பில்லா

இன்று பில்லா வெளியானபடியால் முதலாவது காட்சியே பார்ப்பதென முடிவானது அதற்கமைய கொழும்பு தெஹிவளை கொன்கோட் திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவெடுத்தபின் விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக நின்றிருந்தார்கள் சரி உள்ள போவமென்டால் எங்க விட்டால் தானே ஒரு மாதிரி டிக்கற்றை எடுத்து உள்ளே போயாச்சு உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது படம் தொடங்கிற நேரத்தில இருந்து கொஞச நேரத்துக்கு ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். பிறகு பிறகு குறைந்து விட்டுது ஏன் என்றால் வீறுவிறுப்பு அப்படி இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

சரி கதைக்கு வருவம் பில்லா என்று உலகம் முழுவதும் தேடப்படும் கடத்தல்காரன். அவனைப்பிடிக்க பிரபு தலைமையிலான் படை ஒன்று மலேசியாலில் தந்தி தேடுதல் நடத்தி வருகிறது. ஒருகட்டத்தில பில்லா அவர்களிடையே சிக்கிய நிலையில் இறந்து போகிறான் . எனவே அந்த நேரத்தைப்பயன்படுத்தி பிரபு பில்லா மாதிரியே இரக்கும் வேலுவை பில்லாவின் கூட்டத்தினுள் அனுப்புகிறார் என்ன ரஜினி நடித்த பில்லா கதை தானெ பிறகென்னத்திற்கு கதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கு . . . . . .

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் பில்லா அஜித்குமாராக மறுஅவதாரம் எடுத்திருக்கிறார் . படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம். ஜேம்ஸ்பாண்டு பாணி அறிமுகக்காட்சியிலிருந்து அடடா சூப்பர் !சூப்பர்ஸ்டார் ஏற்ற பில்லா மற்றும் ராஜா இரு வேடத்தினையும் பில்லா மற்றும் வேல் என அசத்தலாக உருமாறியிருக்கிறார் அஜித்குமார் ஸ்ரீப்ரியா நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவும், ப்ரவீணா நடித்த கதாபாத்திரத்தில் கனவுதேவதை நமீதாவும் தோன்றுகிறார்கள். இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் (பாலாஜி கதாபாத்திரம்) சந்தானம் வேலுவின் நண்பராகவும் ரகுமான் இன்ரபோல் அதிகாரியாகவும் தோன்றியுள்ளனர்
என்னைக்கவர்ந்த முக்கியமான சில . . .
* கதை செல்லுற அளவுக்கு ஒன்றுமில்லை ஏனென்றால் அதே பில்லா கதை தான் ஆனால் அதனை தெரியாமல் படத்தை இறுதிவரை இயக்குனா கொண்டுபோயுள்ளார் அந்தவகையில் இயக்குனர் பொரிய கில்லாடி தான் ஒரிஜினல் பில்லா கதையை அப்படியே எடுத்துக்கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். ஒரிஜினலில் இருந்த 'தேங்காய் சீனிவாசன்' கேரக்டர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது
* இசை யுவன் சங்கர் ராஜா அருமையிலும் அருமை
* ஆங்கிலப்படங்களுக்கு நிகரான சண்டைக்காட்சிகள் என அனைத்தும் அருமை திரையரங்கை விட்டு வெளியே வரும் போது ஆங்கிலப்படமொன்று பார்த்த உணர்வு வந்தது
* நிகழ்வு களத்தின் பின்புலமாக மலேசியா அருமையாகக்காட்டப்பட்டுள்ளது ஒளிப்பதிவில் கேமிரா கோணங்கள் அதிசயிக்க வைக்கிறது. அதிகபட்ச காட்சிகளில் பின்னணியில் பெட்ரோனாக்ஸ் டவர்ஸ் தெரிவது கொஞ்சம் எரிச்சல் தந்தாலும் அருமையாக இருக்கிறது ,மலேசியாவின் தரமான அழகான இடங்கள் வசதியான கட்டமைப்புகள் படத்திற்கான ரிச்னெஸை தானாகவேத் தருகிறது.

* அஜித் நடனத்தில் பலபடி முன்னேறி நன்றாகவேஆட்டம் போட்டிருக்கிறார்
* பாடல்களில் 2 ரீமிக்ஸ் பாடல்களும் [வெத்தலையப் போட்டேண்டி, மை நேம் ஈஸ் பில்லா ]அருமை மற்றும் செய் , சேவல்கொடி ஆகிய பாடல்கள் காட்சியமைப்பு அருமை


ஏற்கனவே பலர் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி வருவதால் நான் அந்தவேலையைத்தொடவில்லை இறுதியாக சொல்வதென்னவெனில் பொழுது போக்கிற்கேற்ற ஒரு அருமையான அதிரடித்திரைப்படம் ஒரு வெற்றிப் படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களும் கலந்து இருப்பதால் வெள்ளி விழா நிச்சயம்!!! .

ஒரேயயொரு குறை
ஹீரோயின்கள் படம் முழுக்க கவர்ச்சி என்ற பெயரில் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் ஒரிரு காட்சிகளில் இப்படி வந்தால் 'கிக்' இருக்கும். படம் முழுவதும் காட்டியதால் அலுத்துப்போகிறது இந்த விடையத்தில " DON " பறவாயில்லை

" நாம நல்லாயிரக்கவேணுமெண்டால் எத்தின பேரை வேணுமெண்டாலும் கொல்லலாம் " இது பில்லா சொலுற பஞ்ச் டயலாக் ஒன்னு.

இன்னுமொன்றும் சொல்லுறார்


" Im Back "

Read more...

சுப்பிரமணியபாரதியாரின் பிறந்த தினம்

" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
--இனிதாவதெங்கும் காணோம்
--பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
--இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
--நாமமது தமிழரெனக்
--கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
--தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
--பரவும்வகை செய்தல் வேண்டும். "
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும்(டிசம்பர் 11 1882 - செப்டம்பர் 11 1921).

ஆனால் இந்த உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி ! பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனுக்காக அன்று முதல் இன்று வரை நாம் என்ன செய்துள்ளோமென சிந்தியுங்கள் ? அவன் உயிர் விட்ட தமிழுக்காய் நாம் என்ன செய்துதோமெனச்சிந்தியங்கள் . அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். இன்றய தலைமுறையினரே பாரதியைப்புரிந்து கொள்ளுங்கள் அறிந்து கொள்ளுங்கள்
பத்திரிகையுலகில் பாரதி சில தகவல்கள்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் 1920 முதல் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராக பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906 செப்.1906,புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910), என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
துச்சமாக எண்ணிநம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
நச்சைவாயிலே கொணர்ந்து நண்பமூட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " - பாரதி



Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP