ஜீவா


தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, தனிக்கவனம் பெற்று வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அவர்கள், தனது 'தாம்தூம்' படப் பிடிப்பின் முடிவில் ருஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வந்துள்ளது.


12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, ரன் (ஹிந்தி வடிவம்), என்று இன்றைய இளைஞரின் நாடித்துடிப்பைத் தன் படங்களில் கொண்டுவந்தவர்.தவறவிடப்பட்ட பஸ் போன்று வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத மாற்றங்களை இரு கோணங்களில் 12B படத்தில் காட்டியிருப்பார்.

ஒரு பணக்காரத்தனமான கல்லூரி வாழ்க்கையையும், நண்பர் குழாமைச் சுற்றிய நிகழ்வுகளையும் "உள்ளம் கேட்குமே" படத்தில் காட்டியிருந்தாலும், அந்த இளைஞர்களின் ஏக்கங்கள், குணாதிசியங்கள் எல்லாத்தரப்பு இளைஞருக்கும் பொருந்தக்கூடியவை.காதல் என்பது ஒரு முறை தான் பூக்க வேண்டுமா? காதலித்த குற்றத்திற்காக சதா ஊடலே வாழ்க்கையா? ஊடல் என்பது ஊறுகாய் போல இருக்கவேண்டும், அதுவே சாப்பாடாகிவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக வந்தது இவரின் சமீபத்தியதும் இறுதியானதுமான "உன்னாலே உன்னாலே" திரைப்படம்.கவிஞரும், இசையமைப்பாளரும் கஷ்டப்பட்டுக் கோர்க்கும் பாடலைக் கண் முன் கவியழகாகத் தரும் ஒளிஓவியர்களில் இவருக்கும் ஒரு இடம் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் இனிய பாடல்களோடு, அப்பாடல் காட்சிகளாகப் போட்டி போடும் ஜீவாவின் ஒளிப்பதிவு நல்ல உதாரணம்.

தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞனை இன்று இழந்திருக்கின்றது.

ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

2 பின்னூட்டம்(கள்):

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP