கிருபானந்த வாரியார் பிறந்த நாள்

ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்த கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25 1906 - நவம்பர் 7 1993) அவர்களின் பிறந்ததினம் இன்றாகும். சமயம் இலக்கியம் மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்
இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும் மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார்.

இவருக்கு இவரின் தந்தையாரே கல்வி இசை இலக்கி இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்.




“ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்”.

”இளமை வளமையாக ஒழுக்கமாக அமையவில்லையானால் இடைப்பகுதியும் கடைப்பகுதியும் ஒழுங்காக அமைய மாட்டா”.

”பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்"

வாரியார்

7 பின்னூட்டம்(கள்):

வெற்றி  

இன்றா அவரின் பி.நா?

எனக்குத் தீட்சை வைத்தவரே அவர்தான்.

எனது குடும்பத்திற்கும் அவருக்கும் பல காலத் தொடர்பு.

என்னே ஒரு தெய்வீகக் குரல்.!!! அவர் முருக பத்தர் மட்டுமல்ல, அவர் ஒரு தமிழ்க் கடலும் கூட.

ஒரு சைவ அடியவர் எப்படி வாழ வேணும் என்பதற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தவர்.

அவரின் இழப்பு தமிழினத்திற்குப் பேரிழப்பு.

மாயா  

நிச்சயமாக

சிறுவயது முதல் அருடைய சொற்போழிவை என்பாட்டனாரோடு சேர்ந்து கேட்பதுண்டு

அவரை நாம் இழந்தாலும் அவருடைய சொற்போழிவுகள் எம் காதுகளில் ஒலித்துக்கோண்டிருக்கும்

யோகன் பாரிஸ்(Johan-Paris)  

மாயா!
வாரியாரை நான் அருணகிரியாரின் மறுபிறவி எனத் தான் கருதுகிறேன்.
அவர் தமிழாற்றல், சாரீர சுகம் இனி வரா!!

உண்மைத்தமிழன்  

திராவிட இயக்கங்களின் தமிழ் திரைப்படங்களில் கொஞ்சி விளையாடினாலும் சிறிதளவு இருந்த பகுத்தறிவு, நாத்திக நெடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழ்க் குடும்பங்களிடம் தமிழை கொண்டு சென்றது சந்தேகமேயில்லாமல் நமது வாரியார் ஸ்வாமிகள்தான்..

அனைவருக்கும் பிடித்ததைப் போல் பேசும் எளிய தமிழை இந்த ஐயனிடம் என் ஐயன் முருகப் பெருமான் வாரி வழங்கியிருந்தான்..

நேரில் பார்க்கும்போதே தெய்வீகத் தன்மையை தன் மேனியெங்கும் கொண்டிருந்த தமிழ் ஞானப்பழம் அவர்..

கடவுளரின் தூதர்களில் இவரும் ஒருவர் என்பதில் எனக்கும் ஐயமில்லை..

மாயா  

//திராவிட இயக்கங்களின் தமிழ் திரைப்படங்களில் கொஞ்சி விளையாடினாலும் சிறிதளவு இருந்த பகுத்தறிவுஇ நாத்திக நெடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழ்க் குடும்பங்களிடம் தமிழை கொண்டு சென்றது சந்தேகமேயில்லாமல் நமது வாரியார் ஸ்வாமிகள்தான்.. //


திரைப்படங்கள் முலமாகவே பாமரமக்களிடத்தே கருத்துக்களை கொண்டு செல்லமுடியும் என்பதை அறிந்து திரைப்படங்கள் மூலமாக சைவக்கருத்துக்களை கொண்டு சென்றார் [திரைப்படங்களில் தோன்றிய முதல் சைவஅறிஞர் இவர் தானாமெ ?]

Anonymous,   

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso.(If you speak English can see the version in English of the Camiseta Personalizada.If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend).

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP