இந்தியக் குடியரசு தின சிறப்புநிகழ்ச்சிகள் :(

காலை எட்டு மணிக்கு அந்த நடிகருக்கு வாழ்த்துக்கள்-பின்
நடிகர் " "உடன் குடியரசு தினத்தைக்கொண்டாடுங்கள்
அதன்பின் தான் நடித்த கதாபாத்திரங்கள் பற்றி
இன்னோர் நடிகர் பரபரப்புப்பேட்டி

காலை 9.30க்கு கமல் நடித்த பஞ்சதந்திரம்
மதியம் இளைய தளபதியின் யூத் திரைப்படம்
மாலை விஷாலின் தாமிரபரணி
காணத்தவறாதீர்கள் . . . .

குடியரசு தினத்தை குதூகலமாய் கொண்டாடுங்கள்
அழைப்பு விடுக்கின்றன இந்தியத்தொலைக்காட்சிகள்
கண்களுக்கு விளக்கெண்ணை விட்டுப்பார்த்தாயிற்று
இந்தியக்குடியரசு தினம் தொடர்பாக எந்தவோர் வரலாற்று நிகழ்ச்சியையும் காணோம்

பின் எதற்கிந்த விழாக்கள்
விழாவின் நாயகன் (இந்தியக்குடியரசு தினம் தொடர்பாக )
இல்லாத விழாக்கள் யாருக்காக ?

உற்சவமூர்த்திகள் இல்லாத உற்சவங்கள்
யாருக்காக ?

விஷாலும் விஜயும்
இன்னபிறரும் குடியரசு தினத்திற்குரியவர்கள் தானா ?

எந்தத்தொலைக்காட்சியாவது
இந்தியக்குடியரசு தினம் தொடர்பாக ஏதாவது நிகழ்ச்சி செய்ததாக சரித்திரமுண்டா ?
ஆனால் இந்தியக்குடியரசு தினம் தொடர்பாக
வியாபாரங்கள்
பட்டிமன்றங்கள்
இன்னும் பல . . .

இவை தேவை தானா ?
யோசியுங்கள்
ஏனெனில் நிஜத்தை விட்டு நாம் வெகுதூரம் வந்து விட்டோம்

ஆனாலும் நாம் கடக்கவேண்டிய தூரம் இன்னுமிருக்கல்லவா :)

10 பின்னூட்டம்(கள்):

இறக்குவானை நிர்ஷன்  

காலத்துக்கு வேண்டிய பதிவு மாயா. குடியரசுதினம் தொடர்பாக சிறுவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் , பெரியோர் சாதனைகள் வரலாறுகள் என ஏராளமான வளமான விடயங்களை ஒளிபரப்பலாம் தானே?

மாயா  

// பெரியோர் சாதனைகள் வரலாறுகள் என ஏராளமான வளமான விடயங்களை ஒளிபரப்பலாம் தானே // இதை யாரும் கண்டுகொள்வதுமில்லை

நான் நினைக்கிறேன் சொல்லிச்சொல்லி அவர்களுக்கு அலுத்துவிட்டதோ ?

இறக்குவானை நிர்ஷன்  

நான் நினைக்கிறேன் சொல்லிச்சொல்லி அவர்களுக்கு அலுத்துவிட்டதோ ?
//

அப்படியும் இருக்கலாம் மாயா. ஆனாலும் இப்போதெல்லாம் சினிமாவுக்குத்தானே முதலிடம்?

மாயா  

தைப்பொங்கலுக்கும் அப்படித்தான் நிர்ஷன் . . .

எந்த உழவனையோ அல்லது உழவுத்தொழில் சார்ந்தவர்களையோ பேட்டி கண்டதாய் சரித்திரம் உண்டா ?

என்னைப்பொறுத்தவரை எந்தமுன்னேற்றமுமில்லாமல் காலமெலாம் கஷ்டப்படுவது தமிழ் உழவன் தான் :(

உண்மையில் இவை உழைக்கும் உழவனை அசிங்கப்படுத்தும் விடையங்கள்

எப்போது சிந்திக்கப்போகிறார்களோ தெரியவில்லை ?

pudugaithendral  

காலேயில நானும் அதாங்க நினைச்சேன்.

காலண்டரில் சிவப்பா ஒரு தேதி வந்திடக்கூடாது. சிறப்பு நிகழ்ச்சிகள், லொட்டு லொசுக்குன்னு, உருப்படாத நிகழ்சிகள், சினிமா இதெல்லாம் கொடுக்கறதுதான் சிறப்பு நிகழ்ச்சிகளா?

கமலின் பஞ்சதந்திரம் எல்லாம் பார்த்துதான் குடியரசுதினம் கொண்டாடனுமா? இவங்களைக் கேக்க ஆளே இல்லீங்க. அதான் ஆடுறாங்க்க.

(இங்க சக்தி டீவிகூட இதே மாதிரிதான் ரவுசு விடறாங்க. நாங்க எந்த டீவியும் பார்க்காம மனசார சாமிய கும்பிட்டுட்டு இழுத்து போத்திக்கிட்டு தூங்க வேண்டியதுதான்.)

மாயா  

வாங்க புதகைத்தென்றல் !

நீங்களும் ரெம்பநொந்து
போயிருக்கிறியள் போல :(

pudugaithendral  

நொந்து நூடில்ஸாகி, வெந்து வெர்மிசிலி ஆகியிருக்கேங்க. இதப் பத்தி ஒரு பதிவு போடனும்னு நினைச்சேன்.

வம்ப வெல குடுத்து வாங்கற மாதிரி ஆயிடுமோன்னு பயந்தேன். நானும் இந்திய பிரஜைதான்.

Anonymous,   

I am not sure if any Tamil channel is hosting kid's quiz and sports related programs. It is mere waste of time

மாயா  

புதுகைத் தென்றல் ,
இதைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்

// I am not sure if any Tamil channel is hosting kid's quiz and sports related programs. It is mere waste of time//இது பற்றி எனக்கு தெரியாது
அனாமியாரே

Anonymous,   

மற்ற தொலைக்கட்சிகளை விட "மக்கள் தொலைக்காட்சி" நல்ல பணிகளை செய்து வருகிறது .. நீங்கள் குறிப்பிட்டது போல் பொங்கல் அன்று நல்ல நிகழ்ச்சிகள் அளிக்கப்பட்டன .. சினிமா , நடிகர்கள் அல்லாத தொலைக்காட்சி ..

http://www.makkal.tv/

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP