பில்லா

இன்று பில்லா வெளியானபடியால் முதலாவது காட்சியே பார்ப்பதென முடிவானது அதற்கமைய கொழும்பு தெஹிவளை கொன்கோட் திரையரங்கில் படம் பார்ப்பது என்று முடிவெடுத்தபின் விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக நின்றிருந்தார்கள் சரி உள்ள போவமென்டால் எங்க விட்டால் தானே ஒரு மாதிரி டிக்கற்றை எடுத்து உள்ளே போயாச்சு உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது படம் தொடங்கிற நேரத்தில இருந்து கொஞச நேரத்துக்கு ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். பிறகு பிறகு குறைந்து விட்டுது ஏன் என்றால் வீறுவிறுப்பு அப்படி இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

சரி கதைக்கு வருவம் பில்லா என்று உலகம் முழுவதும் தேடப்படும் கடத்தல்காரன். அவனைப்பிடிக்க பிரபு தலைமையிலான் படை ஒன்று மலேசியாலில் தந்தி தேடுதல் நடத்தி வருகிறது. ஒருகட்டத்தில பில்லா அவர்களிடையே சிக்கிய நிலையில் இறந்து போகிறான் . எனவே அந்த நேரத்தைப்பயன்படுத்தி பிரபு பில்லா மாதிரியே இரக்கும் வேலுவை பில்லாவின் கூட்டத்தினுள் அனுப்புகிறார் என்ன ரஜினி நடித்த பில்லா கதை தானெ பிறகென்னத்திற்கு கதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கு . . . . . .

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் பில்லா அஜித்குமாராக மறுஅவதாரம் எடுத்திருக்கிறார் . படம் முழுக்க அஜித் ராஜ்ஜியம். ஜேம்ஸ்பாண்டு பாணி அறிமுகக்காட்சியிலிருந்து அடடா சூப்பர் !சூப்பர்ஸ்டார் ஏற்ற பில்லா மற்றும் ராஜா இரு வேடத்தினையும் பில்லா மற்றும் வேல் என அசத்தலாக உருமாறியிருக்கிறார் அஜித்குமார் ஸ்ரீப்ரியா நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாராவும், ப்ரவீணா நடித்த கதாபாத்திரத்தில் கனவுதேவதை நமீதாவும் தோன்றுகிறார்கள். இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் (பாலாஜி கதாபாத்திரம்) சந்தானம் வேலுவின் நண்பராகவும் ரகுமான் இன்ரபோல் அதிகாரியாகவும் தோன்றியுள்ளனர்
என்னைக்கவர்ந்த முக்கியமான சில . . .
* கதை செல்லுற அளவுக்கு ஒன்றுமில்லை ஏனென்றால் அதே பில்லா கதை தான் ஆனால் அதனை தெரியாமல் படத்தை இறுதிவரை இயக்குனா கொண்டுபோயுள்ளார் அந்தவகையில் இயக்குனர் பொரிய கில்லாடி தான் ஒரிஜினல் பில்லா கதையை அப்படியே எடுத்துக்கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். ஒரிஜினலில் இருந்த 'தேங்காய் சீனிவாசன்' கேரக்டர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது
* இசை யுவன் சங்கர் ராஜா அருமையிலும் அருமை
* ஆங்கிலப்படங்களுக்கு நிகரான சண்டைக்காட்சிகள் என அனைத்தும் அருமை திரையரங்கை விட்டு வெளியே வரும் போது ஆங்கிலப்படமொன்று பார்த்த உணர்வு வந்தது
* நிகழ்வு களத்தின் பின்புலமாக மலேசியா அருமையாகக்காட்டப்பட்டுள்ளது ஒளிப்பதிவில் கேமிரா கோணங்கள் அதிசயிக்க வைக்கிறது. அதிகபட்ச காட்சிகளில் பின்னணியில் பெட்ரோனாக்ஸ் டவர்ஸ் தெரிவது கொஞ்சம் எரிச்சல் தந்தாலும் அருமையாக இருக்கிறது ,மலேசியாவின் தரமான அழகான இடங்கள் வசதியான கட்டமைப்புகள் படத்திற்கான ரிச்னெஸை தானாகவேத் தருகிறது.

* அஜித் நடனத்தில் பலபடி முன்னேறி நன்றாகவேஆட்டம் போட்டிருக்கிறார்
* பாடல்களில் 2 ரீமிக்ஸ் பாடல்களும் [வெத்தலையப் போட்டேண்டி, மை நேம் ஈஸ் பில்லா ]அருமை மற்றும் செய் , சேவல்கொடி ஆகிய பாடல்கள் காட்சியமைப்பு அருமை


ஏற்கனவே பலர் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி வருவதால் நான் அந்தவேலையைத்தொடவில்லை இறுதியாக சொல்வதென்னவெனில் பொழுது போக்கிற்கேற்ற ஒரு அருமையான அதிரடித்திரைப்படம் ஒரு வெற்றிப் படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களும் கலந்து இருப்பதால் வெள்ளி விழா நிச்சயம்!!! .

ஒரேயயொரு குறை
ஹீரோயின்கள் படம் முழுக்க கவர்ச்சி என்ற பெயரில் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் ஒரிரு காட்சிகளில் இப்படி வந்தால் 'கிக்' இருக்கும். படம் முழுவதும் காட்டியதால் அலுத்துப்போகிறது இந்த விடையத்தில " DON " பறவாயில்லை

" நாம நல்லாயிரக்கவேணுமெண்டால் எத்தின பேரை வேணுமெண்டாலும் கொல்லலாம் " இது பில்லா சொலுற பஞ்ச் டயலாக் ஒன்னு.

இன்னுமொன்றும் சொல்லுறார்


" Im Back "

11 பின்னூட்டம்(கள்):

வந்தியத்தேவன்  

மாயா ஒரு சில படங்கள் முதல் காட்சிக்குப் போய் பட்டபாட்டின் பின்னர் நான் முதல் காட்சிக்கு போவதில்லை என்ற முடிவு எடுத்துவிட்டன். எப்படியும் இந்தக் கிழமை பார்த்துவிடுவதுதான். கொன்கோட் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கிறது?

வலையில் முதல் விமர்சனம் உங்களதுதான் வாழ்த்துக்கள்

Nandhakumar BALA  

I love your fast action as same as like the film " BILLA "
B.NANDHAKUMAR.DUBAI.
nand1972@gmail.com

மாயா  

வந்தியத்தேவன் கொன்கோட்டில ஒரு வித்தியாசத்தையும் காணேல்ல அவை முதல்ல Hindi படம் போட்டுப்பாத்தினம் அது சரிவரவில்லை அதனால மீண்டும் தமிழுக்கு இறங்கிவிட்டினம் போல கிடக்கு .
மற்றும் படி பழைய கொன்கோட் தான்

//வலையில் முதல் விமர்சனம் உங்களதுதான் வாழ்த்துக்கள்//
நன்றி

உங்கள விடவா ?
நீங்க படம் வெளியாகும் முன்னரே விமர்சனம் எழுதியிருக்கிறியள் தானே [ ஓம் சாந்தி ஓம் - திரைவிமர்சனத்தைச்சொன்னன்]

வந்தியத்தேவன்  

அடப்பாவியள் இப்படி ஏமாற்றிவிட்டாங்களே ஏதோ புதுப்பொலிவுடன் கொன்கோட் பிரிமியர் என விளம்பரம் பார்த்தேன். அப்போ இன்றைக்கு கம்பஸ் கட்டா?

ஓம் சாந்தி ஓம் பிரிவியூ ஷோ பார்த்தேன். ஆனால் இவங்கள் தமிழ்ப் படங்களுக்கு பிரிவியூ ஷோ போடுவதில்லை காரணம் ஒரு சில தமிழர்கள் தான் பார்க்க வருவார்கள். ஹிந்திப் படம் என்றால் சிங்களத் திரையுலகப் பிரமுகர்கள் வருவார்கள்.

கானா பிரபா  

பதிவை முடிக்கேக்க பில்லா குத்து வசனத்தையும் (பஞ்ச் டயலாக்) சொல்லி விடை பெற்றிருக்கலாம் ;)

கானா பிரபா  

உதென்ன கொன்கோர்ட்டிலும் தலக்கு தலையில் பால் வார்த்தவங்களோ? கட் அவுட்டைப் பார்த்தா அப்படித்தான் இருக்கு?

மாயா  

கானா அண்ணாவின் பின்னூட்டத்திற்கு அமைவாக குத்து வசனத்தையும் இனையும் சேர்த்துவிட்டாச்சு
ஆனா இத விஜயோட படங்களில வாறமாதிரி குத்து வசனமென்டு சொல்ல ஏலாது

மாயா  

// அப்போ இன்றைக்கு கம்பஸ் கட்டா? //

வீடுமுறை தானே அது தான் வெள்ளனவே போயிட்டம் .ஆனா எங்களவிடக்கன சனம் மணியிலயிருந்து காத்திருந்தார்களாம்:(

யோகன் பாரிஸ்(Johan-Paris)  

மாயா!!
எல்லாம் சரி....கொழுப்பில கண்ட இடத்தில் தமிழரைப் பிடிக்கிறார்கள் என இணையப் பத்திரிகைகள்
பீலா... விடுகுது... நீங்கள் என்ன?? நல்ல கூலாப் "பிர்லா" பார்த்த கதை போடுறியள்.
எங்களை வைச்சு கொமடி;கிமடி பண்ணயில்லைதானே....
அப்பு நீங்கள் இப்படி சந்தோசமாக இருந்தால்; எங்களுக்கு நிம்மதி கண்டியளோ...
நன்கு அனுபவியுங்கள்...
அடுத்து ஆங்கிலப்படம் பார்த்துபோல் என எழுதியதை வைத்து கூறுகிறேன். ஆங்கிலப் படமே எனக் கூற தமிழ் படங்களுக்கு நிர்வாணக் காட்சி ஒன்றுதான் இல்லை. மற்றும் படி விரல் விட்டெண்ணக் கூடிய படங்கள் தவிர எல்லாமே.... ஆங்கிலப் படத்தை விஞ்சி விடும்...

அதுவும் பாடல் காட்சியெனில் 2 துண்டுடன் வரும் கதாநாயகியை; கதாநாயகன் தோடம்பழம் பிழிவது போல் கசக்குவது....ஆங்கிலேயனே பார்க்கக் கூச்சப்படுவான்.
வாழ்க தமிழ்!!!

Anonymous,   

I referred this post for blogkut.com billa reviews

மாயா  

* // கொழுப்பில கண்ட இடத்தில் தமிழரைப் பிடிக்கிறார்கள் என இணையப் பத்திரிகைகள்
பீலா... விடுகுது... நீங்கள் என்ன?? நல்ல கூலாப் "பிர்லா" பார்த்த கதை போடுறியள். //உண்மை தான் ஆனால் இப்ப கொஞ்சம் குறைந்து விட்டது அண்ணா :)

* // அதுவும் பாடல் காட்சியெனில் 2 துண்டுடன் வரும் கதாநாயகியை; கதாநாயகன் தோடம்பழம் பிழிவது போல் கசக்குவது....ஆங்கிலேயனே பார்க்கக் கூச்சப்படுவான். //
அதென்னவோ உணமை தான் ஹீரோயின்கள் படம் முழுக்க கவர்ச்சி என்ற பெயரில் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் ஒரிரு காட்சிகளில் இப்படி வந்தால் 'கிக்' இருக்கும். படம் முழுவதும் திரிவது இந்தத் தமிழ் திரையுலகில்தான் :(

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP