நானும் அனுப்பிவிட்டேன்

இயற்கை என்கிற தலைப்பில் போட்டியில் பங்கேற்க நானும் 2 படங்களை அனுப்பிவிட்டேன்

நான் எத்தனை புகைப்படம் எடுத்திருதாலும் நெடுந்தீவு சென்ற போது எடுத்த எம் தாயகத்திற்கேயுரித்தான பனைமரங்களை கொண்ட புகைப்படமே எனது முதல் தெரிவு

பனைமரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா ?

அடுத்தது எனது சொந்த ஊரான அளவெட்டியில் உள்ள தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அருகே இருந்த செவ்விளநீர் மரம் இவை யாவும் சென்ற வருடம் ஆனி மாதம் படமாக்கப்பட்டவை (ஆவணியுடன் யாழ்ப்பாணத்திற்குரிய சகலபாதைகளும் மூடப்பட்டதை நீங்கள் அறிவீங்க தானே ?)

6 பின்னூட்டம்(கள்):

மதி கந்தசாமி (Mathy Kandasamy)  

நெடுந்தீவெண்டோடன அடிச்சுப்பிடிச்சு ஓடிவந்தனான். பனை மரங்களைக் காணச் சந்தோசமாயிருக்கு.

வேற பனைமரம் + தீவுப்பகுதி + அளவெட்டி + இன்னபிற புகைப்படங்கள் இருந்தாலும் இடுங்களேன்.

-மதி

வெற்றி  

நல்ல படங்கள். அடடா, அளவெட்டியா நீங்கள்? 2005ம் ஆண்டு அளவெட்டி கும்பிளாய்வளைப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நண்பர்களுடன் விளையாடித் திரிந்த இடம் அளவெட்டி.

கானா பிரபா  

மாயா

ஊர்ப்படங்களைக் காட்டிக் கவிழ்த்துப் போட்டியள், போட்டியில இருந்த நான் விலகலாமோ எண்டு யோசிக்கிறன்.

சுநந்தா  

முதல் படம் ஓவியம் போல வண்ணத்துடன் மிக அழகு. வாழ்த்துக்கள்.

Osai Chella  

nuthal pdaththin vaNNangkaL ennai kavarnthana. sontha ur endrellam solli urukavaikkireerkal. sowtha uuraippiriwthu kidappathu ... aalaamaana sokam thaan .. enakkum veeroru vakaiyil theriyum iwtha kashtam!

மாயா  

OSAI Chella ,மதி கந்தசாமி
வெற்றி,கானா பிரபா
Nilakkaalam
உங்கள் வருகைக்கு நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP