சுஜாதாவின் மறைவும் தமிழ்மணத்தில் பதிவர்களின் கூத்தும்


சுஜாதா [S.ரங்கராஜன்] என்ற ஓர் மாபெரும் எழுத்தாளன் தன் 73ம் வயதில் அமைதியாக விண்ணுலகம் அடைந்தபின் , தமிழ்மணம் உட்பட பலதிரட்டிகளில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துமுகமாக அஞ்சலிகளும், அவரின் வாழ்க்கை தொடர்பான சுவையான பதிவுகளும் வெளிவந்தன அதைவிட அதிகமாகவந்ததென்னவோ அவருக்கு எதிராகத்தான். குறிப்பாக அஞ்சலி செலுத்தியவற்களுக்கெதிராக எதிர்த்துப் பதிந்த பதிவுகளும் சுஜாதாவின் மரணம் சரியானதே ! என்றும் , சாதிரிதியாக பல பதிவுகளும் வந்திருந்தன .

இதையிட்டு எனக்கு மனக்கவலை ஏற்பட்டிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறானவர்களை நினைத்து சிரிப்புத்தான் வந்தது குறிப்பாக சாதி ஒழியவேண்டும் என வாய்கிழியக்கத்துபவர்கள் கூட அவரது சாதிப்பெயரை சந்திக்கிழுத்து வாதம் பரிந்தனர் . அப்படி அவர் செய்த தவறென்ன ? என்னைப்பொறுத்தவரை சாதி ஒழியவேண்டும் என கூறுபவர்கள் மத்தியில் அவர் பிராமணராகப்பிறந்தது தான் அவர் செய்த தவறு ! நம் மனத்தில் தோன்றும் கருத்துக்களை எழுதுவதற்கே நாம் பதிவெழுதுகிறோம் அந்தவகையில் தான் அந்த மாபெரும் எழுத்தாளனுக்கு அஞ்சலி செலுத்தினோம். ஆனால் இங்கே பதிவுகளைப்பார்த்தபோது பலர் அதில் மகிழ்ச்சியடைந்தமாதிரித்தான் தெரிகிறது உங்களிடமே கேட்கிறேன் உங்கள் நெருங்கிய சொந்தம் ஒருவருடைய மரணவீட்டில் வந்து கும்மாளம் அடித்தாலோ அல்லது அவரைப்பற்றி குறைசொன்னாலோ தாங்கிக்கோள்ளமுடியமா ? அல்லது மரணம் எல்லோருக்கும் பொதுவானது தான் அதற்காக ஏன் அழுகிறீர்கள் சிரியுங்கள் என்று சொல்லமுடியுமா ? எந்த ரோஷமுள்ள மனிதனாலும் தாங்கிக்கொள்ளமுடியாது !

பதிவர்களே !
நீங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தாமலிருந்தால் பறவாயில்லை ஆனால் அவரைப்பற்றி அவதூறு பரப்பினீர்களே அங்கு தான் உங்கள் weakness தெரிகிறது ! உங்கள் நோக்கம் அதிக ஹிட்களை பெறுவது தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் குறிக்கோள் என்று செயல்படும் பதிவுகளை பதிவுகளின் தலைப்புகளிலேயே தெரிந்து கொள்ளமுடியும் அதற்க்காக இறந்த ஓர் எழுத்தாளரை இப்படியெல்லாம் பாடுபடுத்துவதா அதுவும் மூன்றாந்தர வார்த்தைகளை மிகச் சாதாரணமாக பயன்படுத்தி ?

நமக்குள் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதைவிடுத்து ஒருவரின் மரணத்தை வைத்து இல்லாதபலவற்றைக்கற்பனை செய்து அதை தலைமேல் தூக்கி ஆடி மற்றவர்களையும் வம்புக்கு இழுப்பதே இன்றய தமிழ் வலைப்பதிவுலகத்தில் பெரியவர்களெனக்கூறுபவர்களின் வேலை (அன்று சுஜாதா மறைவுக்கு சந்தேஷமாகப்பதிவெளுதியோர் பலர் தமிழ்மணத்திற்கு பழையவர்கள்) பதிவுபோட்டவர்களுக்கு போய்ப்பின்னூட்டமிட்டவர்களும் அனேகர் பழையவர்களே அவர்கள் ஒன்று தெரிந்து கொள்ளட்டும் முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.

கடந்தவாரம் தமிழ்வலையுலகம் சுஜாதாவின் மரணத்தின் பின் வந்த பதிவுகளால் நிலைகுலைந்து கொண்டிருப்பது அனைவ‌ருக்கும் தெரியும். நிறைய பேர் வேடிக்கை பார்த்தார்கள் நானும் ஒப்புக்கொள்கிறேன். இதில் வந்து வாசிக்கும் போதே குற்ற உணர்ச்சி தோன்றுகிறது தமிழனுக்கே உரித்தான ஒற்றுமையின்மை, இங்கேயும் காட்சி தர ஆரம்பித்து விட்டது என எண்ணத்தோன்றுகிறது . பல மூத்த பதிவர்கள் மொளனம் சாதிப்பது (திரட்டிகளின் நிர்வாகத்தினர் ) வருத்தத்தை அளிக்கிறது . நிறைய‌ பேர் என்னைப்போல் தனிப்பட்டரீதியில் (பின்னூட்ட , மின்னஞ்சல் ) காய‌ப்ப‌டாத‌தினாலும் அமைதியாய் இருந்திருக்க‌க் கூடும். நம் நாட்டில், எத்தனை கொடுமைகள் தினமும் நடைபெறுகின்றன அவற்றையெல்லாம் தட்டிக்கேட்கமுடியாமல் பழகிக் கொண்டுள்ளோம். அல்லவா அதுமாதிரி தான் இந்த வலையுலகில் சில கொடுமைகள் நடைபெறுகின்றன எங்கேயாவ‌து நடந்தால் நடந்துவிட்டுப்போகட்டுமே என்கென்ன என்னால் எதிர்த்துப்பேசவா முடியும் ( நாம் அன்றாடம் பார்க்காத,கேட்காத அசிங்கங்களா,கொடுமைகளா இந்த வலைப் உலகில் புதிதாக பார்க்கிறோம்..என்று மனதைத் தேற்றவேண்டியது தான்.

கொஞ்சக்காலமாய்த்தான் எழுதுகிறேன். எத்தனையோ பேரை நண்பர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களே அனானிகளாக வந்து இழிவாக எழுதுகிறார்கள் இதை எங்குபோய் சொல்லியழுவது ?

பதிவர்களே இத்தகைய வீணான பதிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நல்ல பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டமிட்டு ஆதரவு கொடுங்கள்

நன்றியுடன்

மாயா

19 பின்னூட்டம்(கள்):

ஜெயா  

நச்சின்னு நாக்கை பிடுங்கும் விதமாய் நாலு கேள்வி துணிந்து கேட்டாயே இது தமிழனுக்கழகு... தவறாக எழதியவர்களை என்ன நினைகிறாய் தமிழா எல்லாம் எரிகிற வீட்டில் எண்ணை ஊற்றுகின்ற சனம்... உன் கோபத்திற்கு என் வாழ்த்துக்கள்...

மாயா  

கடுமையான வார்த்தைப்பிரயோகங்களுடன் பின்னூட்டம் எழுதிய பதிவர்களே உங்கள் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன் , அத்துடன் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையிலும் நான் இல்லை அதற்குரிய தெவையும் இல்லை . .

எனக்கு அவர் மேல் எழுத்தாளர் என்ற ரீதியில் மதிப்பு உண்டு அவ்வளவு தான் .

சரியா ?

இனி அனானிபின்னூட்டங்களை தவிர்த்து நேரடியாக மோதுங்கள் நானும் பதில் சொல்கிறேன்

நன்றி! !
Maya

D

மாயா  

நீங்களும் இதைப்பற்றி கேட்கவேண்டும் . .

"ஒருகைதட்டினால் சத்தம் வராது "

தெரியும் தானெ தோழா !

யோகன் பாரிஸ்(Johan-Paris)  

மாயா!
விடுமுறையில் சென்று வந்தேன்; தமிழ்மணத்தில் சுஜாதாவைக் காயப்போட்டிருந்தது.
அப்படியே இருந்துவிட்டு, நேற்றிரவு பிரபாவின் பதிவில் அவர் குரலை முதல் முதல்
கேட்டேன்.என் கருத்தைப் பின்னூட்டினேன்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்"
என்னைப் பொருத்தமட்டில் தவறு செய்வது மனித இயல்பு; அவரும் ஒரு மனிதர்.

வந்தியத்தேவன்  

துணிச்சலுக்கு வாழ்த்துக்கள் மாயா. பலரின் முகமூடியைக் கிழித்துவிட்டீர்கள். எனக்குத் தெரிந்த ஒரு பதிவர் ஒருவர் தன்னுடைய ஒரு வலையில் அமரர் சுஜாதாவுக்கு அஞ்சலியும் இன்னொரு வலையில் எதிர்ப்பும் தெரிவித்து தன் நடுநிலையை காட்டியுள்ளார். இப்படி எத்தனைபேரோ யார் கண்டார்கள். சுஜாதா என்ற மாபெரும் எழுத்தாளனைப்பாருங்கள். நேற்றிரவு மீண்டும் பிரிவோம் சந்திப்போம் மறுவாசிப்பு செய்தேன். என்ன அழகாக பல யதார்த்தங்களைக் காட்டியிருக்கிறார். அவருக்கு ஜாதி முகமூடிபோட்டு பார்க்காதீர்கள்.

உண்மைத்தமிழன்  

உண்மைதான் மாயா..

சக மனிதர்களை இனம், மொழி, சாதி, வர்க்கம் பார்க்காத தன்மைதான் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய தலையாய குணம்..

இது இல்லாததால்தான் உலகம் முழுவதுமே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.

உயிரற்ற உடல் செல்லும் இடத்திற்குத்தான் நாளையோ, பின்னாளோ தானும் செல்லப் போகிறோம் என்பதை இந்த வன்முறை மனிதர்கள் உணர்வதில்லை.. உணர்ந்தாலும் அதனை வெளிப்படுத்த முடியாமல் நடிக்கிறார்கள்.

உங்களுடைய கேள்விகளில் இருக்கும் நியாயங்களுக்கு உதாரணமாக, சக பதிவர்கள் மெளனமாக தங்களது அஞ்சலிகளை நூற்றுக்கணக்கில் தெரிவித்து காட்டிவிட்டார்கள்.

இனியாவது அவர்கள் புரிந்து கொண்டால் சரி..

சிறில் அலெக்ஸ்  

உங்கள் எண்ணங்களை தெளிவாக தைரியமாக வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.

மாயா  

நண்பர்களே !

வருகைக்கும் ஆதரவுகளுக்கும் நன்றிகள்

மாயா  

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்"

அண்ணா தெரிந்தும் பிழைசெய்வேன் என்று அடம்பிடிப்போரை என்ன செய்வது ?

வசந்தன்(Vasanthan)  

//(அன்று சுஜாதா மறைவுக்கு சந்தேஷமாகப்பதிவெளுதியோர் பலர் தமிழ்மணத்திற்கு பழையவர்கள்)//

தகவற்பிழையைச் சுட்ட மட்டும் இப்பின்னூட்டம்.

பழைய பதிவர்களென்று யாரைச் சொல்கிறீர்கள்.
சுஜாதா மறைவுக்குச் சந்தோசப்பட்ட "பழைய" பதிவர்கள் இரண்டொருவரைச் சொல்லுங்களேன். அவர்களைவிடவும் மிகமிகப் பழைய பதிவர்கள் பலர் சுஜாதாவுக்காக உருகி எழுதியதை நான் காட்டுகிறேன். (வெங்கட், பி.கே. சிவகுமார், எ.அ.பாலா, பிரகாஷ், சுரேஷ்கண்ணன், அருள்செல்வன் என்று மிகமிகமிகமிகப் பழைய பதிவர்கள் உள்ளார்கள்)

மேலும், இதில் பழைய பதிவர்கள், புதிய பதிவர்கள் என்ற கதையை ஏன் புகுத்துகிறீர்கள்? ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

மாயா  

அண்ணா நீங்கள்குறிப்பிட்டயாரும் அப்படி எழுதவில்லை தான் .

உண்மையை உங்களுக்குதனிப்பட்ட முறையில் தெரிவிக்கிறேன்

நன்றி
Maya
mayunathan@gmail.com

King...  

எனக்கு பிடித்த எழுத்தாளர்களுள் சுஜாதாவும் ஒருவர், பதுசா எழுதுpற ஆக்களுக்கே இவ்வளவு தெரியும் என்றால் அவருக்கு எவ்வளவு தெரிந்திருக்கும்...

King...  

மாயா எனக்கு ஒரு மடல் அனுப்பலாமே...

Anonymous,   

மாயா 'அலைஞனின் அலைகள்' பாத்தியளோ?
உங்களைப் பற்றிப் புகழ்ந்து எழுதி இருக்கிறாங்கள் எல்லாரும்..
போய்ப் பாருங்கோ..
அவர் இணையத்துக்கு 90 களின் ஆரம்பத்திலயே வந்திட்டார்..
அப்ப பழைய பதிவர் தானே!!

http://wandererwaves.blogspot.com/2008/03/blog-post.html#comments

நந்தவனத்து ஆண்டி  

வணக்கம் கிங்
முதலில உங்களிட்ட ஒருகேள்வி கேட்கிறன் சொல்லுங்க நீங்க மெய்யாலுமே யாழ்ப்பாணத்தில இருந்து தானோ வலைபதிவிடுகிறீர்கள் ? ஏனென்டா பார்த்தால் அப்படித்தெரியேல்ல ?

அது சரி உம்மட பின்னூட்டத்ததைப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிது பின்ன . . .
90களிலிருந்து அவர் வலையுலகிலிருப்பதாய் சொல்லுறீர் ? 90களில தமிழ் இணையத்தில எங்க இருத்துச்சு ? ஆ தெரியுமா . . . சொல்லும் பார்ப்பம் முதல்ல தமிழ் இணையத்தின் வரலாறை எங்கையாவது பார்த்து தெரிந்து கொள்ளும் அதன்பிறகு கதையும்


அதுவும் அவர் இணைய உலகில் மூத்தவர் பழையவர் வல்லவர் என்டு யார் சொன்னது வலைப்பூவில் பதிவெளுதிவிட்டு தமிழ்மண நிர்வாகத்தில் ஒருவராயிருந்தால் அந்த 45 வயது பெரியவர் இணைய உலகில் பெரியவரா ?

பதிவில் குறிப்பிட்ட பெரியவர்கள் என்ற போல கிடக்கு என்னைப்பொறுத்தவரை அதாவது தமிழ் இணைய உலகில் புதிதாக பெரியவர்களென்றால் ஏதாவத சாதித்திருக்கவேண்டும் உதாரணத்திற்கு நமது காசி அண்ணா சுரதா போன்றோரை சொல்லலாம்

அப்பிடியேதாவத செய்தவரே அவர் ?

அவருக்கு நாகரீகம் தெரிந்திருக்கவேண்டும் பதிவெழுதவதில், பின்னூட்டமிடவதில் தானும் பெரியமனுஷத்தன்மையை காட்டி இருக்கவேண்டும்

அதிலும் அவர் தவறுசெய்த விட்டார் இவரைப்போய் நீர் பெரியமனுஷரெண்டு சொல்லுறீரே :))

இறக்குவானை நிர்ஷன்  

மாயா,எழுத்துலக நிறைகுடங்களில் அமரர் சுஜாதாவும் ஒருவர். இருக்கும்போது சொல்லத்துணியாதவர்கள் இல்லாதபோது சொல்கிறார்கள் அதுவும் அனானிகளாக. எம்மில் பலருக்கு வசைபாடும் பழக்கம்தானே இருக்கிறது. குறைகளை விட நிறைகளால் பயன்கண்டு தெளிவுபெற்றோம் என்றால் குறைகளைக் கூறி காலம் கழிப்பதில் எவ்வித பயனும் இல்லை. பதிவர்கள் பலர் பேசும் விடயம் தான் ஜாதி. ஜாதியைப் பற்றி பேசக்கூடாது என்று வாதிடுபவர்களின் கருப்பொருளே,ஏன் தலைப்பு கூட அதுவாகத்தான் இருக்கிறது. ஓர் எழுத்தாளனின் திறமை வித்தியாசமானது. அவனுடைய சுயசிந்தனையின் தாற்பரியமும் நடைமுறையும் பலவற்றையும் எமக்கு உணர்த்துகின்றன. அநாவசியமாக கதைப்பதை விடுத்து யாதார்த்தமான பயனுள்ள விடயங்களை உள்வாங்கி வாழலாமே?
ஆனந்த விகடனில் சுஜாதாவின் கட்டுரை வெளியாயிருந்தது( இலங்கை இருக்கிறம் சஞ்சிகையில் கூட) அதில் எனது எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட என்னைத் தூற்றியவர்கள் கூட எனது வாசகர்கள் தான் எனக் கூறியிருக்கிறார்.
ஆக,தூற்றுபவர்களும் அவரது எழுத்துக்களை ஒருவகையில் நேசித்தவர்களாக இருக்ககூடும் அல்லவா?

King...  

நந்தவனத்திலிருந்து வந்தவருக்கு வணக்கம் நான் அந்த ஊர்க்காரன்தான் ஆனால் எங்க போனாலும் எனக்கெண்டு ஒரு பெயர் இருக்குமப்பு, நான் கொஞ்சம் வித்தியாசம் விளங்குதோ... நான் வலைக்கும் கணினிக்கும் புது ஆள் ஆனால் வாசிப்புக்கும் சுஜாதாவுக்கும் உம்மளைவிட பழைய ஆள்தான் சரியோ? ஆனாலும் நான் எப்ப சொன்னனான் 90 களில் இருந்து வலையில் இருப்பதாக, நீர் எனக்காக இந்த பின்னூட்டம் போடயில்லை எண்டுற மாதிரி கிடக்கு பரவாயில்லை. என்ன இதில இழுத்திருக்கிற படியால, சரி ஏன் என்னுடைய பதிவுகளுக்கும் நான் யாழ்ப்பாணம் என்பதற்கும் என்ன சம்பந்தம்... பதிவுகள் இடம் சார்ந்ததல்ல சரியோ....

Anonymous,   

Absolutely with you it agree. In it something is also idea excellent, I support.

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP