இலங்கையிலிருந்து பதிபவர்கள் . . .


இலங்கையிலிருந்து வலைப்பதிவை மேற்கோள்ளும் வலைப்பதிவாளர்களே வணக்கம்நான் இந்த வலைப்பதிவு உலகிற்கு புதிது ஆதலால் வலைப்பதிவு பற்றி பல சந்தேககங்கள் எழுவது வழக்கம் அந்தநேரங்களில் யாரிடம் உதவி கேட்பதென தெரியாமல் சில முயற்சிகளை கைவிடுவதுண்டு இப்படி அனேக வலைப்பதிவாளர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் இந்தப்பிரச்சினைகளைத்தீர்ப்பதற்காக இலங்கையிலிருந்து வலைப்பதிவை மேற்கோள்ளும வலைப்பதிவாளர்கள் ஏன் தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஒன்றை நடத்தினால் என்ன ? இது இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்குமே ! மற்றும் எத்தனை பேர் இலங்கையிலிருந்து இருந்து பதியினம் எண்டு அறியலாம் தானே !தமிழில் வலைப்பதிவது குறித்து அறியாதவர்களுக்கு தமிழ் வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, வலைப்பதிந்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை தெளிவுப்படுத்துவது, வலைப்பதிவர் பின்னல் ஒன்றை உருவாக்குவது, வலைப்பதிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கலாமே ! அத்துடன் அது இலங்கை வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்த ஓர் வாய்ப்பாக இருக்கும. !இது எனது தனிப்பட்ட கருத்து இதுபற்றி மேலதிக கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் . . . உங்களுக்கு யார் யார் இலங்கையிலிருந்து இருந்து பதியினம் எண்டு தெரிஞ்சால் எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அல்லது பதியிறனிங்களே ஒரு பின்னூட்டம் போடுங்கோ.
நன்றி

2 பின்னூட்டம்(கள்):

அற்புதன்  

எனக்குத் தெரிய கொழும்பில் இருந்து பதிபவர்கள் மயூரேசன்,மயூரன் மற்றும் நிவேதா.தொழில்னுடப்ப விடயங்கள் மயூரனுக்கு நன்றாகத் தெரியும்.மல்லிகையில் அவர் இது தொடர்பாக எழுதி இருக்கிறார்/வருகிறார் (?) என்று நினைக்கிறேன்.அவர் உங்கள் பதிவைப் பார்த்தாரா என்று தெரியவில்லை.அவர் பதிவில் பின்னூட்டமாகவோ அன்றி மின்னன்ச்சல் முகவரியூடாகவோ தொடர்பு கொண்டால் உங்களுக்கு உதவுவார் என்று நினைகிறேன்.
பகி யாழ்ப்பாணத்தில் இருந்து பதிகிறார்.

உங்களுக்குத் தேவையான பல விடயங்கள் தமிழ் மணத்தில் உதவி என்ற பகுதியில் இருக்கிறது,பலர் பதிவுகளாகவும் இட்டு இருக்கிறார்கள்.
ரவிசங்கர்,சயந்தன் ஆகியோரின் பதிவுகளில் தேடினால் கிடைக்கலாம்.

மாயா  

வணக்கம்
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

mayuresan ஐத் தொடர்பு கொண்டேன்
அவரும் உதவிகளை வழங்கத்தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார் . . .

யாழ்ப்பாணத்திலிருந்து பகீ யையும் விரைவில் தொடர்பு கொள்ளவிருக்கிறேன்

நிவேதா பற்றி எதுவுமே தெரியாது . . .மேலதிக விபரமிருந்தால் தெரிவியுங்கள்

நன்றி
மாயா

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP