திரு. 'ஹாய்' மதன்

கேள்வி. '
வந்தார்கள்... வென்றார்கள்' என்ற தலைப்பில், மயிலாசனப் பேரரசர்கள் பற்றிச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தாங்கள், சோழப் பேரரசு பற்றியும் அதுபோன்ற ஆதாரபூர்வ நூல் ஒன்றை எழுதினால், பெரும் பங்களிப்பாக இருக்குமே?!

பதில்
கி.மு.44ல் கொல்லப்பட்ட ஜூலியஸ் சீசர், தன் படையெடுப்புகளை நுணுக்கமாக விவரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் (ஏழு வால்யூம்கள்).

ரோம், கிரேக்க வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அற்புதமான புத்தகம் (3 வால்யூம்கள்) எழுதியிருக்கிறார் ப்ளூடார்க். பாபர், 'பாபர்நாமா' என்னும் தன் வாழ்க்கை வரலாற்றில், இந்திய வெயில், மாம்பழங்கள் பற்றி யெல்லாம்கூட விவரித்திருக்கிறார்.
ஜஹாங்கீர் தினமும் என்னென்ன டிபன் சாப்பிட்டார் என்பது பற்றிய குறிப்புகள்கூட உண்டு!

ஆனால்... தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும், கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை. புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும், பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு... உணர்ச்சிவசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள். 'வெற்றி பெற நாடுகள் இல்லாமல், தோள்கள் தினவெடுக்க, வாளை உருவியவாறு கரிகாலன் இமயமலை வரை ஆட்கொள்ளக் கிளம்ப... இமயம், கடவுள்கள் வசிக்கும் மலை என்பதால், அதைக் கரிகாலனால் தாண்ட முடியவில்லை. எனவே, இமயமலை மீது மிகப் பெரிய புலிச் சின்னத்தைச் செதுக்கிவிட்டுத் திரும்பினார் அந்த மாவீரன்!' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல் மிகையாகப் புகழ்கிறது! உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை! தெருவில் நின்ற கரிகாலனுக்குப் பட்டத்து யானை மாலை அணிவித்து முடி சூட்டியதும், சிறையிலிருந்து தப்பித்தபோது கரிகாலனின் கால்கள் தீயால் பொசுங்கிக் 'கரிகாலன்' என்று பெயர் வந்ததும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாத வெறும் கற்பனையே! இதற்கெல்லாம் காரணம்... தமிழ்நாட்டில் முதலில் கவிதைகள்தான் தோன்றின! உரைநடை (Prose) எழுதப்பட்டது பிற்பாடுதான்! நிலைமை இப்படியிருக்க,

எந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு நாம் நம் வரலாற்றை எழுத முடியும்? கற்பனை கலந்த நாவல் (பொன்னியின் செல்வன் மாதிரி) வேண்டுமானால் எழுதலாம்!

0 பின்னூட்டம்(கள்):

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP