏன், பௌத்தர்களுக்கென்று தனியாக ஒரு நாட்கட்டி முறயே இருக்கின்றது. ஆனால், ஆச்சரியமாக அவர்கள் இந்து முறையயே பின்பற்றுகின்றார்கள்.
இலங்கையிலே இருப்பது உண்மையான புத்தமதம் அல்ல. அது இந்து மதத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட புத்த மதம். அவர்களின் மாதங்கள் பௌர்ணமி தினத்தை அடிப்படையாகக்கோண்டவை.
எங்கள் தமிழர் பாரம்பரியங்களும் அடையாளங்களும் ஆரிய, பார்ப்பன அதிக்கத்தால் அழித்தொழிக்கப்பட்டமை யாவரும் அறிந்த, வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய உண்மை.
இதை மறந்துவிட்டு நீங்கள் பேசுவது போல் தெரிகின்றது. இந்து மத சிந்தனையிலிருந்து விடுபட்டு நாம் சிந்திக்கவேண்டும்.
இன்னொன்றை சொல்கின்றேன், தமிழர்களின் மதம் இந்து மதமா? அது கூட இல்லை தானே!
தமிழர்களின் வழிபாடு, இயற்கையை ஒட்டியதாக தானே இருந்தது. சிறுதெய்வ வழிபாடுகளும், இயற்கை பொருடகளை வழிபடுவதும் தான் பண்டைத்தமிழ் இலக்கியநூலகளிலிருத்து கிடைக்கப்பெறும் தகவல்.
ஆகவே, தமிழ் நாட்கட்டியினடிப்படையில், தமிழ வருடத்தின் முதல் நாளை, புத்தாண்டாக கொண்டாடுவதே முறையாகும்.
ஆரம்பத்தில், மாற்றம் கொஞ்சம் கடினாமாகத்தான் இருக்கும், போகப்போக சரியாகிவிடும்
முதலில் பிந்திப்பின்னூட்டமிடுவதற்காக மன்னிப்புக்கள்
நண்பர் குறிப்பிட்டடிருந்தார் இந்த, பஞ்சாங்கம், நாள் கோள் நற்பலன்களையெல்லாம் விட்டுத்தள்ளங்கள் என்று உண்மையில் நான் சாத்திரங்ளையோ அதிஷ்டங்களையோ நான் நம்புவதில்லை. (கடவளைத்தவிர)
இந்த ஆக்கத்தில் அதனால் தான் பஞ்சாங்கம், நாள் கோள் தொடர்பான விடையத்தை ஏனோதானோ என்று தான் கையாண்டிருக்கிறேன். எனவே அதைவிட்டுவிடுங்கள் .
மற்றயவிடையங்கள் உண்மை தானே ? அதிலே ஏதாவது தப்பிருக்கிறதா சொல்லுங்கள் எனது கருத்து தைப்பொங்கலை புத்தாண்டாக கொண்டாடினால் அதன் நோக்கம் மாற்றப்பட்டுவிடும் என்பதே அன்றி வேறொன்றுமில்லை
இதையும் இங்கு குறிப்பிடவேண்டும் (இந்தவிடையம் பதிவுஎழுதியபின்னரே அறியமுடிந்தது) சித்திரைப் புத்தாண்டானது, ஆரியர்களினுடைய கலாச்சாரப்பின்ணனியின் பின்பற்றலான இந்து மதத்தின் ஒரு அங்கம். என்றும் கருத்துண்டு . . .
அதனால் தான் பதிவிலே கேட்கிறேன் . . .
சித்திரைப்புத்தாண்டு எமது கலாச்சாரத்தில் இடையில் வந்து ஒட்டிக்கொண்டதா...??? இல்லை, தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றதா...? எதாவது ஆதாரங்கள் உண்டா...??
இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்று
மற்றும் ஓர் விடையம் இந்தமுடிவை எடுக்கும்முன் கலைஞர் உலகமெங்கும் பரந்துவாழும் தமிழ் பேசும் உள்ளங்களிடம்[ஈழத்தவர்கள் சார்பாக ] இதைப்பற்றி கலந்தாலோசனை செய்தாரா ?
அப்படியானால் தமிழ் நாட்டீல் வாழ்பவர்கள் மட்டுமா தமிழர்கள் ஏனையோர் ?
Post a Comment