சர்வதாரி வருடப்பிறப்பு
சர்வதாரி வருடம் சித்திரை 1ம் திகதி [ 13-04-2008 ]ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாடி 27 விநாடி 05 ( மணி 4.55 ) புருவபக் ஷ நவமித்திதியில் பூசநட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் திருதி நாமயோகத்தில், பாலவக்கரணத்தில், கன்னி லக்கினத்தில், மீன நவாம்சத்தில் இப்புதிய சர்வதாரி வருடம் பிறக்கிறது
ஆதாரம் : வாக்கிய பஞ்சாங்கம்
மலரப்போகும் ஆண்டு உங்களுக்கு எல்லாவகையிலும் இனிதாக அமையட்டும். அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் மலர எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திப்போம்பிறக்கும் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலர வாழ்த்துகின்றேன்
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
மாயா
4 பின்னூட்டம்(கள்):
வாழ்த்துக்கள் மாயா. பிறக்கும் புத்தாண்டிலாவது நம் தமிழர்களுக்கு விடிவு பிறக்கட்டும்.
"நாளை என்பது விடிவதில் இல்லை. நாம் விழிப்பதில் உள்ளது"
//
பிறக்கும் புத்தாண்டிலாவது நம் தமிழர்களுக்கு விடிவு பிறக்கட்டும்.
//
ஒவ்வோர் புத்தாண்டிலும் இதைத்தான் எதிர்பார்க்கிறோம் நிர்ஷன்
உந்த பஞ்சாங்கம், அதிபடி வருஷப்பிறப்பு எல்லாம் ,சுத்த பேக்காட்டு வேலை...
தமிழரின் புது வருடம் எப்போதும் தை 1 ஆக தான் இருக்கவேணும்.
இந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் விடவேணும்.
இந்த ஆக்கத்தில் பஞ்சாங்கம் நாள் கோள் தொடர்பான விடையத்தை அதைவிரும்புபவர்களுக்காகத்தான் என்று தான் கையாண்டிருக்கிறேன். எனவே அதைவிட்டுவிடுங்கள் .
ஆனால் தைமாதத்தை புத்தாண்டாகக்கொண்டாடுவது என்னைப்பொறுத்தவரை ஏற்புடையதில்லை என்றே என்னுகிறேன் இதுபற்றிய பழைய பதிவொன்று இங்கே =>
Post a Comment