மதியம் புதன், 25 ஜூலை 2007
மதியம் திங்கள், 23 ஜூலை 2007
எண்பத்து முன்று ஜூலை..
இன்று ஜுலை 23 83 ம் ஆண்டு ஜுலை 23 தமிழ் நெஞ்சங்களை சிங்களக் கைகள் கிளித்துப்பந்தாடிய கொடூரமான நாள் தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாக திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட (400-3000 பேர்வரை, உறுதி செய்யப்படவில்லை) துன்பவியல் நிகழ்வாகும்.




அன்பர்களே! 83 யூலை மாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா? 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்ன?யூலை 83... என்று நினைத்துக் கலங்கிவிட்டுச் சும்மா இருக்கும் நேரமல்ல இது. உரிமையிழந்து பின்னர் உடமையிழந்து, இப்போது உயிர் கொடுத்துப் போராடுகின்ற எமது இனத்தின் உணர்வுகளுக்கு நம் தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. . நாளைப் பொழுது தமிழர் வாழ்வில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாமும் நமது கடமையைச் செய்திட வேண்டுமல்லவா
மதியம் வெள்ளி, 20 ஜூலை 2007
நானும் அனுப்பிவிட்டேன்
இயற்கை என்கிற தலைப்பில் போட்டியில் பங்கேற்க நானும் 2 படங்களை அனுப்பிவிட்டேன்
நான் எத்தனை புகைப்படம் எடுத்திருதாலும் நெடுந்தீவு சென்ற போது எடுத்த எம் தாயகத்திற்கேயுரித்தான பனைமரங்களை கொண்ட புகைப்படமே எனது முதல் தெரிவு
அடுத்தது எனது சொந்த ஊரான அளவெட்டியில் உள்ள தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அருகே இருந்த செவ்விளநீர் மரம்
இவை யாவும் சென்ற வருடம் ஆனி மாதம் படமாக்கப்பட்டவை (ஆவணியுடன் யாழ்ப்பாணத்திற்குரிய சகலபாதைகளும் மூடப்பட்டதை நீங்கள் அறிவீங்க தானே ?)
மதியம் திங்கள், 9 ஜூலை 2007
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத் தாக்குதல்
வலிகாமம் பகுதியில் இலங்கை அரசினரால் முன்னேறிப் பாய்தல் (லீட் ஃபோர்வேட்) இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் ஷெல் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர். இதனால் மக்கள் உடுத்த உடையுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.
அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசப்பட்டன. இரண்டும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் பலாத்த சேதமடைந்தன.
இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 141 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். சுமார் 360 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அன்றைய தாக்குதலில் மக்கள் தொண்டுப்பணியில் ஈடுபட்டு உணவு, குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில் துடி துடித்து உயிர் இழந்தனர்.
மதியம் ஞாயிறு, 8 ஜூலை 2007
இலங்கையிலிருந்து வலைப்பதிவை மேற்கோள்ளும் வலைப்பதிவாளர்களே வணக்கம்
கடந்த பதிவில பற்றி எழுதியிருந்தன் ஒருவரிடமிருந்தும் பதிலக்காணேல்ல ?
உங்களுக்கு யார் யார் இலங்கையிலிருந்து இருந்து பதியினம் எண்டு தெரிஞ்சால் எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அல்லது பதியிறனிங்களே ஒரு பின்னூட்டம் போடுங்கோ.
கருத்துக்களையும் எதர்பார்க்கிறேன்
மதியம் சனி, 7 ஜூலை 2007
இலங்கையிலிருந்து பதிபவர்கள் . . .
இலங்கையிலிருந்து வலைப்பதிவை மேற்கோள்ளும் வலைப்பதிவாளர்களே வணக்கம்நான் இந்த வலைப்பதிவு உலகிற்கு புதிது ஆதலால் வலைப்பதிவு பற்றி பல சந்தேககங்கள் எழுவது வழக்கம் அந்தநேரங்களில் யாரிடம் உதவி கேட்பதென தெரியாமல் சில முயற்சிகளை கைவிடுவதுண்டு இப்படி அனேக வலைப்பதிவாளர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் இந்தப்பிரச்சினைகளைத்தீர்ப்பதற்காக இலங்கையிலிருந்து வலைப்பதிவை மேற்கோள்ளும வலைப்பதிவாளர்கள் ஏன் தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஒன்றை நடத்தினால் என்ன ? இது இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்குமே ! மற்றும் எத்தனை பேர் இலங்கையிலிருந்து இருந்து பதியினம் எண்டு அறியலாம் தானே !தமிழில் வலைப்பதிவது குறித்து அறியாதவர்களுக்கு தமிழ் வலைப்பதிவை அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, வலைப்பதிந்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை தெளிவுப்படுத்துவது, வலைப்பதிவர் பின்னல் ஒன்றை உருவாக்குவது, வலைப்பதிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கலாமே ! அத்துடன் அது இலங்கை வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்த ஓர் வாய்ப்பாக இருக்கும. !இது எனது தனிப்பட்ட கருத்து இதுபற்றி மேலதிக கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் . . . உங்களுக்கு யார் யார் இலங்கையிலிருந்து இருந்து பதியினம் எண்டு தெரிஞ்சால் எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அல்லது பதியிறனிங்களே ஒரு பின்னூட்டம் போடுங்கோ.
நன்றி