திரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தை நட்சத்திரமா ? குழந்தைத்தொழிலாளியா ?


<பொதுவாக உலகெங்கும் சிறுவர்கள் வேலைக்கமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்படுகிறது இத பல்வேறு நாடுகளில் எனோ தானோ என்று கடைப்பிடிக்கப்படுவதால் சிறுவர்களைவேலைக்கமர்த்துவது இன்னும் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது ஆனால் திரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எந்தவகையில் கருத்திற்கொள்வது ?

அனேக நடிகர்கள் தாங்கள் பணத்திற்காகவே தாங்கள் நடிப்பதாகக்குறிப்பிடுகின்றனர் அவ்வாறே தமக்குரிய ஊதியம் கிடைக்காவிடில் நீதிமன்றபடியேறவும் தயங்குவதில்லை அதாவது அவர்கள் தாங்கள் செய்த நடிப்பு எனும் வேலைக்கு சம்பளம் பெறுகின்றனர். அதேபோல் திரைப்படங்களில் சிறுவர்களும் குழந்தைகளும் நடிக்கின்றனர் ஆகவே அவர்களும் தொழிலாளர்கள் தானே ? இதைப்பற்றி யாராவது சிந்திருப்பார்கள் தானே அவர்கள் ஏன் மெளனமாக இருக்கின்றனர்.என் மனதுக்குப் பட்டது போல் அவர்களுக்கும் தோன்றியிருக்கலாம்!ஆனால் இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து! , என்னுடையகருத்துக்களை அவாகள் ஆதரிக்கலாம், சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை வேறு வேலைகளுக்கு சிறுவர்கள் கொண்டுசெல்லப்பட்டால் சிறுவர் துஷ்பிரயோகம் அது இது எனக்கத்தும் இவர்கள் ஏன் இதைக்கண்டுகொள்கிறார்களில்லை என்பது குழப்பமாகவே இருக்கிறது.

அனேகமாக திரைப்படங்களில் நடிகர்கள் நடிகைகள் சரியாக நடிக்காதவிடத்து அவர்களுக்கு பேச்சு விழுவதாகவும் சிலநேரங்களில் அடியும் ! விழுவாதகவும் அவர்கள் பத்திரிகைப்பேட்டிகளில் குறிப்பிடுகின்றனர் அதேபோல்தான் சிறுவர்கள் சரியாக நடிக்காதவிடத்தும் அவர்கள் மீதும் அதே கொடுமைகள் நடக்கலாம் தானே ? அப்படி நடக்காதென்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா ? இப்போ பாடசாலைகளிலோ வேறு இடங்களிலோ சிறுவர்களைத்துன்புறத்தினால் அது சிறுவர் துஷ்பிரையோகமாகக்கருதப்படுகிறது !அவ்வாறிருக்கையில் திரைப்படங்களில் நடிக்கும் சிறுவர்கள் நிலை ?

சரி திரைப்படங்களில் சாதாரணமாக நடிக்கவைத்தால் பரவாயில்லை சில திரைப்படங்களில் குழந்தைகள் இறப்பதுபோலவும் அங்கவீனமாக்கப்படுவது போலவும் (சிலநேரங்டகளில் நெருக்கமான காட்சிகளிலும் )காட்டப்படும்போது அக்குழந்தையைப்பெற்ற தாய் அல்லது தந்தை அதை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் ? உதாரணத்திற்கு அழகியதமிழ்மகன் திரைப்படத்தில் குழந்தை இறந்து இறுதிக்கிரியைகள் நடப்பது போல் காண்பிக்கப்படும் இவ்வாறான் காட்சிகளைப்பார்க்கும் எங்களாலேயோ தாங்கிக்கொள்ளமுடியவில்லை அக்குழந்தையின் மீது அதிகபாசம் வைத்திருகும் வேறு யாராவது பார்த்தால் அவர்கள் நெஞ்சம் படும பாடு யார் அறிவார் ?

சரி குழந்தைகள் தொழிலாளர்கள் இல்லை என்ற பார்வையில் இருந்து விலகி வேறுகோணத்தில் அதாவது கலை என்ற கோணத்தில் பார்த்தால் அவர்களை மரணம் தொடர்பான காட்சிகளைத்தவிர்த்து நடிக்கவைக்கலாம் தானே ?
திரைப்படத்துறையினரே மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிராக வாய்கிழியக்கத்துபவர்களே ஓர்நிமிடம் ! திரைப்படத்துறையில் குழந்தைத்தொழிலாழர்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறதே என்னது தான் என் எண்ணம் . இவன் யார் நம்மைச் சொல்வதற்கு என நினைக்க வேண்டாம். நினைத்தாலும் மகிழ்ச்சி. நினைக்காமல் இருந்தால் சந்தோசம்.

நன்றிகளுடன்
மாயா

8 பின்னூட்டம்(கள்):

M.Rishan Shareef  

அன்பின் மாயா,
இதே ஆதங்கம் எனக்கும் உண்டு.
குழந்தைத் தொழிலாளிகளுக்கும் , குழந்தை நட்சத்திரங்களுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டிலும் குழந்தைகளுக்கேயான உலகம்,பால்யம்,உறக்கம்,அன்பு,விளையாட்டு அனைத்தும் மறுக்கப்படுகிறது.
அவர்கள் விரும்பியோ,விரும்பாமலோ சில விடயங்களுக்கு நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.

இதற்கான மாற்றுவழிகள் என்ன என சிந்திப்போம்.
மிகப் பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே..!

மாயா  

// குழந்தைகளுக்கேயான உலகம்,பால்யம்,உறக்கம்,அன்பு,விளையாட்டு அனைத்தும் மறுக்கப்படுகிறது.
அவர்கள் விரும்பியோ,விரும்பாமலோ சில விடயங்களுக்கு நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
//
நிச்சமாக உண்மை தான் , , ,

// மாற்றுவழிகள் என்ன என சிந்திப்போம். //
மாற்றுவழியேதும் இருப்பதாகத்தெரியவில்லை நண்பரே உதாரணத்திற்கு இந்தப்பதிவையே எடுத்துக்கொள்ளுங்கள் உங்களைத்தவிர வேறுயாரும் இந்தப்பதிவைச்சீண்டியதாக இல்லை

பதிவையே சீண்டுகிறார்களில்லை எனில் . . . . .

M.Rishan Shareef  

அன்பின் மாயா,
மாற்று வழிகளைப் பற்றி யோசித்த போது 'அவள் விகடனில்' நடிக ரோகிணியின் பேட்டி கண்ணில் பட்டது.
நம்மைப் போலவே அவரும் கவலைப்பட்டு 'நிலா நிலா ஓடி வா' என்றொரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அவரும் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக இருந்தவராம்.
மிச்சத் தூக்கத்தை கண்களில் தேக்கி அதிகாலையி-லேயே ஷூட்டிங்குக்கு வரும் குழந்தைகள், காய்ச்சல் இருக்கும் சமயத்திலும் காசுக்காக நடிக்க வரும் பையன், வெட்ட வெளியில் எல்லோரும் உடை மாற்றும்-போது தன் சட்டையைக் கழற்ற கூசிப் போகும் பன்னிரண்டு வயது சிறுமி..

ஸ்கிரீனில் பனிமூட்டம் தெரிவதற்காக ஏற்படுத்தும் புகையில் புழுங்கும் பிஞ்சுகள், அளவு சரியில்லாத உடைகளை பின்கள் கொண்டு குத்தி, சரியாக்க முயற்சிப்பதில் ஏற்படும் வலிகள்.. என படம் நெடுக அவர்கள் படும் ரணங்கள் கண்கலங்க வைக்கின்றன!
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரில், வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிற 'இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல்'-க்கு தேர்வாகியிருக்கும் இந்தப் படத்தை இயக்கியதற்கான காரணம் பற்றி பேசினார் நடிகை ரோகிணி.

''நான் பல குறும்படங்கள் எடுத்திருக்கேன். ஆனா, ஆவணப் படம் எடுக்குறது இதுதான் முதல் முறை. என்னால ஒரு படத்தை நல்ல விதமா எடுக்க முடியும்ங்-கிறதுக்கான அடையாளமா இது இருக்கணும்னு நினைச்சு நான் எடுத்த படம் இது.

நானும் சைல்ட் ஆர்ட்டிஸ்ட்தான். எண்பது படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். எங்கப்பா சினிமாவில நடிக்கணும்னு ஆசைப்பட்டவர். வாய்ப்பு கேட்டு அவர் போனப்போ, நானும் அவரோட போய்த்தான் குழந்தை நட்சத்திரம் ஆனேன்.

சின்ன வயசுல, குழந்தைங்க பெத்தவங்-களோட கட்டுப்பாட்டுல இருக்காங்க. அவங்க எந்த வழியில கொண்டு போறாங்-களோ அப்படித்தான் குழந்தைங்களோட பாதையும் அமையுது. மீடியா ஒரு கவர்ச்சி-கரமான ஊடகமா இருக்கறதால, இதுல தங்களோட குழந்தை எப்படியாவது இடம் பிடிச்சுடணும்னு பெத்தவங்க பலரும் நினைக்கிறாங்க.

குழந்தைகளும்கூட ஒரு கட்டத்துல, தங்களை சுத்தி விழுற அந்த ஆடம்பர வெளிச்சத்தை விரும்ப ஆரம்பிச்சிடறாங்க. வளர வளர அந்த குணம் இன்னும் அதிகமாகி, அதுக்காக எதுவும் செய்ய தயாராகிடுறாங்க. முதல்ல அந்த மாயையை அவங்ககிட்ட இருந்து ஒழிக்கணும்.

ஹாலிவுட்லயெல்லாம் 'சைல்ட் ஆர்ட்டிஸ்ட்'டுக்-கான அரசாங்க விதிகள் இருக்கு. சனி, ஞாயிறுலதான் அவங்களை ஷூட்டிங்குக்குக் கூப்பிடணும். அதுவும் நாலு அல்லது அஞ்சு மணி நேரம்தான் நடிக்க வைக்கணும். ஸ்கூல் நாட்கள்ல ஷூட்டிங் வந்தா, ஸ்பாட்லயே அவங்க கிளாஸ் டீச்சர் வந்து பாடம் சொல்லித் தரணும்.. இப்படியெல்லாம்!

ஆனா, இங்க என்ன நடக்குது..? எதிர்காலத்துல என்ன ஆகப்போறோம்னு தெரியாம, ஸ்கூலுக்கு போகவேண்டிய வயசுல தங்களோட அடித்தளத்தையே மாத்திட்டு இவங்க ஷூட்டிங் போயிட்டு இருக்காங்க. இந்த நடைமுறை நிச்சயமா மாற்றப்படணும். தேன் தடவின விஷம் மாதிரியான இந்த கவர்ச்சி போர்த்தின குழந்தை தொழிலாளர் முறை கண்டிப்பா களையப்படணும். அதுக்காகத்தான் இந்தப் படம்!''

- அழுத்தமாக முடித்தார் ரோகிணி.

இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க ஊடகங்களும் இணைந்து முன்வரவேண்டும் அல்லவா நண்பரே...?

மாயா  

பதிவாகப்போடவேண்டிதொருவிடையம்நண்பரே !இதைப்பின்னூட்டமாகப்போட்டுவிட்டீர்களே !

இதைப்பற்றி உங்கள் பதிவில் ஓர் முழுமையான பதிவாக எதிர்பார்க்கிறேன் ரிஷான்
நன்றிகள்

// ஊடகங்களும் இணைந்து முன்வரவேண்டும் அல்லவா நண்பரே...? // பார்ப்பம் ? ? ?

Anonymous,   

nallathoru padaippu

nallathoru kelvi

pathil...?

intha iyanthra commercial world la

yaaru ithai ellam enni parkirarkal..

including the parents of the child artists

Nimal  

மாயா,
உங்கள் வார்ப்புருவிலிருந்து Justify தவிர்த்தால் பயர்பாக்ஸ் 2 இற்கு மாற்றினால் நல்லம்.

உங்களின் பயனுள்ள பதிவுளுக்கு வாழ்த்துக்கள்.

மாயா  

// உங்கள் வார்ப்புருவிலிருந்து Justify தவிர்த்தால் பயர்பாக்ஸ் 2 இற்கு மாற்றினால் நல்லம்//

தகவலுக்கு நன்றி நண்பரே !

Anonymous,   
This comment has been removed by a blog administrator.

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP